நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 06

4.8
(12)

காதல் : 06

“உன்னைத்தான் கேட்கிறன் சுமதி இங்க என்ன பண்ற…..?” 

“அண்ணா… அதுவந்து…” 

“முதல்ல வெளியே வா….” 

“ம்…..” 

“உங்க முதலாளிக்கிட்ட போய் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டு வா…….” 

“அண்ணா….” 

“எதுவும் பேச வேண்டாம்.. சொல்லுறதை மட்டும் செய்……” என்றான் சக்தி. 

சுமதி தனது முதலாளியிடம் தான் இனிமேல் வேலைக்கு வரமாட்டேன் என்று கூற அவர் இங்கு கொஞ்சநாட்கள் வேலை செய்ததற்கான கூலியைக் கொடுத்து அனுப்பினார். 

சக்திக்கு கோபம் கோபமாக வந்தது. தனது கைகளை கட்டியபடி கோபத்தை அடக்க முயன்றான். அப்போது அவனருகில் வந்து நின்றாள் சுமதி.. 

“அண்ணா…….” 

“ஓ.. உங்களுக்கு அண்ணா இருக்கிறது இப்போதான் தெரியுதா……?” 

“ஐயோ அண்ணா அப்பிடி இல்லை….” 

“உன்னை இந்த ரெண்டு மாசமா காணோம்னு எவ்வளவு தேடினேன் தெரியுமா……? போன் நம்பரையும் மாத்திட்டே…. என்னாச்சி சுமதி……” 

“அண்ணா உங்களுக்கு கஸ்ரம் குடுக்க வேணாம்னு தான் இங்க வந்திட்டேன் அண்ணா…….” 

“நான் உங்கிட்ட சொன்னேனா….. என்னமா நீ……?”

“அண்ணா… அப்பிடி இல்லை……”

“சரி.. சித்தி எப்பிடி இருக்கிறாங்க…..?”

“அண்ணா அம்மா… அம்மா….அம்மா. நம்மளை விட்டுட்டு போயிட்டாங்க அண்ணா……” என்று கூறி அழுதாள். 

இதைக் கேட்ட சக்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.”இதை ஏன் சுமதி எங்கிட்ட சொல்லலை…..?”

“அண்ணா….”

“உண்மைய மட்டும் சொல்லு……”

“அண்ணா அம்மா இறந்ததை உங்ககிட்ட சொல்ல போன் எடுத்தேன்….. உங்க போன் வேலை செய்யலை.. அப்புறம் எனக்கு என்ன செய்றதுனு தெரியலை.. பக்கத்து வீட்ல இருக்கிறவங்களோட உதவியோட எல்லா காரியத்தையும் முடிச்சிட்டு உங்களை பார்க்கலாம்னு வந்தேன் அண்ணா……”

“என்னமா சொல்ற….. என்னைப் பார்க்க வந்திருந்தாயா…..?”

“ஆமா அண்ணா.. ஆனா ஊருக்கு வர்ற வழியில, அந்த ஆளு என்னை பார்த்திட்டாரு….. நீ எதுக்கு இங்க வந்தனு கேட்டாரு….. நான் எதுவும் சொல்லலை…..”

“ஏய் உன்னைத்தான் கேக்கிறேன். எங்க உன் அம்மா…….?”

“அம்மா இறந்திட்டாங்க…..?”

“ஓ.. அவள் செத்தா இங்க போக சொன்னாளா…..?”

“இல்லை….”

“பிறகு எதுக்கு இங்க வந்த….? மரியாதையா இந்த ஊர விட்டு போயிடு……” என்றார். 

நான் உங்களுக்கு போன் பண்ண போன் எடுத்தேன் அதைப் பார்த்த அவரு என் போனை உடைச்சிட்டாரு அண்ணா. 

“இனிமேல் இங்க உன்னை பார்த்தா கொன்றுவன் என்று சொல்லிவிட்டு.. இங்க இருக்கிற யாரோதான் உன்ன இங்க வரவச்சிருக்காங்க.. அவங்களையும் சும்மா விடமாட்டேன்…… என்று சொல்லிட்டாரு அண்ணா…. அதுதான் அங்க வரவில்லை. இங்க இருக்கிற ஒரு ஹாஸ்டல்ல தங்கிட்டு இங்க வேலை பார்க்கிறேன்…..”

“இவ்ளோ நடந்திருக்கு…. இதுக்கெல்லாம் சேர்த்து அனுபவிப்பாங்க சுமதி. அப்போ படிக்கிறதை விட்டுட்டியா…..?” 

“அதுவந்து…” 

“எதுவும் பேசாத முதல்ல ஹாஸ்டலுக்கு போய் அறைய காலி பண்ணிட்டு எங்கூட வா… அதற்கு முதல் கடைக்கு போய் புடவை ஒண்ணு எடுத்திட்டு போகலாம் வா….”

“புடவையா யாருக்கு அண்ணா…? அம்மாவுக்கா…..?”

“இல்லை உன் அண்ணிக்கு……”

“என்ன அண்ணா சொல்றீங்க…..?”

“ஆமா சுமதி எனக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம்…..”

“ரொம்ப சந்தோசம் அண்ணா…. அண்ணி எப்பிடி இருப்பாங்க…..?”

“அதை நீயே பார்த்திட்டு சொல்லு.. முதல்ல வா புடவை எடுக்கலாம்…..”

“அண்ணா கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க….. கல்யாணத்துக்கு புடவை எடுக்க நீங்க மட்டுமா வந்திருக்கிறீங்க…..?”

“ஆமா சுமதி…..”

“அண்ணா வீட்ல இருந்து யாரும் வரலையா….?”

“இல்லை சுமதி….” என்றவன் நடந்ததை சுமதியிடம் சொல்லி முடித்தான். 

“ஏன் அண்ணா இவங்க இப்பிடி இருக்கிறாங்க……..? மாறவே மாட்டாங்களா……?”

“பட்டால்தான் புத்தி வரும்.. நீ வா புடவை எடுத்திட்டு போகலாம்…..”

“சரி அண்ணா……”

கடைக்குள் வந்து புடவைப் பகுதியில் நின்றிருந்த பெண்ணிடம் வந்தான். 

“வாங்க சார். உங்களுக்கு என்ன வேணும்…….?” 

“கல்யாணத்துக்கு கட்டுற மாதிரி புடவை காட்டுங்க…….”

“பாருங்க சார்…..” என்றவள் ஒவ்வொரு புடவையாக எடுத்துப் போட்டு விரித்துக் காட்டினாள். 

அங்கிருந்த மரூன் நிற பட்டுப்புடவை சக்திக்கு பிடித்திருக்க அதையே எடுத்துக்கொண்டவன் மேலும் சில்க் வகையிலான நான்கு புடவைகளையும் எடுத்தவன் சுமதியைப் பார்த்து, “சுமதி உனக்கு பிடிச்ச மாதிரி பாவாடை தாவணி எடுத்துக்க………..” 

“எனக்கு எதுக்கு அண்ணா….. நீங்க அண்ணிக்கு புடவை எடுங்க….. எனக்கு எதுவும் வேணாம்…..” 

“சுமதி உன்னை எடுத்துக்க சொன்னேன்……” 

“சரி அண்ணா……” என்றவள். அழகிய ஊதா நிற பாவாடை தாவணியை எடுத்தாள். 

“அண்ணா நல்லா இருக்கா…….?”

“ரொம்ப நல்லா இருக்கு…….”

“அண்ணா உங்களுக்கு வேட்டி சட்டை எடுத்திட்டீங்களா அண்ணா……”

“இல்லை. இனிமேல்தான் எடுக்கணும்……….” என்றவன் ஆண்கள் பிரிவிற்கு சென்று சத்தியாவின் புடவை நிறத்தில் தனக்கு சட்டையும் பட்டு வேட்டியும் எடுத்திக் கொண்டு போய் அனைத்திற்கும் பில் போட்டான். 

“சரி வா சுமதி ஹாஸ்டலை காலி பண்ணிட்டு வரலாம்………”

“ம்…….” என்றவள் அவனுடன் சென்று தனது அறையை காலி செய்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு வந்தாள். 

“போகலாமா…..?” 

“போகலாம் அண்ணா… ஆனால் உங்களுக்கு என்னால ஏதும் பிரச்சினை வந்திருமோனு பயமா இருக்கு அண்ணா…..” 

“எதுவும் நடக்காது வா… அப்பிடியே எது நடந்தாலும் அதை நான் பார்த்துக்கிறேன்….” 

“சரி அண்ணா……” 

தனது புல்லட்டை எடுத்து வந்து “வா சுமதி ஏறிக்கோ…….” 

“சரி அண்ணா……..”

இருவரும் சென்றுகொண்டிருக்கும் போது ஒரு டீக்கடையை பார்த்த சக்தி “சுமதி வா ஒரு டீ குடிச்சிட்டு போகலாம்…..”

“சரி அண்ணா….. “

தனது வண்டியை டீக்கடைக்கு அருகில் நிறுத்திவிட்டு இருவரும் டீக்கடைக்குள் சென்றனர். பின் ஆளுக்கொரு டீ குடித்து விட்டு பயணத்தை தொடர்ந்தனர். ஊர் அருகில் வரவர சுமதிக்கு பயத்தில் வியர்த்தது.

“என்ன சுமதி பயமா இருக்கா…..?”

“ஆமா அண்ணா….”

“எதுக்கும் பயப்படாத சரியா……?” 

“சரி அண்ணா…..” 

“அண்ணா இப்போ நாம எங்க போறோம்….. ?” 

“வீட்டுக்குத்தான்…….” 

“ஐயோ அண்ணா…. அவங்க யாருனு கேட்டா என்ன சொல்றது…..?” 

“உண்மையச் சொல்லுவோம்” 

“…………..” 

“பயப்படாம வா சுமதி…..” என்றவன் கூட்டிச் சென்ற இடத்தை பார்த்த சுமதி. 

“யார் வீடு அண்ணா இது…….?”

“இருமா சொல்றேன்……..” என்றவன் வீட்டுக் கதவைத் தட்டினான். 

‘யாரு இந்த நேரத்தில…’ என்றபடி வந்து கதவைத் திறந்த சரஸ்வதி இவர்களைப் பார்த்தார். 

“உள்ள வரலாமா…..?” 

“ஐயோ பெரியையா வாங்க.. நீயும் வாம்மா… தலையை கொஞ்சம் குனிந்து வாங்க…. இல்லைனா தலையில அடிச்சிரும்……” 

“அம்மா எங்க இருக்கிற……? வேகமா வந்து இந்த இடியப்பத்தை கொஞ்சம் பாரு நான் கறி வைக்க தேங்காய் துருவணும்….. நேரத்திற்கு செஞ்சா தானே பெரியையாவுக்கு சாப்பாடு கொண்டு போகலாம்…..” என்றபடி சமையல் பகுதிக்குள் இருந்து வெளியே வந்தவள், அங்கு இருந்தவர்களை பார்த்தவள் உடனே, “பெரியையா நீங்க எங்க இங்க? சொல்லி இருந்தா நானே அங்க வந்திருப்பேனே… நீங்க எதுக்கு பெரியையா இந்த குடிசைக்கு வந்தீங்க…..?”

“ஏன் நான் வரக்கூடாதா…..?”

“ஐயோ அப்பிடி சொல்லலை ஐயா……”

“பேசிட்டு இருக்காம அந்த பாயை எடுத்துப் போடு அவங்க உட்காரட்டும்…….” 

“சரி அம்மா……” என்றவள் பாயை எடுத்துப் போட்டாள். 

“ஐயா ஒரு கதிரைதான் இருக்கு உங்களை கதிரையில உட்கார சொல்லிட்டு, இவங்களை கீழ உட்காரச் சொல்ல மனசு வரலையா தப்பா நினைச்சுக்காதீங்க ஐயா……”

“பரவாயில்லை…. இது சுமதி இங்க உங்ககூட இருக்கட்டும்… உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே…..” 

“ஐயோ என்ன ஐயா இப்பிடி கேக்கறீங்க….? இந்த குடிசையில அவங்க தங்குவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை அவங்களுக்கு இங்க தங்க சம்மதமா ஐயா…..?”

“சுமதி இங்க தங்கிக்கிறயா…..?” என சுமதியிடம் சக்தி கேட்டான். 

சுமதி கூறிய பதிலில் சத்தியாவும் சரஸ்வதியும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்தனர். 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!