நின் கனல்விழிக் காதலில் கரைந்தேன் : 08

5
(10)

காதல் : 08

இவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்த சக்தி தனது அருகில் நின்ற சத்தியாவை இழுத்து அணைத்து அவளின் இதழோடு இதழ் சேர்த்தான். 

இதைப் பார்த்தவர்கள் மட்டுமல்ல முத்தம் வாங்கிய சத்தியாவும் அதிர்ச்சி அடைந்தாள். 

“டேய் இங்க இருந்து இந்த கருமத்தை பார்க்கவா போறீங்க….? வாங்க போகலாம்…. எக்கேடோ கெட்டுப் போகட்டும்……” என்றார் சௌந்தரபாண்டியன். 

“ஆமா அப்பா வாங்க போகலாம்…..” 

“வாடா ரகு…….” என்றவர்கள் திரும்பிச் சென்றனர். 

அவர்களை அவமானப்படுத்தவே சக்தி சத்தியாவிற்கு முத்தம் கொடுத்தான். ஆனால் அவ் முத்தத்தை இருவரும் ரசித்தனர் என்பது, இருவர் மட்டுமே அறிந்த உண்மை.. இருவருக்கும் முதல் முத்தமல்லவா….? அவர்கள் சென்றும் இதழ் பிரிக்காது இருந்தவர்களை வெளியில் கேட்ட இடிச்சத்தம் நினைவுக்கு கொண்டு வந்தது. இடிச் சத்தத்தினால் இருவரும் தன்னிலை பெற்று விலகினர். 

சக்திக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சத்தியா குனிந்த தலை நிமிராது நின்றிருந்தாள். தனது தொண்டையை செருகிக் கொண்டு பேச ஆரம்பித்தான் சக்தி. 

“கோபத்தில என்ன பண்றதுனு தெரியாம பண்ணிட்டேன்…. என்னை மன்னி…..” அவன் தன்னிடம் மன்னிப்பு கேட்க வருகிறான் என்பதை அறிந்த சத்தியா, 

“ஐயோ பெரியையா.. நீங்க எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு….. நீங்க யார்கிட்டையும் மன்னிப்பு கேட்க கூடாதுனு நினைக்கிறவ நான்….. அப்பிடி இருக்கும் போது எங்கிட்ட நீங்க எப்பிடி மன்னிப்பு கேட்கலாமா…. சின்னையா வேணும்னே உங்களை கோபப்படுத்துறாருனு தோணுது பெரியையா……”

“உனக்கு என் மேல கோபம் இல்லையா……?”

“இல்லை……”

“ஏன்…..?”

“தெரியல்லை பெரியையா…நீங்க எதையும் யோசிக்காம தூங்குங்க….”

“பார்த்துப் போ…..”

“சரி பெரியையா……”

“ஏ.. ஒரு நிமிசம் நில்லு…..”

“என்ன பெரியையா…? ஏதாவது வேணுமா….?”

“இல்லை…. நான் ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தேன்…. அவ யாருனு நீ எதுவும் கேட்கவே இல்லை…”

“எதுக்கு பெரியையா கேக்கணும்….? நான் என்னை நம்புறனோ இல்லையோ உங்களை முழுசா நம்புறேன்…. சுமதி எத்தனை நாள் வேணும்னாலும் எங்கூட இருக்கட்டும் பெரியையா…. உங்களுக்கு எப்போ அவங்களை பற்றி என்கிட்ட சொல்லணும்னு தோணுதோ அப்போ சொல்லுங்க….. இல்லை அவங்களை பற்றி எங்களுக்கு தெரியக் கூடாதுனு நீங்க நெனச்சாலும் பரவாயில்லை பெரியையா நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்…..”

“ம்… சுமதி பத்திரம். அவளை வெளிய எங்கேயும் வெளியே கூட்டிட்டுப் போகாதே…..”

“சரி பெரியையா…..” என்றவள் சென்றுவிட தனது ஆஸ்தான இருக்கையான கயிற்றுக் கட்டிலில் படுத்தான். அவனது அனுமதியின்றி சில நினைவுகள் வந்தன. அதை நினைத்துப் பார்க்கவே கூடாதுனு நினைத்தவனால் அதை நிறுத்த முடியவில்லை. அதனால் அதனோடு தொடர்ந்து பயணித்தான். 

“விதா ஏன் இப்பிடி பண்ற…..? நான் சொன்னதை நம்பு….” 

“என்னால நம்ப முடியாது சக்தி….” 

“சரி நீ நம்பணும்னா என்ன பண்ணணும்….?” 

“ஒண்ணுமில்லை சக்தி அப்பிடி நடந்தது என்னோட மனசை ரொம்ப காயப்படுத்தியிருக்கு நீ ஒருதடவை எங்கிட்ட என்னை மன்னிச்சிடுனு மன்னிப்பு கேட்கணும்…..” 

“நான் யார்கிட்டையும் எதுக்காகவும் மன்னிப்பு கேட்டதில்லை விதா….” 

“அதுக்கென்ன சக்தி நான் உன்னோட லவ்வர் தானே எங்கிட்ட கேட்டா குறைஞ்சா போயிடுவ….. ?”

“நான் தப்பு பண்ணா நிச்சயமா நான் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன்… ஆனால் நான் இப்போ எந்த தப்புமே செய்யலை…. பிறகு எதுக்கு உங்கிட்ட மன்னிப்பு கேட்கணும்….?”

“சக்தி இந்த சின்ன விசயத்துக்கே நீ விட்டு கொடுத்து போகமாட்டேங்கிற…. அப்புறம் எப்பிடி நான் உங்ககூட சந்தோசமா வாழ முடியும்…..?”

“ஏன் விதா லூசு மாதிரி பேசுற…..? ஒரு சின்ன விசயத்துக்கு இப்பிடி நடந்துக்கிற…..? அன்னைக்கு நானும்தான் நீ ஒரு பையன் கூட ஹாஸ்பிடல்ல பேசிட்டு இருந்ததை பார்த்தேன்…. உன்னை ஏதாவது கேட்டேனா…..?”

“நான் பேசிட்டு இருந்தது ஹாஸ்பிடல்ல… ஆனால் நீ இருந்தது ஹோட்டல்லை அங்க நீ ஒரு பொண்ணோட ஒரு அறையில இருப்ப… அதைப் பார்த்து நான் கேட்டா அது தப்பு அப்பிடித்தானே.. ஒரு மன்னிப்பு கேட்டு என்கூட சேர்ந்திருக்க மாட்டதானே.. சரி போதும் சக்தி இதுக்கு மேல நம்மளோட காதல் தேவையேயில்லை….. இன்னையோட எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்…. “

“ஓ… அப்பிடி வர்றல.. இதையே நான் ஏன் திருப்பி கேட்கக்கூடாது… என் மேல உனக்கு நம்பிக்கை இருந்திருந்தா நான் இப்பிடி இன்னொரு பொண்ணுகூட இருப்பேனானு நீ ஒரு நிமிசம் யோசிச்சிப் பார்த்திருப்ப… அதுவும் இல்லைனா என்னாச்சு சக்தி என்று கேட்டிருப்ப, ஆனால் நீ எதுவும் கேட்கவே இல்லை… இப்படி என் மேல நம்பிக்கை இல்லாதவ கூட கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ என்னால முடியாது… நீ சொன்ன மாதிரி நம்ம பிரிஞ்சிடுறதுதான் சரி….”

“என்ன விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா சக்தி…..?”

“உண்மைய சொல்லணும்னா உன்னை விட்டுட்டு இருக்கிறது ரொம்ப கஸ்ரம் விதா…. ஆறஆறு மாதக் காதல் நம்மளோடது…. ஆனால் என்னோட குடும்பம் எங்கூட இருந்தா எல்லா கஸ்ரத்தையும் மறந்திருவன்.. காலம் ஒரே மாதிரி எப்பவும் இருக்காது… காலம் மாறும்….”

“அப்போ நம்ம பிரிஞ்சிடலாம்…..”

“சரி……” என்றவன் தனது அறைக்கு திரும்பிவிட்டான். 

அவளிடம் அவ்வாறு பேசிவிட்டு வந்தாலும் அவள் அவனது முதல் காதல் அல்லவா….? மனசுக்கு ரொம்ப கஸ்ரமாக இருந்தது… விழிகளிலிருந்து நீர் வடிந்தது…. 

நடந்ததை நினைத்துப் பார்த்த சக்திக்கு இப்போது கோபம் வந்தது.. அவளது காதல் பிரிவுடன் சேர்த்து இன்னுமொரு பேரிடி அவனுக்கு விழுந்தது….. 

சக்தியின் உயிர் நண்பன் வாசு விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றதாக தகவல் வந்தது.. 

“என்ன வாசு திடீர்னு ஊருக்கு போகணும்னு சொல்ற…..?” 

“ஆமா சக்தி அம்மா ஏதோ பிரச்சனையாம் அதனால ஊருக்கு அவசரமா வரச் சொல்றாங்க… நான் போயிட்டு வந்திடுறன் சரியா….?” 

“சரிடா வா…. நானே உன்னை ஏர்போட்ல விட்டுட்டு வர்றேன்……” 

“சரிடா……” என்றதும் இருவரும் சேர்ந்து சென்றனர். இருவரும் சேர்ந்து செல்லும் இறுதிப் பயணம் என்று அவன் அறியவில்லை.. 

” மச்சான் வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணுடா…….”

“சரி மச்சான்……”

வாசு ஊருக்கு சென்று இரண்டு நாட்களாக சக்திக்கு போன் பண்ணவில்லை. தனது காதலியின் பிரிவை விட உயிர் நண்பன் பிரச்சனை என்று போனவன் இன்னும் பேசவில்லையே என்ன நடந்திச்சோனு கவலைப்பட்டான். 

அப்போது சக்தியின் போன் சத்தமிட்டது. வாசுதான் அழைத்திருந்தான். “ஹலோ வாசு.. நல்லாருக்கிறியா…..? வீட்ல எல்லோரும் நல்லா இருக்கிறாங்களா….?” என்றான். 

சக்தியின் குரலைக் கேட்ட வாசு “மச்சான்….” என்று அழைத்தவன் அழ ஆரம்பித்தான். அவன் அழுகுரலைக் கேட்ட சக்தி பதறிவிட்டான். 

“வாசு…. மச்சான் அழாதடா என்னாச்சிடா அழாம சொல்லுடா….” 

“மச்சான் அம்மா அப்பா எல்லோரும் என்ன விட்டுட்டு போய்டாங்கடா…….” என்று அழுதான். சக்திக்கு ஒன்றும் புரியவில்லை. 

“மச்சான் நீ பிரச்சனைனுதானேடா போனே……..” 

“ஆமா மச்சான் அப்பா விவசாயத்துக்கு வாங்கின லோனை கட்டலைடா….. நான் இந்த மாசம் அனுப்புற பணத்தில கட்டிடலாம்னு இருந்திருக்கிறாரு…… ஆனா பேங் ஆளுங்க வீட்டுக்கு வந்து அசிங்கப்படுத்திட்டு போயிட்டாங்க டா….. அதை தாங்க முடியாத அப்பாவும் அம்மாவும் தூக்கு மாட்டிக்கிட்டாங்கடா… கடைசியாக என்ன பார்க்கணும்னு நினைச்சிதான் மச்சான் என்னை அவசரமா வரச் சொல்லிருக்கிறாங்கடா….. நான் வந்ததும் என்னை ஆசைதீர பார்த்திட்டு எனக்கு கடைசியா சாப்பாடு குடுத்திட்டு போய் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க….. நானும் அசதியா இருக்க தூங்க போனேன் டா….. ஆனால் அதுதான் அவங்களை நான் கடைசியா பார்க்கிறதுனு எனக்கும் தெரியலைடா…..” என்று கதறினான். சக்திக்கு என்ன சொல்லி சமாதானப் படுத்துறதுனு தெரியலை.. 

“வாசு நான் உடனே அங்க வர்றேன்டா…….”

“வேணாடா நீ இரு…. எனக்கு அவங்க இல்லாத உலகத்தில வாழவே விருப்பம் இல்லைடா….. நானும் அம்மா அப்பா கூடவே போறேன்….” என்றான். 

“வாசு.. டேய் அப்படியெல்லாம் சொல்லாத டா…. உனக்காக நான் இருக்கிறன் டா….. எப்பவும் உன்கூட இருப்பன் அவசரப்பட்டு தப்பான முடிவு எடுத்திடாதடா வாசு…..” என்று கூறிய சக்தியின் கண்களிலும் ஈரம்.. 

(மக்களே எழுதும் போது எனக்குமே கண்ணு வேர்க்குது.. வாசிச்சிப்போட்டு யாரும் கண்ணு வேர்க்குதுனு சொல்லக்கூடாது) 

“வாசு நான் உடனே அங்க வர்றேன்.. நான் வார வரைக்கும் நீ தப்பான முடிவு எதுவும் எடுக்க கூடாது……”

“முடியல சக்தி…….” 

“இங்க பாரு நான் வார வரைக்கும் நீ உயிரோட இருக்கணும்….. இது உன் நண்பன் சக்தி மேல சத்தியம்……” என்றான். 

“சக்தி……” 

“நான் சொன்னா நீ கேட்பனு நம்புறேன்…….” என்றவன் போனை வைத்துவிட்டு ஊருக்கு செல்ல தயாரானான். 

காதல் தோல்வி வாசுவின் குடும்பம் தற்கொலை பண்ணிக்கிட்டது என்று எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தவன் ஒரு முடிவோடு தான் வேலை பார்க்கும் கம்பனிக்கு சென்று வேலையை விட்டு செல்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு தாயகம் திரும்ப முயன்றான். ஆனால் டிக்கட் கிடைக்க மூன்று நாட்களானது. இதற்கிடையில் வாசுவுக்கு போன் பண்ணினால் அவனது போன் வேலை செய்யவில்லை. 

தனது நாட்டிற்கு வந்தன். அவனது வீட்டிற்குக் கூட செல்லாது நண்பனை தேடிச் சென்றான். அங்கே அவனது நண்பனின் நிலையை பார்த்த சக்தி அதிர்ச்சியடைந்தான். 

சக்தி அதிர்ச்சியடையக் காரணம் என்ன??? 

வாசுவுக்கு என்ன நடந்தது???? 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!