ரஞ்சித் உட்ச பட்ச பதற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி வர அந்நேரம் பார்த்து வினையன் அப்போது தான் தன்னுடைய தந்தையிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். வினையன் விக்ரமனிடம் பேசுவதை பார்த்த ரஞ்சித் தன்னுடைய நடை வேகத்தை குறைத்தவள், மேலும் முகத்தில் இருந்த படபடப்பையும் அதிர்வையும் மறைத்தவாறு வினையனை நோக்கி நடந்தான்.
சட்டென்று ரகோத்தின் கண்களிலோ ரஞ்சித்தின் முகத்தில் இருந்த பதட்டம் பட்டுவிட.. அவனை புரியாமல் திரும்பி பார்த்தவன்.. “என்னடா வேகவேகமா ஓடி வந்தது மாதிரி இருந்தது…” என்று கூற.
ரஞ்சித்திற்கும் உள்ள படபடவென்று துடித்துக் கொண்டிருந்தது.. ஏனென்றால் அவன் கேட்ட விடயம், அவனுக்கு வந்த விடயம் அப்படிப்பட்டது.. முதலமைச்சரின் பாதுகாப்பு குழுவிடமிருந்து அவனுக்கு வந்து விடயம் அப்படி.. அவரின் எதிரிகள் இன்னும் இரண்டு நாட்களில் விக்ரமன் கலந்து கொள்ள இருக்கும் பிரச்சாரத்தில் அவரை திட்டமிட்டு கொலை செய்ய ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று அந்த குழுவிற்கு விடயம் வந்திருக்க.. அதனை தான் விக்ரமனின் பூனைப்படை ஹெட்டான ரஞ்சித்தை அழைத்து கூறியிருக்கின்றனர்… இதனை மட்டும் வினையனிடம் போட்டு கொடுத்தால் விக்ரமனின் அரசியல் வாழ்க்கையை அடியோடு முடித்து வைத்துவிடுவான்.
விக்ரமன் அதனை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.. பிடிக்கவும் பிடிக்காது.. அவரது அரசியல் பக்தி அதுபோல.. அதனால் ரஞ்சித் அப்படியா அமைதியாக நின்றுவிட.. ரஞ்சித்தின் முகத்தை பார்த்த விக்ரமனுக்கோ ஏதோ ஒரு விடயம் இருப்பதாக தெரிந்து போனது.. அதனால் அமைதியாக ரஞ்சித்தையே பார்த்துக் கொண்டிருக்க..
“அடேய் என்னடா மேட்டர்… இவ்வளவு கேட்கிறானே பதில் சொல்லுடா.. என்ன விஷயம்..” என்று ரகோத் கேட்க…
ரஞ்சிதோ ஏதோ கூற வர.. சட்டென்று விக்ரமனோ அவனை பார்த்து வேண்டாம் என்று தலையாட்டி இருந்தார்… ஏற்கனவே ஒருதரம் ரஞ்சித்தை விக்ரமன் கெஞ்சி இருக்கிறார்… “ரஞ்சித்.. ப்ளீஸ் இது ஆக்சிடென்ட் இல்ல இதுக்கு அப்புறம் வரப்போற எந்த பாதிப்போ… இல்ல எந்த விஷயத்தையும் நீ இனி வினைகிட்ட சொல்லாத அவனுக்கு மட்டும் தெரிஞ்சுருச்சுன்னா இனி என்னை இந்த அரசியல் பக்கமே அனுப்ப மாட்டான். உனக்கே தெரியும் இல்ல இத நான் எவ்வளவு உயிர் மூச்சா நெனச்சு செய்யறேன்னு..” என்று கூற.
ரஞ்சித்திற்கோ எதுவும் சரியாக படவே இல்லை… “அது எப்படி அப்பா அவங்கிட்ட சொல்லாம இருக்க முடியும்.. அப்புறம் என் மேல அவனுக்கு ஆத்திரம் தான் வரும்… வாய்ப்பே இல்லப்பா…” என்று கூற.
“டேய் கண்ணா.. ப்ளீஸ்டா உன்ன கெஞ்சி கேக்குறேன்… அவங்கிட்ட இனி என்னை பத்தின எந்த டீடைலையும் கொண்டு போகாத…” என்று கெஞ்சலாக கேட்டிருக்க… அதனாலேயே இப்போது அவன் தயங்கிக் கொண்டிருந்தான்.
விக்ரமனுக்கும் அவனுடையது தயக்கத்தை பார்த்து ஏதோ விசியம் இருப்பதாக தோன்ற… சொல்லாதே என்றவாறே தலையாட்டினார்.. அதில் சட்டென்று நினைவுக்கு வந்த ரஞ்சிதோ…
“அது ஒன்னும் இல்லடா… சும்மாதான் அப்பாவ பார்க்கறதுக்காக வந்தேன் வினை…” என்று கூற.
“ஓஓஒ உன் வேகத்தை பார்த்தா சும்மா பாக்க வந்தது போல ஒன்னும் தெரியலையே… ஏதோ அவசர அவசரமா ஓடி வந்தது மாதிரி இருந்தது…” என்று அவனை யோசனையாக பார்த்தவாறே கூற..
அதில் சலிப்பாக தலையாட்டியவனோ… “வாட் எவர்..” என்றவன்.. “என்னடா பிரச்சாரத்தோட சேப்டி எல்லாம் செக் பண்ணிட்டியா..” என்றான் அவன் தந்தையின் பாதுகாப்பில் கவனமாக..
ரஞ்சித்திற்கோ மனம் ஏதோ படபடப்பாகவே இருந்தது.. அவன் ஏதோ யோசனை இருக்க…ரகோத்திற்கோ தான் பேசியதை கூட அவன் காதில் வாங்கவில்லை என்பது அவனுக்கு தெளிவாக தெரிந்து போனது.
“ம்ம்ச் டேய் என்னடா உன்கிட்ட தான் கேட்கிறேன்..” என்று ரகோத் அவனை உலுக்கி கேட்க.
“ஹான் ஹான்.. என்னடா கேட்ட…” என்ற ரஞ்சித்தை பார்க்க வித்யாசமாகவே தெரிந்தது ரகோத்திற்கு.
“டேய் ஆர் யூ ஓகே நீ நல்லா தானே இருக்க.. ஏன் ஒரு மாதிரி டிப்ரசனா இருக்க மாதிரி இருக்க.. ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே பேபிஸ் ஓகே தானே.. உன் வீட்ல.. ம்ம்ம்.. அம்மா.. அப்பா… அக்கா.. அப்புறம் ஹான் உன் வைஃப் ஓகே தானேடா..” என்று ரகோத் கொஞ்சம் பதட்டமாகவே கேட்டான்.. ஏனென்றால் ரஞ்சித் இப்படி பதட்டப்படுபவன் எல்லாம் இல்லை.. அழகாக திட்டம் போட்டு செய்பவன் தான் ரஞ்சித் அப்படிப்பட்டவன் இன்று குழம்பி, தயங்கி நிற்பதை கண்டு அவனுக்கும் பதட்டம் தோன்றாதா என்ன..
அதில் இல்லை என்று மறுப்பாக தலையாட்டியவனோ… “அதெல்லாம் ஒன்னும் இல்லடா நான் நல்லா தான் இருக்கேன்.. அது மாதிரி வீட்லையும் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல… எல்லாரும் சேஃப் தான்…” என்ற ரஞ்சிதோ “அது அப்பாகிட்ட சில விஷயங்கள் பேசணும்..” என்று கூற.
“ஓஓஓ சரி சரி உங்க அரசியலை பத்தி தானே.. பேசி தொலைங்க எனக்கு இன்னைக்கு ஒரு சூட் இருக்கு..” என்று தன்னுடைய பேக்கெட்டில் இருக்கும் கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக போட்டு கொண்டவனோ அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்.
அவன் சென்ற பிறகு ரஞ்சித் வேகமாக விக்ரமனின் அருகில் சென்றவன்.. தனக்கு வந்த விஷயத்தைக் கூற… “அட இதெல்லாம் ஒரு விஷயமா ரஞ்சித்.. இதுக்கா இவ்ளோ பதட்டமா ஓடி வந்த..” என்ற விக்ரமனும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
ரஞ்சித் அவரை புரியாமல் பார்த்தவனோ… “அட என்னப்பா இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க இது எவ்வளவு பெரிய விஷயம் இதுவரைக்கும் இப்படி ஒரு த்ரெட் உங்களுக்கு வந்ததே கிடையாது.. எனக்கு என்னவோ இது மிகப்பெரிய கொலை மிரட்டல்னு தான் தோணுது..” என்றவனோ… “எனக்கு என்னவோ கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு மெடிஷன் கம்பெனி ஒன்ன இழுத்து மூடுனோமே சேலம் பக்கத்துல ஒரு கிராமத்துல இருந்து.. அதோட எதிர்வினையா இருக்கும்னு தோணுது…”என்றவனின் முகமோ அவ்வளவு தீவிரமாக இருந்தது..
“ரஞ்சித் நான் அரசியலில் வந்து சேர்ந்ததிலிருந்து ஏகப்பட்ட மிரட்டல்கள் வந்துட்டு தான் இருக்குடா… ஆனா அதெல்லாம் நடக்கும்ன்னு எந்த அவசியமும் இல்லையே இது நடக்கும்னு ஏதாவது உன்னால உறுதியா சொல்ல முடியுமா..” என்று விக்ரமனின் கூற்று உண்மை என்றாலும் ஏதோ மனம் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருந்தது.
“நீங்க சொல்றது சரிதான் பா ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த ஆக்சிடென்ட்..” என்று அவன் பழைய பாட்டினையே பாட..
“ஆஅ ஐயோ அதே பாட்டை பாடாத ரஞ்சித்… அது ஜெஸ்ட் ஆக்சிடென்ட் தான் அதை முதல்ல உன் மனசுல பதிய வை…” என்றவரோ.. “இந்த பிரச்சாரத்துக்கு நான் போக போறது உறுதி… அத யார் தடுத்தாலும் நான் கேட்குறதா இல்ல.. அப்புறம் இந்த விசியம் எக்காரணத்த கொண்டும் வினைக்கு மட்டும் தெரியக்கூடாது…”என்றவரை கண்டு அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை..
“ப்பா வேணாப்பா.. நான் சொல்றதை கேளுங்க..” என்று ரஞ்சித்தும் அவரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றான்…
ஆனால் அவரோ கேட்பதாகவே இல்லை “என்னோட அரசியல் வாழ்க்கையில இந்த அஞ்சு வருஷம் தான் நான் லாஸ்ட்டா பதவில இருக்க போற வருஷம்.. அதனால இந்த அஞ்சு வருஷமா எனக்கு ரொம்ப முக்கியம்..” என்று கூறிய விக்ரமோ.. “ம்ம் கண்டிப்பா இந்த பிரச்சாரத்துக்கு நாம போறோம் அவ்வளவுதான் இதுக்கு மேல இத பத்தி பேசாத..” என்று கூறியவரோ பாவம் இந்த பிரச்சாரம் தான் அவரது வாழ்க்கை மட்டுமல்ல ரஞ்சித்தின் வாழ்க்கை மட்டுமல்ல அவரது செல்ல மகன் ரகோத்தின் வாழ்க்கையையும் சுத்தமாக மாற்றப் போகிறது என்று அவருக்கு தெரியாமல் போனது.
இங்கு ரகோத்தோ தனக்கு கொடுக்கப்பட்ட சீனை நடித்துக் கொண்டிருக்க அவனை மயக்க பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அவனுடன் நடிக்கும் அந்த நடிகை.
ஆனால் ரகோத்தின் பார்வை இம்மியும் அவள் பக்கம் திரும்பவே இல்லை.. அவன் பிளேபாய் தான்.. அதற்காக பெண் பித்தன் எல்லாம் இல்லை.. ஏன் அவனுக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்ட் கூட இருக்கிறார்கள். பலபேர் கூட லிவிங்கில் கூட இருந்திருக்கிறான்.. ஆனால் பெண்களை கண்டாலே வழிபவன் எல்லாம் இல்லை.. தன் மீது வந்து விழும் பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பவன் தான்..
இந்த நடிகையின் எண்ணம் அவனுக்கு தெரியாமல் எல்லாம் இல்லை.. அவள் நேரடியாக வந்து வினையனிடம் அப்ரோச் செய்திருக்க.. அவனோ ஏதோ அவளைப் பார்த்து நக்கலாக ஒரு சிரிப்பு சிரித்தவாறு மூன்று முறை தப்பித்து வந்துவிட்டான்… இவளும் மறுபடி மறுபடி அவனிடம் நெருங்க முயல அவனோ ஒருக்கட்டத்திற்கு மேல் அவளை எரிக்கும் பார்வையை பார்த்தவன் அவளிடம் ஒருநாள் நேராகவே…
“உன்ன பத்தி எனக்கு தெரியாதுனு நினைச்சியா.. எங்கிட்ட வந்து ஒட்டிக்கிட்டா அத வச்சி உன்னோட மார்க்கேட்ட ஏத்தலாம்னு பாக்குறியா.. அதுவா இல்ல உன்னோட அந்த வயசான பாய்ஃப்ரெண்ட் அதான் உனக்கு இந்த பட வாய்ப்பு வாங்கிக்கொடுத்த அந்த லால் இருக்கானே அவனுக்கான ஃபேக்டரி கட்ட என்ன கரெக்ட் பண்ணி என் அப்பாக்கிட்ட சைன் வாங்க சொன்னது தான் எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா…” என்று அனைவருக்கும் முன்னால் கத்தி விட…
அதனை கேட்டு அந்த நடிகைக்கோ பயம் அள்ளு விட்டது.. “இது எப்டி இவனுக்கு தெரியும்..”என்று அவள் யோசிக்க…
“என்ன இது எப்டி இவனுக்கு தெரியும்னு பாக்குறியா… இன்னும் உன்னோட வன்டவாளம் தண்டவாளம் எல்லாமே எனக்கு அத்துப்படி… சோ கிளம்பு…”என்று எரிந்து விழுந்தவனோ… “இன்னொரு தடவை என் பக்கம் நெருங்க முயற்சி பண்ணாத… மீறி பண்ணுன.. கைமா தான்…” என்று வேகமாக கத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்..
ஆனால் அவள் அவன் பக்கம் நெருங்க அது மட்டும் காரணமில்லை.. அதற்கு ஏற்றது போல அவளது பார்வை அதன்பின்பும் அவன் பக்கம்தான் சென்று கொண்டிருக்கிறது.. அழகாக கட்டழகனாக இருப்பவனை சுற்றி சுற்றி அவள் கண்கள் வட்டமடித்துக் கொண்டே தான் இருந்தது… அதுவும் ஒரு ஆம்கட் பனியனுடன் கடல் நீரில் முக்கிய எழும்போது அவனது சிக்ஸ் பேக் அனைத்தும் வெட்ட வெளிச்சமாக தெரிய அதில் பெருமூச்சு எழத்தான் செய்தது அவளுக்கு…
“ம்ச் எப்படியாவது இவனை நம்ப பக்கம் திருப்பனும்… எவ்ளோ நாள் தான் அந்த கிழம் கூடவே சுத்துறது…” என்று நினைத்தவாறு தன்னுடைய ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸை கொஞ்சம் கீழே இழுத்து விட்ட வாறே மறுபடி அவனிடம் நெருங்கி செல்ல…
அவனுக்கோ அவளின் எண்ணம் நன்றாகவே புரிந்து போனது.. இத்தனைக்கும் அவளை நிமிர்ந்து கூட அவன் பார்க்கவில்லை… “ஹாய் சார்…” என்று அவள் குழைவாக பேச…
அதில் நிமிர்ந்து பார்த்து “வாட்…”என்றவன்… “அன்ட் டோன்ட் கால் மீ சார்.. ஐ ம் வினை..”என்று அதிகாரமாக கூறியவனோ… அது இன்னும் கிளுகிளுப்பானது அவளுக்கு…
பின்னே தூரத்திலையே விரட்டுவான் என நினைக்க அவன் பக்கத்தில் விட்டுருப்பதே ஆச்சரியம் தானே… “ரொம்ப தாங்க்ஸ் வினை…” என்றவளை பார்த்து இதழ் வளைத்து சிரித்தவனோ
“என்ன கொஞ்சம் கூட என்னை திரும்பி பார்க்கவே மாட்றீங்களே…” என்று அவனை ஒட்டி உரசி கொண்டு இருக்க… அது அவனுக்கு கொஞ்சம் அருவருப்பை தான் தந்தது.
“ஸீ.. நான் முன்னாடியே சொல்லிட்டேன் உன்மேல எனக்கு எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லைன்னு…” என்று கூற.
அவளோ… “அய்யோ வினை நான் அந்த கிழவன எப்போவோ கழட்டிவிட்டாச்சி… நான் உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு பாக்குறேன்… நாம ஏன் கொஞ்சம் பேசி பழக கூடாது…” என்று அவனை விடுவதாக இல்லாமல் அவள் கூற.
சற்றென்று வேகமாக எழுந்தவனோ.. “எனக்கு தெரியாதுன்னு நெனச்சிட்டு இருக்காத ஆல் டீடைல் உன்னை பத்தி எல்லாமே எனக்கு தெரியும்..” என்று கூறியவனை கண்டு அவளோ.. “என்ன தெரியும்…” என்று குழந்தை போல கேட்க…
“இந்த குழந்தை மாதிரியான ஆக்டிங்கை முதலில் நிறுத்துறியா…” என்று கத்தியவானோ.
“அந்த கிழவன் உனக்கு பழசாகிட்டான்னும் தெரியும்.. உன்னோட ப்ளான் வேறன்னும் எனக்கு தெரியும்..”என்றவன்.. “ம்ம்ம் நீ அந்த புது ஹிந்தி ஆக்டர் அவன் கூட நெருக்கமா இருக்கிறத வீடியோ எடுத்து.. அத போலீஸ்க்கு ரிலீஸ் பண்ணி அவன் உங்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான்னு கத கட்டி விட்டன்னு எனக்கு தெரியாதா என்ன… அது மாதிரி என்னையும் திட்டம் போட்டு மாட்டிவிட பாக்குறன்னும் ஐ க்நோ…”என்றவனை பார்த்து அப்படியே அதிர்ந்து போய்விட்டாள் அவள்.
பின்னே அவளது வேலையே இதுதான்… பேமஸான நடிகர்கள் பல பேரிடம் நெருங்கி பழகியது போல பழகி அவர்களிடம் குளோசாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை. வீடியோவை காட்டி அல்லது நெட்டில், நியூஸ் பேப்பரில் விட்டு அந்த நடிகர்களுக்கும் அவளுக்கும் ஏதோ உறவு ஓடுவது போல வெளித்தோற்றத்தில் கொண்டு வந்து அதன் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை அதிகப்படுத்தி கொண்டிருந்தாள் அந்த நடிகை.
அதனை தான் இப்போது சரியாக ரகோத் பேச… அதில் அதிர தான செய்வாள்.
“ஸீ.. நான் மத்த ஆக்டர்ஸ் மாதிரி கிடையாது… தொடச்சு போட்டுட்டு போறதுக்கு எனக்கு இதெல்லாம் சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல அதும் உன்ன மாதிரி ஆள் கூட… ஸ்ப்பா…“என்று அருவருப்பாக அவளை பார்க்க அதில் அவள் முகமோ கன்றி போனது.
“உன் மூஞ்ச பார்க்கவே எனக்கு சுத்தமா பிடிக்கல… இன்னொரு தடவை என்னை நெருங்க முயற்சி பண்ணாத அப்படி பண்ணுன என்ன பத்தி உனக்கு நல்லாவே தெரியும் நினைக்கிறேன் இனி எந்த படத்திலும் உன்னை நடிக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்துருவேன் சரியா…” என்று அதட்டல் போட்டவன்…
அதே நேரம்.. “மிஸ் ஸ்ரேயா… ஷாட் ரெடி போய் நடிக்கலாமா…” என்று வசீகர புன்னகையுடன் கேட்க… இதற்கு முன்னால் பேசியது இவன் தானா என்றவாறே அந்த நடிகை யோசித்துக்கொண்டே நின்று இருந்தாள்… அதனை கண்டு சிரித்தவாறே தன்னுடைய ஷாட்டை முடிக்க சென்றுவிட்டான்.