அத்தியாயம் 11
“அவளோட வாழ்க்கை ரொம்ப சின்ன வயசுலையே முடிஞ்சு போச்சுன்னு கவலையா இருந்தேன் தெய்வா” என்ற கார்த்திகேயனிடம், “பாவா அர்ச்சனாவோட வாழ்க்கை இனி மேல் தான் ஆரம்பமாகும்” என்ற தெய்வானை, “சரி ராத்திரி எல்லாம் கார் ஓட்டிட்டு வந்தது உங்களுக்கு ரொம்ப அசதியா இருக்கும் ரெஸ்ட் எடுங்க” என்ற தெய்வானையிடம், “நீ மட்டும் என்ன தூங்கிட்டா வந்த நீயும் என் கூட பேசிட்டு தூங்காமல் தானே இருந்த அதனால் நீயும் தூங்கு” என்று மனைவியை தன்னோடு அணைத்துக் கொண்டான் கார்த்திகேயன்.
அவனது மார்பில் முகம் புதைத்தவள் மெல்ல கண்ணயர அவளது தலையை கோதி விட்டபடி அவனும் உறங்கி விட்டான்.
“என்னங்க ஏன் ஒதுங்கி ,ஒதுங்கி போறீங்க இது ஒன்னும் உங்க ஊர் கிடையாது கொஞ்சம் ஃப்ரீயா இருங்க” என்ற பிரசாந்திடம் மென்னகை புரிந்த அர்ச்சனா, “கேட்கிறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் எனக்கே புரியுது வதனை மனசு கஷ்டப் படக் கூடாதுன்னு தான் உங்க வீட்டில் எல்லோரும் என்னை சகிச்சுக்கிறீங்க ஆனால் என்னோட எல்லை எனக்கே தெரியுமே அதனால் நான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கேனே ப்ளீஸ்” என்றாள் அர்ச்சனா.
“என்ன பேசுறீங்க தெய்வா மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு உங்களை சகிச்சுக்கிறோமா யார் சொன்னது உங்க கிட்ட” என்றான் பிரசாந்த்.
“யார் சொல்லனும் எனக்கே தெரியுமே” என்ற அர்ச்சனாவிடம், “என்ன உங்களுக்கு தெரியும் சொல்லுங்க” என்றான் பிரசாந்த் புன்னகையுடன்.
“இல்லை நான் அபசகுணம்” என்று அவள் கூறிட, “அப்படியா எனக்கு அப்படி தோனவே இல்லை. உண்மையை சொல்லவா நீங்க என்னோட லக்கி சார்ம்” என்றான் பிரசாந்த்.
அவனை அவள் புரியாமல் பார்த்திட, “சத்தியமா சொல்றேங்க அன்னைக்கு உங்க கிட்ட நான் பேசிட்டு வெளியே வந்த உடனே ஒரு நல்ல நியூஸ் கிடைச்சது. என்னோட பெயர் ப்ரொமோசனுக்கு ரெகமன்ட் செய்யப் பட்டு இருக்குனு” என்றான் பிரசாந்த்.
“அது எப்படி என்னால” என்ற அர்ச்சனாவிடம், “உங்க கிட்ட பேசிட்டு வந்த பிறகு எனக்கு வந்த நியூஸ் இது. அப்போ உங்க முகத்தில் விழித்து, உங்க கிட்ட பேசிட்டு வந்ததால் தானே. நீங்க என்னோட நல்ல சகுனம் சரியா அபசகுணம் எல்லாம் கிடையாது. அர்ச்சனா முதலில் உங்களை நீங்களே இப்படி அபசகுணம் அது இதுன்னு சொல்லாதீங்க. ப்ரேவா இருங்க. தாழ்வுமனப்பான்மை மாதிரி மோசமான ஒன்று இந்த உலகத்திலே இல்லை அது நம்மளை அழிச்சுரும் அதனால் நீங்க உங்க கிட்ட இருக்கிற தாழ்வுமனப்பான்மையை தூக்கிப் போடுங்க. அப்பறம் இந்த வெள்ளை புடவையை தூரமா தூக்கி எறிஞ்சுருங்க எந்த காலத்தில் இருக்கீங்க இன்னமும் வெள்ளை புடவையை கட்டிக்கிட்டு” என்ற பிரசாந்த், “நான் உங்களை காயப் படுத்துற மாதிரி எதுவும் பேசிட்டேனா” என்றான்.
“இல்லை” என்று அவள் கூறிட, “ஒரு அட்வைஸ் சொல்றேன் கேட்பீங்களா” என்ற பிரசாந்த்திடம், “சொல்லுங்க” என்றாள் அர்ச்சனா. “உங்க கணவர் எப்படி இறந்தாருன்னு எனக்கு தெரியாது ஆனால் நீங்க இப்படி பொட்டு வைக்காமல், வெள்ளை புடவை கட்டி இருக்கிறது ரொம்ப பெரிய தப்பு. கல்யாணத்திற்கு அப்பறமா நீங்க பொட்டு வைக்க ஆரம்பிச்சீங்க பிறந்த நாள் தொட்டு உங்களுக்கு இருந்த உரிமை கணவர் இறந்துட்டாருங்கிறதால இல்லைன்னு சொல்லுறது எல்லாம் முட்டாள்தனம். பொட்டு வச்சா நீங்க ரொம்ப அழகா இருப்பீங்க வச்சுப் பாருங்க” என்றான் பிரசாந்த்.
அவனை முறைத்தவள் , “நீங்க என் வதனையோட அண்ணையா அதனால் தான் உங்க கிட்ட கோபம் படாமல் இருக்கேன் அதுக்காக உங்க எல்லையை தாண்டி பேசாதீங்க ப்ளீஸ்” என்றாள் அர்ச்சனா.
“ஐ யம் ஸாரி என் மனசுல தோணுச்சு அதான் பட்டுன்னு சொல்லிட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க” என்ற பிரசாந்த் சென்று விட அர்ச்சனா அமைதியாக பால்கனியில் நின்று அந்த நகரத்தை பார்க்க ஆரம்பித்தாள்.
இத்தனை நாட்களாக வீட்டுக்குள் அதுவும் அந்த நான்கு சுவற்றுக்குள்ளேயே அடைந்து கிடந்தவளுக்கு இன்று இந்த நகரத்தின் இரைச்சல் கூட பிடித்திருந்தது. சுதந்திரமாக சுவாசிப்பது போல இருந்தது. ஆனாலும் அவள் வளர்ந்த சூழ்நிலை அவளது மனதின் ஒரு மூலையில், “நீ இப்படி வெளியே வரலாமா? அதுவும் உன் அண்ணையா அவன் மனைவி கூட மறு வீட்டு விருந்துக்கு வந்த போது நீயும் இப்படி கூட வரலாமா?” என்று அவளை கேள்வியாய் கேட்டு இம்சிக்க தலைவலி வந்தது தான் மிச்சம். அமைதியாக சென்று ஓர் அறையில் படுத்து உறங்கி விட்டாள்.
“அர்ச்சனா, அர்ச்சனா” என்று அவளை அழைத்துக் கொண்டே கலா ராணி வந்தவர் உறங்கும் அவளைப் பார்த்து புன்னகைத்து விட்டு சென்று விட்டார்.
“என்ன வைஷ்ணவி உனக்கு தூக்கம் வரலையா” என்று கேட்ட கலாராணியிடம், “இல்லை அவ்வா தூக்கம் வரலை. நைட்டு நல்லா கார்ல தூங்கிட்டேன். நீங்க என்ன சமைக்கிறீங்க நான் ஹெல்ப் பண்ணட்டுமா” என்றாள் வைஷ்ணவி.
“உனக்கு சமைக்க எல்லாம் தெரியுமா?” என்ற கலா ராணியிடம், “இல்லை தெரியாது” என்றாள் வைஷ்ணவி. “அப்பறம் எப்படி எனக்கு உதவி பண்ணுவ” என்று கலா ராணி கேட்டிட, “நீங்க சமைக்கிறதை டேஸ்ட் பண்ணி உப்பு, காரம் எது குறைச்சல், எது கூட இதை பார்த்து சொல்லுவேன்” என்று சிரித்தாள் வைஷ்ணவி.
“ரொம்ப ரொம்ப பெரிய உதவி தான் வைஷு” என்று சிரித்தார் கலா ராணி.
“சரி இந்தா இந்த ஜூஸை குடிச்சுட்டு டேஸ்ட் எப்படி இருக்குனு சொல்லு நான் சமைக்கிறேன்” என்ற கலா ராணியிடம் , “சரிங்க அவ்வா” என்றாள் வைஷ்ணவி.
“என்ன பண்ணுறீங்க இரண்டு பேரும்” என்று வந்த பிரசாந்த்திடம், “சமையல் தான் டா வைஷூ எனக்கு ஹெல்ப் பண்ண போறாளாம் அதுவும் எப்படி பட்ட ஹெல்ப் தெரியுமா சமையலில் உப்பு , காரம் சரியா இருக்கான்னு பார்த்து சொல்லுற ஹெல்ப்” என்று சிரித்தார் கலா ராணி.
“சூப்பர் ஹெல்ப் ஆனால் இந்த ஹெல்ப்பை என் அம்மாவுக்கு பண்ணாதே, எனக்கு பண்ணு ஏன்னா இன்னைக்கு சமையல் என்னுடையது” என்று சிரித்தான் பிரசாந்த்.
“உங்களுக்கு சமைக்க கூட தெரியுமா,” என்ற வைஷ்ணவியிடம், “உன் அத்தை காருக்கு தான் சமைக்க தெரியாது நான் எல்லாம் மாஸ்டர் செஃப்” என்று காலரை தூக்கி விட்டான் பிரசாந்த். “ஓ அப்படியா அப்போ போலீஸ் இல்லையா? நீங்க சமையல்காரரா” என்ற வைஷ்ணவியின் தலையில் குட்டு வைத்தவன், “ஏமன்டி போலீஸ்காரன் வீட்டில் சமைக்க கூடாதா” என்று கேட்டான்.
“இதை நீங்க என் தலையில் குட்டு வைக்காமல் கேட்டு இருக்கலாம்” என்று அவள் கூறிட அவனோ சிரித்து விட்டு , “ஸாரி வலிக்குதா” என்று அவளது தலையில் தேய்த்து விட்டான். “இல்லை பரவாயில்லை” என்று அவள் கூறிட , அவனோ சமையல் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.
பிரசாந்த் அவளிடம் சிரித்து பேசிக் கொண்டே சமையல் வேலையை கவனிக்க அவளோ அவனது பேச்சை ரசிக்க ஆரம்பித்தாள். வைஷ்ணவியை அவன் சின்னப் பெண் என்று நினைத்து கேலியும், கிண்டலுமாக அவளிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
ஆனால் அவளோ பதினாறின் தொடக்கத்தில் இருந்தாள். அவனது பேச்சு, நடவடிக்கை மட்டும் இல்லாமல் பார்க்கவும் நல்ல ஆணழகனாக இருக்கும் பிரசாந்த் மீது ஒரு க்ரஷ் ஏற்பட ஆரம்பித்தது.
அவனுடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போல எல்லாம் அவளுக்கு தோன்றியது. “சரி வைஷு ஒரு வழியா சமையல் வேலையை முடிச்சுட்டோம் எல்லோரையும் சாப்பிட கூப்பிடலாமா” என்ற பிரச்சாரத்திடம், “ஓ கூப்பிடலாமே” என்ற வைஷ்ணவி, “நான் போயி அவ்வாவை கூப்பிடுறேன்” என்று அவள் சென்று விட பிரசாந்த் தன் அறைக்கு சென்றான்.
அவன் அறையில் தான் அர்ச்சனா உறங்கிக் கொண்டிருந்தாள். அது அவனுக்கு தெரியாது அவனோ கிட்சனில் சமைத்தது கசகசவென இருக்கு குளிக்கலாம் என்று அவனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டான்.
சட்டையை கழட்டலாம் என்று நினைக்கும் பொழுது தான் கவனித்தான் அர்ச்சனா அவனது அறையில் உறங்கிக் கொண்டிருப்பதை. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அர்ச்சனா.
உறங்கும் போது அவளது புடவை விலகி இருக்க அவளது இடை, கெண்டை கால்கள் தெரிய காளை அவனோ ஒரு நொடி அதைப் பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
“என்ன பண்ணுற பிரசாந்த் தூங்கிட்டு இருக்கிற பொண்ணை இப்படித் தான் பார்க்கிறதா” என்று தன்னைத் தானே நொந்து கொண்டவன் , அவள் மீது ஒரு போர்வையை எடுத்து போர்த்தி விட்டு அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.
“என்ன பிரசாந்த் குளிக்கலையா” என்ற கலாராணியிடம், “அர்ச்சனா என் ரூம்ல தூங்குறாங்கம்மா” என்றான் பிரசாந்த். “சரி அப்போ நீ என் ரூம்ல உள்ள பாத்ரூம்ல குளி” என்று கலா ராணி கூறிட அவனும் சென்று விட்டான்.
உறக்கம் கலைந்து மெல்ல கண் விழித்து எழுந்த அர்ச்சனா, “தன் மீது போர்வை போர்த்தி விட்டது யாரு” என்று யோசிக்க ஆரம்பித்தாள். போர்வையை விலக்கி விட்டு பார்க்க தன் புடவை விலகி வயிறு, இடுப்பு, கால்கள் எல்லாம் அப்பட்டமாக தெரியவும், “ ச்சே என்ன இவ்வளவு மோசமா தூங்கி இருக்கேன்” என்று நொந்து கொண்டவள், “ஒருவேளை அத்தைகாரு தான் போர்வை போர்த்தி விட்டு இருப்பார்களோ?” என்று யோசித்தாள்.
“அத்தைகாருவா இருந்தால் ஏன் போர்வை போர்த்தி விடனும் புடவையை இழுத்து விட்டு இருக்கலாமே” என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் அர்ச்சனா.
“அர்ச்சனா எழுந்துட்டியாம்மா” என்று வந்த கலா ராணியிடம், “புன்னகைத்த அர்ச்சனா எழுந்துட்டேன் அத்தைகாரு. மன்னிச்சுருங்க ஒரே தலைவலி அதான் இது யாரோட அறைன்னு கூட கேட்காமல் தூங்கிட்டேன்” என்று அவள் கூறிட அவளைப் பார்த்து புன்னகைத்த கலா ராணி , “அர்ச்சனா இது உன் வீடுன்னு நினைச்சுக்கோ. எந்த ரூம்ல தூங்கினால் என்ன இப்போதும் தலை வலிக்குதா டீ போட்டு தரட்டுமா” என்றார் கலா ராணி.
“இல்லை அத்தைகாரு இப்போ தலைவலி பரவாயில்லை” என்று அவள் கூறிட , “சரி சாப்பிட வா” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றார் கலாராணி.
“பாவா , பாவா” என்று கணவனை எழுப்பினாள் தெய்வானை. “ஏமி தெய்வா” என்றவனிடம், “தூக்கம் போகலையா?” என்று கேட்டாள்.
“இல்லைம்மா லைட்டா தூக்கம் இருக்கு” என்றவன், “சொல்லு எதுக்கு எழுப்பின” என்றான் அவன். “சாப்பிட போகலாமா?” என்று அவள் கேட்டிட, “போகலாமே” என்றவன் அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“ஏமி பாவா சாப்பிட போகலாம்னு சொல்லிட்டு” என்ற தெய்வானையின் இதழில் தன் இதழைப் பதித்தான் கார்த்திகேயன்.
அவளோ கணவன் அவனது திடீர் முத்தத்தில் மௌனமாகிட அவன்
சிரித்து விட்டு அவளைத் தன்னோடு மேலும் இறுக்கிக் கொண்டான்.
…. மயக்கியே…