அத்தியாயம் 13
“ஏமி அர்ச்சனா இது” என்ற சௌந்திரவள்ளியிடம், “வதனை தான் அம்மா ஆசைப்பட்டாங்க” என்று தயங்கியபடி கூறினாள் அர்ச்சனா.
“நல்லா மூன்று நாளா ஹைதராபாத் முழுக்க இப்படி தான் மினுக்கிட்டு சுத்திட்டு இருந்தியா” என்ற சௌந்திரவள்ளியிடம், “அத்தைம்மா அர்ச்சனாவுக்கு மட்டும் இல்லை நீங்க கூட சுடிதார் போட்டால் ரொம்ப அழகா இருப்பீங்க. முப்பது வயசு பொண்ணு மாதிரி” என்று தெய்வானை கண் சிமிட்டி கூறிட, “அட போ தெய்வானை” என்று வெட்கத்துடன் கூறினார் சௌந்திரவள்ளி.
“சத்தியமா அத்தைம்மா உங்களுக்கு கூட சுடிதார் எடுத்துட்டு வந்திருக்கேன். நீங்க சுடிதார் போட்டு, மாவய்யா பேன்ட், சர்ட் போட்டு இரண்டு பேரும் ஜோடியா நடந்து வந்தால் எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?” என்ற தெய்வானை யின் கன்னத்தில் இடித்த சௌந்திரவள்ளி, “உனக்கு எல்லாமே விளையாட்டு தான் அம்மு போ போயி குளிச்சிட்டு சாப்பிட வாங்க” என்று கூறினார் சௌந்திரவள்ளி.
“ஏமி அம்மா இது அவள் என்னவோ உன் உனக்கு சுடிதார் எடுத்துட்டு வரேன்னு சொல்றாள். நீயும், நைனாவும் அதை போட்டுட்டு ஊரெல்லாம் சுத்தி வரனும்னு சொல்றாள். நீ சிரிச்சுக்கிட்டே உள்ள போனு சொல்ற உன் பொண்ணு வெள்ளை சேலையை கழட்டி போட்டுட்டு கலர் கலரா சுடிதார் போட்டுட்டு சுத்திட்டு இருக்காள். அது மட்டும் இல்லாமல் சுடிதார் போட்ட மேனிக்கு நம்ம வீட்டுக்கும் வந்து இருக்காள். உனக்கு கோபமே வரலையா?” என்றாள் அருணா தேவி .
“அருணா அர்ச்சனா சின்ன பொண்ணு வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்காள். அவளுக்கான ஒரு சின்ன சந்தோஷமா இது இருந்துட்டு போகட்டுமே. நம்ம வீட்டுக்குள்ள தானே இந்த மாதிரி உடை உடுத்திட்டு இருக்காள். வெளியேவா போயிட்டு இருக்காள் என்று சிவநேசன் கூறினார்.
“ஹைதராபாத் முழுக்க மூன்று நாளாக உங்க மகள் இப்படித்தான் சுத்தி இருக்காள். அது உங்க கண்ணுக்கு தெரியலையா நைனா” என்றாள் அருணா தேவி.
“ஏமி செப்பன்டி அருணா ஹைதராபாத்தில் அவள் எப்படி டிரஸ் பண்ணினால் என்ன. அங்கே இவளை யாருக்கு தெரியும். நம்ம ஊர்ல இந்த மாதிரி உடுத்திட்டு இருந்தா நீ பேசலாம் இன்னும் சொல்லப்போனால் அர்ச்சனா தன் அறையை விட்டே வெளியே வரலை. முதன் முதலில் தெய்வானை தான் அவளை ஹைதராபாத் கூட்டிட்டு போயிருக்காள். என் பொண்ணு அந்த சுடிதார்ல எம்புட்டு அழகா இருக்கா தெரியுமா அவனை பாவாடை தாவணியில் பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப வருசத்துக்கு அப்பறம் இப்போ தான் வெள்ளை புடவை தவிர வேறு உடை உடுத்தி பார்க்கிறேன். புருஷன் கூட முழுசா ஒரு வாரம் கூட அவள் வாழவில்லை. அவளோட வாழ்க்கை காலம் முழுக்க இருட்டு அறைக்குள்ளேயே போயிருமோனு பார்த்துட்டே இருந்தேன்.
நல்ல வேலை என் மருமகள் வந்த ஒரு வாரத்திலேயே அவளை இந்த அளவிற்கு மாற்றி இருக்கிறாள் சந்தோஷம்” என்று கண்கலங்கினார் சிவநேசன் .
நம்ம ஊரோட பழக்கம் வழக்கம் தெரிஞ்சு தான் பேசுறிங்களா? நைனா என்ற அருணா தேவியிடம், “ஊர் உலகத்திற்கு பயந்து தான் நம்ம வாழ்ந்துட்டு இருக்கோம் இல்லைன்னு சொல்லல ஆனா நம்ம வீட்டுக்குள்ள தானே நம்ம பொண்ணு சந்தோஷமா இருக்காள் வெளியில போகும்போது வெள்ளை புடவை கட்டிட்டு தான் போவா அதனால நீ எதுவும் போட்டு குழப்பிக்காம போய் வேலையை பாரு” என்று கூறினார் சௌந்திரவள்ளி.
“நல்ல கூத்தா இருக்கு அவளுக்கு ஏத்தபடி உங்களை நல்லா மயக்கி வச்சிருக்காள். மயக்கி ,மயக்கி” என்ற அருணாவிடம் அவள் நமக்கு நல்லது தான் பண்ணுவா அருணா நீ கண்டதையும் யோசிக்காமல் உன் வேலைய மட்டும் பாரு. சும்மா இங்க வந்து எனக்கும், என் மருமகளுக்கும் இடையில சண்டை மூட்டி விடனும்னு நினைக்காதே” என்று கூறினார் சௌந்திரவள்ளி.
“ஏமி பாவா, ஏதோ யோசனையா இருக்கீங்க” என்று வந்து தெய்வானையை தன் அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான் கார்த்திகேயன்.
“பாவா பட்ட பகலில் ஏமி செஸ்ட்டானு” என்ற தெய்வானையிடம், “எப்படி தெய்வா என் அம்மாவை கண்ணை சிமிட்டியே ஈசியா மடக்கிட்ட, நான் கூட பயந்துட்டு இருந்தேன் எங்கே அர்ச்சனா அடிச்சிருவாங்களோன்னு” என்ற கார்த்திகேயனிடம், “பாவா அவங்க அர்ச்சனைவோட அம்மா, தன் பொண்ணு இந்த மாதிரி டிரஸ் பண்றதை அவங்களும் ரசிக்க தான் செய்வாங்க, அர்ச்சனாவோட வாழ்க்கையை பத்தி நீங்க சொன்னீங்க தானே பாவா, ஒரு வாரம் கூட அவங்க கல்யாணம் ஆகி புருஷன் வீட்டில் வாழவில்லைன்னு, அப்படி இருக்கும் போது அவங்களுக்கு நம்ம மகளோட வாழ்க்கை இப்படி ஆயிருச்சுங்குற கவலை இருக்குமே, எப்போ பாத்தாலும் வெள்ளை புடவையில் அந்த பொண்ணை காலத்திற்கும் வைத்திருக்க கூடாது.
இப்போ அந்த வெள்ளை புடவையை மாத்தியாச்சு. இன்னும் கொஞ்ச நாளில் அர்ச்சனாவுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி அவளை சந்தோஷமா வாழ வைக்கணும்” என்றாள் தெய்வானை.
“நான் ரொம்ப பயந்தேன் தெய்வா நீ சிட்டியில் வளர்ந்த பொண்ணு இந்த ஊரில் எப்படி அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருப்ப, அதுவும் என் வீட்டு ஆளுங்க கிட்ட எப்படி அட்டாச் ஆவியோனு ரொம்ப பயந்தேன், ஆனால் இங்கே வந்த ஒரு வாரத்துக்குள்ள அம்மா , நைனா, அர்ச்சனா எல்லாரையுமே நல்லா மயக்கி வச்சுருக்க என்றான் கார்த்திகேயன்.
“உங்க அக்கா சொல்லுவதை நீங்களும் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களா” என்று சிரித்தவளிடம், “நீ என்னைக்குமே என்னோட மயக்கி தான்” என்று கூறி அவளை அனைத்து கொண்டான் .
“சரி சரி அப்புறமா கொஞ்சுங்க, அத்தைம்மா சாப்பிட வர சொன்னாங்க எனக்கும் பசிக்குது பாவா போய் சாப்பிடலாமா” என்ற தெய்வானையின் கன்னத்தில் முத்தமிட்டவன், “கண்டிப்பா போய் சாப்பிடலாம்” என்று மனைவியை அழைத்துக் கொண்டு சென்றான்.
அருணா எவ்வளவு முயன்றும் தெய்வானைக்கு எதிராக சௌந்தரவள்ளியை திருப்பி விட முடியாமல் போனது.
நாட்களும் அழகாக அதன் போக்கில் சென்றது. தெய்வானை, கார்த்திகேயன் இருவருக்கும் திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அர்ச்சனாவை கொஞ்சம் கொஞ்சமாக பேசிப் பேசி தெய்வானை வீட்டில் அவள் எடுத்து கொடுத்த உடைகளை அணிய வைத்தாள்.
வெளியில் வரும் பொழுது அர்ச்சனா தன் தாய் தந்தையின் மரியாதை பாதிக்குமோ என்ற பயத்திலே வெள்ளை புடவை மட்டும் தான் அணிவாள். பெரும்பாலும் அவள் வெளியே செல்வதில்லை அதையும் மீறி எங்காவது சென்றால் வெள்ளை புடவை தவிர வேறு எதுவும் அணிவதில்லை.
“ஏமி தெய்வா யோசனை” என்று வந்த கார்த்திகேயனிடம், “ஒன்னும் இல்லை பாவா நம்ம அர்ச்சனா பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன். அவங்க ஏன் வெளியில போகும்போது வெள்ளை புடவை கட்டுறாங்க. நார்மலா டிரஸ் போட்டுக்க வேண்டியதுதானே? வீட்டுக்குள்ள நான் வற்புறுத்துறதுனால வேற டிரஸ் போடுறாங்க ஆனால் வெளியில போகும்போது என்று வருந்தினாள் தெய்வானை.
“இதோ பாரு தெய்வா இது கிராமம் ஹைதராபாத் கிடையாது இங்க அம்மா, நைனாவோட கௌரவம் பாதிக்க கூடாது. தன்னோட உடையை வச்சு மத்தவங்க தாப்பா பேசிடுவாங்களோ அப்படிங்கற பயத்துல அவன் நடந்துட்டு இருக்காள். நீ அதெல்லாம் யோசிக்காத சாப்பிட்டியா” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே மயங்கி சரிந்தாள் தெய்வானை.
“தெய்வா என்ன ஆச்சு” என்று பதறியவன் மனைவியின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, அவள் லேசாக கண்விழித்தாள்.
“என்னாச்சும்மா ஏன் மயக்கம்” என்ற கார்த்திகேயனிடம், “தெரியவில்லை பாவா காலையிலிருந்து தலை சுத்தலா இருந்துச்சு இப்போ மயங்கி விழுந்துட்டேன்” என்று அவள் கூறிட, “சரி வா ஹாஸ்பிட்டல் போலாம்” என்றான் அவன்.
“கொஞ்சம் பாத்துட்டு போலாமே” என்று அவள் கூறிட, “என்னத்த பாத்துட்டு போக போற ஒழுங்கா வா” என்று அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
“ஏமி அண்ணையா வதனை ஏன் டல்லா இருக்காங்க” என்று பதற, “ஒன்னும் இல்லை அர்ச்சு, சும்மா பேசிட்டு இருக்கும்போதே மயங்கிட்டாள். அதான் ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போறேன், நீயும் கூட வரியா” என்றான் கார்த்திகேயன்.
அம்மாவும், நைனாவும் வீட்டில் இலாலையே, சரி நானே வரேன்” என்று அர்ச்சனாவும் தன் சகோதரனுடன் மருத்துவமனைக்கு கிளம்பி சென்றாள்.
“அண்ணையா வதனைக்கு என்ன பிரச்சினை” என்ற அர்ச்சனாவின் கைகளை பிடித்தவன், “அதான் டெஸ்ட் கூட்டிட்டு போய்ட்டாங்களே, பயப்படாதே சாப்பிடாமல் கொள்ளாமல் இருந்திருப்பாள். அதனால கூட தலை சுத்தி இருக்கும்” என்று அவன் கூறிக் கொண்டிருக்க மருத்துவர் அவர்களை அழைத்திட கார்த்திகேயன் அர்ச்சனா இருவரும் மருத்துவரை காண அந்த அறைக்குள் சென்றனர் .
அங்கு தெய்வானை தலையை குனிந்த படி அமர்ந்திருந்தாள்.
“வாங்க சார்” என்ற மருத்துவரிடம், “டாக்டர் என் வொய்ஃபுக்கு என்ன ஆச்சு அவள் நல்லா தானே இருக்காள்” என்று பதற்றத்துடன் கேட்டான் கார்த்திகேயன்.
“ நல்லா தான் இருக்காங்க ஆனால் ரொம்ப வீக்கா இருக்காங்க இனிமேல் நீங்கதான் கொஞ்சம் அவங்களை பத்திரமா பார்த்துக்கணும்” என்று அந்த மருத்துவர் கூறிட,
வீக்கா இருக்காளா என்ன ஆச்சு டாக்டர் ஏதும் பிரச்சனையா” என்று பதட்டப் பட்டான் கார்த்திகேயன்.
“சார் எல்லாம் நல்ல விஷயம் தான் உங்க வொய்ஃப் கன்சிவா இருக்காங்க. நீங்க அப்பாவாக போறீங்க” என்று மருத்துவர் கூறிட, “வதனை நிஜமா” என்று அர்ச்சனா கேட்டிட வெட்கத்துடன் தலையை குனிந்தாள் தெய்வானை.
அவளை அணைத்துக்கொண்ட அர்ச்சனா, “ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு வேதனை இந்த பாப்பாவை பெத்து என்கிட்ட கொடுத்திடுறீங்களா? நான் பாத்துக்குறேன்” என்று அவள் உணர்ச்சி பெருக்கில் கூறிட தெய்வானையும் அவளை அணைத்துக் கொண்டாள்.
கார்த்திகேயனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் அன்பு மனைவி தனது குழந்தையை அவளது மணி வயிற்றில் சுமக்கிறாள் என்பதே அவனுக்கு பேரானந்தமாக இருந்தது.
அண்ணையா உடனே வதனையோட அண்ணாக்கு போன் பண்ணி சொல்லுங்க. அத்தைகாரு, மாவய்யா இரண்டு பேரும் சந்தோஷம் படுவாங்க. வதனையும் அவங்களை பார்க்கணும்னு ஆசைப்படுவாங்க” என்றவள், “முதலில் வாங்க வீட்டுக்கு போகலாம். அம்மாவும் நைனாவும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று அர்ச்சனா படபடவென்று கூறிட கார்த்திகேயனும் தங்கையிடம் தலையாட்டியவன் இரு போன் பண்றேன் அர்ச்சனா என்று கூறிவிட்டு மருத்துவரிடம் நன்றி கூறிவிட்டு தன் மனைவியை அழைத்துச் சென்றான்.
“எங்கே போனீங்க மூன்று பேரும்” என்ற சௌந்தரவள்ளியிடம், “அம்மா ஒரு சந்தோஷமான விஷயம் நம்ம வதனை குழந்தை உண்டாகி இருக்காங்க” என்று அர்ச்சனா கூறிட “நிஜமா தான் சொல்றியா அர்ச்சனா” என்றார் சௌந்திரவள்ளி.
“ஆமா அத்தைம்மா” என்று தெய்வானை தலை குனிந்திட மருமகளை அணைத்துக் கொண்ட சௌந்தரவள்ளி அவளது நெற்றியில் முத்தமிட்டு அவளுக்கு உப்பு, புளி, மிளகாய் வைத்து திருஷ்டி களித்தார் .
அந்த நேரம் வீட்டிற்குள் நுழைந்தாள் அருணா தேவி.
“என்னம்மா உங்க மருமகளை கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க” என்று வந்த அருணா தேவியிடம், “அருணா நீ அத்தையாக போரடி நம்ம தெய்வானை மாசமா இருக்கு” என்று சந்தோஷமாக சௌந்தரவள்ளி கூறிட அருணாவின் முகத்தில் மருந்துக்கும் சந்தோஷம் இல்லை.
சிரித்தபடி வீட்டிற்குள் நுழைந்தவள் இந்த செய்தியை கேட்டதும் முகத்தில் துணி வைத்து துடைத்தது போல் நின்று கொண்டிருந்தாள்.
மற்றவர்கள் இருந்த சந்தோஷத்தில் அவளை கவனிக்க மறந்து விட்டனர்.
…மயக்கியே…