மயக்கியே என் அரசியே..(14)

4.8
(5)

அத்தியாயம் 14

 

“என்ன அருணா உனக்கு சந்தோஷம் தானே” என்று சௌந்தரவள்ளி கேட்டிட, “சந்தோஷம் தான் அம்மா” என்று தன் முகத்தை இயல்பாக மாற்றி நடிக்க ஆரம்பித்தாள் அருணா.

 

 “யார் யார் தம்புடு ஹாஸ்பிடல் போனீங்க” என்ற அருணா தேவியிடம் “நான் ,அர்ச்சனா , தெய்வானை மூன்று பேரும் தான் அக்கா” என்றான் கார்த்திகேயன்.

 

 “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? முதல் முதலாக உன் பொண்டாட்டி குழந்தை உண்டாகி இருக்காள். இவளை போய் துணைக்கு கூட்டிட்டு போயிருக்க” என்று அருணா கொஞ்சம் கூட நாக்கில் நரம்பில்லாமல் அர்ச்சனாவை குறை கூறிக் கொண்டிருக்க, “வாய மூடு அருணா என்ன பேசிட்டு இருக்க நீ” என்று மகளை கண்டித்தார் சிவநேசன்.

 

 “இல்லை நைனா” என்று அருணா ஏதோ சொல்ல வர, “வாயை மூடு உனக்கு பல முறை சொல்லி இருக்கேன் அர்ச்சனா உன்னோட தங்கச்சி விரோதி இல்லை ,ஏன் எப்போ பார்த்தாலும் அவளை கரிச்சு கொட்டிக்கிட்டே இருக்க. வீட்ல நல்ல விஷயம் நடந்திருக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கும்போது நீ தேவை இல்லாமல் அர்ச்சனாவை தப்பா பேசி எல்லாரோட சந்தோஷமான மனநிலையை கெடுக்குற” என்று கத்தினார் சிவநேசன்.

 

 “நைனா நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என்று தன் தந்தையை சமாதானப்படுத்தினான் கார்த்திகேயன்.

 

 “பாரு கார்த்தி அவள் எப்படி பேசிட்டு இருக்காள்ன்னு அர்ச்சனாவை ஏன் இந்த மாதிரி நடத்துறாள்ன்னு எனக்கு தெரியலை” என்று அவர் புலம்பி கொண்டிருக்க, “ஏமி அருணா உன் வாயை வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டியா” என்று மகளை கடிந்து கொண்டார் சௌந்தரவள்ளி .

 

“நேனு தம்புடுக்கு நல்லதுக்கு தானே சொன்னேன் அது ஏன் உங்க யாருக்கும் புரிய மாட்டேங்குது முதல் முதலில் தெய்வானைக்கு குழந்தை உண்டாகி இருக்குது இவள் கிட்ட சொன்னால் விளங்குமா? நாளைக்கு அந்த குழந்தைக்கு ஏதாவது ஒன்னுனா” என்று அருணா கூடி முடிக்கவில்லை அவளது கன்னத்தில் பளார் என்று அறைந்தார் சௌந்தரவள்ளி.

 

 “நுவ்வு ஏமி செப்பன்டி அருணா, முதல் முதலாக அந்த பிள்ளை குழந்தை உண்டாகி வீட்டுக்கு வந்து இருக்கு அதுக்குள்ள குழந்தைக்கு ஏதாவது ஆயிரும்னு சொல்ற அபசகுணம் புடிச்ச மாதிரி பேசாதே. உண்மையில் அர்ச்சனாவை விட நீ தான் பெரிய அபசகுனமா இருக்க மரியாதை என் வீட்டை விட்டு வெளியே போ” என்று கத்தி விட்டார் சௌந்தரவள்ளி.

 

 கோபமாக அங்கிருந்து சென்று விட்டாள் அருணா.

 

 “நீ எதுவும் தப்பா நினைச்சுக்காதம்மா அவளோட குணமே அப்படித்தான்” என்ற சௌந்திரவள்ளியிடம், “அதெல்லாம் நான் தப்பா நினைக்கலை அத்தைம்மா” என்றாள் தெய்வானை.

 

“ சரி சரி சந்தோஷமான விஷயம் சொல்லி இருக்கீங்க. இருங்க நான் போயி இனிப்பா எதாவது பலகாரம் செஞ்சு எடுத்துட்டு வரேன்” என்று கிச்சனுக்கு ஓடினார் சௌந்தரவள்ளி .

 

அர்ச்சனா ஒரு ஓரமாக சோகமாக அமர்ந்திருக்க அவள் அருகில் சென்றாள் தெய்வானை. 

 

“ஏமன்டி அர்ச்சனா நீங்க ஏன் தனியா வந்து உட்கார்ந்திருக்கீங்க உங்க அக்கா சொன்னதை நினைச்சு வருத்தப்படுறீங்களா?” என்ற தெய்வானையிடம், “நானும் யோசிக்கவில்லை வதனை, அக்கா சொன்னதுக்கு அப்புறம் தான் என் புத்தியில் உறைக்குது” என்று அர்ச்சனா கூறிட, “இதோ பாருங்க அர்ச்சனா திரும்பவும் மூடநம்பிக்கைக்குள்ள போகாதீங்க, நீங்க கூட வந்ததுனால என் குழந்தைக்கு ஏதாவது ஆயிருமா? யார் சொன்னா இந்த குழந்தையை பெத்து நான் உங்ககிட்ட தான் கொடுக்க போறேன் அப்படி இருக்கும்போது அதுக்கப்புறம் என் குழந்தைக்கு எதுவும் ஆயிடுமா” என்று அவள் கூறிட, அவளது வாயில் கை வைத்தாள் அர்ச்சனா.

 

 “விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க வதனை , இந்த குழந்தை என் அண்ணையாவோட வாரிசு அதுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது அது நல்லா இருக்கணும்” என்று அர்ச்சனா கூறிட, “என் குழந்தை நல்லா இருக்கணும்னா அவனுடைய அர்ச்சனா அத்தை டெய்லி என் குழந்தைகிட்ட பேசிட்டு இருக்கணும் இப்படி மூலையில போய் உட்கார்ந்து மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்க கூடாது சரிங்களா” என்று தெய்வானை கேட்டிட அர்ச்சனாவும் புன்னகைத்தாள். 

 

“பாவா” என்று வந்த மனைவியை அணைத்துக்கொண்டான் கார்த்திகேயன்.

 

“ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெய்வா” என்று அவன் கூறிட, அவனைப் பார்த்து புன்னகைத்தாள் தெய்வானை.

 

“ என்னோட சந்தோஷத்தை வார்த்தையால சொல்ல முடியாது அந்த அளவுக்கு சந்தோஷமா இருக்கேன். நமக்கு ஒரு குழந்தை வரப்போகுது எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? என் லைஃப்ல கல்யாணம் என்கிற ஒரு விஷயம் நடக்குமா? நடக்காதா? குழந்தை குட்டி எல்லாம் இருக்குமான்னு யோசிச்சிருக்கேன். ஆனால் என் லைஃப்ல வந்த தேவதை நீ. நம்ம வாழ்க்கையில அடுத்ததா வரப்போற குட்டி தேவதை நம்ம குழந்தை” என்று மனைவியின் வயிற்றில் முத்தமிட்டான் கார்த்திகேயன்.

 

 “பாவா எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க. கல்யாணம் ஆகிட்டா குழந்தை உண்டாகுறது எல்லாம் நார்மல் தானே” என்ற தெய்வானையிடம், “உனக்கு புரியாது தெய்வா எனக்கு ஆல்ரெடி வயசு வேற அதிகமாயிருச்சு. முப்பத்து ஏழு வயசு ஆயிடுச்சு இப்போ தான் எனக்கு கல்யாணம். குழந்தை உனக்கு புரியாது” என்று அவன் கூறிட, அவனது மார்பில் சாய்ந்து கொண்டவள் “ஏன் புரியாது எல்லாமே புரியும் இதோ பாருங்க பாவா. வயசு ஒரு பெரிய குறையே கிடையாது சும்மா சும்மா பீல் பண்ணிட்டு இருக்காதீங்க நம்ம குழந்தையை நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா வளர்க்கலாம் சரிங்களா” என்று அவள் கூறிட அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “ஸாரி தெய்வா அக்கா” என்று அவன் தயங்கிட , “உங்க அக்கா பத்தி எனக்கு தெரியாதா? கல்யாணம் ஆகி வந்த மறுநாளே அவங்களை பத்தி புரிஞ்சுகிட்டேன் அதனால அவங்க பேசுறது எல்லாம் இந்த காதுல வாங்கிட்டு இந்த காதேல விட்றலாம் அர்ச்சனாவையும் அதே மாதிரி எடுத்துக்க சொல்லுங்க அவங்க அக்கா பேசுறதெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு என்னை விட்டு விலகி போனாங்க உங்களுக்கு தான் உதை விழும்” என்றாள் தெய்வானை.

 

  “அதெல்லாம் என் தங்கச்சி உன்னை விட்டு விலகி போக மாட்டாள். பார்த்தியா இந்த சந்தோஷமான விஷயத்தை அத்தைகாருகிட்டேயும், மாவய்யாகிட்டேயும் சொல்லவே இல்லை இரு நான் பிரசாந்துக்கு போன் பண்ணி சொல்றேன்” என்று கூறிய கார்த்திகேயன் பிரசாந்துக்கு போன் செய்தான்.

 

 “செப்பன்டி பாவா” என்ற பிரசாந்திடம், “பிரசாந்த் ஒரு குட் நியூஸ் நீ மாவாவாக போற” என்றான் கார்த்திகேயன்.

 

 “நான் மாவா‌ ஆக போறேனா புரியலையே பாவா” என்றவன் யோசிக்க, “தெய்வானை குழந்தை உண்டாகிருக்காள்” என்று கூறினான் கார்த்திகேயன்.

 

“ நெஜமாவா பாவம் ஐயோ ரொம்ப சந்தோஷம் இருங்க நான் வீட்டுக்கு போய் அம்மாகிட்டயும், நைனாகிட்டேயும் சொல்லிட்டு உடனே கிளம்பி அங்கே வரோம்” என்று கூறிய பிரசாந்த் சந்தோஷமாக தன் வீட்டிற்கு கிளம்பினான்.

 

“ஏமன்டி வதனை கடுகடுப்பா உக்காந்து இருக்கீங்க” என்று வந்த பவித்ராவிடம், “அந்த தெய்வான குழந்தை உண்டாகி இருக்காளாம்” என்றாள் அருணா தேவி.

 

 “கல்யாணம் ஆனால் அடுத்த மூன்று மாசத்துல குழந்தை உண்டாகிறதெல்லாம் சாதாரணம் தானே” என்ற பவித்ராவிடம், “உனக்கு கோபமே வரலையா உன் இடத்தில் அவள் உட்கார்ந்து இருக்காள். உன் வயித்துல வளர வேண்டிய குழந்தை அவளோட வயித்துல வளருது இதெல்லாம் நினைச்சு உனக்கு ஆத்திரமாவே வரலையா” என்று கத்தினாள் அருணா தேவி .

 

“ஆத்திரம் இல்லாமல் இருக்குமா நம்மளால என்ன பண்ண முடியும் உங்க தம்பியை விட்டு அவளை யாரால அனுப்ப முடியாது” என்று பவித்ரா கூறினாள் .

 

“என்னால முடியும் 

 

“அந்த குழந்தை இருந்தால் தானே என் தம்புடு கூட அந்த தெய்வானை வாழ்வாள், குழந்தையை கொன்னுட்டா” என்று அருணா தேவி கூறிட, “வதனை என்ன இது இவ்வளவு கொடூரமான புத்தி வயத்தில் வளரும் குழந்தையை அழிக்கிறது மிகப்பெரிய பாவம்” என்றாள் பவித்ரா.

 

 “பாவம், புண்ணியம் எல்லாம் பார்த்தால் நம்ம வாழ முடியாது ஒன்று நீ அந்த வீட்ல மருமகளா வாழனும் இல்லையா என் பொண்ணு வைஷ்ணவி அங்கே வாழனும் எவளோ ஒருத்தி வந்து என் தம்பியோட சொத்து எல்லாம் ஆண்டுட்டு இருக்காள். என்னால ஜீரணிக்க முடியாது” என்று பொங்கினாள் அருணா தேவி .

 

“தப்பு வேதனை” என்ற பவித்ராவிடம், “எது டீ தப்பு எது தப்பு அது என் வீடு அந்த வீட்டில நான்தான் மகாராணியா இருக்கணும். இங்கிருந்தோ வந்தவளை மகாராணி மாதிரி குடும்பமே வச்சு கொண்டாடுது, அதுவும் என் அம்மா அவ கண்ணை சிமிட்டி அத்தம்மான்னு கொஞ்சின உடனே அப்படியே மயங்கிடறாங்க. குடும்பத்தை நல்லா மயக்கி வைத்திருக்கிறாள் மயக்கி” என்று பற்களை கடித்தாள் அருணா தேவி .

 

“அம்மா ,அம்மா” என்று ஓடி வந்தாள் வைஷ்ணவி.

 

 “ஏமி வைஷு” என்ற அருணாவிடம், “அத்தைகாருக்கு குழந்தை உண்டாகிருக்காம்” என்றாள் வைஷ்ணவி. “ஆமாடி இப்ப என்ன அதுக்கு” என்ற அருணாவிடம் இப்போ தான் மாவா, நைனாவுக்கு போன் பண்ணி சொல்லுச்சு. நைனா வீட்ல பலகாரம் எல்லாம் சுட சொல்லி இருக்காங்க அதனால சீக்கிரமா வா வந்து அவ்வாவுக்கு ஹெல்ப் பண்ணு” என்றாள் வைஷ்ணவி.

 

 “உங்க நைனாவுக்கும் அறிவு கிடையாது, அவங்க அம்மாவுக்கு அறிவு கிடையாது. பெத்த பொண்ணோட வாழ்க்கையை எவளோ ஒருத்தி வாழ்ந்துட்டு இருக்கா இந்த அம்மா ஸ்வீட் செய்றாங்கலாம் ஸ்வீட்” என்று முனங்கி கொண்டேன் எழுந்து வந்தாள் அருணா தேவி

 

“ஏமி பாவா அப்படி பாக்குறீங்க” என்ற தெய்வானையிடம், “இன்னைக்கி நீ ரொம்ப அழகா இருக்க தெய்வா” என்றான் கார்த்திகேயன்.

 

“இன்னைக்கு தான் நான் அழகா இருக்கேனா? அப்போ இத்தனை நாள் நான் என்ன அசிங்கமாவா இருந்தேன்” என்று தெய்வானையிடம், “என்னோட மயக்கி எப்பவுமே அழகுதான்” என்றவன், “இன்னைக்கு நீ இன்னும் அழகா இருக்க உன் வயித்துல பாப்பா இருக்குல்ல அதனால்” என்று அவன் கூறினான் .

 

அவனது நெற்றியில் முத்தமிட்டவள், “பாவா என்னை ரொம்ப கொஞ்சாதீங்க, நாளைக்கு குழந்தை பிறந்தால் என்னை மறந்துடுவீங்க குழந்தையைத் தான் கொஞ்சிவிங்க அப்புறம் நான் ஏங்கி போயிருவேன்” என்று கூறிட, “நமக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் நீ தான் என்னோட முதல் குழந்தை தெய்வா” என்று மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் கார்த்திகேயன்.

 

 

 

(மயக்கியே)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!