அத்தியாயம் 15
“என்ன சொல்ற பிரசாந்த் நெஜமாவா” என்று கலாராணி, கோகுலகிருஷ்ணன் இருவரும் கேட்டிட “சத்தியமா அம்மா, இப்பதான் பாவா போன் பண்ணாங்க வாங்க உடனே கிளம்பலாம்” என்றாங பிரசாந்த்.
“ பிரசாந்த் உனக்கு வேலையில்” என்று கோகுலகிருஷ்ணன் இழுத்திட, “பரவாயில்லை நைனா இப்போ என்ன என் வேலை ஒன்னும் என்னை விட்டு போயிடாது, வேலை எனக்கு தான் என்ன டிரான்ஸ்பர் தானே பார்த்துக்கலாம் விடுங்க” என்று கூறிய பிரசாந்த், “இப்போதைக்கு நம்ம போய் தெய்வாவை பாத்துட்டு வந்துடலாம். தெய்வா நம்மளை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருப்பாள்” என்றான் பிரசாந்த்.
“சரி சரி வாங்க” என்று மூவரும் கிளம்ப ஆரம்பித்தனர்.
“வதனை , வதனை” என்று அவர்களது அரை கதவை தட்டினாள் அர்ச்சனா.
“உள்ள வாங்க அர்ச்சனா” என்று தெய்வானை அழைத்திட, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள், “அம்மா உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க” என்றாள்.
“பாருடா, அத்தைம்மா உங்களை அனுப்பி எங்களை சாப்பிட கூப்பிடறாங்கன்னா இம்ப்ரூவ்மெண்ட் தானே பாவா” என்று தன் கணவனைப் பார்த்து சிரித்தாள் தெய்வானை.
அர்ச்சனாவும் சிரித்துவிட்டு, “எல்லாம் உங்களால் தான் வதனை, அம்மா என்ன அந்த அறை விட்டு வெளியில் வரவே விட மாட்டாங்க. எனக்கும் ஆசையா இருக்கும். நைனா கூட அண்ணையா கூட சேர்ந்து சாப்பிடணும்னு ஆனாங அம்மா அனுமதிச்சதே இல்லை. இப்போ நீங்க வந்ததுக்கு அப்புறம் தான் என்னவோ உங்க கூடவே சாப்பிட அனுமதிக்கிறார்கள்” என்று கண் கலங்கினாள் அர்ச்சனா.
“ அர்ச்சனா அத்தைம்மா ரொம்ப நல்லவங்க. என்ன சில மூடநம்பிக்கைகள் அவங்க மனசுல ஆழமா பதிஞ்சிருச்சு. அதை மாத்திட்டா போதும் நீங்க கவலைப்படாமல் இருங்க. சந்தோஷமா இருங்க” என்று கூறி விட்டு அவளுடன் உணவு உண்ண சென்றாள் தெய்வானை.
“தெய்வானை உனக்கு ஏமி இஸ்டம், பிடிக்கும்னு செப்பன்டி, அத்தம்மா எல்லாத்தையும் சமைச்சு தரேன்” என்றார் சௌந்தரவள்ளி.
“அத்தைம்மா உங்களுக்கு எதுக்கு சிரமம் நாளையிலிருந்து நானே சமைக்கிறேன்” என்றாள் தெய்வானை.
“ அதெல்லாம் முடியாது. குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ இந்த வீட்ல ஒரு வேலையும் பார்க்க கூடாது” என்று சௌந்தரவள்ளி கூறிட, “ஏற்கனவே நான் எந்த வேலையும் பார்க்கிறது இல்லையே அத்தைம்மா சும்மா தான உட்காந்துட்டு இருக்கேன்” என்று கூறினாள் தெய்வானை.
“பரவாயில்லை இன்னும் ஒரு பத்து மாசத்துக்கு சும்மா இரு அப்புறம் என் பேரன் வந்து உன்னை பொழுதோட வேலை வாங்குவான். அதுக்கப்புறம் அவன் பெரிசானதுக்கப்புறம் இந்த வீட்டு வேலை மொத்தமும் உன் தலையில கட்டிட்டு நான் என் பேரனை கொஞ்சிட்டு இருந்துருவேன்” என்று சௌந்தரவள்ளி கூறிட, “அம்மாடியோவ் பெரிய பிளானா இருக்கும் போலயே” என்று புன்னகைத்தாள் தெய்வானை.
“ஏமி அர்ச்சனா எங்கேயோ பாத்துட்டு இருக்க” என்ற கார்த்திக்கேயனிடம், “ஒன்னும் இல்லை கண்ணையா” என்றாள் அர்ச்சனா.
“உன் அண்ணையா கிட்ட கூட சொல்ல மாட்டியா” என்ற கார்த்திகேயனிடம் நீங்களும், வதனையும் ரொம்ப நாளைக்கு சந்தோஷமா இருக்கணும் அண்ணையா” என்று கூறியவள் தன் அறைக்கு சென்று அடைந்து கொண்டாள்.
அவளுக்கும் ஆசையாக இருந்தது. தனக்கும் ஒரு குழந்தை இருந்திருந்தால் என்று நினைத்த அவளின் கண்கள் கண்ணீரை சிந்தியது.
அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கு குழந்தை எப்படி பிறக்கும் திருமணம் முடிந்த ஒரு வாரத்திற்குள்ளேயே அவளது வாழ்க்கை இருண்டு விட்டது. இன்னும் சொல்லப்போனால் வாழவே ஆரம்பிக்கவில்லை கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத ஒரு குடிகாரனை பிடித்து கல்யாணம் பண்ணி வச்சு குடிகாரனா மட்டும் இருந்தாலும் பரவாயில்லை பொம்பள சகவாசம். போதாக்குறைக்கு குடிச்சு ,குடிச்சு ஹார்ட் அட்டாக் வேற அவள் தான் என்ன செய்வாள். சொந்த அக்காவோட கொழுந்தன். அக்கா காரிதான் என் வீட்டுக்கு என் தங்கச்சியும் மருமகளா வரணும்னு வம்படியா யார் பேச்சையும் கேட்காமல் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இன்னைக்கு அர்ச்சனாவோட வாழ்க்கையை கெடுத்து வச்சி இருக்காள். தன் வாழ்க்கையை நினைத்து நொந்து போனவள் கண்கள் கலங்கி அமர்ந்திருக்க அர்ச்சனா என்று அவளது அறைக் கதவை தட்டினார் கலராணி.
“கதவைத் திறந்தவள் அத்தகாரு எப்ப வந்தீங்க” என்றிட, “அவளை அணைத்துக்கொண்ட கலா ராணி வாழ்த்துக்கள் அர்ச்சனா அத்தையாக போற” என்று சிரித்தார். “நீங்களும் அவ்வா ஆக போறீங்க அத்தைகாரு” என்று அர்ச்சனாவும் புன்னகைத்திட, நீ ஏன் இப்படி தனியா ரூம் உள்ளேயே இருக்க வா எல்லாரோடவும் சகஜமாக இருக்கலாம்” என்று அவளை இழுத்து வந்தார் கலா ராணி.
“ஏமி அம்மா வந்ததும், வராதுமா அர்ச்சனாவை தான் பார்க்க போற, நீ என்னை பார்க்க வந்தியா, இல்லை அர்ச்சனாவை பார்க்க வந்தியா” என்று புன்னகைத்தாள் தெய்வானை.
“ரெண்டு பேரையும் தான் பார்க்க வந்தேன்” என்ற கலராணி , அர்ச்சனா இப்போ தான் ரொம்ப அழகா இருக்க” என்றவர் சௌந்திரவள்ளியிடம் திரும்பி, “சம்பந்தி அர்ச்சனாவுக்கு வெள்ளை புடவை மட்டும் இனிமேல் கொடுக்காதீங்க ப்ளீஸ்” என்றார் கலராணி .
“அதெல்லாம் என் அத்தம்மா கொடுக்க மாட்டாங்க ,என் அத்தம்மா நான் என்ன சொன்னாலும் கேட்பாங்க உங்க குடும்ப வாரிசை நான் வயித்துல சுமந்துட்டு இருக்கேன். நான் என்ன கேட்டாலும் செய்வீங்க தானே அத்தைம்மா” என்ற தெய்வானையிடம், “செப்பன்டி தெய்வானை”என்றார் சௌந்தரவள்ளி.
“ இனிமேல் அர்ச்சனா அவங்க வாழ்க்கையில வெள்ளை புடவை கட்டக் கூடாது வெளியில் போகும் போதும், நம்ம வீட்ல எப்படி டிரஸ் பண்றாங்களோ அதே மாதிரி தான் பண்ணனும் இது என்னோட ஆசை இதை நிறைவேத்துவீங்களா?” என்று கேட்டாள் தெய்வானை.
சௌந்திரவள்ளி யோசிக்க, “கண்டிப்பா தெய்வானை இனிமேல் அர்ச்சனா வெள்ளைப் புடவை கட்டவே மாட்டாள்” என்றபடி வீட்டிற்குள் வந்தார் அருணாவின் மாமியார்.
“வதனை ஏமி செப்பன்டி” என்று சௌந்திரவள்ளி பதறிட, “போதும் வதனை அர்ச்சனா வாழ வேண்டிய பொண்ணு அவளோட வாழ்க்கையை கெடுத்துட்டேனோன்னு எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு. என் மகனைப் பற்றி தெரிஞ்சும் அருணாவோட வற்புறுத்தலால் அர்ச்சனாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சு அவளோட வாழ்க்கையை கெடுத்துட்டேன். தெய்வானை வந்த பிறகாவது அர்ச்சனா வாழ்க்கையில் நல்லது நடந்தால் சந்தோஷம்” என்றார் அருணாவின் மாமியார்.
மொத்த குடும்பமும் சந்தோஷமாக இருந்தனர்.
“ஏமி வதனை நகத்தை கடிச்சுட்டு இருக்கீங்க” என்ற பவித்ராவிடம், “இந்நேரம் அந்த தெய்வானையோட கரு கலைஞ்சு போயிருக்கும்” என்று கூறினாள் அருணா தேவி.
“வதனை ஏமி செப்பன்டி” என்று பதறினாள் பவித்ரா.
“இந்த கரு சிதையுறது மட்டும் இல்லை இனி அவளோட வாழ்க்கையில் எப்போவுமே குழந்தை பிறக்காது அப்படி ஒரு மருந்தை கலந்து உன் அம்மா கிட்ட கொடுத்து விட்டிருக்கிறேன் உன் அம்மாவுக்கு தெரியாமல்” என்ற அருணாவை பார்த்து, “ஏமி வதனை இப்படி ஒரு காரியம் செஞ்சீங்க” என்று பதறினாள் பவித்ரா.
“எல்லாம் உனக்காக தான்” என்று கூறினாள் அருணா தேவி. “அந்த தெய்வானைக்கு இனி பிள்ளையே உருவாகாது என்று தெரிந்தால் என் அம்மா அவளை வெறுத்து ஒதுக்க ஆரம்பிச்சுருவாங்க. என் தம்புடுக்கும் எத்தனை நாளைக்கு அவள் மேல ஆசையும், மோகமும் இருக்க போகுது. அவனுக்கும் வயசு போச்சு, குழந்தை பிறக்காதுன்னு தெரிஞ்சா மனசு உடைஞ்சு போயிடுவான். கொஞ்சம் கொஞ்சமாக அந்த தெய்வானையை விட்டு விலக ஆரம்பிப்பான். அதை வச்சு அவனையும், அவளையும் நிரந்தரமா பிரிச்சுடுறேன். அவளை ஹைதராபாத்துக்கே ஓட வச்சுட்டு உன்னை என் தம்புடுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” என்றாள் அருணா தேவி.
“குழந்தையை கொல்லுறது பாவம் வதனை” என்று பவித்ரா கூறிட , “திரும்ப திரும்ப அப்படியே சொல்லி என்னை டென்ஷன் படுத்தாதே” என்று கத்தி விட்டு அருணா சென்று விட்டாள்.
“எப்படியும் அந்த லட்டை அந்த தெய்வானை சாப்பிட்டு விட்டு வயிற்றை பிடிச்சுட்டு அழுது உருளப் போறாள். அதை கண்ணார பார்க்கனும்” என்று நினைத்த அருணா சந்தோஷமாக தன் தாய் வீட்டிற்கு கிளம்பினாள்.
“என்ன தெய்வா அவ்வளவு பலகாரம் அத்தைகாரு செஞ்சு கொண்டு வந்திருக்காங்க, நீ எதுவுமே சாப்பிடாமல் இருக்க” என்ற கார்த்திக்கேயனின் மார்பில் சாய்ந்து கொண்டாள் தெய்வானை.
“பாவா இப்போதைக்கு எனக்கு எதுவும் சாப்பிட தோனலை கொஞ்ச நேரம் உங்க கூட இப்படியே இருக்கட்டுமா” என்று கேட்டாள் தெய்வானை.
“அவ்வளவு தானே உன் இஷ்டம்” என்றவன் அவளது தலையை கோதி விட்டான்.
“ஏமன்டி உங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி நான் என் கிட்ட ஒரு வார்த்தை கூட வாங்கனு நீங்க சொல்லவில்லை” என்ற பிரசாந்த்தை பார்த்து புன்னகைத்த அர்ச்சனா, “அதான் அம்மா, நைனா, அண்ணையா, வதனை எல்லோரும் சொன்னாங்களே” என்றாள் அர்ச்சனா.
“அவங்க சொன்னாங்க நீங்க சொல்லலையே , அது கொஞ்சம் வருத்தமாக இருக்கு” என்றான் பிரசாந்த்.
“சரி ,சரி வருத்தப்படாதீங்க வாங்க” என்று அவள் சிரித்திட , “நீங்க என்னை முறைச்சாலும் பரவாயில்லை அர்ச்சனா நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க. எப்பவுமே இதே போல சிரிச்சுட்டே இருங்க” என்றான் பிரசாந்த்.
அவள் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு நடந்து சென்றிட கால் இடறி விழப் போனாள். அவளைத் தாங்கிப் பிடித்தான் பிரசாந்த். இருவரின் பார்வையும் ஒரு முறை தழுவி விலக அந்த நேரம் அந்த வீடே அதிரும் படி அர்ச்சனா என்று கத்தினாள் அருணா தேவி.
(மயக்கியே..)