மயக்கியே என் அரசியே..(17)

5
(9)

அத்தியாயம் 17

 

அர்ச்சனாவை இரத்த வெள்ளத்தில் பார்த்ததும் தெய்வானையும் மயங்கி போக கலாராணி அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.

 

“ அம்மா அர்ச்சனா, அர்ச்சனா” என்று தெய்வானை பதறிட “தெய்வா ரிலாக்ஸா இரு பதட்டப்படாதே. கர்ப்பமாக இருக்கிற நேரத்துல பிபி அதிகமாச்சுன்னா குழந்தைக்கு தான் பிரச்சனையாகும் நீ ரிலாக்ஸா இரு” என்று மகளை சமாதானப்படுத்தினார். 

 

“இல்லைம்மா அர்ச்சனாவுக்கு ஏதாவது ஒன்னுனா” என்று அவள் மருகிட , இதோ பாரு தெய்வா அர்ச்சனாவுக்கு, ஒன்னும் ஆகாது அதான் மாப்பிள்ளையும், பிரசாந்த்தும் அர்ச்சனாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்களே ஒன்னும் ஆகாது. கூட உன்னோட அத்தைமாவும், மாவய்யாவும் போயிருக்காங்க பயப்படாத” என்று மகளை சமாதானப்படுத்தினார். கலாராணி.

 

“ இல்லைம்மா எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று தெய்வானை பதறிட, “அதான் அம்மா சொல்றாளே தெய்வா நீ பயப்படாதே. அதெல்லாம் அர்ச்சனாவுக்கு ஒன்னும் ஆகாது. என்று அவளது தந்தை கோகுலகிருஷ்ணனும் கூறிட, “ஏங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு நம்ம பொண்ணை இந்த வீட்ல விட்டுட்டு போக எனக்கு மனசு வரமாட்டேங்குது” என்றார் கலராணி. 

 

 

“என்ன பேசுற கலா, ஒரு குடும்பம்னா நாலு பேரு நாலு விதமா தான் இருப்பாங்க. அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு என் பொண்ணு வாழ்ந்துருவாள்” என்று கோகுல கிருஷ்ணன் கூறிட , “அது எனக்கும் தெரியும் அந்த பொண்ணு எவ்வளவு பேச்சு பேசினாள். குழந்தை உண்டாகி இருக்கிற இந்த நேரத்துல அவளுக்கு தேவையில்லாத டென்ஷன் அதுதான் எனக்கு பயமா இருக்கு என்றார் கலாராணி.

 

  “அம்மா ப்ளீஸ் எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. நீங்க எதையும் யோசிக்காதீங்க” என்று தன் தாயிடம் கூறினாள் தெய்வானை.

 

“எப்படி தெய்வா யோசிக்காமல் இருக்க முடியும், இந்த நேரத்துல ஒன்னுமே இல்லாத ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெருசாக்கி இவ்வளவு பெரிய பிரச்சனை பண்ணி இருக்கா அந்த பொண்ணு . பிரச்சினை பண்ணதோட விடாமல் உன்னை பிடிச்சு தள்ளி விட்டுட்டா. நல்ல வேலையாக நம்ம பிரசாந்த் பிடிச்சுட்டான்”. என்று கலா ராணி கூறிட, “அம்மா அதான் அண்ணையா என்னை பிடிச்சுருச்சே, எனக்கு ஒன்னும் ஆகாது. இந்த வீட்ல என்னை பாதுகாக்குறதுக்கு பாவா இருக்காரு. அர்ச்சனா இருக்காங்க, அத்தைம்மா இருக்காங்க, மாவய்யா இருக்காங்க அவங்கள எல்லாம் மீறி வதனையால என்ன பண்ணிட முடியும். அவங்க என்னமோ பர்பஸா என் குழந்தையை கொல்றதுக்காக என்னை தள்ளிவிட்டது மாதிரியே நீங்களும் பேசிட்டு இருக்கீங்க சண்டை வரும்போது இந்த மாதிரி உணர்ச்சிவசப்படும்போது சில நேரங்களில் நடக்கத்தான் செய்யும் அதை எல்லாம் பெருசாக்கிட்டு குடும்பத்தை பிரிக்கிறதுக்கு பாக்குறீங்களா?” என்றாள் தெய்வானை.

 

 “என்ன தெய்வா பேசுற நான் ஏன் உன் குடும்பத்தை பிரிக்க போறேன்” என்று கலாராணி கேட்டிட “அதான்மா நானும் கேட்கிறேன் இப்ப என்ன பண்றீங்க, நான் இங்க இருந்து நம்ம வீட்டுக்கு வந்தா அத்தைம்மா மனசு எவ்வளவு கஷ்டப்படும் . அதை ஏன் நீங்க யோசிக்க மாட்டேங்கிறீங்க. என் வயித்துல வளர்வது உங்களுக்கு மட்டும் பேரக் குழந்தை கிடையாது இந்த குடும்பத்தோட வாரிசு அத்தைம்மாவுக்கு அவங்க பையன் வயித்து வாரிசு. அப்படி இருக்கும்போது என்னை பத்திரமா பாத்துக்கணும்னு அவங்க எவ்வளவு நினைத்திருப்பாங்க நம்ம ஏன் அவங்க ஆசையை கெடுக்கணும் நீங்க என்ன சொன்னாலும் நான் இங்கிருந்து வரமாட்டேன் இப்போதைக்கு அர்ச்சனாவுக்கு எதுவும் ஆகக்கூடாது அது மட்டும் தான் என் மனசுல இருக்கு” என்றாள் தெய்வானை.

 

 “இதோ பாரு கலா நம்ம பொண்ணு ரொம்ப புத்திசாலி அவளுக்கு எல்லாமே தெரியும் அதனால நீ எதையும் யோசிக்காதே. அவ புரிஞ்சி நடந்துக்குவா அவள் குழந்தைக்கு எதுவும் ஆகாது” என்று கோகுல கிருஷ்ணன் கூறிட கலா ராணியும் மௌனம் ஆகினார்.

 

“ஏமி வதனை அழுதுட்டே வரீங்க” என்று பவித்ரா கேட்டிட , தனது வீட்டில் நடந்த கலவரத்தை பற்றி கூறினாள் அருணா தேவி .

 

 

“அம்மா உங்களை அடிச்சாங்களா?” என்ற பவித்ராவிடம் , “அவளை மட்டும் இல்லைடி உன்னையும் நாலு அடிடி அடிக்கணும். என்னடி நடிச்சிட்டு இருக்கீங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ஏதோ திட்டம் போட்டு தான் இவள் அங்கே வந்திருக்காள். அந்த பொண்ணு தெய்வானையை ஏன் டி பிடிச்சு தள்ளிவிட்ட. அர்ச்சனாவை அந்த அடி அடிச்ச . அந்த பொண்ணு தெய்வானை சும்மாதான் நின்னுட்டு இருந்தாள் அவளை புடிச்ச தள்ளி விடுற என்ன நெனச்சிட்டு இருக்க உன் மனசுல என்று அருணாவின் மாமியார் கேட்டிட, அம்மா என்ன நடந்துச்சு எனக்கு ஒன்னுமே புரியல வதனை ஏன் இந்த மாதிரி பண்ணாங்கன்னு எனக்கு சத்தியமா தெரியாது” என்று பவித்ரா கூறிட , “பொய் பேசாத இரண்டு பேரும் கூடி கூடி உட்கார்ந்து பேசும்போது தெரியும் ஏதோ கிரிமினல் வேலை எல்லாம் பாத்துட்டு இருக்கீங்கன்னு. இதோ பாரு பவித்ரா உனக்கும், கார்த்திகேயனுக்கும் இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது. அதுக்கு காரணம் நீ தான் அதை மறந்துடாதே என்று அழுத்தமாக கூறினார். அவளது அன்னை. 

 

“ஏய் அருணா உனக்கு ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ. இன்னொரு தடவை இந்த வீட்டை விட்டு உங்க நைனா வீட்டுக்கு போகணும்னு நீ நெனச்சின்னு வச்சுக்கோயேன் ஒரேடியா என் பையனோட வாழ்க்கையிலிருந்து நீ போகணும். அந்த பொண்ணுக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ அந்த வீட்டு பக்கம் போகவே கூடாது. அப்படியே நீ அந்த வீட்டுக்கு போறதா இருந்தாலும் என் பையன் கூட போறதுனா போ தனியா போன உனக்கும், இந்த வீட்டுக்கும் உள்ள உறவு முறிஞ்சிரும். என்று தன் மருமகளையும் எச்சரித்தார். 

 

 

“என்ன தான்டி உனக்கு பிரச்சனை, அர்ச்சனா உன் தங்கச்சி தானே அவள ஏன் இவ்வளவு சீப்பா நடத்துற. அவள் புருஷன் என் கூட பிறந்த தம்பி அவன் செத்ததுக்கு நாங்களே வருத்தப்பட்டு அர்ச்சனாவை குறை சொல்லலை. அர்ச்சனா வாழ வேண்டிய பொண்ணு கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட அவன் கூட ஒழுங்கா வாழலை அதுக்குள்ள அந்த பரதேசி செத்துப் போயிட்டான். அதுக்காக அந்த பொண்ணை காலம் முழுக்க வெள்ளை சேலையிலே வச்சுட்டு பார்த்துட்டு இருக்க சொல்றியா? அந்த பொண்ணு அந்த பிரசாந்த் பையன் கூட தப்பாவே நடந்துக்கலை. அர்ச்சனாவை பத்தி உன்னை விட அதிகமா எனக்கு நல்லா தெரியும் அது ரொம்ப ஒழுக்கமான பொண்ணு அந்த பொண்ணை ஏதோ அந்த தெய்வானை பொண்ணு கொஞ்சம் கொஞ்சமா மாத்தி வெள்ளை புடவையிலிருந்து சுடிதார், கலர் சேலைனு மாறி இருக்கு அது உன் கண்ணுக்கு உறுத்துதாடி என்று தன் மனைவியிடம் கேட்டான் கண்ணன்.

 

 “இத பாருங்க பாவா தேவையில்லாமல் பேசாதீங்க நடந்தது என்னன்னு தெரியுமா?” என்ற அருணாவின் கன்னத்தில் பளார் என்று அறைந்தவன், “எல்லாம் எனக்கும் தெரியும்டி அர்ச்சனா தடுக்கி விழ போச்சு அப்போ, அந்த பையன் பார்த்துங்கனு சொல்லி தாங்கி தான் புடிச்சேன். அது கூட அவன் கையைத்தான் பிடிச்சானே தவிர அந்த பொண்ணை வேற எங்கேயும் தொட்டு பிடிக்கலை . ஆனால் நீ என்ன சொன்ன ரெண்டு பேரும் கட்டி புடிச்சிட்டு இருந்தாங்கன்னு சொல்றே. வெக்கமா இல்லை உனக்கு இந்த மாதிரி கூட பொறந்த தங்கச்சியை அசிங்கப்படுத்த. அப்படியே அவங்க கட்டிப்பிடிச்சுட்டு நின்னா கூட என்னடி தப்பு. நான் தப்புன்னு சொல்ல மாட்டேன் அர்ச்சனா வாழ வேண்டிய பொண்ணு ஒருவேளை அந்த பிரசாந்துக்கு நம்ம அர்ச்சனாவை கல்யாணம் பண்ணி வைக்கிற முடிவுல உன் அப்பா ,அம்மா இருந்தாங்கன்னா சந்தோஷமா அந்த முடிவை ஏத்துப்பேன்” என்று கண்ணன் கூறினார் .

 

“என்ன பேசிட்டு இருக்கீங்க அர்ச்சனா உங்க தம்பி பொண்டாட்டி. அவளை இன்னொருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லிட்டு இருக்கீங்க” என்று கத்தினாள் அருணா தேவி. 

 

“என் தம்பி செத்தே பத்து வருஷம் ஆச்சு அது உனக்கு தெரியுமா? தெரியாதா? பள்ளிக்கூடம் போயிட்டு இருந்த பொண்ணை உன்னோட அகங்காரத்தாலையும், திமிராலையும் வற்புறுத்தி என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்ச . அந்த வாழ்க்கை என்னைக்கு அவன் செத்தானோ அன்னைக்கே முறிஞ்சு போச்சு. அந்த உறவு முறிஞ்சு போச்சு அப்படி இருக்கும் போது அர்ச்சனாவுக்கு தாராளமா அவள் ஆசைப்பட்டால், அவள் விருப்பப் படி இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வாழ்றதுக்கு எல்லா உரிமையும் இருக்கு . அதை தடுக்க உனக்கு எந்த உரிமையும் கிடையாது” என்று அழுத்தமாக கூறினார் கண்ணன் 

 

“நீ என்ன சொன்னாலும் இந்த மூடநம்பிக்கையில ஊறிப்போன ஜன்மத்துக்கு ஒண்ணுமே விளங்காதுப்பா இவள் கிட்ட பேசுறதை விட்டுட்டு நாமளே சம்மந்தி கிட்ட பேசலாம் அர்ச்சனாவுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது பற்றி பேசலாம். இவள் சொன்னது படி அர்ச்சனா நம்ம வீட்டு பொண்ணு தானே நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கிறது நம்ம பொறுப்பு” என்று அருணாவின் மாமியார் கூறிட அருணா விதிர்த்துப் போனாள்.

 

“கடவுளே என்ன இது நாம ஒரு கணக்கு போட்டா இங்கு வேறு என்னவோ ஓடிக்கிட்டு இருக்கு நல்லதுக்கு இல்லையே” என்று யோசிக்க ஆரம்பித்தால் அருணா. 

 

“கார்த்திக் அர்ச்சனாவுக்கு சௌந்தரவள்ளி ஆகாதுல” என்று கேட்ட சௌந்திரவள்ளியிடம், “அத்தகாரு நீங்க கவலைப்படாதீங்க அர்ச்சனாவுக்கு ஒன்னும் ஆகாது” என்று பிரசாந்த் கூறினான்.

 

 கார்த்திகேயன் தன் தங்கைக்கு எதுவும் ஆகக்கூடாது என்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான்

 

மருத்துவர்கள் வெகு நேரம் கழித்து அர்ச்சனா இருந்த அவசர சிகிச்சை பிரிவின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தனர் .எதிர்ப்பட்ட மருத்துவரிடம் டாக்டர் அவங்களுக்கு எப்படி இருக்கு” என்று பிரசாந்த் கேட்டிட, “ஒன்னும் பிரச்சனை இல்லை சீக்கிரம் பார்த்ததால் அதிக ரத்தம் போறதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் கொண்டு வந்துட்டீங்க ஒன் ஹவர்ல கண் விழிச்சிடுவாங்க. கண் விழிச்சதும் போய் பாருங்க” என்று கூறிவிட்டு மருத்துவர் சென்று விட்டார்.

 

 “நான் தான் சொன்னேன்ல அவங்களுக்கு ஒன்னும் இல்லை நீங்க மூன்று பேரும் அழாதீங்க ப்ளீஸ்” என்ற பிரசாந்த் வீட்டிற்கு போன் செய்து தெய்வானையிடம் தகவல் கூறினான். 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!