மயக்கியே என் அரசியே..(18)

4.9
(8)

அத்தியாயம் 18

 

 

“எதுக்காக நீ சாக துணிஞ்ச அர்ச்சனா” என்ற கார்த்திகேயனிடம், “வேற என்ன பண்ண சொல்றீங்க அண்ணையா, கூட பிறந்த அக்கா கொஞ்சம் கூட நாக்கில் நரம்பே இல்லாமல் பேசியதை எல்லாம் கேட்டுட்டு நான் வாழணுமா? நான் ஒருத்தி உயிரோடு இருக்கறதுனால தானே என்னை வைத்து எல்லாருக்கும் சங்கடம். இத்தனை நாள் அவள் சொன்னது கூட எனக்கு வலிக்கலை. ஆனால் இன்னைக்கு இதுவரைக்கும் சத்தியமா சொல்றேன் நான் யாரையுமே தப்பான எண்ணத்தில் பார்த்ததில்லை. நாங்க இரண்டு பேரும் பேசிட்டு இருக்கும்போது நான் தடுக்கி விழப்  போனேன் வதனையோட அண்ணையா தாங்கிப் பிடிச்சாங்க அப்போ கூட அவங்க கை என் கைய தான் புடிச்சதே தவிற அக்கா சொன்னது மாதிரி தப்பா எதுவுமே இல்லை . அக்கா என்னை உடல் ஆசைக்கு அவரை கட்டிப் பிடிச்சேன்னு சொல்லுச்சு எனக்கு அதுதான் ரொம்ப அவமானமா இருக்கு” என்று அழுதாள் அர்ச்சனா.

 

 “ஏமி செப்பன்டி அர்ச்சனா  அவள் ஒரு முட்டாள். ஒரு முட்டாள் பேசுவதை நீ இந்த காதுல வாங்கிட்டு அந்த காதுல விடனும் அது உன் மூளைக்குள்ள ஏத்திட்டு உன்னை நீயே அழிக்க இப்படி பண்ணி இருக்க உன் மேல நான்,  உன் வதனை ,அம்மா, நைனா நான்கு பேரும் உயிரையே வச்சிருபக்கோம். நீ மட்டும் இப்போ செத்துப் போயிருந்தன்னு வச்சுக்கோயேன் அந்த குற்ற உணர்ச்சி அக்காவ ஒண்ணுமே பண்ணாது. ஆனால் ஒரு பாவமும் பண்ணாத அந்த பிரஷாந்த் இருக்கான் பார்த்தியா அவன சாகடித்துவிடும். அவனோடு சேர்த்து வைத்து உன் அக்கா பேசுனதுனால தான் நீ சாக துணிந்த அப்போ அவனோட மனநிலை யோசிச்சு பார்த்தியா? ஒரு வேளை நீ பண்ணின காரியத்துனால உனக்கு ஏதாவது ஆயிருந்தால் அதுக்கப்புறம் தெய்வானைக்கு நம்ம வீட்ல எப்படிப்பட்ட மரியாதை கிடைக்கும்னு யோசிச்சியா? அவ அண்ணனால தான் நீ செத்தன்னு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் நம்ம அக்காவே ஊரெல்லாம் கதை கட்டி விட்டுடுவாள். அப்போ மத்தவங்க எல்லாம் அவளை ஒரு மாதிரி தானே பார்ப்பாங்க. நீ எதுக்கு அர்ச்சனா சாகனும் முட்டாள் அந்த முட்டாள் சொன்னான்னு நீ செத்துருவியா? நீ வாழனும் உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, அம்மாவுக்கு நம்பிக்கை இருக்கு, நைனாவுக்கு நம்பிக்கை இருக்கு தெய்வானைக்கு நம்பிக்கை இருக்கு. அது மட்டும் இல்ல அத்தகாரு, மாவய்யாக்கு கூட நம்பிக்கை இருக்கு அப்படி இருக்கும்போது உன்மேல கொஞ்சம் கூட அக்கறையே இல்லாத அக்கா சொன்னால்னு அதுக்காக நீ சாகத் துணிவாயா? ஒருவேளை நீ செத்துருந்தால் அவ சொன்னது தான் உண்மைன்னு அவளே தண்டுரா போட்டு சொல்லுவாள். அவமானம் தாங்க முடியாமல் நீ செத்துட்டேன்னு சொல்லுவாள். அப்போ உனக்கு சந்தோஷமா சொல்லு” என்றான் கார்த்திகேயன் 

 

“அண்ணையா அது வந்து” என்று அவள் தயங்கிட,  “இதோ பாரு அர்ச்சு என் மேல சத்தியம் இன்னொரு முறை இந்த மாதிரி ஒரு முட்டாள் தனத்தை நீ எப்பவுமே பண்ண கூடாது. என்ன நடந்தாலும் சமாளிக்கணும் தற்கொலை ஒரு முடிவு அல்ல சாகுறதுனா எப்படி வேணாலும் சாகலாம் ஆனால் வாழ்வது தான் கஷ்டம் வாழ்ந்துதான் சில ஜென்மங்களுக்கு நம்ம நிருபிக்கணும் இன்னொரு முறை இந்த மாதிரி ஒரு முட்டாள்தனமான காரியத்தை தயவுசெஞ்சு பண்ணாதே” என்றான் கார்த்திகேயன்.

 

 அவளும் மௌனமாக தலையாட்டிட, தங்கையின் கண்ணீரை துடைத்து விட்டான்.

 

 “அர்ச்சனா எதுக்கு  இப்படி ஒரு காரியத்தை செஞ்ச” என்றார் சௌந்திரவள்ளி.

 

“அம்மா அக்கா” என்று அவள் அழுதிட , உன் அக்கா ஒரு பைத்தியக்காரி அந்த முட்டாள் சொல்றாள்ன்னு நீ சாக துணிவியா? இதோ பாரு அர்ச்சு எனக்கு என்  பொண்ணு நம்பிக்கை இருக்கு.  இத்தனை வருஷமா அந்த அறைக்குள்ளே அடைந்து கிடந்த என் மகளோடு ஒழுக்கத்தை பற்றி உன் அக்கா ஒரு முட்டாள் அவள் சொல்றான்னு நான் நம்புவேனா. “இதோ பாரு அர்ச்சனா எனக்கு உன் மேலையும் நம்பிக்கை இருக்கு,  பிரசாந்த் மேலையும் நம்பிக்கை இருக்கு . நீங்க ரெண்டு பேருமே நிச்சயமா தப்பு பண்ணி இருக்க மாட்டீங்க . அந்த முட்டாள் ஏதோ அரைகுறையாக புரிஞ்சுகிட்டு பேசுறானா அதுக்காக நீ சாக துணிவியா உன் கூட உன் அம்மா, நைனா, அண்ணையா, வேதனை  நான்கு பேரும் இருக்கோம் எங்கள தவிக்க விட்டுட்டு எப்படி உனக்கு சாக துணிவு வந்துச்சு . எனக்கு தெரியும் அக்கா பேசினது மாதிரி நானும் எதுவும் தப்பா பேசிருவேனோன்னு பயந்து தான் நீ இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்து இருக்க. அர்ச்சனா பல தடவை உன்னை அபசகுணம்னு சொல்லி இருக்கேன் நான் இல்லைன்னு சொல்லலை ஆனால் என் பொண்ணை ஒழுக்கம் கெட்டவன்னு எந்த காலத்துலயும் நான் சொல்ல மாட்டேன் சத்தியமா சொல்றேன் அம்மா உன்னை முழுசா நம்புறேன்டி தயவு செஞ்சு என்னை விட்டு செத்துருவேன்னு மட்டும் முடிவு பண்ணாதடி என்னால தாங்கிக்க முடியாது” என்று அழுதார் சௌந்தரவள்ளி .

 

“ஆமாம் அர்ச்சனா உன்ன நாங்க நம்புறோம் உன் கூட உன் அம்மா, நைனா எல்லாரும் இருக்கும்போது நீ ஏன்டா இப்படி ஒரு காரியம் பண்ணின எங்களை எல்லாம் விட்டுப் போக உனக்கு எப்படி டா மனசு வந்துச்சு” என்று மகளின் கன்னத்தில் கை வைத்தார் சிவநேசன்.

 

 “என்னை மன்னிச்சிடுங்க நைனா இனிமேல் நான் இந்த மாதிரி தப்பான முடிவு எல்லாம் எடுக்க மாட்டேன்” என்று அர்ச்சனா கூறிட, “சரி சரி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என்ற கார்த்திகேயன் தன் தாய் தந்தையரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். 

 

“ அது எப்படீங்க கை மட்டும் கட் பண்ணி இருக்கீங்க, பாக்கனும்னு  நினைச்சா கழுத்தையும் சேர்த்து தானே கட் பண்ணி இருக்கணும்” என்றான் பிரசாந்த்.

 

 அவனை அவள் கேள்வியாக பார்க்க, சாகனுன்னு   தானே ஆசைப்பட்டீங்க அப்போ நீங்க கைய அறுத்து இருக்க கூடாது”. என்று அவன் மீண்டும் கூறிட, “என்ன பேசிட்டு இருக்கீங்க” என்றாள் அர்ச்சனா.

 

“ நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? உங்க அப்பா, அம்மா ,அண்ணா மூன்று பேரையும் இப்படி அழ வைக்க  தான் நீங்க கையை அறுத்துகிட்டீங்களா? உங்களை கையில ரத்தத்தோட பார்த்த தெய்வானைக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன பண்ணி இருப்பீங்க? என்ன அவசரம் சாகறதுக்கு. உங்க அக்கா தப்பா பேசினாங்க தான் நான் இல்லைன்னு சொல்லலையே. தேளோட குணம் கொட்டுறது தான்னு நமக்கு தெரியும், அதுக்காக தேள் கிட்ட போயி அன்பை எதிர்பார்க்க முடியுமா? அந்த மாதிரி தான் உங்க அக்காவும் நீங்க ஏன் அதை அப்படி கடந்து போகாமல் சாக துணிஞ்சிங்க.  நிஜமா சொல்றேன் நீங்க செத்துருந்திங்கன்னு வச்சுக்கோங்களேன் சத்தியமா அந்த குற்ற உணர்ச்சியை என்னால தாங்கிக்கவே முடியாது. என்னால தான் உங்களுக்கு இந்த மாதிரியான ஒரு நிலைமைனு செத்து செத்து பிழைப்பேனே   தவிர நிம்மதியா ஒரு நாள் கூட தூங்க கூட மாட்டேன்” என்று பிரசாந்த் கூறினான்.

 

 “மன்னிச்சிடுங்க” என்றாள் அர்ச்சனா. “உங்க மன்னிப்பு யாருக்கு வேணும் உங்க அக்கா என்ன சொன்னாங்க உங்களுக்கு என் மேல ஆசைன்னு சொன்னாங்க அதானே, அப்படியே இருந்துட்டு போட்டுமே அதனால என்ன தப்பு” என்றான் பிரசாந்த்.

 

“ என்ன பேசுறீங்க நீங்க” என்ற அர்ச்சனாவிடம், “தப்பா எதுவுமே பேசலங்க சத்தியமா சொல்றேன் எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு. உங்களுக்கு சம்மதம் என்றால் நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன்” என்று பிரசாந்த் கூறிட பளார் என்று அவளது அவனது கன்னத்தில் அறைந்து விட்டாள் அர்ச்சனா.

 

 அவன் அவளை பார்த்து புன்னகைத்திட, “அறிவு கெட்ட தனமா பேசாதீங்க நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்கிட்ட வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றீங்க. என் வதனையோட அண்ணையாங்கிற தால தான் ஒரு அறையோட விட்டேன்” என்று அவள் கூறினாள். 

 

“அர்ச்சனா என்னை இன்னும் நான்கு அறை கூட நீங்க அறைந்து கொள்ளுங்க. நான் ஒப்பனா சொல்றேன் உங்களை கல்யாணம் பண்ணிக்க எனக்கு பரிபூரண சம்மதம் உங்களுக்கும் சம்மதமா? சொல்லுங்க நான் பாவா கிட்ட பேசுறேன். அத்தைகாரு, மாவய்யா எல்லார்கிட்டயும் பேசுறேன்” என்றான் பிரசாந்த்.

 

 அவள் கோபமாக அவனை முறைத்து விட்டு, “என் அக்கா சொன்னதை உண்மைன்னு நிரூபிக்கிறீங்களா?” என்றாள் .

 

உண்மையா ஆனால் தான் என்னன்னு கேட்கிறேன்.  இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உங்க அக்கா யாரு உங்க வாழ்க்கைய முடிவு பண்ண. நீங்க ஒன்னும் கிழவி கிடையாது. 25 வயசு பொண்ணு சரியா உங்களுக்கு உணர்ச்சிகள் இருக்கும், ஆசைகள் இருக்கும், கனவுகள் இருக்கும் எத்தனை வயசுல உங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு 15 வயசுல. அப்படி பார்த்தால் உங்க கல்யாணம் சட்டப்படி செல்லவே செல்லாது அது பால்ய விவாகம். 15 வயசுல பத்தாவது படிச்சிட்டு இருந்த ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சு. அந்த கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்திலேயே அவன் செத்துப் போயிட்டான்.  சொல்ல போனால் அவன் கூட அப்படி என்ன வாழ்க்கை பெருசா வாழ்ந்து இருப்பீங்க பத்து வருஷமா செத்துப்போனவனை நினச்சு வெள்ளை புடவை கட்டி மூலையில் உட்கார்ந்துட்டு என்ன சாதிச்சீங்க சொல்லுங்க அர்ச்சனா என்ன சாதிச்சீங்க உங்க வாழ்க்கைய தொலைச்சிட்டு காலம் முழுக்க மூளையில் உட்கார்ந்துட்டு இருந்தா அது உங்க கணவனுக்கு நீங்க உண்மையா இருக்கிறதா அர்த்தமா? முதலில் உங்களுக்கு நடந்ததுக்கு பேரு கல்யாணமே கிடையாது. அது ஒரு கொடுமை என்று தான் நான் சொல்லுவேன்” என்றான் பிரசாந்த்.

 

 “நீங்க தேவை இல்லாமல் பேசுறீங்க” என்ற அர்ச்சனாவிடம், “நல்லா யோசிச்சு பாருங்க நான் தேவையில்லாமல் எதுவும் பேசலை.  நான் திரும்பத் திரும்ப சொல்றது ஒரே ஒரு விஷயம் தான். உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னு எந்த ஒரு கட்டாயமும் கிடையாது. ஆனால் நீங்க இன்னொரு வாழ்க்கைக்கு தயாரானால் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன். அந்த வாழ்க்கை என் கூட அமைஞ்சால் நான் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவேன் அவ்வளவுதான்” என்று கூறிய பிரசாந்த் , “சரி ரொம்ப நேரமா நம்ம பேசிட்டு இருக்க வேணாம் நான் கிளம்புறேன்” என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றான்

 

செல்லும் அவனது முதுகை விரித்தபடி யோசனையில் இருந்தாள் அர்ச்சனா. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!