மயக்கியே என் அரசியே..(19)

5
(6)

அத்தியாயம் 19

 

“பைத்தியக்காரி பைத்தியக்காரி நீ எல்லாம் என்னடி ஜென்மம் நீ பண்ணின காரியத்துனால உன் தங்கச்சி அங்கே சாக கிடக்கிறாள்” என்று கத்தினார் கண்ணன்.

 

“என்ன சொல்றீங்க பாவா” என்ற அருணாவின் கன்னத்தில் பளார் என்ற அறைந்தவர், “நீ பேசின பேச்சுக்கு அர்ச்சனா கையை அறுத்துட்டு சாக கிடைக்கிறாள். போதுமாடி உனக்கு போதுமா உன் மனசு ரொம்ப குளு குளுனு இருக்கா” என்றார் கண்ணன்.

 

அருணாவே ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள் . “என்ன சொல்றீங்க” என்று அவள் கேட்டிட, “ஆமாடி இப்போ தான் உன் தம்பி போன் பண்ணினான். உன்னை எல்லாம் என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலை அர்ச்சனாவுக்கு மட்டும் ஏதாவது ஒன்னு ஆச்சு உன்னை நான் உயிரோடவே விடமாட்டேன்” என்று கத்தினார் கண்ணன்.

 

“வதனை” என்ற பவித்ராவிடம், “அர்ச்சனா சாகணும்னு” என்று ஏதோ சொல்ல வர, “நல்லா நடிக்கிறீங்க வதனை அண்ணையா கிட்ட வேணும்னா நடிங்க என்கிட்ட நடிக்க வேண்டாம். இப்போ அர்ச்சனா செத்துருந்தால் கூட நீங்க உண்மையிலே கவலைப்பட்டு இருக்க மாட்டீங்க” என்று பவித்ரா கூறிட அவளை பார்த்து புன்னகைத்த அருணா தேவி, “கண்டிப்பா அர்ச்சனா செத்தால் கூட எனக்கு கவலை இல்லை. அர்ச்சனா செத்தால் அதை வச்சு அதுக்கு காரணம் அந்த பிரசாந்த்னும், தெய்வானை வயிற்றில் வளரும் குழந்தை தான்னும் கதை கட்டிவிட்டு அந்த தெய்வானையை எங்க வீட்டை விட்டு விரட்டி விரட்ட தான் பார்ப்பேனே தவிர கண்டிப்பா கவலைப்பட்டு இருக்க மாட்டேன்” என்றாள் அருணா தேவி.

 

“அர்ச்சனா உங்க கூட பிறந்த தங்கச்சி தானே”என்ற பவித்ராவிடம், “கூடப் பிறந்த தங்கச்சியா யாரு அர்ச்சனாவா, அர்ச்சனா, கார்த்தி ரெண்டு பேருமே என் கூட பிறந்தவர்களே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நான் சிவநேசன், சௌந்தரவள்ளி பெத்த பொண்ணே கிடையாது” என்றாள் அருணா தேவி.

 

“ஏமி செப்பன்டி வதனை” என்ற பவித்ராவிடம், என் நைனாவும், அம்மாவும் ஒரு விபத்துல இறந்து போயிட்டாங்க. அவங்க இறந்து போனதுனால சின்ன குழந்தையா இருந்த என்னை என் சித்தப்பா சித்தி வளர்க்க ஆரம்பிச்சாங்க.

 

அவங்க பொண்ணாவே வளர்க்க ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு பிறந்த பிள்ளைங்க தான் கார்த்தியும், அர்ச்சனாவும். என் நைனாவோட சின்ன வயலில் தான் முதன் முதலில் அவங்க விவசாயம் பண்ணி வாழ்க்கை ஓட்ட ஆரம்பிச்சாங்க. அதுல இருந்து தானே இப்ப உள்ள எல்லாமே அப்போ அது எல்லாம் எனக்கு தானே சொந்தம் ஆகணும். எங்கிருந்தோ வந்த எவளோ ஒருத்தி அதை ஆளணும்னா விடுவேனா அதனாலதான் என் பொண்ணு வைஷ்ணவிக்கும், கார்த்திக்கும் அவ்ளோ வயசு வித்தியாசமா இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி வைஷ்ணவியை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் முடிவு பண்ணினதே.

 

அப்புறம் அர்ச்சனா அவள் காலம் முழுக்க எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று செத்துருவான்னு தெரிஞ்சு தான் உன் அண்ணனுக்கு அவளை கல்யாணம் பண்ணி வச்சேன்.

 

என்ன அந்த படுபாவி ஒரு வாரத்திலேயே சாவான் என்று நான் எதிர்பார்க்கலை” என்று அருணா தேவி கூறினாள்.

 

பவித்ராவிற்கு அவளை பார்க்க பயமாக இருந்தது. “வதனை நீங்க பண்ணினது தப்பில்லையா” என்ற பவித்ராவிடம், “தப்பே இல்லை. அதை தப்புன்னு நான் ஒத்துக்கவும் மாட்டேன்” என்றாள் அருணா.

 

 

“வதனை என் மேல கோவமா இருக்கீங்களா?” என்ற அர்ச்சனாவை பார்த்து முறைத்தாள் தெய்வானை.

 

“கோபம் இல்லை கொலை வெறியில் இருக்கேன். எவ்ளோ தைரியம் இருந்தால் சாகறதுக்கு முயற்சி பண்ணுவீங்க. அப்போ உங்களுக்கு எங்க மேல எல்லாம் கொஞ்சம் கூட பாசம் அக்கறை எதுவுமே இல்லைல” என்றாள் தெய்வானை .

 

“அப்படி இல்லை வதனை” என்ற அர்ச்சனாவிடம், “போதும் நடந்து முடிந்ததை நான் பேச விரும்பலை, ஆனால் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்றேன் இன்னொரு முறை தற்கொலை பண்ணிக்கணும் அப்படிங்கற எண்ணம் உங்க மனசுல வரவே கூடாது. இது என் மேல சத்தியம். என் மேல கூட இல்லை என் வயித்துல இருக்குற உங்க அண்ணையாவோட குழந்தை மேல சத்தியம்” என்றாள் தெய்வானை.

 

“என்ன காரியம் பண்றீங்க வதனை, குழந்தை மேல போய் சத்தியம் பண்ண சொல்லிட்டு” என்ற அர்ச்சனாவிடம், “என் குழந்தை உயிரோட இருக்கணும்னு உங்களுக்கு ஆசை இருக்கு தானே அப்ப நீங்க ஒழுங்கா இருப்பீங்க” என்றாள் தெய்வானை.

 

“ சத்தியமா இனிமேல் நான் சாக முயற்சி பண்ண மாட்டேன். அதனால் குழந்தை மேல சத்தியம் பண்ண வேண்டாம் புரிஞ்சுக்கோங்க” என்று அர்ச்சனா கூறிட , “சரி ஓகே உங்களை நான் நம்புறேன்” என்றாள் தெய்வானை.

 

“நாங்க கிளம்புறோம் தெய்வானை” என்ற கலாராணியிடம், “என்ன சம்மந்தி வந்து ஒரே நாளில் கிளம்புறேன்னு சொல்றீங்க. அருணா பேசுனதை நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்கிட்டிங்களா?” என்றார் சௌந்தரவள்ளி.

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சம்மந்தி” என்ற கலாராணியிடம், “அப்புறம் என்ன ஒரு வாரமாவது தங்கி தெய்வானை கூட இருந்துட்டு தான் நீங்க போகணும்” என்று சௌந்தரவள்ளி கூறிட, “ஆமாம்மா அதான் அத்தைம்மா சொல்றாங்களே ஒரு வாரம் என் கூட இங்க இருங்களேன்” என்றாள் தெய்வானை.

 

“ இல்லம்மா வேலை இருக்கு போகணும் அண்ணனுக்கு வேற டிரான்ஸ்பர் கிடைச்சிருக்கு” என்று கலா ராணி கூறிட, “நிஜமாவா அண்ணையா என்கிட்ட சொல்லவே இல்லை” என்றாள் தெய்வானை.

 

“கிடைச்சதும் சொல்லலாம்னு இருந்தேன். இப்ப என்ன” என்ற பிரசாந்த், சரி உன் ஆசைக்காக ஒரு வாரம் வேண்டாம் ரெண்டு நாள் இருந்துட்டு போறோம்” என்றான்

 

“அர்ச்சனா உன் அக்கா பண்ணுன தப்புக்கு நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்” என்று கண்ணன் கூறிட, “ஐயோ பாவா நீங்க ஏன் என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருக்கீங்க அக்காவை பத்தி தான் தெரியுமே. நான் தான் அவசரப்பட்டுட்டேன்” என்றாள் அர்ச்சனா.

 

இல்லைம்மா எவ்வளவு கஷ்டம் இருந்தால் நீ இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பே எனக்கு நல்லாவே புரியுது உனக்கு வாக்கு கொடுக்கிறேன். இனிமேல் உன் அக்கா உன் கிட்ட இந்த மாதிரி நடந்துக்க மாட்டாள். அப்படி நடந்தால் என்ன நடக்கும்னு அவளுக்கு என் அம்மா தெளிவா சொல்லிட்டாங்க” என்று கண்ணன் கூறிட அருணா தேவி அமைதியாக நின்றிருந்தாள்.

 

 

“என்னங்க ஹாஸ்பிடல்ல இருந்து வந்து முழுசா ஒரு நாள் ஆச்சு என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டேங்கிறீங்க” என்ற பிரசாந்திடம், பதில் ஏதும் பேசாமல் அவனை கடந்து சென்றாள் அர்ச்சனா.

 

“ உங்ககிட்ட தான் அர்ச்சனா நான் பேசிட்டு இருக்கேன்” என்று பிரசாந்த் கேட்டிட, “எனக்கு உங்க கிட்ட பேச விருப்பமில்லை” என்றாள் அர்ச்சனா.

 

“அதான் ஏன்” என்றவனிடம், “உங்களுக்கே தெரியும் திரும்பத் திரும்ப போட்டு என்னை இம்சை பண்ணாதீங்க வதனைக்காக நான் வெள்ளைப் புடவையில் இருந்து மாறினதே தப்புன்னு தோணுது” என்றாள் அர்ச்சனா.

 

“இது என்னங்க வம்பா போச்சு என் மனசுல பட்டதை உங்ககிட்ட சொன்னேன். உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை அப்படின்னா நீங்க உன்னை எனக்கு பிடிக்கலடான்னு ஓப்பனா சொல்லுங்க அதை விட்டுட்டு என்னை அவாய்ட் பண்றது நல்லாவா இருக்கு” என்றான் பிரசாந்த்.

 

அவனை முறைத்து விட்டு கோபமாக அங்கிருந்து சென்று விட்டாள் அர்ச்சனா.

 

“ஏமி அண்ணையா முகத்தில் டன் கணக்கில் சோகம் கொட்டி கிடக்கு, அர்ச்சனா உன்னோட காதலை அக்சப்ட் பண்ணிக்கையா” என்று கேட்டாள் தெய்வானை .

 

அவளை ஆச்சரியமாக பார்த்தான் பிரசாந்த். “உனக்கு எப்படி தெரியும் நான் அர்ச்சனாவை லவ் பண்றேன்னு” என்ற பிரசாந்திடம், “என் கல்யாணத்துக்கு முன்னமே நீ அர்ச்சனாவை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட. அது எனக்கு அப்பவே தெரியும். நீ முதல் முதலாக அர்ச்சனாவை பார்த்த உடனே உனக்கு அவளை பிடிச்சிருந்துச்சு. அதனாலதான் அந்த பொண்ணோட லைப் வந்து இப்படி இருக்கு அப்படி இருக்குன்னு புலம்பிட்டு இருந்த அந்த பொண்ணை அவங்க வீட்ல ஏதோ தீட்டு மாதிரி வச்சிருக்காங்க அது இதுன்னு சொல்லி நீ புலம்புனியே அப்பவே எனக்கு புரிஞ்சிருச்சு அந்த பொண்ணு மேல உனக்கு ஒரு இன்ட்ரஸ்ட் இருக்குனு. கல்யாணம் முடிந்து நான் இங்கே வந்தப்போ அர்ச்சனா லைஃப் பத்தி பாவா சொல்லி தெரிஞ்சுக்கிட்டேன். பாவா கிட்ட பேசி பார்த்ததில் அவருக்கும் அர்ச்சனாவுக்கு இன்னொரு லைஃப் அமைச்சு கொடுக்கிற எண்ணம் தான் இருக்கு. அதை கொஞ்சம் கொஞ்சமா அத்தைம்மா மனசுலையும், மாவய்யா மனசுலையும் ஏத்தணும்னு நினைச்சேன் . இந்த வீட்ல எல்லாமே என் விருப்பப்படி தான் நடக்குது. என் மேல எல்லாருமே பாசமா இருக்காங்க அர்ச்சனாவோட வாழ்க்கை உன் கூட இருந்தா கண்டிப்பா சந்தோஷமா இருக்கும் ஆனால் அது அவளோட விருப்பமா இருந்தால் மட்டும்தான்” என்றாள் தெய்வானை .

 

“நானும் அதைத்தான் சொல்றேன் தெய்வா அர்ச்சனாவுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இருந்தால், எனக்கும் சந்தோஷம் தான் அவங்களுக்கு விருப்பம் இல்லாமல் எதையுமே நம்ம பண்ண வேணாம்” என்றான் பிரசாந்த்.

 

“என் அண்ணையா ரொம்ப ரொம்ப நல்லா அண்ணையா” என்று தெய்வானை கூறிட, “ரொம்ப ஐஸ் வைக்காத தெய்வா, வேணும்னா அண்ணையா உனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரேன்” என்றான் பிரசாந்த்.

 

“நீ மட்டும் வாங்கி கொடுக்காமல் இருந்திருவியாக்கும் அவ்வளவுதான்” என்று அவனை அவள் எச்சரிக்க, “என் தங்கச்சி சொன்னால் மறுப்பேச்சு ஏது, எத்தனை ஃப்ளேவர் வேணும்னு சொல்லு எல்லா ஃப்ளேவரும் வாங்கிட்டு வந்து தரேன்” என்றான் பிரசாந்த்.

 

“இருக்கிற எல்லா ஃப்ளேவரும் சாப்பிட்டால் எனக்கு சளி பிடிக்கும் எனக்கு சளி பிடிச்சா என் வயித்துல உள்ள குழந்தைக்கும் சளி பிடிக்கும். உனக்கு ஓகேன்னா சொல்லு பத்து ஃப்ளேவர் கூட நான் சாப்பிடுறேன்” என்று அவள் சிரித்திட, “அய்யய்யோ வேணவே வேணாம் உனக்கு ஒரு ஐஸ்கிரீமே அதிகம் தான் குழந்தைக்கு எந்த ஒரு தப்பும் நடந்துவிடக்கூடாது” என்று பதறினான் பிரசாந்த். அவனை பார்த்து புன்னகைத்தவள், “அண்ணையா அர்ச்சனாவுக்கு உன்னை பிடிக்கிறது, பிடிக்காமல் போறது வேற விஷயம் நீ அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்கிறதுல நைனாவும், அம்மாவும் எதுவும் பிரச்சனை பண்ணினாங்கன்னா என்ன பண்றது” என்றாள் தெய்வானை.

 

“அதைப் பற்றி யோசிக்கலையே” என்று தலையில் கை வைத்தான் பிரசாந்த்.

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!