அத்தியாயம் 20
“பாவா” என்ற தெய்வானையிடம் “ஏமி தெய்வா” என்றான் கார்த்திகேயன்.
“அர்ச்சனாவுக்கு வேற வாழ்க்கை அமைச்சு கொடுக்குறத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்றாள் தெய்வானை.
“இதுல நினைக்க என்ன இருக்கு அர்ச்சனா விருப்பப்பட்டால் கண்டிப்பா அவளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தே ஆகணும். அவள் இப்படியே எத்தனை நாளைக்கு இருப்பாள். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும், அவளுக்குன்னு ஒரு குழந்தை வேணும், அவளுக்குன்னு ஒரு குடும்பம் வேணும்” என்றான் கார்த்திகேயன்.
“அத்தைம்மாவும் , மாவய்யாவும் சம்பாதிப்பாங்களா” என்றாள் தெய்வானை.
“சம்மதிக்க வைக்கணும்” என்ற கார்த்திகேயன், “முதலில் அர்ச்சனாவுக்கு நல்ல மாப்பிள்ளையா தேடணும். மேட்ரிமோனியில் போடலாமா” என்றான் கார்த்திகேயன். “மேட்ரிமோனிலையா” என்ற தெய்வானையிடம், “ஆமாம் தெய்வா மேட்ரிமோனியில் தான் பார்த்து ஆகணும். இந்த ஊர்ல கண்டிப்பா அர்ச்சனாவை எவனும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான். ஏன்னா இந்த ஊர் அப்படி. மூட நம்பிக்கையில் ஊறிப்போன ஊர். அதனால நம்ம மேட்ரிமோனியில் நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்” என்றான் கார்த்திகேயன்.
“ஏற்கனவே மேரேஜ் ஆகி இருந்தால் கூட ஓகே” என்ற கார்த்திகேயனிடம், ஏமி பாவா மாப்பிள்ளையும் விடோவரா பார்க்கிறீங்க” என்றாள் தெய்வானை.
“அர்ச்சனாவுக்கும் இது இரண்டாவது கல்யாணம் தானே முதல் கல்யாணம் பண்ணிக்கிற மாப்பிள்ளை ஏதாவது ஒரு சூழ்நிலையில அர்ச்சனாவோட பழைய வாழ்க்கை பற்றி தப்பா பேசிட்டானா அது அவளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். இதுவே அவனுக்கும் இரண்டாவது கல்யாணம் அப்படிங்கற பட்சத்தில் அர்ச்சனாவோட பழைய வாழ்க்கையை பற்றி அவன் எதுவும் பேச மாட்டான். அவனுக்கும் முதல்ல ஒரு லைஃப் இருந்திருக்கிறது. என் தங்கச்சி வாழ்க்கையில் சந்தோஷம் மட்டுமே இருக்கணும். அப்படி ஒரு மாப்பிள்ளை அவளுக்கு பாக்கணும்” என்றான் கார்த்திகேயன்
“தன் அண்ணனின் விருப்பத்தை தன் கணவனிடம் கூறலாமா? வேண்டாமா?” என்று யோசித்தாள் தெய்வானை.
“ஒரு வேளை நான் அண்ணையா மனசுல அர்ச்சனா இருக்குற விஷயத்தை சொல்லி பாவா வேணான்னு சொல்லிட்டால் என்ன பண்றது” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க, “ஏமி தெய்வா யோசிச்சிட்டு இருக்க நான் சொன்னதை செய்யலையா” என்றான் கார்த்திகேயன்.
“செய்யலாம் பாவா ஆனால் நம்மை மாப்பிள்ளைக்கு ஏன் வெளியில் போய் அலையனும். என் அண்ணையாவுக்கு அர்ச்சனாவை கல்யாணம் பண்ணி வைக்கலாமே” என்றாள் தெய்வானை.
“இல்ல தெய்வா அது சரி வராது” என்று கார்த்திகேயன் கூறிட “ஏன் பாவா என் அண்ணையாவுக்கு என்ன குறைச்சல், நல்ல வேலையில இருக்காரு, நல்ல சம்பாதிக்கிறாரு என் அம்மாவும் நைனாவும் கூட அர்ச்சனாவை நல்லா பாத்துப்பாங்க” என்று தெய்வானை கூறினாள்.
கண்டிப்பா அத்தகாருவும், மாவையாவும் அர்ச்சனாவை நல்லா பாத்துப்பாங்க ஆனால் அது உனக்காக. அவளுக்காக இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. எந்த அப்பா, அம்மா தன் பையனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன ஒரு பொண்ணை, அதுவும் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட புருஷனோட வாழாமல் வாழ்க்கையை இழந்துட்டு வந்த ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வைப்பாங்க சொல்லு. அத்தகாருவும், மாவய்யாவும் ஒருவேளை சம்மதம் சொல்லி கல்யாணம் பண்ணி வச்சாலும் அது உன்னோட வாழ்க்கையை காப்பாத்துறதுக்காக தான் இருக்குமே தவிர அர்ச்சனாவோட வாழ்க்கைக்காக இருக்காது. அப்புறம் பிரஷாந்த் அவனுக்கு இது முதல் கல்யாணம் ஏதாவது ஒரு சூழ்நிலையில ஏதாவது ஒரு கோவத்துல அர்ச்சனாவை பார்த்து அவளோட முதல் வாழ்க்கையை பற்றி பேசிட்டான்னா என் தங்கச்சியோட வாழ்க்கையே போயிரும். அதனாலதான் நான் யோசிக்கிறேன் வார்த்தை தடிக்காமல் அவர் நடந்துப்பான். அப்படின்னு நீ சொல்லலாம் ஆனால் அது கூட உனக்காகத்தான் இருக்குமே தவிர அர்ச்சனாவுக்காக இருக்காது. அதனால நம்ம பிரசாந்துக்கும், அர்ச்சனாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்” என்றான் கார்த்திகேயன்.
“இல்லை பாவா அது வந்து” என்று அவள் கூறிட, “வேணாம் தெய்வா இது பத்தி அத்தக்காரு கிட்டையும், மாவய்யா கிட்டையும் நீ எந்த ஒரு பேச்சு வார்த்தையும் வச்சுக்க கூடாது சரியா நான் சொல்றபடி நீ மேட்ரிமோனியில் அர்ச்சனாவோட போட்டோவ போ”டு என்று கார்த்திகேயன் கூறினான் .
அவளும் கணவனின் பேச்சை மீற முடியாமல் அவன் சொன்னது போலவே செய்தாள்.
“வதனை இங்கே பாருங்களேன்” என்ற பவித்ரா தன் மொபைலை அருணாவிடம் காட்டிட, “என்னடி இது” என்றாள் அருணா .
“அர்ச்சனாவோட போட்டோவை மேட்ரிமோனி சைட்ல போட்டு இருக்காங்க அவளுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை தேடுறாங்க போல” என்று பவித்ரா கூறிட இது என்னடி கூத்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மேட்ரிமோனியில் போட்டோ போடுற அளவுக்கு அந்த தெய்வானை முன்னேறிட்டாளா? இது அம்மாவுக்கும், நைனாவுக்கும் தெரியுமானு தெரியலையே. இருக்கு அவளுக்கு” என்று பற்களை கடித்த அருணா தன் அன்னை சௌந்திரவள்ளிக்கு போன் செய்தாள்.
“என்னமா நடக்குது உங்க வீட்ல அந்த தெய்வானையுடைய ஆட்டம் அதிகமாயிட்டே போகுது” என்றாள் அருணா தேவி.
“ என்ன தெய்வானையோட ஆட்டம் அதிகமாயிட்டு இருக்கு” என்ற சௌந்தரவள்ளியிடம், உங்க மருமகள் தெய்வானை உங்க மகள் அர்ச்சனாவுக்கு ஆன்லைன்ல மாப்பிள்ளை தேடிட்டு இருக்காள். மேட்ரிமோனி சைட்ல அர்ச்சனாவோட போட்டோவை போட்டு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை வேணும்னு ஊரு எல்லாம் விளம்பரம் போட்டுட்டு இருக்காள். நம்ம ஊர் பத்தி உங்களுக்கு தெரியும் தானே அர்ச்சனாவுக்கு இரண்டாவது கல்யாணம் அவசியமா? அப்படி பண்ணி வச்சா நம்ம ஊரே காரி துப்பும். இந்த ஊர்ல உங்க மானம் மரியாதை எல்லாம் காத்துல பறக்கும். என்ன நினைச்சிட்டு இருக்காள் உங்க மருமகள். அவள் இஷ்டத்துக்கு பண்ணிட்டு இருக்காள்” என்றாள் அருணா தேவி.
“ நீ சொல்றது உண்மையா” என்ற சௌந்தரவள்ளியிடம், “நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்” என்ற அருணா, “நீங்க கோயிலுக்கு வாங்க நான் உங்க வீட்டுக்கு வந்தா என் மாமியார்க்கு பிடிக்காது அதனால நீங்க கோவிலுக்கு வாங்க நம்ம பேசிக்கலாம்” என்று கூறி ஃபோனை வைத்தாள் அருணா தேவி.
ஏமி தெய்வா உன் அம்மா, நைனா ஊருக்கு போயிட்டாங்கனு வருத்தமா இருக்கியா? என்ற கார்த்திகேயனிடம், “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே, நான் என் பாவா கூட இருக்கிறேன் சந்தோஷமா அதனால தான் அவங்க ஊருக்கு கூப்பிட்டும் கூட நான் போகலை” என்றாள் தெய்வானை .
“ஊருக்கு கூப்பிட்டாங்களா?” என்ற கார்த்திகேயனிடம், ஆமாம் பாவா, வேதனை என்னை தள்ளி விட்டாங்களே, அதனால அம்மா கொஞ்சம் பயந்து இருந்தாங்க நைனா சொல்லி சமாளிச்சுட்டாங்க ஒன்னும் பிரச்சனை இல்லை நான் நம்ம குழந்தை பிறக்கிற வரைக்கும் உங்க கூட தான் இருப்பேன். குழந்தை பிறந்ததுக்கு அப்புறமும் உங்க கூட தான் இருப்பேன் உங்களை விட்டு போகவே மாட்டேன்” என்று தன் கணவனை அணைத்துக் கொண்டாள் தெய்வானை.
“சரி ,சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வந்துடறேன் நீ வீட்ல பத்திரமா இரு அர்ச்சனா கூட பேசிட்டு இரு” என்று கூறிய கார்த்திகேயன் மனைவி அவளின் நெற்றியிலும் , வயிற்றிலும் முத்தமிட்டு வெளியே சென்று விட்டான்.
“ஏமி செஸ்டான்னு, இந்த அண்ணையா வேற அர்ச்சனாவை விரும்புகிறேன்னு சொல்லுது. பாவா வேற அண்ணையாக்கு அர்ச்சனாவை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்றாங்க. இப்ப நான் என்ன பண்ணட்டும் அர்ச்சனாவோட மனசுல அண்ணையா இருந்தா கூட பாவா கிட்ட பேசலாம். இந்த அர்ச்சனா அவங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்காங்கன்னு அவங்கள தவிர வேற யாருக்குமே தெரியாது” என்று புலம்பிய தெய்வானை அர்ச்சனாவின் அறைக்கு சென்றாள்.
“ஏமி அர்ச்சனா யோசனையாகவே இருக்கீங்க இரண்டு, மூன்று நாளாக” என்ற தெய்வானையிடம், “ஒன்னும் இல்லை வதனை” என்ற அர்ச்சனா, “சாப்பிட்டீங்களா” என்றாள் .
“அதெல்லாம் நான் சாப்பிட்டேன். நான் மறந்தாலும் என் அத்தைம்மா வேளை வேளைக்கு எனக்கு சாப்பாடு கொடுக்க மறக்கிறதே இல்லை” என்றாள் தெய்வானை.
“ நீங்க எதை பத்தி யோசிச்சிட்டு இருக்கீங்க” என்ற தெய்வானையிடம், “ஒன்னும் யோசனை இல்லையே வதனை”என்று சமாளித்தாள் அர்ச்சனா.
“என் அண்ணையாவைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கீங்களா?” என்று தெய்வானை கேட்டு விட அர்ச்சனா அதிர்ச்சியாக அவளைப் பார்த்தாள்.
“எனக்கு தெரியும் என் அண்ணையா மனசுல நீங்க இருக்கீங்கன்னு அதுக்காக உங்கள நான் என் அண்ணையாவைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு கண்டிப்பா சொல்ல மாட்டேன். ஆனால் உங்க வாழ்க்கையில இன்னொரு கல்யாணம் நடந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன் உங்க அன்னையாவும் ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நீங்க கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை என் அண்ணையாவா இருந்தால் எனக்கு ரெண்டு மடங்கு சந்தோஷம் அவ்வளவுதான்” என்று தெய்வானை கூறினாள்.
“ தயவு செஞ்சு இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க வேதனை” என்று கோபமானாள் அர்ச்சனா.
“ஏன் அர்ச்சனா இது பத்தி உங்க கிட்ட பேச கூடாதுன்னா எனக்கு புரியல நீங்களும் உங்க ஹஸ்பண்டும் அவ்வளவு சந்தோஷமாகவா வாழ்ந்தீங்க. சாரி ஹஸ்பண்ட்னு சொல்லிட்டேன் உங்களுடைய எக்ஸ் ஹஸ்பண்ட்” என்ற தெய்வானையிடம் பதில் ஏதும் கூறாமல் மௌனம் ஆகினாள் அர்ச்சனா.
“இதோ பாருங்க அர்ச்சனா பத்து வருஷமா நீங்க அவரையே நினைச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கீங்கனா, உங்க மனசுல அவர் மேல அவ்ளோ காதலா” என்று தெய்வானை மீண்டும் கேட்டாள்.
“காதலா என் வாழ்க்கையில் அதெல்லாம் கிடையாது வதனை . நான் ரொம்ப பெரிய துருதிர்ஷ்டசாலி என்றாள் அர்ச்சனா.
“என்ன சொல்றீங்க அர்ச்சனா” என்ற தெய்வானையிடம், “எனக்கு நடந்ததுக்கு பெயர் கல்யாணம்னு நீங்களும் நம்புறீங்களா? அது கல்யாணமே கிடையாது. என் அக்காவோட பிடிவாதம், அகங்காரம் அதனால நடந்தது. என்னை கல்யாணம் பண்ணின என் ஹஸ்பண்ட் கூட ஒரு நாள் கூட நான் வாழ்ந்ததே இல்லை. அவனுக்கு என்னை பிடிக்கலை . என்னை தவிர பல பெண்களோட தொடர்புல இருந்தான். குடிச்சு குடிச்சு ஹார்ட் அட்டாக் வந்து தான் செத்துப் போனான். கல்யாணம் ஆகி ஒரு வாரத்தில் செத்தாலும் செத்தான் உன்னால தான், உன் ராசியால தான் செத்துப்போனான்னு ஊரே சொன்னாங்க. என் அத்தைம்மா, பெரிய பாவா இரண்டு பேரும் தான் என்னை பழிக்கலை. மத்தபடி ஊரே பழிச்சுச்சு. எனக்கு பயமா இருக்கு வதனை திரும்ப ஒருத்தனை கல்யாணம் பண்ணி என்னுடைய ராசி நாளைக்கு அவனுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா சத்தியமா என்னால எந்த ஏச்சு, பேச்சையும் தாங்க முடியாது நான் இப்படியே இருந்துடுறேன். கடைசி வரைக்கும் என் அப்பா, அம்மாவுக்கு பொண்ணா, அண்ணையாவுக்கு ஒரு தங்கச்சியா, உங்களுக்கு ஒரு நாத்தனாரா, உங்க குழந்தைகளுக்கு அத்தையா இப்படியே நான் இருந்துட்டு போயிடுறேன். வாழ்க்கையில திரும்ப கல்யாணம்கிற அத்தியாயம் வேண்டாம்” என்று அழுது கொண்டே கூறினாள் அர்ச்சனா.