அத்தியாயம் 22
“என்ன வதனை ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல” என்ற பவித்ராவிடம், “ஆமாம்டி ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இனிமேல் அந்த தெய்வானையை எங்க அம்மா பேசுற பேச்சுல அவள் இனிமேல் அர்ச்சனாவுக்கு கல்யாணம் பண்ணனும் அப்படின்னு கனவுல கூட நினைக்க மாட்டாள்” என்று சிரித்தாள் அருணா தேவி.
“ அர்ச்சனாவுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?” என்ற பவித்ராவிடம், “நான் ஏற்கனவே சொல்லிட்டேன் அந்த சொத்து மொத்தமும் கட்டி ஆள் என் பொண்ணு வைஷ்ணவிக்கு மட்டும்தான் உரிமை இருக்கு. அதனால அந்த கார்த்திக்கு குழந்தை பிறக்கவே கூடாது. அவனுக்கு ஒருவேளை குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தை ஒன்னு உன்னோடதா இருக்கணும், இல்லைன்னா என் பொண்ணு வைஷ்ணவியோடதா இருக்கணும் எங்கிருந்தோ வந்த அந்த தெய்வானையோடதா இருக்க கூடாது. அப்புறம் அர்ச்சனா அவள் காலம் முழுக்க மூலையில் தான் இருக்கணும் அவளுக்கு திரும்ப கல்யாணம் பண்ணி அவளுக்கு ஒரு வாரிசு வந்து அது அந்த சொத்தை ஆள்றதுக்கெல்லாம் நான் அனுமதிக்கவே மாட்டேன்” என்று கோபமாக கூறினாள் அருணா தேவி.
“அண்ணையா எப்போ வந்த” என்ற தெய்வானையிடம், “இப்போ தான் வந்தேன் தெய்வா, நீ தூங்கிட்டு இருக்கன்னு பாவா சொன்னாங்க” என்ற பிரசாந்த் தன் தங்கையை பார்த்து புன்னகைத்தான்.
“ போஸ்டிங் இங்கே தானே பேசாமல் நீ எங்க வீட்லையே தங்கலாமே” என்று தெய்வானை கூறினாள்.
“அது எப்படி தெய்வா இங்கே தங்க முடியும் பாவா கிட்ட சொல்லி இருக்கேன். இங்க தங்கறதுக்கு வேற வீடு ஏற்பாடு பண்ணித் தரேன்னு சொல்லி இருக்காங்க” என்றான் பிரசாந்த்.
“ஏன் தம்புடு எங்க வீட்ல தங்கினால் உங்களுக்கு கௌரவம் குறைச்சலா?” என்று சிவநேசன் கேட்டிட, ஐயோ மாவய்யா கௌரவ குறைச்சல் எல்லாம் ஒன்றும் இல்லை. என்ன இருந்தாலும் பொண்ணு கொடுத்த வீட்ல வந்து நான் தங்குறது சரி கிடையாது. ஏற்கனவே அர்ச்சனாவோட அக்கா என்னையும், அர்ச்சனாவையும் சேர்த்து வச்சு தப்பா பேசினாங்க. திரும்பவும் நான் இங்க இருந்தால் அந்த பேச்சு திரும்பவும் அர்ச்சனா மனசை காயப்படுத்தும். அதனால் தான் யோசிக்கிறேன்” என்றான் பிரசாந்த்.
“அன்னைக்கு நடந்ததை நீங்க இன்னும் உங்க மனசுல வச்சிருக்கீங்களா தம்புடு” என்று சௌந்தரவல்லி கேட்டிட, “ஐயையோ அப்படியெல்லாம் இல்லை அத்தைகாரு. நான் ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன் அதை மனசுல எல்லாம் வச்சுக்கல நீங்க என்னை தப்பா எடுத்துக்க வேண்டாம்” என்றான் பிரசாந்த்.
“சரி ,சரி சாப்பிட வாங்க” என்று சௌந்திரவள்ளி அவனை அழைத்தார்.
அவனும் சாப்பிட அமர தெய்வானையோ தன் கணவனை அழைக்கச் சென்றாள்.
“பாவா” என்று வந்தவளின் கையைப் பிடித்து தன் அருகில் அமர வைத்தவன், “என்ன சாப்பிட்டியா? இல்லையா? இழுத்ததும் வந்துட்ட ரொம்ப விசுக்குனு இருக்கிறது போல இருக்க” என்றான் கார்த்திகேயன் .
“இன்னும் சாப்பிடவில்லை பாவா, சாப்பிட தான் உங்களை கூப்பிட வந்தேன் பாவா” என்றாள் தெய்வானை.
“உங்க அண்ணையா நம்ம ஊருக்கே போலீசா வந்துட்டான். அடிக்கடி நீ உன் அண்ணையாவை பார்க்க போகலாம். உங்க அண்ணையா உன்னை பாக்க வரவான். உனக்கு ஒரே சந்தோஷம் தானே” என்று கார்த்திகேயன் கேட்டிட, “சந்தோஷம்தான் பாவா என் அண்ணையாவை பார்க்கிறது எனக்கு சந்தோஷம்தான். அதைவிட பெரிய சந்தோஷம் இப்படி உங்க மடியில உட்கார்ந்துகிட்டு நீங்க எப்படி கட்டிப்பிடித்து என்னை கொஞ்சிக்கிட்டே இருக்கிறது” என்று அவள் கூறிட, அவளது கன்னத்தில் முத்தமிட்டவன் “நான் சாகுற வரைக்கும் என் பொண்டாட்டியை இப்படித்தான் மடியில் உட்கார வைத்து கொஞ்சிக்கிட்டே இருப்பேன் போதுமா” என்றான் கார்த்திகேயன்.
“பாவா ஏமி செப்பன்டி வாயில் அடிங்க அப்படி எல்லாம் சொல்லாதீங்க” என்று தெய்வானை கூறிட, “நெருப்புனா வாய் சுற்றுமா தெய்வா” என்றான் கார்த்திகேயன். “விளையாட்டுக்கு கூட இப்படி எல்லாம் பேசாதீங்க பாவா, சத்தியமா சொல்றேன் நீங்க இல்லாமல் என்னால இருக்கவே முடியாது” என்று அவள் கூறிட அவளை அணைத்துக் கொண்டவன் , “சரி சரி என் குழந்தைக்கு ரொம்ப பசிக்கும் வா சாப்பிட போகலாம்” என்றான் கார்த்திகேயன்.
அவனது காதை திருகியவள், “என்னது உங்க குழந்தைக்கு பசிக்குமா அப்போ எனக்கு பசிக்காதா?” என்று அவள் கேட்டிட, “அடியே நீ தான் டீ என்னுடைய முதல் குழந்தை. என் இரண்டு குழந்தைக்குமே பசிக்கும் வா சாப்பிட போகலாம்” என்று அவன் கூறிட அவனைப் பார்த்து சிரித்தவள் அவனுடன் சாப்பிட சென்றாள் .
“அர்ச்சனா நீங்க ஏன் சாப்பிட வராமல் இருக்கீங்க” என்று தெய்வானை கேட்டிட, “நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன் வதனை” என்றாள் அர்ச்சனா.
“இன்னும் ஐந்து நிமிஷத்துல என் அண்ணையா போயிருவாரு அர்ச்சனா அப்புறமா கூட நீங்க வந்து சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு தெய்வானை கிளம்பிட, அவளது கையை எட்டிப் பிடித்தாள் அர்ச்சனா.
“ நீங்க என்னை தப்பா எடுத்துக்க வேண்டாம் வதனை” என்று அர்ச்சனா கூறிட, “என்னால உங்களை புரிஞ்சுக்க முடியும் அர்ச்சனா” என்று கூறிய தெய்வானை அங்கிருந்து சென்று விட்டாள்.
பிரசாந்திற்கும் அர்ச்சனாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவள் வராமல் இருக்கவும் அவனும் புரிந்து கொண்டான். தன்னை காண தயங்கி தான் அவள் வெளியில் வராமல் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் அமைதியாக சாப்பிட்டுவிட்டு தனது வேலைக்கு கிளம்பினான்.
“சரிங்க பாவா நான் கிளம்புறேன்” என்ற பிரசாந்திடம், “இப்போதைக்கு நம்முடைய பண்ணை வீடு இருக்கு அங்கே நீ தங்கிக்கிறியா” என்று கார்த்திகேயன் கேட்டிட, “இல்லை பாவா வேற ஏதாவது” என்று அவன் கூறிட, “ஐயா சாமி, நீ வாடகை வேணாலும் கொடுத்துடு வெளியில் எல்லாம் உன்னை தங்க வைக்க முடியாது நீ அங்கேயே தங்கிக்கோ வாடகை கொடுத்தால் அது உன் வீடு மாதிரி தானே” என்று கார்த்திகேயன் கூறிட, “சரிங்க பாவா” என்ற சிரித்தான் பிரசாந்த்.
“ஆனாலும் தெய்வா உன் அண்ணையா இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்க கூடாது” என்று கார்த்திகேயன் கூறிட தெய்வானையும் சிரித்து விட்டாள் .
“என்ன அர்ச்சனா சாப்பிடாமல் உட்கார்ந்துட்டு இருக்கீங்க” என்ற தெய்வானையிடம், “பசி இல்லை வதனை, ஆனால் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணினால் அம்மா திட்டுவாங்க அதனால தான் கஷ்டப்பட்டு சாப்பிட்டுட்டு இருக்கேன்” என்று கூறினாள் அர்ச்சனா.
“அர்ச்சனா உங்க மனசுல என்னதான் இருக்கு நீங்க வெளிப்படையா சொன்னால் தானே எனக்கும் புரியும்” என்று தெய்வானை கேட்டிட, “என் மனசுல என்ன இருக்குன்னு நான் அன்னைக்கே சொல்லிட்டேன் வதனை, என்னால உங்க அண்ணையானு இல்லை கண்டிப்பா வேற யாரையுமே இன்னொரு முறை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதை புரிஞ்சுக்கோங்க” என்றாள் அர்ச்சனா.
“அதுக்கான காரணம்” என்ற தெய்வானையிடம் “அதையுமே நான் கூறிட்டேன். என்னோட ராசியால் திரும்ப ஏதாவது ஒரு உயிர் போயிருச்சுனா சத்தியமா என்னால தாங்கிக்க முடியாது” என்று அர்ச்சனா கூறிட, “பைத்தியம் மாதிரி பேசாதீங்க அர்ச்சனா. ஏற்கனவே நீங்க கல்யாணம் பண்ணின உங்க எக்ஸ் ஹஸ்பண்டுக்கு ஹார்ட் பிராப்ளம் இருந்திருக்கு. அதனால தான் அவரு இறந்து போனாரு. உங்க ராசியும், ஒரு மண்ணும் கிடையாது. குடிச்சு குடிச்சு ஒருத்தர் நெஞ்சுவலி வந்து செத்ததுக்கு ஒரு பாவமும் பண்ணாத உங்களோட ராசி தான் காரணம்னு சொன்னால் இந்த மூடநம்பிக்கையை என்னன்னு சொல்றது. எனக்கு புரியல இந்த ஊர்ல உள்ள வயசானவங்க தான் மூடநம்பிக்கையை பெருசா எடுத்து பேசுறாங்கன்னா நீங்களும் ஏன் அர்ச்சனா அதை பெருசாக்கிறீங்க” என்றாள் தெய்வானை.
“ நீங்கள் நிறைய படிச்சு இருக்கீங்க அதனால இதெல்லாம் மூடநம்பிக்கை இதெல்லாம் தப்புன்னு சொல்றீங்க. நான் பெருசா படிக்கலை. நான் இந்த பட்டிக்காட்டில் பிறந்து வளர்ந்தவ இதுலையே ஊறிப்போனவள் என்னால என்னை மாத்திக்க முடியாது தயவு செஞ்சு என்னை கட்டாயப்படுத்தாதீங்க” என்று கூறி விட்டு அர்ச்சனா கை கழுவி விட்டு எழுந்து சென்றாள்.
“தெய்வானை என்னடி உனக்கு வந்த சோதனை இந்த அர்ச்சனாவோட மனசை எப்படி மாத்துறது” என்று அவள் யோசித்துக் கொண்டிருக்க அவள் அருகில் வந்து அமர்ந்தார் சௌந்திரவள்ளி.
“அத்தைம்மா” என்ற தெய்வானையிடம் “என்ன பண்ணிட்டு இருக்க தெய்வா நீ க்ஷ ஏன் இந்த வேலை எல்லாம் பாத்துட்டு இருக்க” என்றார் சௌந்தரவள்ளி.
“நான் எந்த வேலையும் பார்க்கிறதே இல்லையே அத்தைம்மா. நீங்க தான் என்னை ஒரு வேலையும் பார்க்க விடுவதில்லையே” என்று தெய்வானை கூறினாள்.
“நான் சொல்றது வேற வேலை தெய்வா, அர்ச்சனாவுக்கு மாப்பிள்ளை பாத்துட்டு இருக்கியாமே” என்றார் சௌந்தரவள்ளி.
“ஆமாம் அத்தைம்மா அதில் என்ன தப்பு இருக்கு” என்று தெய்வானை கேட்டிட, “அது பெரிய பாவம் இல்லையா? ஏற்கனவே கல்யாணம் நடந்து கணவனை இழந்த ஒரு பொண்ணுக்கு திரும்ப கல்யாணம் பண்ணி வைக்கிறது” என்று சௌந்தரவள்ளி கேட்டிட, “அர்ச்சனாவோட வயசு என்ன அத்தைம்மா” என்றாள் தெய்வானை.
“இருபத்தி ஐந்து” என்று கூறினார் சௌந்திரவள்ளி.
“ இதே வீட்ல அர்ச்சனாவை விட ஒரு ரெண்டு வயசு கம்மியான பொண்ணு தான் நான் . நான் என் புருஷன் கூட சந்தோஷமா வாழ்ந்து குழந்தை குட்டி என்று உங்க வம்சத்தை பெருக்கணும்னு நீங்க ஆசைப்படுறீங்க, அதே ஆசை ஏன் உங்க பெத்த பொண்ணு மேல உங்களுக்கு வர வில்லை அர்ச்சனா பாவம் இல்லையா. அவங்களுக்கு மனசுல நிறைய ஆசை இருக்கும் அவங்க என்னை பார்த்து பொறாமை படுறாங்க வயிற்றெரிச்சல் படுறாங்கன்னு சத்தியமா நான் சொல்லவே இல்லை. ஆனால் அவங்க மனசுலையும் நமக்கும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை இருந்தால் சந்தோஷமா இருக்குமே, நமக்கும் இந்த மாதிரி ஒரு குழந்தை இருந்தால் சந்தோஷமா இருக்குமே என்று ஒரு ஆசை வருமே அந்த ஆசை வரக்கூடாதுன்னு சொல்றீங்களா அத்தைமா, ஒரு உண்மையை சொல்லுங்க அர்ச்சனா அவங்க முன்னாள் கணவர் கூட ஒரு நாள் கூட வாழவே இல்லை . அந்த ஒரு வார வாழ்க்கையில் தாம்பத்தியத்தில் அவங்க இருந்ததே இல்லை .15 வயசு பொண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சு அவளோட வாழ்க்கை வாழாமலே முடிஞ்சு போச்சு. கடைசி வரைக்கும் உங்க பொண்ணு கன்னியாவே சாகணும்னு தான் நீங்க ஆசைப்படுறீங்களா?” என்றாள் தெய்வானை.