மயக்கியே என் அரசியே…(23)

4.9
(8)

அத்தியாயம் 23

 

“ஏமி தெய்வானை இப்படி பேசுற” என்ற சௌந்திரவள்ளியிடம் “வேற எப்படி சொல்றது அத்தைம்மா, புரிஞ்சுக்கோங்க அர்ச்சனாவுக்கு வாழ்க்கை இருக்கு நீங்க இந்த மாதிரி நினைக்கிறது தப்பு உங்க பொண்ணு யாருக்கும் எந்த துரோகமும் பண்ணலை அவங்களோட வாழ்க்கைக்கு தான் பெரிய துரோகம் நடந்திருக்கு. பெரிய அநியாயம் நடந்திருக்கு. தான் செத்துப் போயிருவோம்னு தெரிஞ்சுமே அர்ச்சனாவை கல்யாணம் பண்ணின அவங்களோட முன்னாள் கணவர் மேல தப்பு இருக்கு, தன்னுடைய கொழுந்தன் எப்படிப்பட்ட ஆளு, அவருக்கு என்ன பிரச்சனை இருக்கு இப்படி எல்லாமே தெரிஞ்சும் தங்கச்சியோட வாழ்க்கையை பலி கொடுக்கிற மாதிரி அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்ச உங்க மூத்த பொண்ணோட தப்பு, இப்படி யார் யாரோ பண்ணின தப்புனாலதான் அர்ச்சனா இன்னைக்கு வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சிட்டு இந்த வீட்ல ஒரு மூலையில் முடங்கி கிடக்காங்க. இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா மூலையிலிருந்து அவங்களை வெளியில் கொண்டு வந்து இருக்கேன். அவங்க சுதந்திரமா இந்த உலகத்துல வாழனும். அதற்கு அவங்களுக்கு ஒரு துணை வேணும். அவங்களுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை , குட்டினு சந்தோஷமா வாழனும் ஊராளுங்க என்ன வேணாலும் சொல்லட்டும் நம்ம பொண்ணோட சந்தோசம் தான் நமக்கு முக்கியம். நம்ம வாழ்கிற வாழ்க்கை நமக்கானது அத்தைம்மா மத்தவங்களுக்காக இல்லை. ஊரோடு ஒத்து வாழனும் தான் அதுக்காக நம்மளோட சந்தோஷத்தை குழி தோண்டி புதைச்சிட்டு தான் ஊரோடு ஒத்து வாழனும் அப்படின்னு எந்த அவசியமும் கிடையாது. இருக்கிறது ஒரு வாழ்க்கை அதை சந்தோஷமா வந்துட்டு போயிரனும். தயவு செஞ்சு நீங்க என்னை தப்பா நினைக்க மாட்டீங்கன்னு நம்புறேன். அர்ச்சனாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டியது நம்மளோட பொறுப்பு” என்றாள் தெய்வானை .

 

“நீ சொல்றதெல்லாம் சரிதான் தெய்வானை ஆனால் அர்ச்சனாவை கல்யாணம் பண்ணிக்க யார் வருவாங்க சொல்லு. இந்த ஊரு பத்தி உனக்கு நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன் கார்த்தி சொல்லியிருப்பானே” என்று கூறினார் சௌந்திரவள்ளி .

 

“அத்தைம்மா ஏன் பயப்படுறீங்க இந்த ஊரை விட்டால் வேற ஊரே இல்லையா? நீங்க ஏன் இந்த ஊர்ல பொண்ணு எடுக்காமல் ஹைதராபாத் வர தேடி வந்து என்னை உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க அந்த மாதிரி நம்ம அர்ச்சனாவுக்கு கூட ஹைதராபாத்ல போய் வாழ்ற யோகம் இருந்தால் சந்தோஷம் தானே” என்றாள் தெய்வானை.

 

“ என் பொண்ணு எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்னு தான் நானும் நினைப்பேன். நீ சொன்னதுக்கு அப்புறம் தான் அவளுக்கு நான் எவ்ளோ பெரிய அநியாயம் பண்ணி இருக்கேன்னு எனக்கே புரியுது” என்று சௌந்திரவள்ளி கூறிட, “அப்புறம் என்ன அத்தைம்மா சந்தோஷமா நம்ம அர்ச்சனாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்” என்றாள் தெய்வானை.

 

“அர்ச்சனா இதுக்கு சம்மதிப்பாளா” என்ற சௌந்திரவள்ளியிடம், “உங்க பொண்ணு தானே நீங்க தான் சம்மதிக்க வைக்கணும் இது பண்ணாதே அது பண்ணாதேன்னு மட்டும் அதட்டுறீங்க நல்ல விஷயத்தை பண்ணனும்னு சொல்லியும் அதட்டுங்க” என்று தெய்வானை கூறினாள் .

 

“என்னமா மருமகளே நான் உன்னோட மாமியார் அந்த ஞாபகம் இருக்கா? இல்லையா?” என்று சௌந்திரவள்ளி கேட்டிட , “அதெல்லாம் நிறையவே இருக்குது அத்தைம்மா நீங்க என்னோட அத்தைம்மா தானே உங்களை கிண்டல் பண்றதுக்கோ, உங்களோட சண்டை போடறதுக்கோ எல்லாத்துக்கும் எனக்கு உரிமை இருக்கு தானே உரிமை இல்லைன்னு சொல்லுங்க நான் இந்த மாதிரி எல்லாம் பேசலை” என்று தெய்வானை கூறினாள். 

 

“நீ இந்த அருணா சொல்றது மாதிரி மயக்கி தாண்டி கண்ணை சிமிட்டி சிமிட்டி மயக்கிடுவ” என்று மருமகளின் வெற்றி வழித்து சொடுக்கிட்டவர், “நிஜமா சொல்றேன் தெய்வானை நீ ரொம்ப நல்லா இருக்கணும் என் பொண்ணோட வாழ்க்கை எங்க காலத்துக்கு அப்புறம் எப்படி இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன். வரப் போற மருமகள் அர்ச்சனாவை பார்த்துப்பாளோ? இல்லையோ? இப்படி நிறைய யோசிச்சேன் ஆனால் அர்ச்சனாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைச்சு கொடுக்கணும்னு நினைக்கிற பார்த்தியா நிஜமா சொல்றேன் நீ ரொம்ப நல்லா இருக்கணும்” என்றார் சௌந்திரவள்ளி.

 

“அத்தைம்மா ரொம்ப பாசம் வைக்காதீங்க ஏற்கனவே நீங்க பாசம் வச்சு வச்சு எனக்கு சளி பிடிச்சுகிச்சு. இன்னும் பாசம் வச்சீங்கனா சளி அதிகமாகி உங்க பேரக் குழந்தையை தான் பாதிக்கும்” என்று அவள் கூறிட, “வாயாடிக் கழுதை” என்று மருமகளின் கன்னத்தில் இடித்தவர், “சரி சரி அத்தைமா உனக்கு பேரிச்சம் பழம் லட்டு புடிச்சு வச்சிருக்கேன் சாப்பிடு” என்று அவளுக்கு கொடுத்தார்.

 

“ தேங்க்ஸ் அத்தைம்மா” என்று அதை சாப்பிட்டவள், எனக்கு மட்டும்தான் கொடுப்பீங்களா? உங்க பொண்ணுக்கு இல்லையா?” என்றாள் தெய்வானை.

 

 “அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு குழந்தை உண்டாகி வரட்டும் அவளுக்கு உனக்கு கொடுத்ததை விட ரெண்டு மடங்கு கொடுப்பேன்” என்று சௌந்திரவள்ளி கூறிட, “பார்த்தியா அவங்க பொண்ணுக்கு ரெண்டு மடங்காம். சரியான ஓரவஞ்சினி” என்று அவள் கூறிட, “அவளது கன்னத்தில் கிள்ளியவர் எப்பவுமே இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார்.

 

எதார்த்தமாக தன் கணவனுடன் அந்த வீட்டிற்கு வந்தாள் அருணா தேவி. அந்த சமயம் மாமியாரும், மருமகளும் கொஞ்சிக் கொண்டிருப்பதை கண்டவளின் வயிறு பற்றி எரிய ஆரம்பித்தது.

 

“ என்ன இது இந்த அம்மா இவளைக் கொஞ்சிட்டு இருக்காங்க. என்ன நடக்குது இந்த வீட்ல” என்று யோசித்த அருணா தேவி , “அம்மா” என்று அழைத்திட, “வா அருணா, வாங்க மாப்பிள்ளை” என்று மகளையும், மருமகனையும் வரவேற்றார் சௌந்திரவள்ளி. 

 

“கார்த்தி தான் வரச் சொன்னா அத்தகாரு அதனாலதான் அருணாவை அழைச்சிட்டு வந்தேன்” என்று கூறினார் கண்ணன்.

 

“என்ன விஷயம் மாப்பிள்ளை” என்ற சௌந்திரவள்ளியிடம் “அர்ச்சனாவை இன்னைக்கு பொண்ணு பார்க்கறதுக்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து வர்றாங்களாமே. கார்த்தி சொன்னான் அதனால தான் வந்தோம்” என்று கண்ணன் கூறிட “என்னது அர்ச்சனாவை பொண்ணு பாக்க வர வர்றாங்களா இதை பத்தி நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை” என்று அலறினாள் அருணா தேவி .

 

 

“உன்கிட்ட எதுக்கு சொல்லணும் உன்கிட்ட சொன்னா முன்னாடியே கெடுத்து விட்டுருவனு தான் உன்கிட்ட சொல்ல வேணாம்னு நான் தான் கார்த்தி கிட்ட சொன்னேன்” என்று கண்ணன் கூறினார்.

 

 “என்ன மாப்பிள்ளை சொல்றீங்க எனக்கே தெரியாதே” என்றார் சௌந்திரவள்ளி.

 

 “தெய்வானை” என்று சௌந்திரவள்ளி அழைத்திட, “சொல்லுங்க அத்தை அம்மா” என்று வந்தாள் தெய்வானை.

 

 “இன்னைக்கு அர்ச்சனாவை பொண்ணு பார்க்க வராங்களாமே, கார்த்தி உன்கிட்ட ஏதாவது சொன்னானா?” என்று கேட்ட சௌந்திரவள்ளியிடம், “இல்லையே அத்தைம்மா, பாவா என்கிட்ட எதுவும் சொல்லலையே” என்றாள் தெய்வானை.

 

“அது எப்படிம்மா உன்கிட்ட சொல்லாமல் என் தம்பி ஒரு காரியம் பண்ணுவானா? கல்யாணம் ஆகி வந்த அன்னைக்கே அவனை உன் முந்தானையில் முடிஞ்சு வச்சுருக்கியே, யாருகிட்ட கதை விடுற நீ தானே அர்ச்சனா ஃபோட்டோவை மேட்ரிமோனி சைட்ல போட்ட உனக்கே தெரியாமல் அர்ச்சனாவை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து வர்றாங்களா? என்று அருணா நீட்டி முழக்கிட, “இதோ பாருங்க வதனம் எனக்கு பொய் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இதை நீ பண்ணுனியான்னு கேட்டால் ஆமாம் பண்ணுனேன்னு பட்டுன்னு சொல்ற பழக்கம் தான் எனக்கு இருக்கு. நிஜமா எனக்கு தெரியாது. பாவா என்கிட்ட எதுவுமே சொல்லலை” என்றாள் தெய்வானை.

 

  “எனக்கு சின்ன வயசுல காது குத்தியாச்சு நீ திரும்ப எனக்கு காதுகுத்தி என் காதுல பூ சுத்த பார்க்காதே, நல்லா இருக்குமா இந்த வீட்ல நடக்கிற கூத்து ஏற்கனவே கல்யாணம் ஆகி புருஷனை இழந்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களா! இது என்ன புது கொடுமையா இருக்கு நம்ம ஊர்ல இந்த மாதிரி எந்த வீட்டிலையாவது நடந்து இருக்கா. இந்த மகராசி நம்ம வீட்டுக்கு வந்தாலும் வந்தாள். வெள்ளை புடவை கட்டினவளுக்கு கலர் புடவையை குடுத்துட்டு இப்போ அவளுக்கு கல்யாண ஆசை வேற தூண்டி விட்டுட்டாள். நீங்க வேணா பாருங்க இவன் அண்ணையாவை கூட்டிட்டு வந்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாலும் வைப்பாள்” என்று அருணா தேவி கூறினாள். 

 

“ஏன் என் அண்ணையாவுக்கு அர்ச்சனாவை கல்யாணம் வச்சு பண்ணி வச்சால் என்ன தப்பு” என்றாள் தெய்வானை.

 

 “என்ன தப்பா நல்லா எப்படிம்மா இந்த கேள்வி கேட்கிற, என் தம்பி சொத்துல பாதியை உன் அண்ணையாவுக்கு பிடிங்கி கொடுக்க திட்டமோ?” என்றாள் அருணா தேவி.

 

“வாயை மூடுங்க வதனை என் அண்ணையா ஒன்னும் அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுறவரு கிடையாது. அர்ச்சனா சம்மதம் சொன்னால் கட்டுண புடவையோடு அவங்களை கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு போவாரு” என்றாள் தெய்வானை.

 

“என் தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாரு” என்றாள் அருணா தேவி.

 

 “உங்க தங்கச்சியோட வதனை, அவங்களோட அண்ணனோட மனைவி, இந்த வீட்டோட மருமகள். உங்களை விட அதிகமா அர்ச்சனாவோட வாழ்க்கையில எனக்கு உரிமை இருக்கு. அத்தைம்மா, மாவய்யாவுக்கு அப்புறம் அவங்களை பாத்துக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கும், என் பாவாவுக்கும் தான் இருக்கு . அப்படி இருக்கும்போது அர்ச்சனாவோட வாழ்க்கையில முடிவெடுக்கிற உரிமை உங்களைவிட அதிகமா எனக்கு இருக்கு” என்றாள் தெய்வானை.

 

 “பார்த்தீங்களாமா எப்படி பேசறாள்ன்னு பாத்தீங்களா? எல்லாம் நீங்க கொடுக்குற இடம் அத்தைம்மா, அத்தைம்மான்னு உங்களை மயக்கி வச்சதுனால நீங்களும் அவள் என்ன சொன்னாலும் தலையாட்டிட்டு இருக்கீங்க. உங்க பொண்ணுக்கு இப்போ இரண்டாவது கல்யாணம் பண்ணி வச்சு என்ன சாதிக்க போறீங்க. இந்த ஊரே நம்மளை காரி துப்பும் அதுக்கு தான் இவள் வேலை பார்த்துட்டு இருக்காள்” என்று அருணா தேவி கூறிட, “அருணா வாய மூடு” என்றார் கண்ணன்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!