மயக்கியே என் அரசியே…(24)

5
(8)

அத்தியாயம் 24

 

 

“நான் ஏன் பாவா வாயை மூடனும் என்னைக்கு இவளை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்களோ அன்னையில் இருந்து இந்த வீட்ல எனக்கு உண்டான மரியாதை போயிருச்சு. நல்லா கண்ணை சிமிட்டி, கண்ணை சிமிட்டி அத்தைம்மா, அத்தைம்மான்னு கொஞ்சி, கொஞ்சி நடிச்சு, நடிச்சு என் அம்மாவை கைக்குள்ள போட்டாள். மாவய்யா, மாவய்யான்னு நடிச்சு என் நைனாவை கைகுள்ள போட்டுட்டாள். பாவா, பாவானு நடிச்சு என் தம்பியை கைகுள்ள போட்டுட்டாள். இந்த அர்ச்சனா ஒரு பைத்தியம் பாசமா இரண்டு டிரஸ் எடுத்து கொடுத்ததும் வதனை, வதனைன்னு இவளோட முந்தானையை பிடிச்சுட்டு அதுவும் சுத்துது. இதோ பாருடி உன்னோட மாய மந்திரம் எல்லாம் என்கிட்ட பலிக்காது. என் தங்கச்சியோட வாழ்க்கையில் முடிவெடுக்க உனக்கு எந்த உரிமையும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அர்ச்சனா இந்த வீட்டு பொண்ணு இல்லை. எங்க வீட்டு பொண்ணு என் கொழுந்தனுக்கு தான் அவளை கல்யாணம் பண்ணி வச்சேன் . அவள் கல்யாணம் ஆகி மருமகளா எங்க வீட்டுக்கு வந்துட்டாள். எங்க வீட்டு மருமகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நீ யாரு” என்றாள் அருணா தேவி.

 

 “உங்க வீட்டு மருமகளீனா அவங்கள உங்க வீட்ல வச்சு நீங்க பத்திரமா பார்த்துட்டு இருக்கணும். பாத்துக்கிட்டிங்களா? கல்யாணம் ஆகி ஒரு வாரத்துல அந்த பொண்ணோட வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு திரும்ப பிறந்த வீட்டுக்கு தான் அனுப்பி வச்சீங்க. அப்போ என்னைக்கு உங்க வீட்டை விட்டு அவங்களை எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சீங்களோ, அப்பவே உங்க வீட்டுக்கும் அவங்களுக்குமான உறவு அறுந்து போச்சு. அவங்க கணவர் இறந்தப்பவே உங்க குடும்பத்துக்கும், அவங்களுக்கும் உள்ள உறவு அறுந்து போச்சு அப்படி இருக்கும்போது எங்க வீட்டு பொண்ணுக்கு நாங்க இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு உங்களோட சம்மதம் தேவை கிடையாது. அப்படியே சம்மதம் கேட்கணும்னாலும் அர்ச்சனாவோட முன்னாள் கணவரை பெத்த அம்மா இருக்காங்க, கூட பிறந்த அண்ணன் இருக்காங்க அவங்க ரெண்டு பேரும் அர்ச்சனாவுக்கு மறுமணம் பண்ணி வைக்கிறது எந்த தடையும் சொல்லலை. நீங்க அந்த வீட்டுக்கு வாழப் போன பொண்ணு நீங்க அர்ச்சனாவோட வாழ்க்கையில கருத்து சொல்ல எந்த உரிமையும் கிடையாது. அப்புறம் இன்னொரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க முதல்ல அர்ச்சனா ஒன்னும் உங்க கூட பிறந்த தங்கச்சி கிடையாது. என் புருஷனுக்கு கூட பிறந்த தங்கச்சி அதனால அர்ச்சனாவோட வாழ்க்கைக்கான முடிவை நானும், என் கணவரும் மட்டும் தான் எடுப்போம். நீங்க எடுக்கக்கூடாது ஏற்கனவே அர்ச்சனாவோட வாழ்க்கையே உங்களோட தப்பான முடிவுனால தான் கெட்டுப்போய் சீரழிஞ்சு நிக்குது. கெட்டுப்போன அர்ச்சனாவோட வாழ்க்கையை சரி பண்ண தான் நானும், என் கணவரும் முயற்சி பண்ணிட்டு இருக்கோம். தயவு செஞ்சு இதுல நீங்க தலையிடாதீங்க. மீறி தலையிட்டீங்க அப்படின்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று எச்சரித்தாள் தெய்வானை கோபமாக.

 

“பார்த்திங்களா எப்படி பேசுறன்னு நான் இந்த வீட்டு பொண்ணு இல்லையாம். அர்ச்சனா என் கூட பிறந்த தங்கச்சி இல்லன்னு சொல்றாள். அது இவளுக்கு எப்படி தெரியும்? நான் உங்க பொண்ணு இல்லைங்கிறது நீங்க சொன்னீங்களா? இல்லை உங்க பையன் சொன்னானா? என்று அருணா தேவி கத்திக்கொண்டிருக்க, “நான் தான் சொன்னேன் வதனை” என்று வந்தாள் பவித்ரா.

 

“ பவித்ரா” என்ற அருணா தேவி அதிர்ச்சியாகிட, “ஆமாம் வதனை நான் தான் சொன்னேன். அது மட்டும் இல்லை நீங்க அர்ச்சனாவோட வாழ்க்கையை கெடுக்க என்னென்ன சூழ்ச்சி பண்ணுனீங்களோ எல்லாமே சொன்னேன். தெய்வானையோட குழந்தையை கலைப்பதற்கு லட்டுல மருந்து கலந்தீங்க பாத்தீங்களா? அந்த லட்டை மாத்தி வச்சது நான் தான்” என்று பவித்ரா கூறிட அருணா தேவி அறிந்து போனாள். 

 

“என்ன சொல்ற பவித்ரா தெய்வானையோட குழந்தையை கலைக்க லட்டுல விஷத்தை கலந்தாளா?” என்று சௌந்திரவள்ளி அதிர்ச்சியாக கேட்டிட, “ஆமாம் அத்தகாரு என் அம்மாவும், அண்ணையாகவும் தெய்வானையை பார்க்க இங்கு வந்தாங்களே, அப்போ அம்மா லட்டு புடிச்சு கொண்டு வந்தாங்களே. அந்த லட்டுல அம்மாவுக்கே தெரியாமல் வதனை குழந்தையை கலைக்கிற வீரியமான நாட்டு மருந்து கலந்து வச்சிருந்தாங்க. அது மட்டும் இல்லை அதை சாப்பிட்டு இருந்தால் தெய்வானையோட இந்த குழந்தை கலைந்து போறது மட்டுமில்லாமல் இனி தெய்வானேயோட வாழ்க்கையில எப்பவுமே குழந்தையே பிறக்காது. அப்படிப்பட்ட ஒரு வீரியமான மருந்து அதை கலந்து கொடுத்திருந்தாங்க. சத்தியமா அது என் அம்மாவுக்கோ, அண்ணையாவுக்கோ தெரியாது. வதனையோட எல்லா திட்டமும் எனக்கு மட்டும்தான் தெரியும் வதனைக்கு அந்த வீட்ல ரொம்ப நம்பிக்கையான ஆள் நான் தானே அதனால் என்கிட்ட எல்லாமே சொல்லுவாங்க. அப்ப தான் யோசிச்சேன் இன்னும் இந்த உலகத்தையே பார்க்காத ஒரு குழந்தையை கொல்லுற அளவுக்கு மோசமான ஒருத்தவங்க தான் என் வதனைனு. இப்படிப்பட்ட ஒருத்தவங்க கண்டிப்பா எனக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க மாட்டாங்கன்னு தெரியும். நான் தான் இந்த வாழ்க்கையை வேணான்னு சொல்லிட்டு போனேன். திரும்ப அந்த வாழ்க்கை வேணும்னு வந்து தெய்வானையோட வாழ்க்கையில சிக்கலை உண்டாக்க நான் என்னைக்குமே நினைக்க மாட்டேன். எனக்கு ஆசை இருந்துச்சு பாவாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆனால் எப்போ அவரோட குழந்தை தெய்வானையோட வயித்துல வளருதுனு தெரிஞ்சதோ அப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் இன்னும் பிறக்காத ஒரு குழந்தைக்கு எப்பவுமே நான் துரோகம் பண்ண கூடாதுன்னு அதனாலதான் வதனை பண்ணின எல்லா விஷயத்தையும் நான் தெய்வானை கிட்டயும், பாவா கிட்டயும் சொன்னேன்” என்றாள் பவித்ரா. 

 

“அத்தகாரு அது மட்டும் இல்லை அர்ச்சனாவோட வாழ்க்கை கெட்டுப் போகணும் அப்படிங்கற எண்ணத்தினால் தான் வதனை என் சின்ன அண்ணையாவுக்கு அர்ச்சனாவை கல்யாணம் பண்ணி வச்சாங்க. சின்ன அண்ணையாவுக்கு ஹாட் பிராப்ளம் இருக்கிறது வதனைக்கு நல்லாவே தெரியும். அது மட்டும் இல்லாமல் அர்ச்சனாவோட வாழ்க்கையை நாசமாக்கனும் அப்படிங்கற ஒரே ஒரு காரணத்துக்காக தான் அவருக்கு அர்ச்சனாவை கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவர் இறந்து போயிட்டால், அர்ச்சனா மூளையில் உட்கார்ந்து இருப்பாள். அவளுக்கு வாரிசுன்னு ஒன்னு இருக்காது. அப்போ இந்த சொத்தை ஆள்றதுக்கு வைஷ்ணவிக்கு போட்டியா இன்னொரு குழந்தை இருக்காது அதனால் தான் அர்ச்சனாவோட வாழ்க்கையே கெடுத்தாங்க. அது மட்டும் இல்லை என்னையவோ, வைஷ்ணவியையோ பாவாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க அவங்க முழு மூச்சா வேலை பார்த்தாங்க. அதுக்கான ஒரே ரீசன் இந்த சொத்து மொத்தத்தையும் எங்கிருந்தோ வந்த யாரோ ஒரு பெண்ணு ஆளக்கூடாது. ஒன்னு அவங்க மகள் ஆளனும், இல்லையா அவங்களோட நாத்தனாரான நான் ஆளனும். என் வயித்துல பிறக்கும் பிள்ளைங்க அவங்களோட வாரிசுன்னு அவங்க நம்பினாங்க அதனால தான் பாவாவுக்கு வந்த நிறைய வரனை கெடுத்து விட்டாங்க. தெய்வானை கூடவும் கல்யாணம் நடக்க கூடாதுன்னு நிறைய திட்டம் போட்டாங்க கடவுள் புண்ணியத்தினால எந்த திட்டமும் பலிக்காமல் அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு” என்றாள் பவித்ரா.

 

“அருணா ஏன் உனக்கு இவ்ளோ கேவலமான புத்தி. உன்னை நான் வயித்துல சுமந்து பெத்துக்கலையே தவிர நான் பெத்த பொண்ணா தானடி உன்னை வளர்த்தேன். உன் அம்மா , நைனா இறந்ததுக்கு அப்புறம் நான் பெத்த பிள்ளைகளுக்கும், உனக்கும் ஏதாவது வித்தியாசம் பார்த்திருப்பேனா? அர்ச்சனாவுக்கு இதுவரைக்கும் நீ அவளுடைய பெரியப்பா பொண்ணுன்னு கூட தெரியாதுடி. கார்த்திக்கு கொஞ்சம் விவரம் தெரியும் அதனால அவனுக்கு தெரியும் ஆனால் அர்ச்சனா உன்னை தன்னோட கூட பொறந்த அக்கான்னு தானடி நினைச்சுட்டு இருக்காள். அவளோட வாழ்க்கையை கெடுக்க எப்படி உனக்கு மனசு வந்துச்சு நான் கூட உன்னை பெத்த பொண்ணா தானடி பாத்துட்டு இருக்கேன் நீ என்னைக்காவது என் ஓரகத்தியோட பொண்ணுன்னு நான் நெனச்சிருக்கேனா ஏன்டி இவ்ளோ மோசமா நடந்துக்குற அப்படி என்னடி உனக்கு இந்த சொத்து மேல வெறி என்று கேட்டார் சௌந்திரவள்ளி.

 

 “ஆமாம் என் நைனா கொடுத்த நிலத்துல விவசாயம் பண்ணி தானே நீங்க இவ்வளவு சொத்தும் சம்பாதிச்சு இருக்கீங்க அப்போ இது பூராவும் ஆள்றதுக்கு என் ஒருத்திக்குத்தானே உரிமை இருக்கு எங்கிருந்தோ வந்த இந்த தெய்வானை ஆண்டுகிட்டு இருக்காள். அர்ச்சனாவுக்கு கல்யாணம் பண்ணி அவளுக்கு குழந்தை குட்டி வந்தா அந்த குழந்தைகளுக்கு பங்கு கொடுப்பீங்க அப்ப என் பொண்ணு வைஷ்ணவிக்கு என்ன கிடைக்கும். ‌ நானும், என் பொண்ணுப் என்ன திருவோடு ஏந்திக் கொண்டு தெருவுல தெரியணுமா? என்றாள் அருணா.

 

 “வாயை மூடு அருணா என்னைக்கோ இந்த சொத்துல மூன்று பங்கா பிரிச்சு உனக்கான பங்கை மாப்பிள்ளை கிட்ட என் மகன் கொடுத்துட்டான் அது உனக்கு தெரியுமாடி” என்று சௌந்திரவள்ளி கேட்டிட, “அது இவளுக்கு தெரியாம இருக்கும்னு நீங்க நம்புறீங்களா அத்தகாரு, எல்லாமே தெரியும் பேராசை புடிச்ச மிருகம் இது. மொத்தமா இதுக்கே வேணும்னு அலையுது எவ்வளவு மோசமான பொம்பளைடி நீ அர்ச்சனாவோட வாழ்க்கையை அன்னைக்கு கெடுத்த. இன்னைக்கு அதை சரி பண்ண பார்க்குற இந்த தெய்வானை மேல வன்மம் உனக்கு. அந்த பொண்ணோட வயித்துல இருந்த பச்சை குழந்தையை அழிக்க நினைச்சிருக்கியே மனுஷியா டி மனசு ஜென்மமா நீ” என்று மனைவியை போட்டு அடித்தார் கண்ணன்

 

“அண்ணையா என்ன பண்றீங்க எதுக்கு இப்போ அவங்களை அடிக்கிறீங்க” என்ற தெய்வானையிடம், “அடிக்க கூடாது தெய்வானை இவளை எல்லாம் கொல்லணும்” என்று கண்ணன் கூறிட, “அண்ணையா அவங்கள அடிக்கிறதுனால அவங்க மாற போறாங்களா? அவங்க எப்படியும் மாறப் போறதில்லை விடுங்க. பாவா வரட்டும் முதலில் அர்ச்சனாவுக்கு மாப்பிள்ளை வீட்ல இருந்து வருபவங்க பொண்ணு பாத்துட்டு போகட்டும் அதுக்கப்புறம் நம்ம பேசிக்கலாம்” என்றாள் தெய்வானை. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!