மயக்கியே என் அரசியே…(26)

5
(7)

அத்தியாயம் 26

 

 “பாவா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்” என்ற தெய்வானையை, தன் அருகில் இழுத்து தன் மடியில் அமர வைத்தவன், “என்ன விஷயம் என்கிட்ட கேட்கணும்னாலும் இந்த மாதிரி மடியில் உட்கார்ந்து தான் கேட்கணும்” என்று கூறினான் கார்த்திகேயன்.

 

அவனை பார்த்து புன்னகைத்தவள் “அன்னைக்கு  அர்ச்சனாவை என் அண்ணையாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு நீங்க தானே சொன்னீங்க இப்போ என்ன என் அண்ணையாவை அர்ச்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கீங்க என்ன நடந்துச்சு. அர்ச்சனா மனசுல என் அண்ணையா  இருக்காருன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது, அர்ச்சனா கிட்ட நான் பலமுறை கேட்டு பாத்துட்டேன் எனக்கு கல்யாணம் வேணாம்னு தான் சொன்னாங்க” என்றாள் தெய்வானை.

 

“கல்யாணம் வேணாம்னு சொன்னாள் உன் அண்ணையாவை  பிடிக்கலைன்னு என்னைக்காச்சும் சொல்லி இருக்காளா” என்று கார்த்திகேயன் கேட்டிட, “இல்லை பாவா அப்படி எதுவும் சொன்னது இல்லை “என்றாள் தெய்வானை.

 

 “அக்காவால அன்னைக்கு பிரச்சனை நடந்துச்சே அன்னைக்கு உன் அண்ணையாவும், அர்ச்சனாவும் ஹாஸ்பிடல்ல பேசிட்டு  இருந்ததை நான் கேட்டேன். பிரசாந்துக்கு அர்ச்சனாவை பிடிச்சிருக்குன்னு அவன் ஹாஸ்பிடல்ல வெச்சி தான் அவள்கிட்ட சொன்னான்.  அவள் பட்டுன்னு அவனை அறைஞ்சுட்டாள். அதனால அவளுக்கு பிடிக்கலைனு நானும் நினைச்சேன். அதனால தான் நீ என்கிட்ட பிரசாந்துக்கு ஏன் அர்ச்சனாவை கல்யாணம் பண்ணி வைக்க கூடாதுன்னு சொல்லும்போது அர்ச்சனா மனசுல அவன் இல்லாத போது அவனை நான் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது அப்படிங்கிறதுக்காக தான் உன்கிட்ட வேற வேற காரணம் சொன்னேன். ஏன்னா அர்ச்சனாவை நீ தப்பா நினைச்சிட கூடாது பாரு அப்புறம்  ஊருக்கு போறதுக்கு முன்னால பிரசாந்த் அர்ச்சனா கிட்ட பேசிட்டு இருந்தான். அப்பதான் எனக்கு புரிஞ்சுது என் தங்கச்சி மனசுல பிரசாந்த் தான் இருக்கான்னு” என்று அந்த நிகழ்வை கூற ஆரம்பித்தான் கார்த்திகேயன்.

 

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க அர்ச்சனா” என்ற பிரசாந்திடம், “என்ன பண்ணிட்டு இருக்கேன்னா, நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு இருக்கேன்” என்றாள் அர்ச்சனா கோபமாக . “எதுக்காக என்னை அவாய்ட் பண்ணிட்டு இருக்கீங்க நான் ஹாலில் இருந்தால் நீங்க ரூம்லையே தான் இருக்கீங்க , நான் சாப்பிட உட்கார்ந்தாலும் நீங்க வெளியே வர்றது கிடையாது என்ன ரீசன் நாங்க இங்கே இருக்கிறது உங்களுக்கு பிடிக்கலையா” என்று பிரசாந்த் கேட்டான்.

 

 “உங்க மனசுல என் மேல ஒரு தப்பான எண்ணம் இருக்கு அது எனக்கு பிடிக்கலை” என்று அர்ச்சனா கூறிட, “என் மனசுல அப்படி என்ன தப்பான எண்ணம் இருக்கு. உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டது தப்பா” என்றான் பிரசாந்த்.

 

“ ஆமாம் அது எவ்ளோ பெரிய தப்பு. பெரிய பாவம்” என்ற அர்ச்சனாவிடம், “பைத்தியக்காரத்தனமாக பேசாதீங்க அர்ச்சனா என்ன பாவம் ஏற்கனவே கல்யாணம் ஆகி புருஷன் கூட வாழ்ற ஒரு பொண்ணை வலுக்கட்டாயமா என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னால் தான் பாவம்.  உங்க எக்ஸ் ஹஸ்பண்ட் இறந்து கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கு மேல ஆகுது. நான் அன்னைக்கே சொன்னேன் உங்களுக்கு நடந்ததுக்கு பெயர் கல்யாணமே கிடையாது பால்ய விவாஹம் அது சட்டப்படி செல்லவும் செல்லாது. அப்படி இருக்கும்போது நீங்க ஏன் என்னை அவாய்ட் பண்றீங்கன்னு எனக்கு புரியவில்லை. ஒரு விஷயம் சொல்லுங்க உங்களுக்கு உண்மையிலே என்னை பிடிக்கலை அப்படின்னு சொன்னால் உங்கள நான் தொந்தரவு பண்ணவே மாட்டேன் ஆனால் நீங்க சொல்லவே மாட்டேங்கிறீங்க இப்போ நான் ஃபைனலா கேட்கிறேன் உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையா பிடிக்கலை அப்படின்னு நீங்க சொல்லிட்டீங்க அப்படின்னா அதுக்கப்புறம் உங்களை நான் தொந்தரவு பண்ணவே மாட்டேன். சொல்லுங்க சொல்லுங்க அர்ச்சனா என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையா” என்றான் பிரசாந்த்.

 

 அவள் பதில் ஏதும் சொல்லாமல் கிளம்ப எத்தனிக்க அவளது கையை எட்டிப்பிடித்தான் பிரசாந்த்.

 

“ ப்ளீஸ் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது என்னை காயப்படுத்தாதீங்க ப்ளீஸ்” என்றாள் அர்ச்சனா.

 

“ இது என்ன அர்ச்சனா உன்னை எனக்கு பிடிக்கும் ஆனால் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்” என்றான் பிரசாந்த் .

 

“என்ன அர்த்தம்  நீங்க உயிரோடு வாழனும் அது மட்டும் தான் அர்த்தம் என்னால தெரிஞ்சே உங்க வாழ்க்கையில எந்த விஷப்பரிட்சையும் பண்ண முடியாது ஏற்கனவே என்னோட வாழ்க்கை பட்டு போச்சு அதை சரி பண்ணுறேன்னு  சொல்லிட்டு உங்க வாழ்க்கைய கெடுத்துக்காதீங்க. உங்க  அம்மா, நைனாவுக்கு நீங்க ஒரே பையன் நீங்க நல்லா இருக்கணும். நூறு வயசுக்கு நல்லா இருக்கணும் அதனால தான் சொல்றேன் தயவு செஞ்சு என்னை மறந்துடுங்க நீங்க ரொம்ப கண்ணியமான மனுஷன்.உங்களை எப்படி நான் பிடிக்கலைன்னு சொல்ல முடியும் உங்க வீட்ல இருந்த அந்த மூன்று நாளும் நீங்க என் மேல காட்டின அக்கரை, மரியாதை எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு . உங்க வீட்டிலேயே கடைசிவரை வாழனும் அப்படிங்கிற ஆசைதான் எனக்குள்ள வந்துச்சு. அதுவும் நீங்க என்கிட்ட எவ்வளவு கண்ணியமா நடந்துக்கிட்டீங்க தூங்கும்போது என் டிரஸ் விலகி இருந்ததை பார்த்ததும் சலனம் படாமல் போர்வையை  எடுத்து என்னை போத்தி விட்டுட்டு அந்த ரூம்ல இல்லாம வெளியில போயிட்டீங்க அந்த ஒரு விஷயம் போதாதா உங்களை எனக்கு பிடிக்கிறதுக்கு. பிடிச்ச பொண்ணா இருந்தாலும் அவளை தப்பா பார்க்க கூடாது என்கிற உங்களுடைய கண்ணியத்தை எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது அப்புறம் என்கிட்ட எவ்வளவோ பேசுவீங்க நீங்க பேசும்போது உண்மையிலேயே நான் ரொம்ப சந்தோஷமா இருந்தேன். உங்க கூட இருக்கும் போதும் நான் சந்தோஷமா தான் இருந்தேன். நேத்து அக்கா தப்பா பேசினாளே, அப்போ தான் என்னோட நிலைமை என்னன்னு எனக்கு புரிஞ்சுது. என் அக்கா இந்த மாதிரி பேசிட்டாள்னு மட்டும் நான் சாக துணியலை, என் மனசுல இருந்த ஆசையும் தப்பு அந்த ஆசை  தெரிஞ்சா அக்கா பேசுனதை விட பல மடங்கு எல்லாரும் பேசுவாங்களோ என்ற பயத்தினால் தான் கையை  அறுத்துக்கிட்டேன். ஏன்னா கண்டிப்பா என்னால உங்களை கல்யாணம் பண்ணி உங்க வாழ்க்கையை கெடுக்க முடியாது” என்றாள் அர்ச்சனா.

 

 “பேசி முடிச்சிட்டீங்களா நீங்க என்ன பைத்தியமா நான் தெரியாம தான் கேட்கிறேன் ஒரு குடிகாரன் இதய நோயாளி . அவன் மேலும் குடிச்சு செத்து போயிட்டான். அதுக்கு நீங்க எப்படி காரணமாக இருக்க முடியும் . எனக்கு இந்த கெட்ட பழக்கமும் இல்லை நல்ல வேலையில இருக்கேன் உங்களை நல்லா பாத்துக்குவேன் உங்களை கடைசி வரைக்கும் கண் கலங்காமல் பார்த்துக்குவேன். ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க நாளைக்கு காலைல தூங்கி எந்திரிச்சா தான் நம்ம உயிர் நமக்கு சொந்தம். அப்படி இருக்கும் போது நீங்க ஏன் பியூச்சரை நினைச்சு இவ்வளவு கவலை படுறீங்கன்னு தெரியல. ஃப்யூச்சர்ல ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனால் கூட என் விதி முடிஞ்சிடுச்சு அவ்வளவுதான் அதை புரிஞ்சுக்கோங்க” என்ற பிரசாந்த்திடம்,  “இதோ பாருங்க பிரசாந்த் நீங்க என்ன வேணாலும் சொல்லலாம் ஆனால் என்னால உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது. உங்க அம்மா , நைனா  என்ன நினைப்பாங்க என்னை மாதிரி ஒரு பொண்ணை அவங்க மருமகளா ஏத்துப்பாங்களா? கண்டிப்பா மாட்டாங்க அது மட்டும் இல்லை இன்னைக்கு எதார்த்தமா அண்ணையா அறைப் பக்கம் போனேன் . அண்ணையா வேதனை கிட்ட பேசியதை  கேட்டேன். உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க சொல்லி அண்ணையா கிட்ட வேதனை பேசுனாங்க.  அதுக்கு அண்ணையா மறுத்துட்டாரு. அண்ணையா சொன்ன காரணம் கூட எனக்கு சரின்னுதான் பட்டுச்சு ஏற்கனவே கல்யாணம் ஆன என்னைய இதுவரை கல்யாணமே பண்ணிக்காத உங்களுக்கு கட்டி கொடுக்கறது எப்படி முறையாகும். ஒருவேளை ஏற்கனவே கல்யாணம் ஆகி மனைவியை இழந்த ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கிட்டால் என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு அண்ணையா நம்புறாரு அதனால தயவு செஞ்சு என்னை விட்டு போயிருங்க” என்றாள் அர்ச்சனா.

 

 “அப்போ உங்க அண்ணையா சொன்னது மாதிரி மனைவியை இழந்த ஒருத்தன உங்களால கல்யாணம் பண்ணிக்க முடியுமா அர்ச்சனா” என்றான் பிரசாந்த்.

 

“ சத்தியமா நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் உங்களையும் சேர்த்து தான்” என்று கூறிவிட்டு கோபமாக அர்ச்சனா சென்று விட்டாள் .

 

“இதுதான் நடந்துச்சு அர்ச்சனாவுக்கு பிரசாந்த்தை பிடிச்சிருக்கு ஆனால் அவளுக்கு ஒரு பயம் இருக்கு எங்கே தன்னோட முதல் வாழ்க்கை போல இரண்டாவது வாழ்க்கையும் அமைந்துவிடுமோ என்று அதனாலதான் அவள் கல்யாணம் வேணாம் வேணாம்னு மறுத்து இருக்காள். ஆனால் அவள் முதல் வாழ்க்கைல நடந்தது கூட சதின்னு அவளுக்கு புரிய வச்சிட்டால் ஒருவேளை அவள் பிரசாந்த்தை ஏத்துக்கலாம்னு தான் பவித்ராவை வீட்டுக்கு வர சொல்லி அருணா அக்காவை பத்தி சொல்ல  சொன்னேன் 

 

பவித்ரா சொன்னதை வச்சு அர்ச்சனா கொஞ்சம் மனசு மாறி இருக்கலாம். நானும் கேட்டதும் அவளால மறுக்க முடியல.  இன்னைக்கு காலைல பிரசாந்த் கிட்ட பேசிட்டேன். அவனும் சொன்னான். ‘இல்லை பாவா அம்மாகிட்ட பேசி பார்த்தேன் வசதி பார்த்து நீங்க பொண்ணு கொடுக்க மாட்டீங்க அப்படிங்கற மாதிரி தான் அவங்க சொன்னாங்க இப்போ சொல்றேன் பாவா உங்க தங்கச்சியை கட்டின சேலையோட அனுப்புனா போதும் உங்களோட சொத்து பத்து எதுவும் எனக்கு வேண்டாம். என்னோட மனைவியை நல்லபடியா பார்த்துக்கிற அளவுக்கு என்னால சம்பாதிக்க முடியும்’ இதுதான் உங்க அண்ணன் சொன்ன பதில் அதனாலதான் என் தங்கச்சியை அவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்கலாம் என்று நான் முடிவு பண்ணிட்டேன்” என்றான் கார்த்திகேயன்.

 

 “பாவானா பாவா தான்” என்று அவனை கட்டிக் கொண்டாள் தெய்வானை. 

 

சில வாரங்களுக்கு பிறகு…

 

அந்த வீடே விழாக்கோலம்  கொண்டிருந்தது.

 

 அர்ச்சனாவை அலங்காரம் செய்து கொண்டிருந்தாள் தெய்வானை. 

 

“அர்ச்சனா ரொம்ப அழகா இருக்கீங்க உங்களை மட்டும் அண்ணையா இப்ப பார்த்தாரு சொக்கி விழுந்துருவாரு” என்று தெய்வானை கூறிட ன, “ஏய் என்னடி என் மருமகளை பார்த்து கண்ணு வச்சுட்டு இருக்க” என்றபடி வந்தார் கலாராணி. “ஆமாம் உங்க மருமகள் மேல கண்ணை வச்சுட்டு நாங்க தடவிட்டு இருக்கோம் வந்துட்டாங்க இப்போ தான் கண்ணு வைக்கிறாங்களாம் கண்ணு” என்றாள் தெய்வானை.

 

“ஆமாம் என் மருமகள் இருக்கிற அழகுக்கு உன் கண்ணு முழுக்க அவள் மேல் தான் இருக்கு இங்க பாரு எம்புட்டு திருஷ்டி” என்று மருமகளின் நெற்றி வழித்து சொடுக்கிட்டார் கலாராணி.

 

“ரொம்பதான் பண்றீங்க அம்மா மருமகள் மேல ரொம்ப தான் பாசம் தூக்கலா இருக்கு” என்று தெய்வானை கேட்டிட, “உன் மாமியார் கூட தான் தெய்வானை தெய்வானைனு உன் மேல பாசத்தை பொழியுறாங்க நாங்க ஏதாவது கேட்டோமா? அந்த மாதிரி தான் என் வீட்டுக்கு வாழ போற பொண்ணு அவள் மேல நான் பாசம் காட்டாமல் வேற யார் காட்டுவாங்க” என்று சிரித்தார் கலாராணி. “சரி சரி உன் அண்ணியை அழைச்சிட்டு வா” என்றார் கலா ராணி. 

 

“அம்மா வதனைன்னு சொல்லு” என்று தெய்வானை கூறினாள். “அதெல்லாம் உங்க வீட்ல வச்சுக்கோ எனக்கு தெலுங்கு தெரியாது. நான் தமிழில் தான் சொல்லுவேன் அவள் உனக்கு அண்ணி தான் கூட்டிட்டு வா” என்று கலா ராணி கூறிட, “சரி வாங்க அண்ணி எங்க அம்மாவே உங்களை அண்ணி என்று கூப்பிட சொல்லிடுச்சு” என்று கூறிட அர்ச்சனா சிரித்து விட்டு தெய்வானையுடன் மணமேடைக்கு வந்தாள். 

 

“பிரசாந்த் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அவனை  முறைத்து விட்டு, “என்னையோ பார்த்துட்டு இருக்கீங்க ஐயர் நம்ம ரெண்டு பேரையும் முறைக்கிறார்” என்று கூறினாள்.

 

 “அவரு  கிடக்கிறார். என் பொண்டாட்டி எவ்ளோ அழகா இருக்கீங்க உங்களை பாக்காம ஐயரையா பார்த்துட்டு இருப்பாங்க” என்றான் பிரசாந்த்.

 

 “இன்னும் போங்க வாங்க தானா, சரி நீங்க ஐயரை பார்த்தால் தான் அவரு தாலி எடுத்துக் கொடுப்பாரு. நீங்க அதை என் கழுத்துல கட்டி  நிஜமாவே உங்களுக்கு பொண்டாட்டி ஆக்கிக்க முடியும்” என்று அர்ச்சனா கூறிட , “உங்களுக்கு இவ்வளவு எல்லாம் பேச வருமா” என்று சிரித்த பிரசாந்த் ஐயரை பார்க்க அவரோ அவனை முறைத்துக் கொண்டிருந்தார். “நான் சொல்ற மந்திரத்தை திருப்பி சொல்லுங்கோ” என்று அவர் கூறினார்.

 

 அவனும் அசடு வழிய அவரை பார்த்து சிரித்து வைத்தான். ஐயர் தாலி எடுத்துக் கொடுத்து கெட்டிமேளம் கொட்டிட அர்ச்சனா கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவித்தான் பிரசாந்த். 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!