அத்தியாயம் 27
முதலிரவு அறையில் தன் மனைவிக்காக வெகுநேரம் காத்திருந்தான் பிரசாந்த். தெய்வானை அர்ச்சனாவை தன் அண்ணனின் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.
கையில் பால் சொம்புடன் மெல்ல மெல்ல அடி எடுத்து நடந்து வரும் அர்ச்சனாவை கண்ட பிரசாந்திருக்கும் மனம் நிறைந்தது.
அவளது கையில் இருந்த பால்சொம்பை வாங்கி ஓரமாக வைத்தவன் அவளை தன் அருகில் அமர வைத்து அவளது கையில் வெடுக்கென்று கிள்ளினான் .
ஆ என்று அவள் கத்திட “இது கனவா நிஜமானு பார்த்தேன்” என்றான் பிரசாந்த். “இது கனவா நிஜமானு பார்க்கணும்னா நீங்க உங்க கையை கிள்ளனும் என்று அவனது கையை அவள் கிள்ளிவிட வலிக்குதுடி” என்றான் பிரசாந்த்.
“தாலி கட்டுறதுக்கு முன்னாடி வரைக்கும் போங்க வாங்க, தாலி கட்டினதுக்கப்புறம் போடியா” என்று அர்ச்சனா கேட்டிட, “ஆமாம் அதுவரைக்கும் நீ உங்க அண்ணையாவுக்கு தங்கச்சி, உன் அம்மா நைனாவுக்கு பொண்ணு, ஆனால் இப்போ எனக்கு பொண்டாட்டி . என் பொண்டாட்டியை போடி வாடின்னு சொல்ற உரிமை என் ஒருத்தனுக்கு மட்டும் தானே இருக்கு” என்று பிரசாந்த் சிரித்திட அர்ச்சனாவும் சிரித்து விட்டாள் .
“நிஜமாவே உனக்கு என்னை பிடிச்சிருக்கா அர்ச்சனா” என்ற பிரசாந்திடம், “பிடிக்காமல் தான் நீங்க கட்டின தாலிய கழுத்துல வாங்கிட்டு இருக்காங்களா” என்றாள் அர்ச்சனா.
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அர்ச்சனா உன்னை பார்த்த அன்னைக்கே எனக்கு பிடிச்சிருச்சு நீ அவ்ளோ அழகு” என்று அவன் கூறிட, “அப்போ நான் அழகா இல்லனா நீங்க என்னை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டீங்களா?” என்றாள் அர்ச்சனா.
“நீ மட்டும் அழகில்லை உன்னோட கேரக்டரும் ரொம்ப அழகு அதனால தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன். இப்போ கல்யாணமும் பண்ணிக்கிட்டேன்” என்று சிரித்த பிரசாந்தின் கை அவளது கன்னத்தை தாங்கிப் பிடித்தது. “என்ன பண்றீங்க” என்ற அர்ச்சனாவிடம், “செல்லக் குட்டி நமக்கு கல்யாணம் ஆயிடுச்சு இன்னைக்கு நம்மளோட ஃபர்ஸ்ட் நைட் பொண்டாட்டி கிட்ட என்ன பண்ணுவார்களோ அதுதான் பண்ண போறேன்” என்று கூறி அவளது இதழில் தன் இதழை பதித்தான் பிரசாந்த்.
கணவன் அவனின் முதல் முத்தத்தில் உருகிப் போனாள் அர்ச்சனா. அவன் மெல்ல அவளை விடுவித்து அவள் கொண்டு வந்த பாலை எடுத்து அவளுக்கு புகட்டி விட்டு தானும் குடித்தான்.
அவளது கைவிரலை பிடித்து அதில் ஒரு மோதிரத்தை அணிவித்தான் பிரசாந்த். “இது நம்ம கல்யாணத்துக்கு என்னுடைய கிப்ட்” என்று அவன் கூறினான். அவனை அணைத்துக் கொண்டாள் அர்ச்சனா. மனைவி அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்த பிரசாந்த் அவளிடம் தன் தேடலை தொடங்க ஆரம்பித்தான். இரவு முழுவதும் மனைவி அவளை காதலால் பருகியவன் அதிகாலை நேரத்திலேயே அவளை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.
சில வருடங்களுக்கு பிறகு…
“இதோ பாருங்க சௌந்தரவள்ளி உங்க மகளுக்கு நீங்க மறு கல்யாணம் பண்ணி வச்சீங்க அப்படின்னா அது உங்க குடும்ப வழக்கம். அதுக்காக எங்க வீட்டு பொண்ணுங்களுக்கும் மறு கல்யாணம் பண்ணி வைக்க உங்க மருமகன் சொல்றது எந்த விதத்தில் நியாயம் இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை சொல்லிட்டேன் ஆமாம் என்று கோபமாக கூறி விட்டு அந்த பெண்மணி சென்றுவிட சௌந்திரவள்ளியோ தன் பேரக் குழந்தையை தொட்டில் ஆட்டிவிட்டு அமர்ந்திருந்தார். அந்த நேரம் கார்த்திகேயன் வீட்டிற்குள் வந்தான்.
( “மி பார்யா ஷெசதி நுவ்வு எப்புடனே வினவா அடேனு நின்னு என்டா பாகா அகர்சின்கடன்டே பாவா பாவா அனி பிழிச்சி நின்னு அகர்சின்காது”)
“உன் பொண்டாட்டி பண்ணுற எதையும் நீ கேட்கவே மாட்டியா. மயக்கி நல்லா பாவா பாவான்னு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டு உன்னை மயக்கி வச்சுருக்கா” என்றார் சௌந்திரவள்ளி.
“நேனு அடுகுட்டுன்னானு அம்மா நுவ்வு அம்மாயிக்கு ஏமி எண்டுக்கு செப்பாவு”
“நான் அவள் கிட்ட கேட்கிறேன் அம்மா நீங்க அவளை எதுவும் சொல்லலையே” என்றான் கார்த்திகேயன்.
“அன்டுகே மீ முசாலி ஸ்டிர் நேனு எடைனா செப்பனா அனி அடிகிட்டே நேனு வினானு”
அதானே அவளை நான் எதுவும் சொன்னேன்னான்னு கேள்வி கேட்ப ஆனால் அவளை கேட்க மாட்ட என்று முகத்தை வெட்டினார் சௌந்திரவள்ளி.
“மீ அம்மா எம்மன்னாரு பாவா” உங்க அம்மா என்ன சொன்னுச்சு பாவா என்றாள் தெய்வானை.
“அம்மா ஏமி செப்பினா நேனே னா உம்புடுகாட்டென்னா ஏ ப்ரஸ்னாலு அடகானு” அம்மா என்ன சொன்னால் என்னடி நான் என் மயக்கியை எந்த கேள்வியும் கேட்க மாட்டேன் என்ற கார்த்திகேயனை அணைத்தாள் தெய்வானை.
(“எண்டுக்கு பாவா ஆலா”) “ஏன் பாவா அப்படி” என்ற தெய்வானையின் கன்னத்தில் முத்தமிட்டவன் (“அன்டே நா ப்ரேமா”) அதெல்லாம் அப்படித் தான் டீ என் மயக்கி என்றான் கார்த்திகேயன்.
(“பாவா நுவ்வு 80ஸ்ல பிள்ளவி, நுவ்வு சைக்கிள் தொக்குட்டுன்னாவு காதா? நுவ்வு நானு நி சைக்கிள் மிடா பட்டணம் அன்டா டிஸுகேல்டாவு”)
” பாவா நீங்க 80ஸ் கிட் தானே. சைக்கிள் ஓட்டுவீங்க தானே என்னை உங்க சைக்கிளில் உட்கார வச்சு ஊரெல்லாம் சுத்தி காட்டுவீங்களா?” என்ற தெய்வானையை தன் மடியில் அமர வைத்தவன் (இதி என்டா வின்டா கொரிகா சொடாரா, நின்று புல்லட் லோ வெசி நகரம் கூட்டு திப்புட்டானு, நாகு சைக்கிள் வாடு) ” இது என்னடி விபரீத ஆசை பாவா உன்னை புல்லட்ல வச்சு ஊரையே சுத்துறேன் சைக்கிள் மட்டும் வேண்டாமே? ” என்றான் கார்த்திகேயன்.
(“அன்டே காது பாவா, நுவ்வு நானு சைக்கிள் மிடா திஸுகே அலி அன்டே”)”அதெல்லாம் இல்லை பாவா என்னை நீங்க சைக்கிளில் கூட்டிட்டு போக தான் வேண்டும் என்று பிடிவாதமாக கூறினாள் தெய்வானை.
பிறகு என்ன அவளை முன்னே அமர வைத்து சைக்கிளில் ஊர்வலம் தான்…
…. முற்றும் ….