மயக்கியே என் அரசியே…(7)

4.7
(10)

அத்தியாயம் 7

 

“என்னடீ தூங்காமல் என்ன பண்ணுற” என்று வந்த அருணாவிடம், “எப்படி வதனை தூக்கம் வரும் எனக்கு தான் குடுப்பினை இல்லாமல் போச்சு என் அண்ணன் பொண்ணு வைஷ்ணவியை உங்க தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைப்பீங்கனு பார்த்தால் எவளோ தெய்வானையாம் தெய்வானை” என்று பற்களைக் கடித்தாள் பவித்ரா.

 

“என்னால முடிஞ்ச அளவுக்கு இந்த கல்யாணம் நடக்காமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தும் கல்யாணம் நடந்துருச்சு ஆனால் அதை நினைச்சு பயப்படுற அளவுக்கு ஒன்றும் இல்லை. அந்த தெய்வானை இதுவரை கார்த்தி கிட்ட ஒரு வார்த்தை கூட ஃபோனில் பேச வில்லை. நேரிலையும் தனியா பேசியதில்லை. இவங்க ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு வாழ்க்கையை ஆரம்பிக்கிறதுக்குள்ள அந்த வீட்டில் இல்லாத குட்டி கலாட்டா எல்லாம் பண்ணி அவளை ஹைதராபாத்துக்கே ஓட வச்சுடுறேன்.

 

அவனை முதல் தாரமா கல்யாணம் பண்ணினால் தானே நீ செத்துப் போவ இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணினால் உனக்கு ஒன்னும் ஆகாது அதனால் கவலைப் படாமல் தூங்கு” என்றாள் அருணா தேவி.

 

“இல்லை வதனை இது சரியா வருமா என் அண்ணனே நமக்கு எதிராக நிற்பாரு” என்ற பவித்ராவிடம், “அந்த ஆளை அண்ணன்னு சொல்லாதே டீ கூடப் பிறந்த தங்கச்சி உன்னோட ஆசை என் தம்பியை கல்யாணம் பண்ணிக்கிறது. அதை தடுத்தாரு ஜாதகம் பொருந்தவில்லைனு, அப்பறம் பெத்த பொண்ணு வைஷ்ணவியை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சேன் அதையும் தடுத்து இன்னைக்கு எவளோ குத்துச்சண்டை காரி வந்து கும்மாளம் போட போகிறாள்” என்று நொந்து கொண்டாள் அருணா.

 

“என்ன டீ இங்கே இரண்டு பேரும் தூங்காமல் யார் குடியை கெடுக்க திட்டம் போட்டுட்டு இருக்கீங்க” என்று வந்தார் அருணாவின் மாமியார் மீனாட்சி.

 

“அது ஒன்னும் இல்லை அத்தகாரு சும்மா தான் பேசிட்டு இருந்தோம்” என்று பம்மினாள் அருணா. “நீ பம்மும் போதே தெரியும் இரண்டு பேரும் சேர்ந்து கார்த்தி வாழ்க்கையை அழிக்க தான் சதி பண்ணுறீங்கனு” என்ற மீனாட்சி , “பவித்ரா உள்ளே போடீ” என்று மகளை விரட்டி விட்டு மருமகளிடம் திரும்பினார்.

 

“இதோ பாரு அருணா அவளோட அகம்பாவத்தால தான் இன்னைக்கு தனியா நிற்கிறாள். அவளோட அகம்பாவத்திற்கு தூபம் போடாதே‌” என்று கூறிய மீனாட்சி, “கார்த்தி உன் கூடப் பிறந்த தம்பி அவனுக்கு துரோகம் நினைக்க உனக்குலாம் எப்படித் தான் மனசு வருதோ” என்று கூறி விட்டு சென்று விட்டார்.

 

 

தன் அறையில் இருந்த கடவுளின் முன் நின்ற அர்ச்சனா, “கடவுளே என் வாழ்க்கை தான் பதினைந்து வயசுலையே பட்டுப் போச்சு என் அண்ணையா, வதனை இரண்டு பேரும் நூறு வருசத்துக்கு சந்தோசமா வாழனும்” என்று வேண்டிக் கொண்டு படுத்து உறங்கினாள்.

 

 

“என்ன வள்ளி தூங்காமல் என்ன பண்ணுற” என்று கேட்டார் சிவநேசன். “நம்ம சின்னவளை பத்தி தான் கவலைப் படுறேன் பாவா” என்றார் சௌந்திரவள்ளி. “நம்ம காலத்துக்கு பிறகு நம்ம மருமகள் அவளை நல்லா பார்த்துப்பாளா, வந்திருக்கிற மருமகள் எப்படிப் பட்ட பொண்ணுன்னு தெரியலை. பார்வைக்கு நல்லவளா தான் தெரிகிறாள். இருந்தாலும் மனசு கிடந்து அடிச்சுக்குது பாவா” என்று வருந்தினார் சௌந்திரவள்ளி.

 

“நீ கவலைப் பட எதுவும் இல்லை வள்ளி நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற மருமகள் நம்ம வீட்டோட லட்சுமி அதை போக போக நீயே புரிஞ்சுக்குவ. அது மட்டும் இல்லை நம்ம மகன் எப்பவுமே அர்ச்சனாவை கை விட மாட்டான் எதையும் யோசிக்காமல் தூங்கு” என்று கூறி விட்டு தூங்க ஆரம்பித்தார் சிவநேசன்.

 

அதிகாலை நேரம் சேவல் கூவியதும் உறக்கம் கலைந்து மங்கை அவளோ மெல்ல கண் விழிக்க தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்த அவளது கணவனைப் பார்த்தாள்.

 

அவனது தலைமுடியை கோதி விட்டு மெல்ல அவனை தன்னிடம் இருந்து பிரித்து அவள் எழ முயல அவளது கையை பிடித்து தன் பக்கமாக இழுத்தவன் “எங்கே போற தெய்வானை இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு” என்றான்.

 

“ஏமி பாவா பொழுது விடியப் போகுது காலையில் சீக்கிரம் எழுந்திருக்கனும்னு அம்மா சொல்லி இருக்காங்க” என்று கூறினாள் தெய்வானை.

 

அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் “இன்னைக்கு நீ வேலை பார்க்க வில்லைனு யாரும் சொல்ல மாட்டாங்க அதனால் என் கூடவே இரு” என்று அவளிடம் தன் தேடலை தொடங்க ஆரம்பித்தான் கார்த்திகேயன்.

 

 

“காலையிலேயே வெந்நீர் எல்லாம் போட்டுட்டு இருக்க ‌போல” என்று வந்த அருணாவிடம், “தெய்வானை குளிக்க தான் டீ. உன் கல்யாணம் முடிஞ்ச மறுநாள் உன் மாமியார் உனக்கு வெந்நீர் வச்சு தரலையா அது போல தான்” என்றார் சௌந்திரவள்ளி.

 

“பாவா விடிஞ்சுருச்சு இப்போவாச்சும் எழுந்துக்கவா” என்று தெய்வானை கெஞ்சிட, அவளைப் பார்த்து புன்னகைத்தவன் “சரி” என்றிட எழுந்தவள் தன் உடையை அணிந்து கொண்டு குளியலறைக்கு செல்ல “தெய்வானை” என்று சௌந்திரவள்ளி அழைத்தார்.

 

வீடு பெரியதாக இருந்தாலும் குளியலறை , கழிவறை எல்லாம் வெளியில் தான். அட்டாச் பாத்ரூம் எதுவும் கிடையாது.

 

“சொல்லுங்க அத்தைம்மா” என்ற மருமகளின் சிரித்த முகத்தை பார்த்து விட்டு, “பாத்ரூம்ல வெந்நீர் எடுத்து வச்சுருக்கேன் குளிச்சுட்டு வா” என்று கூறினார். அவளும் அழகாக அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

இன்னொரு குளியலறையில் கார்த்திகேயனும் குளிக்கச் சென்றான்.

 

காலையிலேயே மருமகளுக்கு விருந்து சமைத்து வைத்தார் சௌந்திரவள்ளி. இட்லி, வடை , பொங்கல் என பரிமாறினார் சௌந்திரவள்ளி. “அத்தைம்மா எதற்கு இவ்வளவு” என்ற தெய்வானையிடம், “நல்லா சாப்பிடு தங்கம்” என்று மருமகளுக்கு உணவினை பரிமாறினார் சௌந்திரவள்ளி.

 

 

அதைக் கண்ட அருணாவிற்கு தான் காது மூக்கு எல்லாம் புகை வந்தது.

 

“மயக்கி மயக்கி அத்தைம்மா, அத்தைம்மானு மயக்குறா பாரு” என்று முணுமுணுத்துக் கொண்டு ஓரமாக நின்றாள் அருணா.

 

“மாவய்யா நீங்க சாப்பிடலையா” என்ற தெய்வானையிடம், “நீ சாப்பிடு தெய்வானை நான் சாப்பிட நேரம் ஆகும்” என்று கூறிய சிவநேசனிடம், “நீங்களும் வாங்க மாவய்யா” என்று தன் மாமனாரை அமர வைத்து அவள் பரிமாற ஆரம்பிக்க, “பாதி சாப்பாட்டில் எழக் கூடாது தெய்வானை நீ சாப்பிடு உன் மாவய்யாவுக்கு நான் பரிமாறுகிறேன்” என்று சௌந்திரவள்ளி அவளை சாப்பிட வைத்தார்.

 

அந்த வீட்டில் எல்லாமே அவளுக்கு பிடித்திருந்தது. ஒன்றைத் தவிர. அர்ச்சனா தன் அறையில் இருந்து வெளியே வரவே இல்லை. இதுவரை அவளை தெய்வானை பார்க்கவும் இல்லை. அது தான் உறுத்தலாக இருந்தது.

 

கார்த்திகேயன் மனைவியை கோவிலுக்கு அழைத்துக் கொண்டு சென்றான்.

 

“பாவா” என்று அவள் அழைத்திட, “என்ன தெய்வானை” என்றான் கார்த்திகேயன். “தெய்வானை இல்லை தெய்வா” என்றாள் அவள்.

 

அவன் புன்னகைத்து விட்டு, “உத்தரவு மகாராணி” என்று கூறிட அவள் சிரித்து விட்டு சாமி கும்பிட ஆரம்பித்தாள்.

 

“(ஏமி பாவா கோட்டா பெல்லி குட்டுரு கூட குடுகி வெல்டுன்டா?) புதுப் பொண்டாட்டி கூட கோவிலுக்கு விஜயமா?” என்றாள் பவித்ரா.

 

அவளை முறைத்த கார்த்திகேயன், “தெய்வா

(மனாம் பயலுடேருடாமா?) கிளம்பலாமா?” என்றிட ஏமி பாவா வரு எவுரு? என்றாள் பவித்ராவை பார்த்து.

 

(நுவ்வு பாவாக்கு மாஜி ப்ரியுராலு) உன் பாவாவோட முன்னாள் காதலி என்றாள் பவித்ரா. ஓ அப்படியா ரொம்ப சந்தோஷம் உங்களை பார்த்ததில் (ஓ நின்னு குடட்டும் என்ன பாகன்டி) என்று தெய்வானை கூறிட கடுப்பாகினாள் பவித்ரா.

 

தெய்வா கிளம்பலாம் என்று அவன் மனைவியை இழுத்திட ஒக்கே நிமிசம் பாவா என்றவள் “(நீ பேரு எமுட்டி?) உங்க பெயர் என்ன?” என்றாள்.

 

பவித்ரா என்றாள் அவள். “பவித்ரா என் பாவாவை நீங்க காதலிச்சு இருக்கலாம், ஏன் அவரு கூட உங்களை காதலிச்சு இருக்கலாம் அதெல்லாம் இறந்த காலம் முடிஞ்ச போன பழைய கதை. அதைப் பற்றி பேசி என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை அதனால் பழைய விசயத்தை எல்லாம் மறந்துருங்க. இப்போ என் பாவாவுக்கு பொண்டாட்டி நான் வந்துட்டேன் அதனால் நீங்க என்னை வெறுப்பேத்த அடிக்கடி வந்து பாவா உங்களுக்கு இது தானே பிடிக்கும், அது தானே பிடிக்கும் அப்படி இப்படினு எங்க வீட்டுக்கு வந்து என் பாவாவை பற்றி எல்லாமே தெரிஞ்சவங்க மாதிரி என் முன்னாடி சீன் எல்லாம் போட வேண்டாம். நீங்க சீன் போட்டாலும் வேஸ்ட் தான் நான் ரியாக்ட் பண்ண மாட்டேன் அது வேற விஷயம் இருந்தாலும் என்னை வெறுப்பேத்த நினைத்து நீங்க ஏமாந்து போக கூடாது பாருங்க அதான் முன்னமே சொல்லுறேன்” என்று கூறி விட்டு , “பாவா போகலாம்” என்று கணவனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு நடந்தாள் பவித்ரா.

 

“அவள் இப்படி எல்லாம் பண்ணுவாள்னு உனக்கு தெரியுமா” என்ற கார்த்திகேயனிடம், “எத்தனை சீரியல் பார்த்திருக்கோம். ஹீரோவோட எக்ஸ்க்கு இதை தவிர வேற வேலையே கிடையாது பாவா அதான் நம்ம லைஃப்ல அந்த கதையெல்லாம் வேண்டாம்னு அவங்க கிட்ட முன்னமே சொல்லி வச்சுட்டேன்” என்று சிரித்தாள் தெய்வானை.

 

“அவள் என் முன்னால் காதலி கிடையாது” என்ற கார்த்திகேயனிடம், “அதைப் பற்றி நான் எந்த தன்னிலை விளக்கமும் உங்க கிட்ட கேட்கவில்லை பாவா உங்களை அந்த பொண்ணு கூட சேர்த்து வைத்து சந்தேகப்படுற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை பாவா” என்றவள் , “பாவா ஐஸ் வண்டி போகுது எனக்கு சேமியா ஐஸ் வாங்கித் தாங்க” என்றாள் குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு.

 

“சேமியா ஐஸா” என்ற கார்த்திகேயனிடம், “ஆமாம் பாவா ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சிட அவனும் வாங்கிக் கொடுத்தான். “நீங்களும் சாப்பிடுங்க பாவா” என்று அவனுக்கு அவள் ஊட்டி விட ஒரு வாய் கடித்து விட்டு , “எனக்கு போதும் தெய்வா” என்றான். அவளோ சிரித்து விட்டு ஐஸை சாப்பிட பவித்ரா தான் வெந்து நொந்து போனாள்.

 

“இவள் என்ன பாப்பாவா இப்போ தான் ஐஸ் கிரீம் கேட்டு அடம் பிடிக்கிறாள். அவரும் வாங்கிக் கொடுக்கிறாரு” என்று முணங்கி விட்டு சென்று விட்டாள்.

 

“ஏமி பவித்ரா கோவமா இருக்க” என்ற அருணாவிடம் , “உங்க தம்பி பொண்டாட்டி என்ன பாப்பாவா” என்று கோவிலில் நடந்த அனைத்தையும் கூறினாள் பவித்ரா.

 

 

(…. மயக்கியே..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!