மயக்கியே என் அரசியே…(9)

4.8
(6)

அத்தியாயம் 9

 

விடாமல் ஃபோன் இசைத்திட அதை அட்டன் செய்தாள் அர்ச்சனா. “ஹலோ” என்ற குரலை வைத்தே அது தன் தங்கை இல்லை என்று உணர்ந்தவன் “ஹலோ தெய்வானை இல்லையா?” என்றான். “நீங்க” என்ற அர்ச்சனாவிடம், “நான் பிரசாந்த் தெய்வானையோட அண்ணையா” என்றான் பிரசாந்த். “வதனை அண்ணையா கூட கோவிலுக்கு போயிருக்காங்க வந்ததும் பேச சொல்லுறேன்” என்று கூறி விட்டு ஃபோனை வைத்தாள் அர்ச்சனா.

 

 

“என்ன பிரசாந்த் உன் தங்கச்சி என்ன சொல்லுறாள்” என்ற கலா ராணியிடம், “ஃபோனை எடுத்தது அர்ச்சனா” என்றான் பிரசாந்த்.

 

“அந்த பொண்ணு முகத்தை கூட‌ நான் பார்த்ததில்லை” என்று கலாராணி கூறிட, “நான் பார்த்திருக்கிறேன்மா பாவாவை பார்க்க போனப்ப” என்ற பிரசாந்த் , “அந்த பொண்ணுக்கு நம்ம தெய்வாவை விட இரண்டு வயசு தான் அதிகம் இருக்கும் இந்த வயசுலையே வாழ்க்கையை இழந்து அந்த வீட்டில் ஒரு மூலையில் உட்கார்ந்து இருக்கு பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சுமா” என்றான் பிரசாந்த்.

 

“ரொம்ப கஷ்டம் தான் பிரசாந்த் இந்த சின்ன வயசுல கணவனை இழந்துட்டு வாழ்க்கையை தொலைச்சுட்டு அந்த பொண்ணோட மிச்ச வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் எதுவும் புரியவில்லை. அந்த ஊரில் மறுமணம் செய்து வைக்கவும் மாட்டாங்களாம்” என்று வருந்தினார் கலாராணி.

 

“சரி விடு எல்லாம் கடவுள் பார்த்துப்பாரு” என்ற கலா ராணி , “நாளைக்கு என் மகளும், மருமகனும் வரப் போறாங்க அவங்களுக்கு விருந்து வைக்க ஏற்பாடு பண்ணனும். தலைக்கு மேலே வேலை இருக்கு” என்று கூறிய கலா ராணி சென்று விட பிரசாந்த் யோசனையுடன் அமர்ந்தான்.

 

 

“வதனை” என்று அர்ச்சனா அழைத்திட, “சொல்லுங்க அர்ச்சனா” என்றாள் தெய்வானை. “உங்கள் ஃபோன் ரொம்ப நேரமா அடிச்சுட்டே இருந்துச்சு அதை அட்டன் செய்து பேசினேன். உங்க அண்ணையா தான் அடிச்சாங்க” என்றாள் அர்ச்சனா.

 

“சரி நான் பேசிக்கிறேன் அர்ச்சனா தேங்க்ஸ்” என்ற தெய்வானை சென்று விட்டாள்.

 

“பாவா” என்ற தெய்வானையிடம், “ஏமி தெய்வா” என்றான் கார்த்திகேயன். அவனை மெத்தையில் அமர வைத்தவள் அவன் மடி மீது அமர்ந்து கொண்டு அவனது கழுத்தில் தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டாள்.

 

“என்ன தெய்வா இது பட்ட பகலில்” என்றவனை முறைத்தவள் , “நுவ்வு நா பாவா பட்ட பகலு நின்னு நா ப்ரேமலு படேலோ செஸ்டானு நானு எவுரு ப்ரஸ்நிஸ்டாரு? (நீங்க என்னோட பாவா. பட்டப் பகலில் நாம் காதல் செய்தால் யாரு கேள்வி கேட்பாங்க?)” என்றாள் தெய்வானை.

 

“சரி செப்பு ஏமி விஷயம்” என்றான் கார்த்திகேயன். அவனது சட்டை பட்டனை திருகிக் கொண்டே, “பாவா நாம ஹைதராபாத் போகிறோமே நம்ம கூட அர்ச்சனாவை அழைச்சிட்டு போகலாமா?” என்றாள் தெய்வானை.

 

“அம்மா ஒத்துக்க மாட்டாங்க தெய்வா” என்ற கார்த்திகேயனிடம், “ப்ளீஸ் பாவா” என்று அவள் கெஞ்சினாள். “தெய்வா நான் சொல்லுவதை கேளு கண்டிப்பா ஒருநாள் அர்ச்சனாவை உன் இஷ்டப்படி எங்கே வேண்டுமானாலும் கூட்டிட்டு போக நான் ஏற்பாடு செய்கிறேன் ஆனால் இப்போ வேண்டாம் அம்மா ஏதாவது சொல்லி அவளோட மனசை தான் காயப்படுத்துவாங்க அதனால தான் சொல்கிறேன் புரிஞ்சுக்கோ அம்மாயி” என்று அவன் கூறிட அவளோ சரியென்று தலையை ஆட்டினாள்.

 

“என்ன தெய்வா நீ சந்தோசமா சிரிச்சுட்டே சரின்னு சொல்லு” என்று அவன் அவளது முக வாயில் கை வைத்து கேட்டிட அவளும் புன்னகைத்து விட்டு , “சரிங்க பாவா” என்று கூறினாள்.

 

“செல்லக் குட்டி” என்று அவளை கொஞ்சி விட்டு, “சரி நான் கோழிப்பண்ணைக்கு போயாகனும் அங்கே ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுவேன் நீ ஊருக்கு போக எல்லாம் பேக் பண்ணி ரெடியாக இரு” என்றான் கார்த்திகேயன்.

 

அவளும் , “சரிங்க பாவா” என்று புன்னகையுடன் அவனை அனுப்பி வைத்தாள்.

 

“ஏமி வதனை ஒரே யோசனையா இருக்கீங்க” என்று வந்தாள் பவித்ரா. “அந்த தெய்வானை இன்னைக்கு ராத்திரி நா தம்புடு கூட ஹைதராபாத் வெல்லுனாடு அதான் அதில் எதுவும் சிக்கல் செய்யகலாருனு ஆலோசிஸ்டுனானு” என்றாள் அருணா தேவி.

 

“யோசிங்க ,யோசிங்க” என்ற பவித்ரா, “வதனை பேசாமல் அர்ச்சனாவை அவங்க கூட விருந்துக்கு அனுப்பினாள் என்ன?” என்றாள் பவித்ரா.

 

“ஏமி செப்பன்டி” என்று அதிர்ந்த அருணா விடம், “ஆமாம் வதனை அர்ச்சனாவை அவங்க கூட அனுப்பி வைத்தால் அவளோட வீட்டில் அபசகுணம் பிடிச்ச மாதிரி இவளை ஏன் கூட்டிட்டு வந்திருக்கீங்கனு எதுனாலும் சொல்லுவாங்க அதை வச்சே ஒரு பிரச்சினையை உருவாக்கிட்டால் போச்சு” என்றாள் பவித்ரா.

 

“அர்ச்சனாவை அவங்க ஏதாவது சொன்னாலும் அவள் அதை பெரிசா எடுத்துக்க மாட்டாள்” என்ற அருணாவிடம், “அவள் மட்டும் அவங்க கூட போனால் தானே கூடவே நீங்களும் போனால் கண்டிப்பா பிரச்சினை பெருசாகும் அதை வைத்து அந்த தெய்வானையை விரட்டி அடிக்கலாமே என்ன சொல்லுறீங்க” என்றாள் பவித்ரா. “யோசனை நல்லா தான் இருக்கு ஆனால் நான் போக உன் அண்ணையா அனுமதிக்க மாட்டாரு” என்ற அருணா , “பேசாமல் வைஷ்ணவியை அனுப்பலாமா அவள் அங்கே என்ன நடந்துச்சுன்னு நம்ம கிட்ட சொல்லுவாள் அதை வச்சு பிரச்சினை பண்ணலாம்” என்று கூறிய அருணா விடம், “சூப்பர் யோசனை வதனை” என்றாள் பவித்ரா. “சரி, சரி வைஷ்ணவியை கிளம்பி ரெடியா இருக்க சொல்லு நான் என் நைனா வீட்டுக்கு போயிட்டு வரேன்” என்றாள் அருணா தேவி.

 

“ஏமிமா தம்புடு கிளம்பிட்டானா?” என்று வந்த அருணாவிடம் , நுவ்வு தம்புடு கோழிப் பண்ணைக்கு வெல்லனாடு வந்த பிறகு தான் கிளம்பனும்” என்ற சௌந்திரவள்ளியிடம், “தம்புடு , தெய்வானை மட்டும் எப்படி விருந்துக்கு போவாங்க நானோ,‌ அர்ச்சனாவோ கூடப் போகனுமே” என்ற அருணா விடம் , “நீ கூட போயிட்டு வா அருணா” என்றார் சௌந்திரவள்ளி.

 

“நானா நான் போக முடியாது எனக்கு வேலை இருக்கு அர்ச்சனாவை அனுப்பி வைங்க” என்று அருணா கூறிட , “உனக்கு அறிவு இருக்காடீ அர்ச்சனாவை எப்படி அவங்க கூட அனுப்பி வைக்க முடியும்” என்று கத்தினார் சௌந்திரவள்ளி.

 

“உன் மருமகளுக்கு தான் சகுனம் பார்ப்பது பிடிக்காதே அதெல்லாம் வெளி வேஷம் தானோ” என்று அருணா கூறிட, “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லையே வதனை அர்ச்சனாவை எங்க கூட கூட்டிட்டு போக தான் நானே விருப்பப்படுறேன் அத்தைம்மா சம்மதம் சொன்னால் கண்டிப்பா அர்ச்சனாவை எங்க கூட ஹைதராபாத் அழைச்சிட்டு போவேன்” என்றாள் தெய்வானை.

 

“அத்தைம்மா ப்ளீஸ் என் கூட அர்ச்சனாவை அனுப்பி வைங்க பத்திரமா பார்த்துப்பேன்” என்றாள் தெய்வானை.

 

“தெய்வானை அது இல்லைம்மா” என்ற சௌந்திரவள்ளி ஏதோ சொல்ல வர , “அத்தைம்மா ப்ளீஸ்” என்று அவள் கெஞ்சிட, “சரி உன் இஷ்டம் ஆனால் அர்ச்சனா வர சம்மதிக்கனுமே” என்றார் சௌந்திரவள்ளி.

 

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன் அத்தைம்மா என்ற தெய்வானை” தன் மாமியாரைக் கட்டிக் கொண்டு, “தேங்க்ஸ் அத்தைம்மா” என்றாள். அவளது நெற்றியில் முத்தமிட்ட சௌந்திரவள்ளி , “உன் சந்தோஷம் தான் தெய்வானை முக்கியம்” என்று கூறிட அருணாவிற்கு தான் வயிற்றில் அமிலம் சுரந்தது.

 

“ஏமி தெய்வா நா அம்மா உனக்கு முத்தம் எல்லாம் கொடுக்கிறாங்க” என்று வீட்டிற்குள் நுழைந்தான் கார்த்திகேயன். “பாவா அத்தைம்மா நம்ம கூட அர்ச்சனாவை அழைச்சிட்டு போக சம்மதம் சொல்லிட்டாங்க” என்றாள் தெய்வானை.

 

“நிஜமாவா” என்ற கார்த்திகேயனிடம் “சத்தியமா பாவா” என்று அவள் கூறிட , “சரி சரி நீ தயாராகு” என்று கூறிய கார்த்திகேயன் , “தன் அன்னையிடம் நிஜமாகவே அர்ச்சனாவை நாங்க அழைச்சிட்டு போகட்டுமா அம்மா” என்றான் கார்த்திகேயன்.

 

“அதான் உன் பொண்டாட்டி அத்தைம்மா அத்தைம்மானு அவங்களை மயக்கி சம்மதம் வாங்கிட்டாளே அப்பறம் என்ன” என்ற அருணா, “மூன்று பேரா போக கூடாது அதனால் உங்க கூட வைஷ்ணவியையும் அழைச்சிட்டு போங்க” என்று கூறி விட்டு தன் வீட்டிற்கு கிளம்பினாள்.

 

 

“நான் எங்கேயும் போக மாட்டேன் அம்மா” என்று அர்ச்சனா கூறிட , “உன் வதனையோட ஆசை அர்ச்சு உன்னை ஹைதராபாத் அழைச்சிட்டு போறது” என்று சிவநேசன் கூறிட, “நைனா அண்ணையா, வதனை இரண்டு பேரும் சந்தோஷமா விருந்துக்கு போறாங்க அபசகுணம் போல நான் ஏன் கூடப் போகனும்” என்று அர்ச்சனா கேட்டிட, “என்ன பேசுறீங்க அர்ச்சனா நீங்க போயி அபசகுணமா. உங்க அண்ணையாவும், நானும் சந்தோஷமா வாழனும்னு மனசார நினைக்கிறீங்க நீங்க எப்படி அபசகுணமாக முடியும் இப்படி எல்லாம் முட்டாள்தனமா பேசுவதை நிறுத்துங்க நீங்க எங்க கூட வரணும். வந்தால் தான் நானும், பாவாவும் விருந்துக்கு போவோம்” என்றாள் தெய்வானை.

 

“வதனை” என்று அர்ச்சனா ஏதோ சொல்ல வர, “கிளம்புங்க அர்ச்சனா இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பனும்” என்று கூறிய தெய்வானை சென்று விட அர்ச்சனா

தன் சகோதரனை பார்த்தாள்.

 

அவனும் அவளை கிளம்ப சொல்ல வேறு வழி இல்லாமல் அவளும் கிளம்ப ஆரம்பித்தாள்.

 

“ஏமி வதனை நகத்தை கடிச்சுட்டு இருக்கீங்க” என்று வந்தாள் பவித்ரா. “அந்த மயக்கி நல்லா என் அம்மா, நைனா, தம்புடு எல்லோரையும் மயக்கி வச்சுருக்கா நான் போயி அர்ச்சனாவை அனுப்புங்கனு சொன்னப்ப மறுத்தாங்க அந்த மயக்கி அத்தைம்மானு கூப்பிட்டதும் உடனே அர்ச்சனாவை அனுப்பி வைக்க சம்மதம் சொல்லிட்டாங்க எனக்கு கோபமா வருது” என்றாள் அருணா தேவி.

 

“விடுங்க வதனை அவள் நமக்கு தான் நல்லது பண்ணி இருக்கிறாள் அர்ச்சனாவை அவளோட அம்மா கண்டிப்பா எதுனாலும் சொல்லுவாங்க அதை வச்சே நாம‌ ஒரு பிரச்சினையை கிளம்பலாம்” என்று பவித்ரா கூறிட அருணாவும் அதை ஒப்புக் கொண்டாள்.

 

“என் அக்கா சொல்லுறது போல நீ மயக்கி தான் டீ என் அம்மாவை எப்படி சம்மதிக்க வச்ச” என்ற கார்த்திகேயனிடம் , “பாவா தெய்வா ஒரு விஷயம் நடக்கனும்னு நினைச்சா அது கண்டிப்பா நடக்கும்” என்றவள், “சரி கிளம்பலாமா?” என்றிட அவளை தன்னருகே இழுத்தவன் அவளது கன்னத்தில் முத்தமிட ஏமி பாவா இது கிளம்புற நேரத்தில் என்றாள் தெய்வானை.

 

“காரில் நாம‌ என்ன தனியாவா போகிறோம் அப்போ, அப்போ குட்டி குட்டியா ரொமான்ஸ் பண்ணிக்க அதான் கிடைச்ச கேப்ல என் தெய்வாவுக்கு முத்தம் கொடுத்தேன், தப்பா?” என்றான் கார்த்திகேயன்.

 

“தப்பு லேது பாவா வெல்லன்டி” என்று அவள் கூறிட , “ஹான் வெல்லன்டி வெல்லன்டி” என்று அவளுடன் கிளம்பினான்.

 

 

(…மயக்கியே)

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!