மான்ஸ்டர்-11

4.8
(12)

அத்தியாயம்-11

மார்ட்டின் தன் நெஞ்சில் பூப்போல வந்து மோதி நின்ற பெண்ணை கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்மார்ட்டின் வழக்கம் போல அந்த வார இறுதியில் தன்னுடைய பப்பிற்கு வந்தவன் முழுதாக குடித்துவிட்டு தன்னுடைய பிஏ கபீரிடம் சில வேலைகளை ஒப்படைத்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்புவதற்காக தள்ளாடிக்கொண்டே அந்த வராண்டாவில் வந்து கொண்டிருக்க…

அப்போதுதான் அவன் மீது பூப்போல வந்து மோதினாள் அந்த பெண்ணவள்அவன் மீது மோதிய வேகத்திற்கு தன்னை சமாளிக்க முடியாதவளோ அப்படியே தரையில் விழுந்து விடமார்ட்டினோ கொஞ்சம் தள்ளாடியவன் தன்னை சமாளித்தவாறே நிற்க… தன் நெஞ்சில் ஏதோ குறுக்குறுக்க… சட்டென்று அவன் கண்கள் கீழே விழுந்தவளையே விரித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒருவிதம் மயக்கம் இருந்தது.. ஏதோ புதுவித உணர்வின் தாக்கத்தில் அவன் முகம் சிவந்து போயிருந்தது..

அவனின் கைகளோ அந்த பெண் மோதிய தன்னுடைய நெஞ்சையே வருடிக் கொண்டிருக்கஆனால் அவளோ அதனை கவனிக்கும் சூழ்நிலையில் எல்லாம் இல்லைஅவளின் கண்களோ அந்த ஆடவனை நிமிர்ந்து பார்த்து மிரட்சியுடன் பின் தனக்கு பின்னால் திரும்பிப் பார்க்கஅங்கோ அவளை துரத்தி வந்து கொண்டிருந்த அந்த மூவருமே அவளைத்தான் விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தனர்…

ம்ச் என்னடா பாக்குறீங்க.. டேய் போய் தூங்குங்க டா…” என்று ஒருவன் அதட்டலாக கட்டளையிடஅதனைக் கேட்ட மற்ற இருவரும் வேகமாக அவளின் அருகில் நெருங்க பார்க்க… பெண்ணவளோ அவர்களின் முயற்சியில் பயந்தவள் வேகமாக எழுந்தவள் ஓடிப்போய் மார்ட்டினின் பின்னால் போய் ஒளிந்து கொண்டாள்.

மார்ட்டினோ அவளது செயலை தலையை மட்டும் திருப்பி கூர்மையான பார்வையுடன் தன்னுடைய கருப்பு நிற கோட்டை விரல்களால் பிடித்து இழுத்தவாறே தனக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டு நிற்கும் பெண்ணவளையே திரும்பி ஒரு பார்வை பார்த்தவனுக்கு உடல் எல்லாம் ஏதோ சில்லென்று உணர்வாக இருந்தது.. இது அனைத்துமே புது உணர்வு தான் அவனுக்கு தோன்றியதுஇதற்கு முன்னால் இப்படிப்பட்ட ஒரு உணர்வினை அவன் அனுபவித்ததே கிடையாது..

ஏதோ உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை சுள்ளென்ற உணர்வு ஏறிக்கொண்டிருந்ததுஅதுவும் சிறிது நேரத்திற்கு முன்பு தன் இரும்பு நெஞ்சத்தில் வந்து மோதிய பெண்ணவளின் மென்மையான பாகங்கள் அவனுக்கு ஒரு வித கிறக்கத்தை தான் ஏற்படுத்தியதுஇது இதற்கு முன்பு வரை கூட அப்படி என்னதான் இருக்கோஇப்படி உரசிக்கிட்டு ஆடுறாங்களோ அப்படி அதுல என்னதான்டா இருக்கும்…” என்று தன்னுடைய பிஏவிடம் கேட்டு விட்டு வந்தவனுக்கு இப்போது பெண்ணவள் தன் மீது மோதியதிலிருந்து அந்த உணர்வுகள் அவனுக்கு புதிதாகத்தான் தெரிந்தது

அவனுக்கு கண்டிப்பாக புதிதாக தான் தெரியும் ஏனென்றால் இதற்கு முன்பு மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காமல் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இதற்கு முன்பு எந்த ஒரு சபலத்தாலும் எந்த ஒரு பெண்ணையும் நெருங்காதவனுக்கு இந்த சிறு பெண்ணவள் மோதல் ஒருவித கிறகத்தையும், புத்துணர்வையும் தான் கொடுத்ததுஆனால் அதனை முகத்தில் காட்ட அவன் ஒன்னும் சாதாரண மனிதன் அல்லவே… தன் இரும்பு கைகளை மடக்கியவாறு அப்படியே நின்றவன் அவனை நோக்கி வரும் இருவரையும் வெறிகொண்டு முறைக்க…

அப்போதுதான் அவர்கள் அவனது முகத்தையே தெளிவாக பார்த்தனர்…. அந்த ஹோட்டலின் காரிடார் முழுவதும் இருட்டாகவே இருக்க.. இதற்கு முன்பு அவர்கள் மார்ட்டினை பார்த்திருப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் தான் இருந்ததுஆனால் இப்போது நன்றாக மார்ட்டினின் முகம் தெரியஅந்த இருவருக்கும் அவனை பார்த்த வேகத்திற்கு உடல் தடதடக்க ஆரம்பித்துவிட்டது

மார்ட்டினை பற்றி தெரியாதவர்கள் அந்த மும்பையில் இருப்பார்களா என்ன… அந்த மும்பையை பாதியை ஆட்சி செய்வதே அவன் தானே.. அதனால் இருவரும் அவனை பார்த்த வேகத்திற்கு கிடுகிடுவென்று ஆடிக் கொண்டிருக்க..

ம்ச் டேய் என்னடா வந்த வேலைய முடிக்காம இப்படி நின்னுகிட்டு இருக்கீங்க… போய் அவள இழுத்துட்டு வாங்கடா…” என்று பின்னால் இருந்து ஒருவன் கத்தஅவனுக்கு கண்டிப்பாக மார்ட்டினின் முகம் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பே இல்லைசட்டெப்று இருவரும் திரும்பி அவனை முறைத்து பார்த்தவர்கள்… “இங்க வந்து பாருடா யாருன்னு…” என்று கத்த..

ம்ச் அப்படி யார்ரா அது..”என்று வேகமாக வந்தவனுக்கு மார்ட்டினை கண்டிப்பாக எதிர்ப்பார்க்கவே இல்லை… அவனின் இருக்கமான முகம் அந்த அவனுக்கு பீதியை தான் கிளம்பியது…

ஜீ..” என்று பதறியவனோ சட்டென்று மார்ட்டினின் காலடியில் போய் உட்காந்து விடஇதனை யார் கவனித்தார்களோ இல்லையோ அவனுக்கு பின்னால் கோழிக்குஞ்சு போல நடுங்கிக் கொண்டிருந்த அந்த பெண்ணவளின் பார்வையில் இதெல்லாம் ஆழமாக பதிந்து போனது.

ஒரு நிமிடம் அவளது பூப்போன்ற இதழ்கள் குருவி வாயை போல பிளந்துக் கொள்ளமார்ட்டினும் இப்போது அவளை தான் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான்… அவனது கண்கள் அவனையும் மீறி அவளது பிளந்த வாயிலேயே போய் நிற்க.. அவனது உடல் எல்லாம் ஜிவ்வென்று ஏறியது.. ஆனால் அந்த உணர்வினை மார்ட்டின் அடியோடு வெறுத்தான்.

சட்டென்று தன்னை சமாளித்துக்கொண்டவனோ தனக்கு பின்னால் நின்று கொண்டு உரசிக்கொண்டு நிற்கும் பெண்ணவளை எரித்த பார்வை பார்த்தவன்… இடியட்… அறிவில்ல…” என்று வேகமாக கத்த..

அதில் அதிர்ந்த பெண்ணோ சட்டென்று அவனை விட்டு பின்னால் நடக்கஆனால் ஒரு அடி தான் பின்னால் நகர்ந்து இருப்பாள் முழுதாக அவனை விட்டு நகர அவளுக்கு என்ன பைத்தியமா? இதுவரை அங்கு நடக்கும் அனைத்தையும் அவள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.. மார்ட்டினை பார்த்து அந்த மூவரும் மிரண்டு போய் நிற்பதும் அந்த பெண்ணவளின் கண்களுக்கு நன்றாகவே தெரிந்தது….

ஜீ…” என்று அந்த மூவரும் சட்டென்று அவனுக்கு முன்னால் மண்டி போட… அவர்களை எரிப்பார்வை பார்த்தவன்… “திஸ் இஸ் மை ப்ளேஸ்…. இந்த பப்குள்ள உங்களால எந்த பிரச்சனையும் வரக்கூடாது… பஸ்ட் அவுட்….” என்று ஆத்திரமாக கத்தஅதில் அந்த மூவரும் மிரண்டே போனார்கள்

தெரியாம வந்துட்டோம் ஜி எங்களை மன்னிச்சிடுங்க…” என்று அவர்கள் பயத்துடன் கூற

ம்ம்ம்….”என்ற மார்ட்டினோ அங்கிருந்து வேகமாக கிளம்ப முயல…. அதில் சட்டென்று அவனது கோட்டை இறுக்க பிடித்துக் கொண்டாள் அவள்…

சார் ப்ளீஸ் சார்…” என்று அவள் பாவமாக கெஞ்ச

அதனைக் கண்ட மார்ட்டினோ முகத்தை கற்பாறையாக இறுக்கியவன் வெடுக்கென்று தன் கோர்ட்டில் இருந்து அவள் கையை தட்டிவிட்டவன் அவளை அனல் பார்வை பார்த்தான்…  அவனுக்கோ அவள் மார்ட்டினின் நெஞ்சில் அளவில் மட்டுமே தான் இருந்தாள்…. அவள் கெஞ்சலாக மார்ட்டினை பார்த்துக் கொண்டிருக்க மார்ட்டினோ அவளை நீ யார் என்பது போல பார்த்தவன்

உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்எதுக்காக நான் உன்னை சேவ் பண்ணனும் ..”என்று எடுத்தெறிந்து பேசியவன்.. மறுபடியும் அந்த மூவரையும் திரும்பிப் பார்த்து மறுபடியும் சொல்றேன் இது என்னோட பப்… இங்க வேற சம்பவமும் நடக்கிறதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன்எதுனாலும் வெளில வச்சுக்கோங்க…” என்று படார் என்று உரைத்தவன் வேகமாக அந்த சிறு பெண்ணை திரும்பி பார்க்காமலேயே அந்த பப்பினை விட்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்து விட்டான்…

டேய் அதான் சொல்லிட்டாருல.. தூக்குங்கடா அவள…”என்று அந்த மூவரும் அவளை நோக்கி நெருங்க…

மார்ட்டினின் செயலில் அதிர்ந்து போன பெண்ணவளோ அவர்கள் தன்னை நெருங்குவதை பார்த்து மிரண்டவள்… “சார் ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார்… காப்பாத்துங்க சார்…” என்று மைத்ரேயியும் அவன் பின்னால் ஓட ஆரம்பித்தாள்… ஆனால் அவளால் முடியவில்லை… சட்டென்று அந்த மூவரும் அவளை இறுக்க பிடித்துக் கொண்டவர்கள்….

டேய் சீக்கிரம் இவள தூக்குங்கடாஇந்த இடத்தை விட்டு சீக்கிரம் வெளியில் போய்டனும்டா…என்று பரபரப்பாக கத்த…

அதிலேயே மற்றவர்களும் தலையாட்டியவர்கள் பெண்ணவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்…, “அண்ணா ப்ளீஸ்ண்ணா… என்ன விட்டுடுங்கண்ணா… நான் எங்கையாச்சும் ஓடிடுறேண்ணா… என்ன விடுங்கண்ணா…” அவர்களிடம் கெஞ்சி கதறி கூப்பாடு போடஆனால் அவர்களோ அதனை கேட்டு மனமிறங்கவே இல்லை..

இங்கு மார்ட்டினோ காரில் ஏறி உட்கார்ந்தவனுக்கு ஏதோ அவனின் நெஞ்சம் குறுகுறுவென்று குறுக்குறுத்தது.. அவன் மனம் படப்படத்து கொண்டே இருக்க அதனை வருடியவாறு இருந்தவனுக்கு கொஞ்சமும் காரினை ஓட்டும் நிதானம் எல்லாம் இல்லவே இல்லைஅவன் வழக்கமாக குடிக்கும் அளவை கூட இன்று குடிக்கவில்லை கம்மியாகத்தான் குறித்து இருந்தான்ஆனால் ஏதோ ஒன்று அவனின் நெஞ்சை அழுத்துவது போல இருக்க.. அந்த அழுத்தம் தாங்காதவனோ அப்படியே ஸ்டேரிங்கில் தலை வைத்து படுத்துக்கொண்டு இருந்தவனின் கண்களுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தன்னை கெஞ்சலாக பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்ணவளின் முகம் தான் வந்து சென்றதுஅதனை கண்டு வேகமாக தலையை குலுக்கியவன்….

ஓஓஓ சேட்வாட் ரப்பிஸ் திஸ்… யாருனே தெரியாதவ ஏன் என் கண்ணு முன்னாடி வந்து போறா…” என்று தலையை உலுக்கியவன் வேகமாக காரினை எடுத்துக்கொண்டு தன் வீட்டினை நோக்கி பறந்து விட்டான்…

இங்கு அந்த பெண்ணை மறுபடியும் அந்த அரக்கனிடமே மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருந்தாள்… 

மைத்ரேயியோ தனக்கு முன்னால் வெறி கொண்ட சாத்தானாக முறைத்தவாறே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் அதை நிவாஸினையே மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்தாள்…

அவனோ இவளையே அனல் கக்க பார்த்துக்கொண்டிருக்க… தைரியத்தை வரவழைத்துக்கொன்ட பெண்ணவளோ… “ப்ளீஸ் சார் என்னை விட்டுருங்க சார் எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே சார்.. ஏன் சார் என்ன டார்ச்சர் பண்றீங்க… நான் உங்க பொண்ணு மாதிரி சார்என்னை விட்ருங்க சார் நான் எங்கேயாவது போய்டுறேன்… உங்க கண்ணுல கூட இனி விழ மாட்டேன்இந்த ஊரை விட்டு ஓடிடுறேன் சார் ப்ளீஸ்…” என்று அழுதவாறே கெஞ்சி கொண்டே இருக்க…

அந்த நிவாஸோ அதனை எல்லாம் காதில் வாங்குவதாக இல்லை. அவனின் கண்கள் அவளையே படிப்படியாக அளந்து கொண்டிருக்கஅதில் பெண்ணவளுக்கு இன்னும் பயம் ஏறத்தான் செய்தது.

உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இவ்ளோ பாதுகாப்பு போட்டும் இந்த வீட்டை விட்டு வெளில ஓடி இருப்ப…” என்று நிவாஸ் அவளுக்கு முகத்திற்கு நெருக்கமாக தன்னுடைய முகத்தை கொண்டு வந்தவாறே பேச…

அவளோ பயத்தில் தன் முகத்தை பின்னால் நகர்த்தி கொண்டு சென்றவளுக்கு இதன் பிறகு எப்படி அவனிடமிருந்து தப்பிப்பது என்றே தெரியவில்லைதனக்காக அழகாக ஒரு வாய்ப்பு கிடைக்க அதனையும் அப்படியே கோட்டை விட்டுவிட்டு மறுபடியும் இந்த கொடூரனிடமே மாட்டிக்கொண்டு தவித்துக் கொண்டிருப்பதை நினைத்து பெண்ணவளுக்கு கதறி அழத்தான் தோன்றியது..

ஏன் பேபி என்ன உனக்கு புடிக்கல…” என்று அந்த நிவாஸ் கோவத்தில் கத்தி கொண்டு இருக்கமைத்துக்கோ அந்த குரலை கேட்க கேட்க உடல் தூக்கிப் போட்டதுஅன்னையும் இல்லாமல் தந்தையும் தன்னை கவனிக்காமல் புத்தம் புதுசாக வாழ்க்கையை அமைத்து போக… ஏனோ தானோ என்று அன்பிற்கு ஏங்கி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு வாழ்க்கை எவ்வளவு மோசமாக அடி கொடுத்திருக்கக் கூடாது என்றுதான் அவளுக்கு இந்த நிமிடம் வரை தோன்றிக் கொண்டே இருக்கிறது…

ஏன் ம்மா என்ன விட்டுட்டு போன.. பேசாம அப்போவே என்னையும் உன்கூட கூட்டிட்டு போயிருக்கலாம் இல்ல…” என்று இந்த குழந்தை பெண் இப்போதும் தன் அன்னையை நினைத்து ஏங்கிக் கொண்டே இருக்க.. ஆனால் அவளுக்கு முன்னாள் நின்று இருந்தவனுக்கு அவள் ஒரு சதை பிண்டமாக தான் தெரிந்தாள்

இங்க இவ்வளவு பெரிய சொத்து இருக்கு… இதுக்கு வாரிசா இருக்கிறதுக்கு ஒரே தகுதி உனக்கு மட்டும் தான் இருக்குகூடிய சீக்கிரம் நமக்கு கல்யாணம் நடந்துரும்… இன்னும் நாளு நாளுல குருஜி டேட் ஃபிக்ஸ் பண்ணிருக்காரு நமக்கு மேரேஜிக்குஅதுக்குள்ள இப்படி வீட்டை விட்டு ஓடிப் போக பாத்திருக்கியே செல்லம்…” என்று அவளின் கண்ணத்தை பிடித்து கிள்ளியவனை கண்டு அருவருத்து போனாள் மைத்து..

இன்னொரு தடவை இந்த வீட்டை விட்டு ஓடனும்னு நீ நெனச்சனா…” என்று ஒரு மாதிரி மிருகம் போல கண்கள் பளப்பளக்க கத்தியவானோ… பின்னால் திரும்பி தன் ஆட்களை பார்த்து.. “ம்ம்ம் கொண்டு வாங்க அவனை…” என்று ஆக்ரோஷமாக கத்தஅடுத்த நிமிடம் இவளை காப்பாற்றி வெளியில் அனுப்பி வைத்த பணியாளரை நான்கு பேர் அல்லேக்காக அதே நேரம் பிணமாக அந்த ரூமுக்கு எடுத்து வர….

அதனை பார்த்தவளுக்கு அது யாரென்று விளங்கி போனது… ஆஅ ஐயோ அவரை விட்டுருங்க ப்ளீஸ்…” என்று கதறிக் கொண்ட கிடக்க… அதனை பார்த்த நிவாஸீற்கு குதுக்கலமாக இருந்தது.. பெண்ணவளோ தன்னால் ஒருவன் சாக கிடைப்பதை பார்த்து கண்ணீர் வடிக்க….

ஆனால் அதனை கேட்க தான் மனிதர்கள் என்று அங்கு யாருமே இல்லைநிவாஸ் அவளைப் பார்த்து கோணலாக சிரித்தவர் இவன்தானே உன்ன காப்பாத்துனவன்…”என்றவனோ… ம்ச் ஆனா நீ கதறுறத பாக்க பாவம் அவன் உயிரோட இல்லயே..” கூறியவாறு தன் பாக்கெட்டில் இருந்த போதை வஸ்துவை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள

அவன் கூறியதை கேட்டு அதிர்ந்தவளோ அந்த பணியாளரின் உடலை பார்த்து பார்த்து அலறலாக அலறிக் கொண்டே இருந்தாள்அவள் வாயை சட்டென்று பொத்திய நிவாஸோ எனக்கு இப்படி எல்லாம் கத்துனா பிடிக்காது பேபி….” என்று கூறியவன்

உனக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான்… அதுவும் என்னை மேரேஜ் பண்ணிக்கிறது மட்டும்தான்பேசாம வாய மூடிட்டு அடக்கமா என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு ராணி மாதிரி இந்த வீட்டுல இரு… அத விட்டுட்டு ஓடனும்னு நெனச்ச…” என்று மிரட்டியவனை கண்டு அவளுக்கு அழுகை கதறலாக வந்தது..

சார் ப்ளீஸ் சார் நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க… உங்களுக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப ஜாஸ்தி சார் ப்ளீஸ் நான் சொல்றத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க சார்…. உங்க பொண்ணு மாதிரி சார் நானு..” என்று மைத்து கெஞ்ச ஆரம்பிக்க

அதில் இல்லை என்று தலையாட்டியவனோ அவனின் முடிவில் உறுதியாக இருந்தான்… “எனக்கு பொண்ணும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது.. சொல்ல போனா எனக்கு வாரிசே கிடையாது.. அதுல எனக்கு எந்த விருப்பமும் கிடையாது…” என்று கூறியவனோ… உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அதுவும் உன்னுடைய இளமையும், அழகும்….”என்று அவளது கன்னத்தில் தன் விரல்களை வைத்து ஒரு கோடு போட அவளின் உடல் அறுவறுத்து போனது.

என்னை அப்டியே பித்து செய்யிது…என்றவன்… நீ எவ்வளவு கெஞ்சினாலும் கதறுனாலும்.. உன்ன காப்பாத்த யாரு வந்தாலும் நீ இங்க இருந்து தப்பிக்கவும் முடியாது.. இங்கிருந்து வெளில போகவும் முடியாது பேபி..” என்று கூறியவனோ பிடிவாதம் பிடிக்காம கல்யாணத்துக்கு ரெடியாகு…” என்று கடைசியில் கூறிவிட்டு அந்த இடத்தினை விட்டு வெளியேறி விட்டான்… அன்றிலிருந்து மைத்ரேயி அந்த இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதவாறு இருப்பதை தவிர வேறு வழியும் அவளுக்கு கிடைக்கவில்லை..

(கேப்பச்சினோ….)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!