அத்தியாயம்-21
அவள் அப்படியே அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க மார்ட்டினோ அவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை… வேறு எங்கோ தன்னுடைய பார்வையை திருப்பிக் கொண்டவன் அவளையே பார்க்க தூண்டிய கண்களை அடக்கியவாறே சிரமப்பட்டு நிற்க… பெண்ணவளுக்கோ அவனின் பாராமுகம் அழுகையை தான் கொடுத்தது..
இருவரும் ஒரு பத்து நிமிடம் அப்படியே நிற்க.. அந்த அமைதியை மார்ட்டின் தான் கலைத்தான்…
“ம்கூம்…. உன்னை பாக்குறதுக்கு உங்க அப்பாவும் உங்க சித்தியும் வந்திருக்காங்க…” என்று கூற..
அதனைக் கேட்ட மைத்ரேயியோ அதிர்ந்து விழித்தாள்… ஏனென்றால் கண்டிப்பாக அவர்கள் இங்கு வந்து நிற்பார்கள் என்று அவள் நினைக்கவே இல்லை..
மைத்ரேயி அப்படியே அசையாமல் நிற்பதை பார்த்த மார்ட்டினோ அப்போது தான் அவள் முகத்தையே நிமிர்ந்து பார்த்தான்.. அவள் முகம் கலையிழந்து, அவள் கண்கள் ஒளியிழந்து மங்கிப்போய் பார்க்கவே புயலில் அடிப்பட்டவள் போல இருக்கும் பெண்ணவளை பார்க்கவே பாவமாக தான் இருந்தது மார்ட்டினுக்கு… எப்போதும் உதட்டில் ஒரு புன்னகையுடன், கண்களில் உயிர்ப்புடன் அந்த கண்கள் அவனை மயக்குமாறு சுற்றிவந்தவளை இப்போது இந்த நிலையில் பார்க்க அவனுக்கு இதயத்தில் யாரோ கத்தியால் குத்துவது போல ஒரு வலி ஒன்று தோன்றியது..
“ம்ச் ஏய் ரேயு… என்னாச்சி..”என்று மார்ட்டின் அவளை கைகளால் உசுப்ப…
அதில் தெளிந்தவளோ அப்போது தான் தன்னை அவன் ரேயு என்று செல்லமாக அழைத்தது நினைவிற்கு வர அதில் மனதில் ஏற்பட்ட குதுக்கலத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க… அவளின் சந்தோஷ முகம் அவனையும் கொஞ்சம் சாந்தப்படுத்தியது..
அப்போது தான் அவனும் வாய் தவறி மனதில் எப்போதும் அவளை செல்லமாக கொஞ்சிக்கொள்ளும் அவளது ரேயு என்ற பெயரை அவளிடமே சொல்லிவிட்டது விளங்கியது.. ஆம் அவளுக்கு அவன் மனதில் செல்லமாக வைத்த பெயர் தான் ரேயு… ஆனால் அதனை எல்லாம் நேராக காட்டினால் அவள் எங்கே தன்னுடை ஒட்டிக்கொள்வாளோ என்று பயந்தவன் தான் அதனை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை..
“ம்ச் என்ன கனவு காண்ற..”என்று மார்ட்டின் அதட்ட..
அதில் நினைவு வந்தவளோ.. “ஹான்…”என்று விழித்தவள்.. அதன் பிறகு தான் அவன் கூறிய விடயமே நினைவுக்கு வந்தது..
“ம்ச் அவங்கள எதுக்கு வீட்டுக்குள்ள விட்டீங்க…” என்று கோவமாக கேட்க…
மார்ட்டேனோ அதை கேட்டு அவளை புரியாமல் பார்த்தவன்… “வாட் என்ன கேட்ட…புரில..”என்றான்…
“ம்ச் புரிலையா… காட் அவங்கள ஏன் உள்ள விட்டீங்கன்னு கேட்டேன் தாஸ்…”என்றவளை அப்போதும் புரியாமல் தான் பார்த்தான் மார்ட்டின்…
“உங்க அப்பா, சித்தி உன்ன பார்க்க வந்திருக்காங்கனு சொல்றேன்.. நீ என்னனா இப்படி கேக்குறியே…” என்று அதிர்ச்சியாக கேட்க…
“ம்ச் ஐயோ தாஸ்.. உங்களுக்கு அவங்கள பத்தி தெரியாது…” என்று தயங்கியவளும் “ம்ச் இப்போ பேச நேரமில்ல.. எனக்கு அவங்களோட போக வேணாம்…அவங்கள உடனே இங்கிருந்து அனுப்புங்க சார்..” என்று கூற.
மார்ட்டேனோ சலித்துக்கொண்டவன்… “ம்ச் அதெல்லாம் முடியாது அவங்க உன்ன கூட்டிட்டு போறேன்னு வெயிட் பண்றாங்க… ஒழுங்கா அவங்களோட கிளம்பி போ…“என்றவனை கண்டு கலங்கிப்போனவளோ…
“ம்ச் அதெல்லாம் முடியாது நான் இங்கிருந்து வரமாட்டேன்… அதும் அவங்களோட போகவே மாட்டேன்… அவங்கள எங்க இங்க இருந்தா துரத்துங்க…“ என்று தன்னுடைய அறையின் கதவை பட்டென்று மூடிக்கொண்டாள்…
அதனை பார்த்த மார்ட்டினுக்கு அவளின் நடவடிக்கை ஏதோ வித்தியாசமாக தெரிந்தது… “என்ன இவ இப்படி பேசுற…” என்று நினைத்தவனோ… “ம்ச் சரி அவங்க மேல கோவத்துல இருக்கா போல இருக்கு… அவளுக்கு கொஞ்சம் டைம் குடுப்போம்” என்று நினைத்தவனுக்கும் உடனே அவளை இங்கிர்ந்து அனுப்ப மனமில்லை..
கீழே இறங்கி அவர்களுக்கு முன்னால் போய் மறுபடியும் உட்கார்ந்தவன்… “ம்ம் வெல் அவ உங்க வேலை கோவத்துல இருக்கான்னு நினைக்கிறேன்… இன்னும் கொஞ்ச நாள் அவளுக்கு டைம் கொடுங்க.. அவ எல்லாத்தையும் மறந்துடுவா அதுக்கப்புறம் அவள கூட்டிட்டு போங்க…” என்று கூற…
அதனைக் கேட்ட மாணிக்கவாசகம், காஞ்சனாவும் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தனர்… எப்படியாவது அவளை இங்கிருந்து இழுத்து சென்றுவிட வேண்டும் என்று நினைத்தவர்கள் மார்ட்டின் கூறியதைக் கேட்டு கொஞ்சம் கோவம் வரத்தான் செய்தது… அதுவும் காஞ்சனா மார்ட்டினை திட்டுவதற்காக வாய் திறக்க… சட்டென்று ராகவ்வோ அவரது கையை இறுக்க பிடித்துக் கொண்டவனோ… வேண்டாம் என்று மறுப்பாக தலையசைத்தவன்…
“ஓஓஓ ஓகே சார் அவ வெளில வந்தான்னா சொல்லுங்க… நாங்க அவக் கிட்ட சாரி கேட்டோம்ன்னு… இனிமே அவளுக்கு பிடிக்காமல் எதையும் செய்ய மாட்டோம்னு சொல்லிடுங்க….” என்று நல்லவனாக நடித்தவனோ தன் பெற்றோர்களை பார்த்து…
“வாங்க போலாம் அவ சரியானதுக்கப்புறம் கண்டிப்பா நம்மள தேடி வருவா… அதுவர நாம மும்பையிலையே இருப்போம்…” என்று முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு அங்கிருந்து செல்ல…
மார்ட்டினோ போகும் அவர்களையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தான்…. “ம்ச் இவ எதுக்காக இப்படி பண்றா…” என்று நினைத்துக் கொண்ட மார்ட்டினோ சரி என்று தான் ஆபீசுக்கு கிளம்பி சென்று விட்டான்…
“அந்த திமிரு பிடிச்ச கழுதைய பாருங்களேன்…நம்ம கூட எல்லாம் வரமாட்டேன்னு அவன் கிட்ட சொல்லி அனுப்பி இருக்கா… நானு அவங்கிட்ட பெசி இழுத்துட்டு வந்துருப்பேன்.. ஆனா நீ என்னடான்னா என் கைய புடிச்சு தடுத்து கூட்டிட்டு வந்துட்ட..”என்று தன்னுடைய மகன் ராகவ்விடம் எகிறிக் கொண்டிருந்த காஞ்சனாவை பார்த்த ராகவ்வோ கடுப்புடன்..
“ம்ச் அம்மா கொஞ்சம் அமைதியா இரு.. அந்த மார்ட்டின எல்லாம் எதுவுமே செய்ய முடியாது.. இப்ப போயிட்டு வந்தோமே அவருடைய வீட்டை நீ சுத்தி முத்தி பார்த்தியா இல்லையா… கிட்டத்தட்ட இருபது, முப்பது பேர் அங்க வேலைக்கு இருக்காங்க.. அது எல்லாம் கையில கன்னோட இருக்காங்க… கண்டிப்பா அந்த மார்ட்டின் ஒரு சாதாரண ஆள் எல்லாம் கிடையாது… அந்த நிவாஸ் கூட சொன்னாறே அந்த ஆளு எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா… அவர்கிட்ட போய் நம்மளோட வாயை காட்டி வாங்கி கட்டிக்க சொல்றியா…”என்றவனோ… “ம்ச் அந்த மைத்துவ ஏதாவது பேசி ஏமாத்தி அவன் வீட்ட விட்டு வெளியில கூட்டிட்டு வரணும்… அத பண்றத விட்டுட்டு இப்படி எல்லாம் அவன பகைச்சிக்க கூடாது..” என்று ராகவ்வும் தன்னுடைய நண்பனை வைத்து ஒரு வீட்டை பார்க்க சொல்லியவன் இப்போது அங்கு தான் தங்கி இருக்கின்றனர்..
“இங்க கொஞ்ச நாள் தங்கி எப்படியாச்சும் அவளை கையோடு இழுத்துட்டு போலாம்…” என்று ராகவ் கூற…
மாணிக்கவாசகத்திற்கும் அது தான் சரி என்று பட்டது.. ஏனென்றால் ஊருக்கு இப்போது அவள் இல்லாமல் சென்றால் அந்த நிவாஸும் இவர்களை சும்மா விடமாட்டான் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.. அதனால்தான் ஊருக்கு சென்றால் மைத்ரேயியுடன் மட்டுமே செல்ல வேண்டும் என்று நினைத்து அங்கேயே வீடு எடுத்து தங்கி விட்டனர்..
இங்கு மைத்ரேயியோ இன்னும் அதே அதிர்வில் தான் இருக்கின்றாள்… அவள் ஒருபோதும் அவர்கள் தன்னை தேடி வருவார்கள் என்று அவள் நினைக்கவே இல்லை.. இதற்குப் பின்னால் கண்டிப்பாக அந்த நிவாஸ் தான் இருப்பான் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்தது… ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பயந்த சுபாவத்துடன் சுத்திக் கொண்டிருந்தவளுக்கு பாதுகாப்பாக தோன்றியது மார்ட்டினிடம் மட்டுமே…
மார்ட்டின் அவளுக்கு பாதுகாப்பானவன் என்று தோன்றியது.. அதனையே பற்றி யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னுடைய எதிர்காலத்தை நினைத்து பயம் தான் வந்தது.. மேலும் இரண்டு நாட்கள் அந்த வீட்டின் தோட்டத்திற்கு கூட அவள் வரவில்லை… அறைக்குள்ளையே அப்படியே யோசித்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு எண்ணம் தோன்ற.. அதனை நினைத்துப் பார்த்தவளுக்கு முகம் வெட்கத்தில் சிவந்தது..
“இ… இத எப்படி அவர் கிட்ட சொல்றது…” என்று யோசித்தவாறே இருந்தவளோ… முடிவாக “அதெல்லாம் இல்லை எப்படியாச்சும் அவர்கிட்ட நம்ம சொல்லியே ஆகணும்… கண்டிப்பா என்னால இந்த வீட்டை விட்டு போக முடியாது.. வீட்ட விட்டுன்றத விட அவர விட்டு என்னோட தாஸ விட்டு என்னால போக முடியாது…”என்று உறுதியாக முடிவெடுத்தவளோ தன் தாஸை நினைத்து புன்னகைத்துக் கொண்டாள்…
“இது எப்போல இருந்துடி…”என்று அவள் மனம் கேள்வி கேட்க… அவளோ புன்னகைத்துக்கொண்டாள்…
“சரிதான் அவரை விட்டு தான் போக முடியாது… கண்டிப்பா முடியாது… போதுமா…” என்று தனக்குள்ளே கூறியவளோ மார்ட்டினை உண்மையாகவே காதலிக்க ஆரம்பித்து விட்டாள்…
ஒருவனை காதலிக்க வெகு நாட்கள், மாதங்கள், வருடங்கள் தான் தேவைப்படும் என்று அவசியமில்லையே.. ஒரு நிமிடம் போதும் அல்லவா… அப்படித்தான் அவளுக்கு மார்ட்டினின் மீது காதல் வந்திருந்தது.. அதுவும் அவனை பார்த்தவுடனே…
இத்தனைக்கும் அவன் என்ன தொழில் செய்கிறான்,அவனுக்கு குடும்பம் இருக்கிறதா என்று எதுவுமே அவனைப் பற்றி அவளுக்கு அவ்வளவாக தெரியாது… மார்ட்டினின் வீட்டில் செய்யும் வேலையாட்கள் பேசுவதை வைத்து தான் அவன் ஏதோ கடத்தல் பிசினஸ் செய்கிறான் என்பது மட்டும் அவளுக்கு தெரியும்.. அதுபோக அவனைப் பற்றி வேற எதுவும் தெரியாது… அப்படிப்பட்டவனை இப்போது அவள் காதலிக்கிறாள் என்றால் அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் தான்…
“இத எப்படியாவது இவர்கிட்ட சொல்லி ஆகணும்…” என்று இரண்டு நாட்கள் யோசித்தவாறே சுற்றினாள்..
மார்ட்டினும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.. கிட்டத்தட்ட காஞ்சனாவும், மாணிக்கவாசகம் ராகுவ்வும் அந்த வீட்டிற்கு வந்து சென்றதிலிருந்து இரண்டு நாட்கள் ஓடி விட்டது.. ஆனால் அந்த இரண்டு நாட்களுமே மைத்ரேயி தன்னுடைய அறையில் இருந்து வெளியில் வாரவே இல்லை.. முதலில் அதனை கண்டு புருவம் சுருக்கிய மார்ட்டினுக்கோ மனம் ஒரு நிலையில் இல்லை.. “ம்ச் இவ ஏன் இப்படி இருக்கா… எதுக்காக அவளோட ரூம்ம விட்டு கூட வெளியில வர மாட்டுறா… கூப்பிட வந்தது அவளோட அம்மா அப்பா தான… அவங்களோட போறதுல இவளுக்கு என்ன குறைஞ்சு போயிட போது..” என்று நினைத்தவாறு இருந்தவனுக்கு மூன்றாம் நாள் அவளது பூமுகத்தை பார்க்க வேண்டுமென்று ஆர்வம் தலைக்கேறியது…
சரி இதனை சாக்கு வைத்து அவளை பார்த்து பேசி விடுவோம் என்று நினைத்துதான்.. அவளது அறைக் கதவை தட்டினான்… மைத்ரேயியோ வந்து கதவை திறக்க அங்கு அவளை பொய்யாக முறைத்த வாக்கில் நின்று கொண்டிருந்தான் மார்ட்டின்.. அவனைப் பார்த்து விழித்துக் கொண்டிருந்தவளை பார்த்தவனோ… “ம்ச் எப்படி உங்க அப்பாவோட போக கூட உனக்கு மனசில்லாம போச்சி… அவர் என்ன தப்பு வேணா செஞ்சிருக்கட்டும் அதுக்காக அவர் கூட போகாம உனக்கு முன்ன பின்ன தெரியாத எங்கூட இங்க இருக்குறேன்ற.. உன்ன என்ன செய்றது…”என்றவனை பார்த்து பாவம் பெண்ணவள் துடித்தே போனாள்…
அவளோ அவனை ஒரு உணர்வற்ற பார்வை பார்த்து வைத்தவள் “எனக்கு அவங்களோட போறதுல விருப்பமே இல்ல…”என்று கூற…
“ம்ச் அது தெரிது… அதுக்கான காரணம் தான் என்னன்னு கேட்குறேன்..”என்றான் முறைப்புடன் கடுப்பாக…
“ம்ச் அதெல்லாம் பெரிய கத சார்… என்ன அவங்க கூட அனுப்பாதீங்க நான் உங்கள விட்டு அவங்க கூட போக மாட்டேன்..” என்று கூறியவளை மார்ட்டின் அதிர்வுடன் பார்த்தான்..
“என்ன சொல்றா இவ என்னை விட்டு போகமாட்டேன்னா சொன்னா..”என்று யோசித்தவாறே அவளை உறுத்து பார்க்க…
“நான் இங்க உங்களோட இருக்கிறது கஷ்டம்னா சொல்லுங்க நான் வேற எங்கயாவது போய்டுறேன்.. அதுக்காக என்ன அவங்க தலையில கட்ட பாக்காதீங்க..” என்று கூற.. அதில் மார்ட்டினுக்கு இன்னும் கோவம் அதிகரித்துக்கொண்டே சென்றது.. அவள் எதனால் இங்கிருந்து போக மாட்டேன் என்று கூற வேண்டும் என்றுதான் அவன் மனமும் நினைத்தது… ஆனால் ஏனோ மார்ட்டினோ தன் மனதின் திசையை கண்டுக்கொள்ளாதவன் அவளை வெறித்து பார்த்தான்..
“ப்ளீஸ் தாஸ் என்ன இங்க இருந்து அனுப்பாதீங்க…”என்று அவள் பேசிக்கொண்டே இருக்க… மார்ட்டினோ அவளை முறைத்து பார்த்தவன்…
“ம்ம்ம்ச் வாட் ரப்பிஸ் யு ஆர் டாக்கிங்க்… நீ இங்க இருக்கிறதே எனக்கு புடிக்கல.. அப்புறம் எப்டி உன்ன நான் இங்க வச்சிக்க முடியும்… ம்ச் என் டைம வேஸ்ட் பண்ணாத… சீக்கிரம் இங்க இருந்து கிளம்பு…” என்று சலித்துக்கொண்டவன் அவளை பார்க்காமல் எங்கோ பார்த்தவாறே கூற… அவளுக்கோ அவன் வாயிலிருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவே இல்லை…
“தாஸ்… நான்…”என்று அவள் திக்கி திணற..
அவனோ நிறுத்து என்பது போல கையினை காட்டியவன்… “நான் உண்மையா தான் சொல்றேன்.. நீ இங்க இருக்குறது எனக்கு பயங்கர இரிட்டேட்டிங்கா இருக்கு… சீக்கிரமா இந்த வீட்ல இருந்து கிளம்புற வழிய பாரு.. உன்னோட பெத்தவங்க கூட போக முடியாம இந்த வீட்டோட வசதி தான் உன்ன மயக்குது… மத்தப்படி உனக்கு வேற ஒரு பிரச்சனையும் இல்ல… சரியான செல்ஃபிஸ்…” என்று கடைசி வரியை முணுமுணுக்க.. அதுவோ அவளுக்கு நன்றாக கேட்டுவிட்டது…
அதில் பெண்ணவளின் மனம் அடிபட்டே போனது… அதுவுமில்லாமல் அவள் கண்கள் கலங்கி தாரைதாரையாக தண்ணீர் ஊற்ற… அது ஏனோ மார்ட்டினை வாட்டியது… மார்ட்டினுக்கு புதிதாக நெஞ்சு வலியைத்தான் உண்டாக்கியது அவளது அழுகை… ஆனாலும் அவன் பேசியே ஆக வேண்டுமே என்ற கட்டாயத்தில் தான் இருக்கிறான்… தன்னால் தான் தன் மீது அவள் கொண்ட காதலால் தான் அவள் அவளுடைய பெற்றோரை பிரிந்து இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான்…
ஆனால் உண்மையில் அங்கு அவளுக்கு எதிராக நிறைய வன்ம வேலைகள் நடக்கிறது என்றோ அந்த சூழ்ச்சியினால் அவள் ஒரே அடியாக மண்ணுக்குள் அனுப்புவதற்கு சூழ்ச்சிகள் நடக்கிறது என்று மார்ட்டினுக்கு பாவம் தெரியாமல் போனது…
இதற்கு மேல் இங்கு இருந்து இன்னும் மார்ட்டினிடம் பேச்சுக்களை வாங்கவோ காதல் கொண்ட மனதை ரணமாக்கவோ விரும்பாதவள்… “இப்போ என்ன தாஸ் நான் இந்த வீட்டை விட்டு போகனும் அவ்வளவு தானே…” என்று கேட்க..
அதற்கு மார்ட்டினும் ஆம் என்று வேகமாக தலையாட்டினான். அவனுக்கோ அவள் எப்படியேனும் அவள் மீது கோபத்தில் இருக்கும் அவளின் பெற்றவர்களிடம் அவளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தான்…
ஆனால் அவளுக்கு தான் தான் இந்த வீட்டில் இருப்பது தன்னவனுக்கு பிடிக்கவில்லை என்று நினைக்கவே நெஞ்சம் வலியில் அழுத்த.. அதனை சமாளித்துக் கொண்டவள்… “இன்னும் ஒரு வாரத்தில் நான் இங்கே இருந்து கிளம்பிடுவேன் சார்….” என்று பழைய படி சார் என்ற வார்த்தைக்கு மாறியவளை கண்டு மார்ட்டினுக்கு சுள்ளென்று கோவம் வந்தது… ஆனால் அதனை கேட்டு அவள் இன்னும் இங்கையே தங்கிவிட்டாள் அவனுக்கு அல்லவா ஆபத்தாகிவிடும்…
“ரொம்ப சந்தோஷம்…” என்ற ஒற்றை வார்த்தையில் பதில் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான்…
மைத்ரேயியோ வெறித்தவாறே போகும் மார்ட்டினை பார்த்தவள்… “நான் இங்க இருக்குறது உங்களுக்கு தொல்லையா இருக்கா தாஸ்… எப்படி தாஸ் என்னை நீங்க தொல்லையா நினைக்கிறீங்க… அப்போ எனக்கு உங்க மேல இருக்குற காதல்ல பாதி கூட உங்களுக்கு என் மேல இல்லையா… நான் இங்க இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா…” என்று மார்ட்டினிடம் கலங்கியவாறே மானசிகமாக பேசியவளோ… “நான் இங்க இருக்கிறது கூட உங்களால ஏத்துக்க முடியல… அப்புறம் நான் உங்களை காதலிக்கிறதையா நீங்க ஏத்துக்க போறீங்க கண்டிப்பா ஏத்துக்க மாட்டீங்க தாஸ்…”என்று தேம்பியவாறே பேசியவள் ஏதோ உறுதியான முடிவெடுத்தவளாக…
“அவருக்கு இனி நாம தொல்லையா இருக்க கூடாது… அதுக்கு நாம சீக்கிரமா இங்கிருந்து போயிடனும்…அதுக்கு சீக்கிரம் நமக்கு ஒரு வேலை கிடைக்கணும்…” என்று நினைத்துக் கொண்ட மைத்ரேயியோ அன்றிலிருந்து இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரத்தில் காவலாளியிடம் வேலை இருக்கிறது என்று கூறி தனக்காக ஒரு வேலையை தேடிக்கொள்ள கிளம்பி விட்டாள்..
மார்ட்டினுக்கு இந்த தகவல் அந்த காவலாளி கூற.. முதலில் அதனை பற்றி யோசித்த மார்ட்டினோ… “ம்ச் வாட் எவர் எங்கையாச்சும் போறா… விட்டு தொலை…”என்று காவலாளியிடம் கத்திவிட்டு போனை வைத்துவிட்டான்…
இன்னொரு பக்கம்… “ம்ச் சரி அவளும் எவ்வளவு நாள் தான் வீட்டுக்குள்ளையே அடஞ்சி கிடப்பா…வெளில போய்ட்டு வரட்டும்…” என்று அவன் காதல் மனம் எடுத்துக்கொண்டாலும் அதனை வெளியில் காட்டவில்லை…
மைத்ரேயியோ நான்கு நாட்களாக அழைத்து திரிந்து ஒரு வேலையை வாங்கி இருந்தாள்… அதுமட்டுமல்ல நிரந்தரமாக அவள் மார்ட்டினின் வீட்டினை விட்டும் கிளம்பியவுடன் தங்கவும் ஒரு இடத்தையும் ஏற்பாடு செய்திருந்தாள்…
பெண்ணவளுக்கு ஒரு காபி ஷாப்பில் வேலை கிடைத்திருக்க.. அதற்கு மேலேயே காபி ஷாப்பில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு தங்குவதற்கு சிறிதாக ஒரு அறையும் இருக்க.. அந்த அறையில் தான் தங்குவதாக மைத்ரேயி முடிவு செய்து வைத்திருந்தாள்…
சரியாக ஒரு வாரத்திற்கு முன்பே… அதாவது ஐந்து நாட்களிலையே மைத்ரேயி நேராக மார்ட்டினிடம் சென்றவள்… அவன் முகத்தை காதலுடன் பார்க்க… அவனோ என்ன தான் தனக்கு முன்னால் நிற்பவளை பார்க்க சொல்லி அவன் மனம் பிராண்டினாலும் அதனை கருத்தில் கொள்ளாமல் வெகு சிரமப்பட்டு உட்கார்ந்திருந்தவனை தன் கண்களில் நிரப்பிக்கொண்டவளோ..
“நான் கிளம்புறேன் சார்…” என்று தடுமாற்றத்துடன் கூற…
அதில் மார்ட்டினுக்குமே ஒரு நிமிடம் ஷாக் தான்… எங்கோ இருந்த பார்வை இப்போது பெண்ணவளிடம் அதிர்ச்சியாக படிய… அவன் உதடுகளோ ஆட்டோமேட்டிக்காக… “வாட் இந்த வீட்டை விட்டு போறியா…”அதிர்ச்சியாக கேட்க…
அவளோ ஆமென்று வேகமாக தலையாட்டியவளோ “உங்களுக்கு தான் நான் இங்க இருக்குறது புடிக்கலையே சார்… அதனால தான் நான் இந்த வீட்டை விட்டு போலாம்னு இருக்கேன்…” என்று கூற…
மார்ட்டினோ அவள் தன்னை விட்டு தன் வீட்டை விட்டு செல்ல போகிறேன் என்று கூறியதிலையே கோவத்தில் நின்றிருந்தான்… அவனே தான் அவளை வெளியேற்ற சொன்னான் என்பதே அவன் இந்நேரம் வசமாக மறந்து போயிருக்க… இப்போது அவள் வெளியேறுவதை நினைத்து உள்ளம் கதறிக் கொண்டிருந்தது… ஆனால் அதனை சிரமப்பட்டு அடக்கியவன்…
“சரி ஓகே முடிவு பண்ணிட்ட இல்ல… அப்புறம் எதுக்கு இன்னும் காத்துட்டு இருக்க.. சீக்கரம் கிளம்பி போ…” என்று தடுமாற்றத்தை மறைத்தவாறே இரும்பான குரலில் கூற…
மைத்ரேயி அவனை பார்த்து விரக்தியாக சிரித்தவளோ… “இவ்ளோ நாள் எனக்கு இருக்க இடம், சாப்ட சாப்பாடு, போட ட்ரெஸ் எல்லாம் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார்.. அதையும் விட எனக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்தீங்க… அந்த ஆளுக்கிட்ட இருந்து காப்பாத்துனீங்க… எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி…”என்றவளோ… அவனை நிமிர்ந்த பார்வையுடன் பார்த்தவள்…
“ஆனா ஒன்னு சார்.. நீங்க நினைக்கிற மாதிரி நான் என் அப்பா கூடவோ அந்த பொம்பள கூடவோ போக மாட்டேன் சார்.,, செத்தாலும் அவங்களோட திரும்பி போக மாட்டேன்… அப்டி ஒன்னு செய்வேனு மட்டும் நினைக்காதீங்க…” என்று கூற…
மார்ட்டினோ அவளது இந்த பதிலில் அதிர்ந்து போனான்… பின்னே இருக்காதா… அவளை எப்படியெனும் தன்னுடைய வீட்டை விட்டு, இல்லை இல்லை ஆபத்தான தன் வாழ்க்கையை விட்டு அவளை அவளின் பெற்றோர்களிடம் அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு அவளின் பேச்சு அதிர்வாக தானே இருக்கும்…
“ம்ச் அங்க போலனா…வேற எங்க போற…” என்று அவன் பதறியவாறே கேட்டான்…
அவளோ “ம்ச் நான் எங்க போனா உங்களுக்கு என்ன சார்… உங்களுக்கு வேண்டியது தான் நடக்க போதே… நீங்க நெனச்ச மாதிரி நான் தான் இந்த வீட்டை விட்டு போறேனே…”என்றவளை பார்க்க அவனுக்கு நெஞ்சே வலித்தது…
ஆனாலும் அவன் கல் போல நின்றவன்… “ம்ச் வாட் எவர் இந்த வீட்ட விட்டு ஒழிற இல்ல அதே போதும்…”என்றவனை பார்த்தவளுக்கு முகம் கலங்க… அதனை மறைத்தவள்…
“தாங்க்ஸ் சார்… தாங்க்யூ பார் ஆல்…”என்றவளோ அன்றே அந்த வீட்டினை விட்டு கிளம்பி விட்டாள்…
அவள் கையிலோ தனக்காக மார்ட்டின் முதல் முறையாக எடுத்துக் கொடுத்த நான்கு உடையை மட்டும் எடுத்துக் கொண்டவள்.. மார்ட்டினிடம் காட்டி… “வேற ஒன்னும் நான் எடுத்துக்கல சார்… இத எடுத்ததுக்கான பணத்தை கூடிய சீக்கிரம் நான் வந்து உங்களிடம் கொடுத்துடுவேன் சார்…” என்று பேசியவளோ வேகமாக மார்ட்டினை தாண்டி போக… மார்ட்டினோ போகும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்….
(கேப்பச்சினோ…)