“என் ராசாத்தி..” என்று காஞ்சனா அடுத்த நாள் மைத்ரேயின் கன்னத்தை வழித்து முத்தமிட… அதனை பார்த்த மைத்ரேயிக்கோ இதயமே நின்று துடித்தது.. சிறு பிள்ளையிலிருந்து தன்னை திரும்பி கூட பார்க்காத தன்னுடைய சிற்றன்னை இப்போது தன்னை கொஞ்சுகிறார்கள் என்று பார்க்கவே அவளுக்கு அதிசயமாக இருக்க.. அதனை விட அவளுக்கு பயம் தான் அதிகமாக இருந்தது..
அவர்களை பார்த்து மிரண்டு போனவளை பார்த்து… “ம்ச் என்னம்மா தங்கம்… ஏன் பயப்படுற… இனி நீ பயப்படுறதுக்கு வேலையே இல்லாம போச்சு தெரியுமா.. நீ இனி ராணி மாதிரி இருக்க போற..” என்று காஞ்சனாவும் கூற… காஞ்சனாவின் முகத்தில் அவ்வளவு நயவஞ்சகம் வழிந்து கொண்டிருந்தது.
அதனை பார்க்க பார்க்க பெண்ணவளுக்கோ இன்னும் அதிகமான பயம் தான் தோன்றியது… “என்ன அப்படி பாக்குற நேத்தி வரைக்கும் நம்மள அடிச்சுக்கிட்டு விரட்டிக்கிட்டு இருந்தவ இன்னிக்கி நம்மள கொஞ்சறாளேனு பாக்குறியா…” என்றவறோ… “ம்ச் பின்ன கொஞ்சாம பின்ன என்னம்மா பண்ணுவாங்க உன்னால எங்களுக்கு எவ்வளவு லாபம் தெரியுமா…” என்றதை கேட்டவளுக்கு ஒன்றுமே புரியவில்லை… தான் அவர்களுக்கு இடத்தை எழுதிக் கொடுக்கவே மாட்டேன் என்று கூறி விட்டேனே அப்போது எப்படி அவர்களுக்கு லாபம் வந்தது என்றவளோ யோசித்துக் கொண்டே இருக்க..
“ம்ச் ரொம்ப யோசிக்காத அதுக்கு நானே பதில் சொல்றேன்…” என்ற காஞ்சனாவோ… “உனக்கு எவ்வளவு பெரிய யோகம் அடிச்சிருக்கு தெரியுமா… அதும் எப்டிப்பட்ட யோகம்… ஒரு அம்பது வயசு கிழவனுக்கு இரண்டாம் தரமா போற யோகம்..”கேலியாக கூற…
அதில் மைதிலிக்கு இதயமே தடதடக்க ஆரம்பித்துவிட்டது… என்ன ஐம்பது வயசு கிழவனுக்கு இரண்டாம் தரமா என்று அவளது மனம் தவித்துக் கொண்டிருக்க…
“ம்ம்ம் ஆமா நான் உண்மையா தான் சொல்றேன்… நேத்து உன்ன ஒருத்தரு ரூமுக்குள்ள வந்து பார்த்தாருல்ல… அவருக்கு உன்ன ரொம்ப புடிச்சி போச்சாம்.. உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறாராம்.. ஆளு எவ்ளோ பெரிய பணக்காரன் தெரியுமா…” என்று கூற… மைத்ரேயிக்கு அவ்வளவுதான் உலகமே அப்படியே நின்றது போல ஒரு பிரம்மை..
ஆம் அந்த நிவாஸ் சேட் மைத்ரேயியை பார்த்த அடுத்த நிமிடமே திட்டம் போட்டு விட்டான்.. எப்படியெனும் இவளை திருமணம் செய்து ஆக வேண்டும் என்று நிவாஸ் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை… உண்மையிலேயே மிகப்பெரிய தொழில் அதிபர், ராஜ வம்சத்தை சேர்ந்தவன்.. மும்பையில் அவனை தெரியாத ஆள் யாருமில்லை..
கிட்டதட்ட அவனுக்கு அம்பது வயதாகிவிட்டது.. இதுவரை நான்கு பெண்களை திருமணம் செய்துவிட்டு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் கொடுமை செய்து கொலை செய்துவிட்டான். இப்போது அவன் மைத்ரேயியை திருமணம் செய்ய நினைப்பது ஐந்தாவது முறையாக.. அவனுக்கு முதல்முறையாக மைத்ரேயியை பார்த்த உடனே அவ்வளவு பிடித்து போனது. இத்தனைக்கும் அவரின் நான்கு மனைவிகளும் அவ்வளவு பேரழகியாக இருந்தார்கள்.. அவர்களையே கொன்று காரியத்தை முடித்தவன் மைத்ரேயியை மட்டும் சும்மாவாக விடுவான். அவன் ஒரு அரக்கன்.. சரியான சைக்கோ.. அவன் தன்னுடைய நான்கு மனைவிகளையுமே ரூமினை விட்டு வெளியே கூட அனுப்ப மாட்டான்.
ராட்சகனாக அவ்வளவு கொடுமை செய்வான். அப்படிப்பட்டவனிடம் இருக்க விரும்பாமலே ஒருத்தி தற்கொலை செய்து கொள்ள… மீதி இருக்கும் மூவரையும் இவனே அடித்து கொன்று விட்டான். அப்படிப்பட்டவனிடம் பாவம் இந்த சிறு பெண் மாட்டிக் கொண்டாள்..
“ம்ம்ம் அதுவும் அஞ்சாவதா உன்னை கல்யாணம் பண்ணிக்க போறாராம் எவ்ளோ பெரிய கொடுத்து வச்சவ நீ…” என்று காஞ்சனா நக்கலாக இதழ் வளைத்து கூறி பெண்ணவளுக்கு பயம் காட்ட… அவளோ அப்படியே அசையாமல் சிலை போலவே உட்கார்ந்து விட்டாள்.
இந்த நிமிடம் தான் இந்த உலகத்தை விட்டு பிரித்தால் என்ன.. இந்த உயிர் இந்த கூட்டினை விட்டு பிரிந்தால் என்ன என்று தான் தோன்றியது அவளுக்கு… அப்படியே வெறுப்பாக தன்னுடைய சித்தியை பார்க்க அவரோ நேற்று தனக்கு முன்னாள் நீட்டிய பெரிய பணப்பெட்டியில் இருந்த பணங்களே இப்போதும் கண் முன் வந்து செல்ல… அதனை நினைத்து பார்த்த காஞ்சனாவிற்கோ தன்னுடைய உடல் முழுவதும் கட்டு கட்டாக பணம் அடிக்கி இருப்பது போல ஒரு பிரம்மை தான் தோன்றியது..
நேற்று மாணிக்கவாசகத்தை தனியாக அழைத்துச் சென்ற அந்த நிவாஸோ… “லுக் மாணிக்கவாசகம்.. எனக்கு உங்க பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு…” என்று கூற மாணிக்கவாசகத்திற்கு முதலில் ஒன்றும் புரியாமல் நிவாஸை பார்த்தார்///
“ம்ச் நான் சொல்றது உங்களுக்கு புரியிலன்னு நினைக்கிறேன். உங்க பொண்ணு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அவள நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்…” என்று கூற.
மாணிக்கம் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டார்.. ஆனால் காஞ்சனா இதனை கேட்டவளுக்கோ அவ்வளவு மகிழ்ச்சி… “என்னது இந்த கிழவனுக்கு இவள பிடிச்சிருக்கா… கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்காறா…” என்று நினைத்தவளுக்கு அவ்வளவு ஆனந்தம்.. எப்படியோ அந்த மைத்ரேயி வாழ்க்கை நாசமாக வேண்டும் அவ்வளவே..
மாணிக்கவாசகத்தின் அதிர்ச்சியை பார்த்த நிவாஸோ… “உண்மையா தான் சொல்றேன் உங்க பொண்ண எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு… அவள கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்.. ம்ம்ம்… நீங்க சும்மா எல்லாம் எனக்கு அவளை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்..” என்று கூறிய சேட்டோ… இந்த இடத்தில் தான் ஒரு ட்விஸ்ட்டை வைத்துவிட்டார்… “உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த சொத்தை நான் எப்ப வேணாலும் கூட அவகிட்ட இருந்து கையெழுத்து வாங்கிப்பேன்… அந்த இடம் இனிமே என்னோடது தான்… ஆனா அதுக்கான பணத்த நான் உங்ககிட்ட பேசின அமென்ட விட டபுள் மடங்கா தரேன்… அதாவது இரு மடங்கா தரேன்..” என்று கூறியவரோ
பணம் என்றதும் காஞ்சனா தன் அருகில் வருவதைப் பார்த்து வேணும் என்றே தன்னுடைய மேனேஜருக்கு கண்களை காட்ட அவனோ ஒரு சூட்கேஸ் நிறைய பணத்தை எடுத்து வந்து மாணிக்கவாசகத்திடம் நீட்டினான்… அதனைப் பார்த்து காஞ்சனாவிற்கோ இதயமே அப்போதே நின்று துடித்தது…
அப்போது தான் வீட்டின் உள்ளே வந்த ராகவோ… “என்னது இவ்வளவு பணமா…”என்று யோசிக்க… காஞ்சனா அவனை பார்வையால் அடக்கினான்..
எப்படியெனும் இந்த பணத்தை அவனிடமிருந்து வாங்க வேண்டும் என்ற முனைப்புடன்… “நீங்க சொல்றபடி செஞ்சிடலாம்ங்க…”என்றவளோ அங்கு அந்த பணத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த தன் கணவனை கண்டு இடிக்க.. அதில் சுயம் பெற்றார்.
“இந்த டீலுக்கு ஓகேனா நம்ம இதுக்கு மேல மேற்கொண்டு பேசலாம்…” என்று கூறிய சேட்டோ அப்படியே அந்த பெட்டியை எடுத்து செல்ல…. காஞ்சனாவிற்கு அதை விடவே மனதில்லை.
“ஏங்க ஏன் அப்டியே மலைமாடு மாதிரி நிக்கிறீங்க… அவருக்கிட்ட உடனே சரின்னு சொல்ல வேண்டியது தானே…”என்றாள்.. அரக்கியாக..
ராகவ்வின் பார்வையும் அந்த பணப்பெட்டியின் மீதே இருக்க… “என்னம்மா இங்க நடக்குது.. யார் அவரு… அப்படி என்னத்த அவர் சொன்னாரு…” என்று ஆர்வமாக கேட்டான்.
மாணிக்கவாசகம் சிலை போல நின்றவர் காஞ்சனாவை பார்க்க… அவளோ நிவாஸ் கூறியதை அப்படியே ராகவ்விடம் கூற… அதனை கேட்ட ராகவ்விருக்கும் அதிக அதிர்ச்சி தாங்க முடியவில்லை… “அட என்னது இவளுக்கு போயி இவ்ளோ காசா…”என்று ஆச்சரியப்பட்ட ராகவ்வை கண்டு…
“ஆமான்றேன்.. ஏதோ சீமையில இல்லாதவ கணக்கா இவள போய் கட்டிக்க நிக்கிறான் அந்த கிழவன்…”என்றவறோ… “ம்ச் ஏதோ நமக்கு பணம் வந்தா போதும்..”என்றவள் அந்த பணம் தன்னிடம் தானே வரப்போகிறது என்று நினைக்கவே உள்ளம் என்றும் உடல் குளிர்த்து போக…
அப்படியே சிலைக்கணக்காக நிற்கும் தன் கணவனை பார்த்தவள்… “அட என்ன அசையாம நிக்கிறீங்க.. இதுல யோசிக்க என்னங்க இருக்கு.. அவரு என்ன வச்சிக்கவா உங்க பொண்ண கேக்குறாரு.. கல்யாணம் தானே பண்ணிக்க கேட்குறாரு…” என்று அதே நயவஞ்சக நச்சு பாம்பு ஆரம்பிக்க…
மாணிக்கவாசகமும் அதனை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தார். “ம்ச் இல்லடி அது எப்படி…” என்று அவர் ஆரம்பிக்க…
“ம்ச் என்ன பண்ணனும்.. என்ன புதுசா உங்க பொண்ணு மேல அப்டியே உங்களுக்கு அக்கறை தாண்டவம் ஆடுதோ…” என்று கேட்க.,
அதில் மாணிக்கவாசகம் கப்பென்று வாயை மூடிக் கொண்டார்.. ஒரு பக்கம் பெண் என்ற பாசம் கூட அவருக்கு கிடையாது தான்… ஏதோ வீட்டில் ஒரு உயிரற்ற பொருள் இருப்பது போலத்தான் மைத்ரேயியை இதுவரை பார்த்துக் கொண்டிருந்தார்.. இப்போது திடீரென்று அவள் மீது பாசம் எல்லாம் முளைக்கவில்லை.. யோசித்துக் கொண்டிருந்தார் அவ்வளவு தான்..
காஞ்சனாவோ இரண்டு நாட்களாக மாணிக்கவாசகத்தினை பேசி பேசி அசைத்திருக்க.. இதோ இப்போது மைத்ரேயியை அந்த சேட்டுவிடம் விற்றுவிட்டு பல கோடி மதிப்பிலான பணத்தை கைப்பற்றி இருந்தார்கள்.. ஆம் மைத்ரேயி என்ற அப்பாவி பெண் சேட்டிடம் முழுதாக விற்கப்பட்டாள்.
“ப்ளீஸ் சித்தி ப்ளீஸ் என்ன அவரோட அனுப்பாதீங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு சித்தி ப்ளீஸ் சித்தி நானு உங்களுக்கு பொண்ணு மாதிரி தானே சித்தி..” என்று மைத்ரேயி உயிரே போகும்படி அழுது கொண்டிருக்க… ஆனால் அது அந்த கல் நெஞ்ச ராட்சசியின் காதில் கூட விழவில்லை.
அவள் கண் முழுவதும் அந்த சூட்கேஷிற்கு உள்ளேயே இருக்க… அதிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கட்டுப்பணம் ராகவ்வின் கையில் அலங்கரித்திருந்தது… ராகவ்விற்கு இந்த டீலை அவன் எதிர்பார்க்கவே இல்லை… மைத்ரேயின் மீது இருக்கும் இடம் இடத்தோடு சென்றுவிடும் என்று நினைத்து கொண்டு இருக்க ஆனால் அதற்கு மாறாக மைத்ரேயியே விற்கப்பட்டு இவ்வளவு கோடி கணக்காக பணம் கிடைக்கும் என்று அவன் நினைக்கவே இல்லை.. அவனுக்கும் மைத்ரேயினால் கிடைக்கும் பணத்தை விடவும் மனமில்லை. அதனால் பணத்தினை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க காஞ்சனாவுமே அதனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்.
“அய்யோ ப்ளீஸ் சித்தி என்னை அவரோட அனுப்பாதீங்க சித்தி…” என்று அழுது புலம்பி கொண்டிருக்க…
காஞ்சனாவோ “போடி உன்னால இவ்வளவு பணம் கிடைச்சுருக்கேன்னு உன் மேல கை வைக்காம இருக்கேன்… அதுவும் அந்த சேட்டு லாஸ்ட்டா அழுத்தி சொல்லிட்டு போனாரு.. உங்களால இதுக்கு மேல அவளுக்கு காயம் ஏற்படக்கூடாதுனும்… அவ என் மனைவியாக போற அப்படின்னும் சொல்லிட்டு போனதுனால சும்மா விடுறேன்… இல்லன்னு வச்சுக்க…” என்ற காஞ்சனாவோ
“ம்ம்ம் போ போ உள்ள போ உனக்கு வகை வகையா சாப்பாடு செஞ்சி தர சொல்லி இருக்காரு… இன்னும் ரெண்டு நாள்ல உன்னை வந்து கூப்பிட்டு போறதா சொல்லி இருக்காரு.. அதுவர அமைதியா உள்ள கிட…” என்று கூறிய காஞ்சனாவோ கோடி கணக்கான பார்த்தவாறே..
“அடேய் அதையே பாத்துட்டு இருக்காம அந்த பணத்தை எல்லாம் தூக்கி வீட்டுக்குள்ள எங்கேயாச்சும் ஒளிய வைடா திருடன் கிருடன் வந்துட போறான்…” என்று கூறியவாறு தன்னுடைய அறைக்கு சென்று விட… ராகவ்வும் தன் அன்னைக்கு கட்டுப்பட்டவன் போல பணத்தை தூக்க முடியாமல் தூக்கி சென்று தன்னுடைய ரூமில் பதுக்கி வைத்துக் கொண்டிருந்தான்.
ஆம் இன்று தான் அந்த சேட்டு இவர்களுக்கு முன்னாள் வந்து மூன்று சூட்கேஸ் நிறைய பணத்தினை வைத்தவர் “மறுபடி கேட்குறேன்.. இந்த டீலுக்கு ஒத்துக்கிறீங்களா…” என்று மறுபடியும் கேட்க.
மாணிக்கவாசகம் ஆம் என்று தலையாட்டினார்.. அதில் சேட்டின் முகம் புன்னகையில் விரிய..
“ம்ம் எனக்கு இந்த கோயம்புத்தூரில் கொஞ்சம் வேலை இருக்கு ரெண்டு நாள்ல வந்து உங்க பொண்ண கூட்டிட்டு போறேன்… அதுவும் இல்லாம எனக்கு இங்க கல்யாணம் பண்ணிக்கலாம் விருப்பம் இல்ல.. உங்களுக்கே தெரியும் இல்ல நான் மும்பைல ஒரு ராஜ வம்சத்தை சேர்ந்தவன் அதனால எனக்கு ராஜ முறைப்படி தான் கல்யாணம் நடக்கணும்… அதனால நான் உங்க பொண்ண கூட்டிட்டு போயி அங்கே மும்பையிலேயே வச்சு கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று கூற,
அதனை கேட்ட மாணிக்கவாசகமும் காஞ்சனாவும் பல்லை இழித்துக் கொண்டு சரி என்று தலையாட்டினர்.. பாவம் அந்த சிறு பெண்ணவளை பற்றி நினைக்கா அங்கு யாருமே இல்லை,,, ரமணியோ கிட்டத்தட்ட மூன்று நாட்களாக கோமா நிலையில் தான் இருக்கிறார்.. அவரின் பேத்தியின் நிலை அவரை இப்படி கொண்டு வந்திருந்தது.. மருத்துவரையும் வரவைத்து பார்த்து விட்டாயிற்று மருத்துவரோ மாணிக்கத்தை பார்த்து இல்லை என்று தலையசைத்தவாறு “கொஞ்சம் உயிர் மட்டும்தான் ஓட்டிக்கிட்டு இருக்கு.. அதுவும் இன்னைக்கு போகுமோ இல்ல நாளைக்கு போகுமோ” என்று கையை விரித்துவிட்டு சென்றுவிட…
மாணிக்கவாசத்திற்கு தங்களுடைய அன்னையை நினைத்து கவலைப்பட எல்லாம் நேரமில்லை… எப்படி இந்த பணத்தை எங்கு ஒழித்து வைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்க… ராகவ்வும், காஞ்சனாவும் எங்கே இடம் வாங்கலாம் எங்கு நகை வாங்கலாம் என்றே திட்டம் தீட்டி கொண்டிருந்தார்கள்…