Home NovelsE2K Competition (ஏந்திழையின் காதல் கொண்டாட்டம்)முரடனின் மான்விழி – இறுதி அத்தியாயம்

முரடனின் மான்விழி – இறுதி அத்தியாயம்

by Competition writers
4.6
(14)

அவள் ரிசல்ட் என்று சொன்னவுடன் அவன் புரியாமல் என்னவென்று அவளிடம் மறுபடியும்  என்ன ரிசல்ட் என கேட்க… 

 

“ இன்னைக்கு தான் பிளஸ் டூ ரிசல்ட் வருது ….உங்களுக்கு தெரியுமில்ல .., சாரி சாரி உங்களுக்கு எப்படி தெரியும்..?  நீங்க தான் கிராமத்தில் இருக்கீங்களா …!விவசாயம் தானே பாக்குறீங்க..,  அதனால உங்களுக்கு எப்படி தெரியும் … சாரி நான் தெரியாமல் சொல்லிட்டேன்….” என்று சொல்லியவள் இன்னைக்கு எனக்குரிய பிளஸ் டூ ரிசல்ட் வருது … அதனாலதான் நான் கல்யாணம் அப்படிங்கற ஒரு டென்ஷன்ல மொத்தமா மறந்துட்டேன்..  தூங்கிக்கிட்டு இருக்கும்போது தான் திடீர்னு ஞாபகம் வந்து முழிச்சு பார்த்தால் இன்னைக்கு தான் டெஸ்ட் நியாபகம் வந்தது ,  டேட் ரிசல்ட்ம் நியாபகம் வந்துச்சு… என்று  அவள் சொல்ல… 

 

 என்னது பிளஸ் 2 குரிய ரிசல்ட் … !!! அப்போ நீ 12 தான் முடிச்சிருக்கிறியா !!!! என்று அவன் அதிர்ச்சியாக அவளை பார்த்து கேட்க… 

 

 “ஆமா…!!!  என்று தலையை குனிந்து கொண்டு தலையசைத்தவள்…  ஒன்னும் கவலைப்படாதீங்க … இன்னும் நான் காலேஜ் எல்லாமே படிப்பேன் … அதனால பிரச்சனை இருக்காது” என்று வேகமாக தன் 12வது தான் படித்திருக்கிறோம் அதனால் தான் அவன் கவலை அடைகிறான் என்று உணர்ந்து கொண்டு அவள் வேகமாக அவனுக்கு பதில் சொல்ல… 

 

 அப்போ உன்னோட வயசு 17 தான் ஆகுதா…!!!  இன்னும் நீ மேஜர் கிடையாதா என்று அவன் சொல்லிக்கொண்டு அச்சச்சோ இந்நேரம் நம்மளோட கல்யாணம் ஒரு போலீஸ் கேஸ் ஆகி இருக்குமே !!!! என்று வேகமாக அவன் சொல்ல…. 

 

 “இல்லை அதெல்லாம் கிடையாது … எனக்கு வயசு 19 ஆகுது ஒன்னும் பிரச்சனை இல்ல…   கல்யாணம் பண்ண போலீஸ் ஆகாது”என்று அவள் வேகமாக சொல்ல 

 

“என்ன விளையாடுறியா ..!!! 19 வயசுதான் ஆகுதுன்னு சொல்ற..?  என்னோட வயசு என்னன்னு தெரியுமா எனக்கு  27 வயசு ஆகுது…  ஆனா உனக்கு இப்போதான் 19 வயசு…  என்ன இருந்தாலும் நீ என்ன விட ரொம்ப சின்ன பொண்ணு… எனக்கு தான் தெரியாது ஆனால் அத்தைக்கு தெரியும் இல்ல உன்னோட வயசு என்னன்னு …!!! அதையும் மீறி எதுக்கு கல்யாணம்னு செஞ்சாங்க” என்று கோபப்பட்டு கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்… 

 

 அத்தை….  என்று அவன் அந்த ஹாலில்  இருந்து கூக்குரல் இட…. 

 

“ என்னப்பா என்ன ஆச்சு ..? என்று பதறி கொண்டு ராஜ்குமார் வர …, அதே நேரம் ராகினியும் என்னாச்சு மாப்பிள்ளை ..? என்னோட பொண்ணு ஏதாவது தப்பு பண்ணிட்டாளா …?” என்று பயந்து கொண்டு ராகினி சற்று பதட்டத்துடன் கேட்க… 

 

 அத்தை,  மாமா நீங்க இந்த மாதிரி செஞ்சு இருப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல..!!!  ஒரு சின்ன பொண்ண போய் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க ..? உங்களுக்கு அப்படி என்ன அவசரம்..?  ஏன் இந்த மாதிரி பண்ணுறீங்க..? அந்த நேரம் கல்யாணம் நடக்கலடி இன்னும் எனக்கு எப்போவது நடத்துற போகுது… ஆனால் நீங்க ஏன் இந்த மாதிரி பண்ணீங்க …?  என்று அவன் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்களிடம் கேட்க… 

 

“அது அது வந்து மாப்பிள்ளை … நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க … சின்னம்மா வந்து கேக்குறப்போ என்னால மறுப்பு சொல்ல முடியல….  அதுவும் இல்லாம பாப்பாவுக்கு இப்பதான் 19 வயசு ஆகுதுன்னு சின்னம்மா கிட்ட எப்படி சொல்ல முடியும்..?  சின்னம்மாவா தான் பெரியவங்க நம்ம குடும்பத்துக்கே,  அவங்களோட வார்த்தையை எங்களால் மீற முடியாது….  எங்களோட கல்யாணம் எப்படி அப்படின்னு உங்களுக்கே நல்லா தெரியும் … என்னோட பொண்ணால ஒரு சொந்தம் எங்களுக்குன்னு வருது அப்படின்னா கண்டிப்பாக என்ன வேணாலும் செய்யலாம்…  என்னோட பொண்ணு கிட்ட கேட்டேன் என்னோட பொண்ணு சரின்னு சொன்னதுனால தான் நான் உங்களுக்கு என்னோட பொண்ண கல்யாணம் செஞ்சு கொடுத்தேன்…  அதுவும் என்னோட சின்னம்மாவோட வளர்ப்பு , எந்த விதத்திலையும் போய்க்காது எங்க அக்காவோட வளர்ப்பு நல்லபடியா தான் இருக்கும்…  அப்படின்னு நம்பி தான் என்னோட பொண்ணு உங்களுக்கு கொடுத்தேன்”  என்று குனிந்து கொண்டே ராஜ்குமார் சொல்ல… 

 

 “என்னத்த மாமா தான் இந்த மாதிரி பேசுறாங்க .., நீங்களும் அமைதியா இருக்கீங்க ..? உங்க பொண்ணு ரொம்பவே சின்ன பொண்ணு ., அந்த பொண்ணுக்கு போய் கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க..?  என்னோட வயசு 27 ஆகுது நான் கல்யாணம் பண்ணா என்ன விட ஒரு வயசு ரெண்டு வயசு சின்ன பொண்ணு தான் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்…  ஆனா இந்த அளவுக்கு ரொம்ப சின்ன பொண்ணா இருக்குது”  என்று ராகினியிடம் சொல்ல….  

 

“ மன்னிச்சிடுங்க மாப்பிள இது எல்லாமே..  இப்போ உள்ள காலத்துல சகஜம் தான் ஆனா நீங்க இந்த மாதிரி எதிர்பார்த்து இருப்பது எனக்கு தெரியாது” என்று ராகினி சொல்ல.. 

 

“ சரி அத்தை அவள் வயசு 19 னு சொல்றான் ஆனா இன்னைக்கு தான் பிளஸ் டூ ரிசல்ட் னு சொல்ற ரெண்டு வருஷம் …”என்று ஒன்றுமே புரியாமல் விதுரன் கேட்க… 

 

 ‘ பாப்பா ரெண்டு வருஷம் ஸ்கூல் போகல .., ஒரு சின்ன ஆக்சிடென்ட் அவங்க அப்பாவுக்கு .., அதனால போகமாட்டேன் அப்படின்னு அவங்க அப்பா கூடவே இருந்து பாத்துட்டு அதுக்கு அப்புறம் தான் வம்படியா போக வச்சது” என்று ராகினி சொன்னவுடன் விகிதாவை பார்க்க அவளோ தலையை குனிந்து கொண்டு அமைதியாக நின்றாள்….. 

 

“ சரிங்க  அத்தை இன்னைக்கு நைட்டு நான் ஊருக்கு கிளம்புறேன்… கோச்சுக்காதீங்க தப்பா எடுத்துக்காதீங்க…  எனக்கு காலேஜ்ல ஒரு வேலை இருக்குது … அதை கண்டிப்பா நான் முடிச்சாகணும் … திடீர்ன்னு இன்ஸ்பெக்ஷன் அப்படின்னு சொல்லிட்டாங்க சோ அதனால நீங்க தப்பா எடுத்துக்காதீங்க கண்டிப்பா நான் அந்த வேலை முடிஞ்சு அடுத்து வர லீவுல உங்க வீட்டுக்கு வந்துடறேன்…  சாரி நம்ம வீட்டுக்கு வந்துறேன் அத்தை என்று அவன் சொல்ல… 

 

 “ என்னது காலேஜ் ..!!! அங்கே ஏதாவது…” என்று எப்படி கேட்பது என புரியாமல் ராஜ்குமார் சற்று விழித்துக் கொண்டே பேச… 

 

 “ஆமா நான் என்ன வேலை பார்க்கிறேன்..?  என்று உங்களுக்கு தெரியாதா ..? என்று அவன் அதிர்ச்சியாக கேட்க…  அவர்கள் மூவரும் இல்லை” என்று தலையசைத்தனர்… 

 

 நீங்க விவசாயம் பார்க்கிறதா சொன்னாங்க என்று காதம்பரி பாட்டியுடன் பேசியதை வைத்து ராகினி சொல்ல…. 

 

“நான் காலேஜ்ல ப்ரொபோசரா இருக்கேன் கெமிஸ்ட்ரி ப்ரொபோஸ்ரா இருக்கேன் …. அப்புறம் அக்ரி கல்ச்சர் வேலையும் தெரியும் ….  அந்த ப்ரொபோசர் வேலை முடிஞ்ச உடனே வயல்காட்டுக்கு வந்து வயல் வேலையும் பார்ப்பேன்….  எனக்கு அது ரொம்பவே இஷ்டம். ஆனால் அதனால படிச்ச படிப்புக்கு ப்ரொபசர் வேலை பார்க்கிறேன்….  ரெண்டுமே எனக்கு ரொம்பவே இஷ்டம்….  ஆள் இல்லாத நேரத்தில் நானே போய் பாத்துக்குவேன் .., ஆள் இருக்கிற நேரத்துல அவங்கள பாத்துக்க சொல்லுவேன். அவ்வளவுதான் அத்தை நானு … அப்புறம் இப்ப சொந்தமாக வீடு கட்டிக்கிட்டு இருக்கேன் …, அது பழைய வீடியோ இருக்கிறதுனால என்னோட வரப்போற மனைவிக்கு புது வீடு கட்டணும் அப்படின்னு கட்டிக்கிட்ட இருக்கேன் … ஆல்மோஸ்ட் முடிஞ்சிருச்சு இன்னும் ஒன் வீக்ல பால் காய்ச்சுற மாதிரி இருக்கும் …. அத்தை” என்று அவன் சொல்ல தன்னுடைய மருமகனை பெருமையாக பார்த்தார் ராஜ்குமார்…  அதே நேரத்தில் ராகினியும் சற்று வருத்தத்துடன் பார்த்தார் இப்படிப்பட்டவனை போய் தன் தவறாக நினைத்து விட்டோமே..!!  தன்னுடைய கணவன் சொன்னது போல் வயல் வேலை பார்த்தால் என்ன..?  அதுவும் உசத்தி தானே ..? இப்பொழுதுதான் ராகினிக்கு புரிந்தது… 

 

“என்னது…!!!  நீங்க காலேஜ் டீச்சர் … அச்சச்சோ !!!! அப்ப ஒரு வாத்தியாரை தான் நான் கல்யாணம் செஞ்சு இருக்கேன்னா!!!!” என்று அவள் வருத்தப்பட்டு கொண்டே கேட்க… 

 

 அவனும் ஆம் என்று சொல்ல … 

 

“உண்மையாவே நீங்க கெமிஸ்ட்ரி தானா..?  எனக்கு கெமிஸ்ட்ரி சுத்தமா வராது…  நீங்க உண்மையாவே கெமிஸ்ட்ரி தானா..?” என்று அவள் அதிர்ந்து அவனிடம் கேட்க … 

 

அவனும் மறுபடியும் ஆம் என்று தலையசைக்க… 

 

 அவள் அதிர்ச்சியாக கேட்டதே நினைத்து ராஜ்குமாருக்கும் ராகினிக்கும் சிரிப்பு வர…  ஏன் விதுரனுக்கும் தான் சிரிப்பு வந்தது ஆனால் சிரிப்பை அடக்கி கொண்டு புருவங்கள் சுருங்க அவளை பார்த்து ஏன் அதுல என்ன பிரச்சனை உனக்கு ..? என்று அவளிடம் கேட்க…. 

 

“ சரியா போச்சு போங்க எனக்கு கெமிஸ்ட்ரி வாத்தியார்ன்னா  சுத்தமா பிடிக்காது … எப்ப பார்த்தாலும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சிய உர்ருன்னு வச்சிருக்காங்க…  அவங்க கெமிஸ்ட்ரி என்றால் பெரிய ஹெட்டு அப்படிங்கற மாதிரி ஹெட் வெயிட்டு அவங்களுக்கு பிடிச்சிருக்கும்…  ஒரு வேலை நீங்களும் அதனாலதான் முறைச்சு பார்க்கும்போது அப்படி இருக்கீங்களா கெமிஸ்ட்ரி படிச்சதுனால தான்..” என்று அவளும் அவனிடம் சாதாரணமாக கேட்க … 

 

“அவனும் கோபம் கொண்டு முறைத்துக் கொண்டே அவளிடம் எல்லாரும் அப்படி கிடையாது சரியா…  அவங்க எல்லாரும் கரெக்டா இருக்கணும்னு நினைப்பாங்களே தவிர …, ஹெட் வெயிட் பிடிச்சவங்க கிடையாது”என்று அவன் அவளிடம் சொல்ல…. 

 

“என்ன பேசணும்னு தெரியாம தான் பேசிக்கிட்டு இருக்கியா ..? விஹிதா …” என்று ராகினி சற்று சத்தமிட…  அதைக் கேட்ட விதுரன்,  அத்தை இப்ப எதுக்கு அவளை திட்டுறீங்க..?  அவர் சும்மா நார்மலா ஜாலியா தானே பேசினா அதை ஏன் நீங்க தப்பா எடுத்துக்கிடறீங்க ப்ளீஸ் அவ பேசுறது எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க … அவ என்கிட்ட தானே பேசுறா,  அவ சாதாரணமா தான் பேசுற …அப்புறம் ஏன் நீங்க இந்த மாதிரி தப்பா எடுத்துக் கொள்றீங்க ..? அவ இப்படி பேசுறது தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு”என்று அவளைப் பார்த்துக் கொண்டே அவன் சொல்ல… 

 

 “ரொம்ப தான் … எங்க அம்மாவை கைக்குள்ள போட்டுக்கிட்டு எனக்கு சப்போர்ட் பண்ற மாதிரி,  எங்க அம்மாவ நல்ல கைக்குள்ள போட்டுக்கிட்டான்… எங்க அம்மாவ நல்லா ஐஸ் வைக்கிறான் பாருங்க”  என்று முறைத்துக் கொண்டு அம்மா நான் ரிசல்ட் பார்க்க என்னோட ஃப்ரெண்ட் வீட்டுக்கு போறேன்…  என்று மணியை பார்த்துக் கொண்டே அவள் சொல்ல… 

 

“ என்ன விளையாடுறியா இதுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் ஆகல…  அதனால அங்க போறேன்னு  இங்க போறேன்னு சொல்லி கழண்டுட்டு போகிற….  ஆனா இப்போ கல்யாணம் ஆயிடுச்சு…  வீட்ல மாப்பிள்ளை இருக்கு….  அதை வச்சுக்கிட்டு இப்படி பிரிண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க..?” என்று எப்பொழுதும் போல் ராகினி அவளை திட்ட… 

 

 “ அம்மா என்ன விளையாடுறியா ..? ரிசல்ட் பார்க்க என்னோட பிரண்டு வீட்டுக்கு நான் போவேன் … அவ்வளவுதான் கல்யாணம் என்பது நேத்து வந்தது….  அதுக்காக என்னால பிரண்டு வீட்டுக்கு எல்லாம் போகாம இருக்க முடியாது” என்று  விகிதாவும் ராகினி இடம் சண்டையிட… 

 

‘ அத்த விடுங்க அவ போகட்டும் கல்யாணம் என்கிற பெயரில் அவளை கட்டி வைக்காதீங்க…  அப்புறம் அம்மு குட்டி நீங்க ரிசல்ட் பார்க்க தான் உன்னோட பிரெண்ட் வீட்டுக்கு போறேன் அப்படின்னு கண்டிப்பா ரிசல்ட் நானே உனக்கு பார்த்து தாரேன் … அப்புறம் ரிசல்ட் பாத்துட்டு ரெப்ரஷ் ஆயிட்டு உன்னுடைய பிரண்டு வீட்டுக்கு போ … நீ எப்படி இருக்கன்னு  முதல்ல உன்னோட முகத்தை கண்ணாடில பாரு…,  இப்படியே தூங்கி எந்திரிச்சதோடு இன்னொருத்தவங்க வீட்டுக்கு போக கூடாது” என்று கணவனாக விதுரன் சொல்ல… 

 

“ அவன் சொல்லியது ஏனோ விகிதாவிற்கு சரி என்று பட வேகமாக ரூமிற்கு சென்றவள் ரெபிரசாக்கி விட்டு நீங்களே ரிசல்ட் பார்ப்பீர்களா..?” என்று அவனிடம் கேட்க அவனும் ஆம் என்று சொன்னவுடன் அவளின் டேட் ஆப் பெர்த்தையும் நம்பரையும் சொல்ல … அதுவு லோடு ஆகிக்கொண்டே இருந்தது… 

 

“சிறிது நேரத்தில் அவளின் மார்க்கு வர…  அதை பார்த்தவனின் கண்களோ அதிர்ச்சியில் விரிய வேகமாக அவளிடம் அந்த மார்க் ரிசல்ட்டை காண்பிக்க அவளும் அவனே கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு நினைச்ச மாதிரியே மார்க் அதிகமா வந்துடுச்சு” என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளியில் வந்தவள் தன்னுடைய மார்க்கை தந்தையிடமும் தாயிடமும் சொல்ல அவர்களும் சந்தோஷப்பட்டு கொண்டு சாமியை கும்பிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டு எல்லாம் இன்னும் நல்லதுதாமா…  இன்னுமே உன்னை காலேஜ்ல சேர்க்கறது படிக்க வைக்கிறதுதான் மாப்பிள்ளை பார்த்துக்கும்….  அந்த பொறுப்பு எல்லாமே மாப்பிள்ளையோடது என்று அவர்களும் சொல்ல அவளும் முகத்தை ஒரு என்று வைத்துக்கொண்டே நான் அங்கெல்லாம் போக மாட்டேன்..  என்று தூக்கி வைத்துக்கொண்டு…. 

 

 “அப்படி எல்லாம் சொல்லக்கூடாது … இங்க பக்கத்துல தானே இருக்குது … நாங்க நினைச்சா அங்க வந்து உன்ன பாக்க போறோம் … நீயும் அங்கதான் இருக்கணும் … மாப்பிள்ளை கிட்ட அடம் பண்ண கூடாது இனிமே நல்ல பிள்ளையா சுமத்து பிள்ளையா இருக்கணும் சரியா” என்று ராகினி எப்பொழுதும் போல் தன் மகளுக்கு சொல்ல…. 

 

 இங்கு அறையில் இருக்கும் விதுரனும் அதிர்ந்து இருந்தான் ….  அவள் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிடும்போது ஏனெனோ ஆடவனுக்கு ஒரு மாதிரியாக என்னவென்று சொல்ல முடியாத உணர்வு ஒன்று ஆட்கொள்ள எப்படி அந்த உணர்வினை வெளிக்காட்டுவது … என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க … அதே நேரம் முகத்தை உர் என்று வைத்துக்கொண்டு ரூமிற்குள் வந்தவள் அவன் ஏன் அப்படி இருக்கிறான் … என்று தெரிந்து கொண்டு சாரி அது தெரியாம சந்தோஷத்துல … என்று அவள் தான் செய்ததை வைத்துதான் அவன் அப்படி இருக்கிறான் என உணர்ந்து கொண்டவள் அவனிடம் கேட்க…. 

 

“வேகமாக அவளின் பக்கத்தில் வந்து அவளை கட்டி அணைத்தவன்..,  ரொம்ப தேங்க்ஸ் டி பொண்டாட்டி நீ இப்படி பண்ணுறப்போ நான் பேசுனது தப்பு அப்படின்னு நீ எனக்கு நல்லாவே புரிய வச்சுட்டடி … இனிமே நான் அந்த மாதிரி தப்பி தவறி கூட உன்கிட்ட பேசமாட்டேன்…. உன்கிட்ட மட்டும் இல்ல வேற யார்கிட்டயும் அந்த மாதிரி பேச மாட்டேன் ப்ளீஸ் …. நீ இந்த மாதிரி ஜாலியா இரு .., எனக்கு இதுதான் ரொம்ப புடிச்சிருக்கு ப்ளீஸ் டி பொண்டாட்டி” என்று அவன் சொல்ல அவளோ தலையை மட்டும் அசைத்தல் … 

 

“ காதம்பரி பாட்டிற்கு ஃபோன் போட்டு அவள் மார்க்  என்ன செய்கிறாள்”என்று அனைத்தையும் அவன் போனில் சொல்லிக் கொண்டிருக்க காதம்பரிபாட்டியும் ரொம்ப நல்லதுப்பா…  நம்ம வீட்டுக்கு மருமக வந்த ராசி…  என்று அங்கு ஒரு மாடு கன்று குட்டி போட்டு இருப்பதையும் காதம்பரி பாட்டி சொல்ல … அதைக் கேட்டவனின் முகமோ புன்னகை செய்ய…  வேகமாக அந்த போனை வாங்கியவள் அடுத்து காதம்பரி பாட்டியிடம் மணி கணக்கில் பேச ஆரம்பித்தாள்…. 

 

“பேசி முடித்தவள் அவனிடம் போன் கொடுத்து விட்டு .., இருந்தாலும் நீங்க ஒரு ப்ரொபோசர் அதனால அந்த ப்ரொபோஸர் தனத்தை எல்லாம் என்கிட்ட காட்டக்கூடாது…  நான் எப்படி இருப்பேனோ அப்படித்தான் இருப்பேன் … இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு இப்பவே சொல்லிட்டேன் அந்த மாதிரி எல்லாம் எதுவும் சொல்லக்கூடாது..,  கண்டிஷனும் போடக்கூடாது சரியா” என்று அவனிடம் சொல்ல அவளோ தலையை அசைத்துக் கொண்டு சரி பொண்டாட்டி என்னமே அந்த மாதிரி எல்லாம் இருக்க மாட்டேன் ஆனா நீ மட்டும் ஒழுங்கா இருக்கணும் எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கணும் .., எல்லாமே செய்யணும் … என்று அவன் சொல்ல அவனைப் பார்த்த முறைத்துக் கொண்டு சரி என்று…. சொன்னாள்… 

 

“ அப்புறம் நீங்க யாரையும் லவ் பண்றேன் … டிவோஸ் வேணும் அப்படின்னு கேட்டீங்க … அது எப்படி இதெல்லாம் இருந்தா..? அப்புறம் எப்படி நான் கொடுக்க முடியும் ..?”என்று அவள் அவனை பார்த்து முறைத்துக் கொண்டே கேட்க… 

 

 “ அய்யோ மகராசி அப்படியெல்லாம் எதுவும் கிடையாது…  நான் உன்னை வெறுப்பேத்துவதற்காக தான் அந்த மாதிரி எல்லாம் சொன்னேன்….  சத்தியமா என்னோட வாழ்க்கையில அப்படிப்பட்ட நபர் யாருமே கிடையாது … தயவுசெய்து நீ அதை எல்லாமே தப்பா எடுத்துக்காத,  என்னோட பொண்டாட்டி … என்னோட வருங்காலம்..  எல்லாமே நீ ஒருத்தி தான் , என்னோட நிகழ்காலமும் நீ ஒருத்தி தான் , இதுக்கு அப்புறம் யாருமே கிடையாது டி பொண்டாட்டி”என்று சொல்லிக் கொண்டே அவளின் நெற்றியில் முத்தமிட்டவன் தயவு செய்து இந்த மாதிரி எல்லாம் எதுவும் நினைக்காதே…  என்று சொல்லிக் கொண்டே அவளை கட்டி அணைத்துக் கொண்டான்… 

 

“ சாரிடி பொண்டாட்டி  என்னோட மனசார அந்த மாதிரி வார்த்தையை நான் சொல்லவில்லை…  சொன்னதுக்கு அப்புறம் தான் ஏண்டா சொன்னோம் அப்படின்னு தெரிஞ்சது … நான் கோபத்துல இருக்கும்போது என்ன பேசுறோம் , எப்படி பேசுறோம் அப்படின்னு கொஞ்சம் கூட தெரியல …  உன்கிட்ட கோபத்தை காட்டாமல் இருப்பதற்கு முயற்சி செய்கிறேன்…  அப்படியே கோபத்தை காட்டுனாலும் என்னை விட்டு தயவுசெய்து போயுறதா …  இந்த மாதிரி பேசாமையும் இருக்காத…  நீ பேசாம இருக்கறதுனால எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும் ப்ளீஸ் டி பொண்டாட்டி…  என்ன மன்னிச்சிடு இந்த புருஷனை மன்னிச்சிரு”என்று சொல்லிக் கொண்டே அவளை கட்டி அணைத்து இருக்க… 

 

 “ஞாபகம் இருக்கட்டும் என்னதான் நீங்க பெரிய முரடானா இருந்தாலும் .. என்கிட்ட நீங்க அடிபணிந்து தான் ஆகணும் ஞாபகம் இருக்கட்டும் … அப்புறம் என்கிட்ட வர்றப்ப ப்ரொபோஸர் அப்படிங்குற ஒரு முரட்டுத்தனமான குணத்தை அப்படி தூக்கி வச்சுட்டு என்னோட புருஷனா நீங்க அடங்கி போய் தான் இருக்கணும்” என்று சிறு குழந்தையாக அவள் சொல்ல அவனும் தலைய அசைத்து கொண்டே ஆகட்டும் மகாராணி  என சொல்லி  சிரித்துக் கொண்டே…. 

 

“க்யூட் டி பொண்டாட்டி .. நீ உண்மையாவே … அழகு பொண்டாட்டி உன்னை போய் அந்த மாதிரி பேசிட்டேனே….. எனக்கு அதை நினைச்சா தாண்டி கஷ்டமாக இருகுது”என்று அவன் வருத்தப்பட்டு கொண்டே சொல்ல… 

 

 “அப்படியா கஷ்டமா இருக்கு அப்படின்னு நீங்க இப்ப விலகி போக போறீங்களா..?”  என்று சொல்ல

 

 அவனும் வேகமாக இல்லை என்று தலையசைத்தான் சிரித்துக் கொண்டேன்… “ இந்த கஷ்டத்திலும் இஷ்டம் இருக்குடி” என்று சொல்லிக்கொண்டு அவளை நெற்றியில் முத்தமிட்டான்… 

 

 இனிவரும் காலங்களில் அவன் வாழ்க்கையில் எல்லாமே வசந்தம் தான்…  முரடனாய் இருந்தவளை மான் விழியால் வந்து அவன் வாழ்க்கையில் துள்ளி குதித்து , அவனின் முரட்டுத்தனத்தை அடக்கிய பெண்ணவள் விஹிதா  …

 

மான்விழி வந்து விட்டாள் …💕

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

3 comments

Competition writers September 7, 2025 - 9:46 pm

hai dear frnds .. story paduchchuttu eppudi irukkunnu comment pannunga dears

Reply
Sujatha September 22, 2025 - 10:18 am

Story super ha iruku
But episode numbers veliya vara madiri potuiruntha nalla irukum
Each and every time search panra madiri irunthathu

Reply
Competition writers October 4, 2025 - 9:34 am

thankyou sis ….sry sis next time i will change the mistake sis

Reply

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!