முரடனின் மான்விழி

4.3
(9)

அத்தியாயம் மூன்று: 

 

 அதிக நாள் ஆனதால் சிறிது முந்தைய எபிசோடை பார்த்துவிட்டு வருவோம்

 

( கல்யாண மாப்பிள்ளையாக விதுரன் உட்கார ….கல்யாண பொண்ணாக இருக்கும் பெண்ணவள், கல்யாணம் வேண்டாம் என்று இடைநிறுத்த திடீரென விகிதாவை கல்யாண பெண்ணாக உட்கார வைத்தனர் அவளின் அம்மா அப்பா….பாட்டியின் பேச்சால் … 

 

கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த அவளின் கழுத்தில் விதுரனால் தாலி கட்டப்பட…,அவர்கள் குடும்பமாக கோவிலுக்கு சென்று சூரத் தேங்காய் உடைத்து விட்டு வீட்டிற்கு போகலாம்.., மீத சம்பிரதாயம் எல்லாம்  வீட்டில் போய் பார்த்துக் கொள்ளலாம் என்று பாட்டி சொல்ல அதற்கேற்ப காரில் அனைவரும் சென்று கொண்டிருந்தனர்… 

 

 ஹோட்டலில் சாப்பிட்டு காரில் ஏறிய விஹிதாவோ தூக்கத்தில் அவனின் மேல் சாய்ந்து கொள்ள..,அவனும் அவளை நிமிர்த்தி உட்கார வைக்க…மறுபடியும் அவளோ அவனின் மடியில் சாய்ந்து படுத்து விட்டாள் தூக்கத்தில்…. அவளின் கை அவனின் ஆண்மையில் பட ..,  கோபம் கொண்ட ஆவனோ அவளை வேகமாக நிமிர்த்தி உட்கார வைத்தான் ) 

 

இனி , 

 

அவளின் பக்கத்தில் பாட்டி மறுபுறம் இருப்பதால் மெதுவாக அவளின் காதுக்கு மட்டும் கேட்குமாறு பேச ஆரம்பித்தான்…

 

“ உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல.., வந்த இடத்துல எப்படி இருக்கணும்.. அப்படின்னு ஒரு பேசிக் சென்ஸ் கூட தெரியல, பகல் நேரத்துல தூங்கி வலியுற.., இவ்வளவு சோம்பேறியா இருக்குற.., இப்படி எல்லாம் இருக்குறதுக்கு நீ வேற ஆள் பாரு…. ஆம்பள பக்கத்துல உக்காந்துட்டா போதும்…உங்களோட பார்வையும் உங்களோட கையும் அங்க இங்க போகும்..இதே தூக்கத்துல  நாங்க ஏதாவது ஒன்னு உங்கள பண்ணிட்டா மட்டும் குற்றம்…, குறை குற்றம்… என்கிற மாதிரி சொல்ல வேண்டியது…. ஆனா நீங்க பண்ணா அது தெரியாம பண்ண மாதிரி  காமிச்சுக்க வேண்டியது அப்படித்தானே ” என்று அவளிடம் சீறியவன் “ச்ச என்ன பொண்ணோ “ என்று முனங்கி கொண்டே  கடுப்பாக தன்னுடைய போனை பார்க்க ஆரம்பித்தான்…

 

 “இவன் என்ன லூசா…!!!!  நான் தூக்கத்துல அவன் மடிமேல படுத்ததுக்கு இவ்வளவு பேச்சு பேசுறான்…சரியான அகங்காரம் புடிச்சவனா இருப்பான் போல,அதனாலதான் இவன் இந்த மாதிரி பேசுறான்… ஒரு வேலை இவன் அகங்காரம் புடிச்சவன் ன்னு முன்னகூடியே அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கும் போல, இவனை லைப் லாங் வச்சு  இவன் கூட குப்பை கொட்ட முடியாதுன்னு, அந்த பொண்ணு எஸ்கேப் ஆகி இருக்கு..,எப்படி தான் இந்த பாட்டி மட்டும் இவன வச்சு சோறு போட்டதோ தெரியல”என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டவள் தூக்கம் மொத்தமும் கழைந்து போய், கடுப்பாக உட்கார்ந்து இருந்தால்… அவனின் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதற்கே அவளுக்கு கடுப்பாக தான் இருந்தது…. சிடுசிடுவென்று மூஞ்சியை வைத்திருக்கும் அவனின் பக்கத்தில் உட்கார ஏனோ பெண்ணவளுக்கு பிடிக்காமல் காரை நிப்பாட்ட சொன்னாள்….

 

“என்னம்மா..!!! என்னாச்சு..? எதுக்காக காரை நீ நிப்பட்ட  சொல்ற..? ஏதாவது பிரச்சனையா…?” என்று சற்று பயந்து கொண்டே ராஜ்குமார் கேட்க….

 

“ இல்லப்பா எனக்கு பின்னாடி உட்காருவது ஒரு மாதிரி வாமிட் வர்ற மாதிரியே இருக்குது… கொஞ்சம் ஓரத்துல நான் முன்னாடி உக்காந்துக்குரனே” என்ன சொல்லியவள் “அம்மா நீ பின்னாடி வந்து உட்காரு”  என சொல்லிவிட்டு இறங்க போக……

 

 “இல்லமா பேத்தி இங்கயே உட்க்காரும… இறங்க கூடாது,பொண்ணு மாப்பிள்ளையும் ஒண்ணா தான் உட்காரனும்… நேரா நம்ம வீட்டுக்கு போயிருவோம் பா….அதுக்கு அப்புறம் பொண்ணு வீட்ல தான் ஆக வேண்டிய முகூர்த்தம் எல்லாமே பார்த்துக் கொள்ளலாம்,அவ்வளவுதான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடும்…ஒரு சந்து திரும்பினா நம்ம வீடுதான்” என சொல்லிய பாட்டி,விதுரனின் பக்கம் திரும்பி எப்ப ராசா நம்ம வீட்டுக்கு போறதுக்கு வழி சொல்லுப்பா என்று விதுரனிடம் சொல்ல….

 

 விதுரனும் வீட்டிற்கு போகும் வழியை சொல்ல,அதைக் கேட்ட ராஜ்குமாரும் “அம்மா அதே வீட்டுல தானே இருக்கிறீங்கலா…எனக்கு தான் அந்த வீடு வழி தெரியுமே என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டினார்…

 

“ இவளோட திமிர் தனத்தை காமிக்கிறாள் பாரு…. என் பக்கத்துல இருந்தா,உனக்கு வாந்தி வருதா..?இவ்வளவு நேரம் வராத வாந்தி இப்ப மட்டும் வருதமே,எப்படி எல்லாம் ஏமாத்துற பாரு..!!! சரியான அகங்காரம் புடிச்சவங்களா இருப்பா போல…அதனால தான் இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கிறாள்.. வேணும்னே தான் இவ பொய் சொல்ற, இவ முகத்த பார்த்தாலே தெரியுது….இவளெல்லாம் எப்படித்தான் பொண்ணுன்னு வளர்த்தார்களோ….இல்லை இதெல்லாம் பொண்ணு வரிசையில் கிடையாது”…என்று மனதிற்குள்ளே போனை பார்த்துக் கொண்டே நினைத்துக் கொண்டிருந்தான்…

 

 தான் சொன்னவுடனே சரி என்று ஒத்துக் கொள்ளும் தந்தையோ, இன்று இந்தப் பாட்டி சொன்னவுடன் எதுவும் பேசாமல் அந்தப் பாட்டியின் பேச்சைக் கேட்பது ஏனோ விகிதாவிற்கு சற்று கோபமாக வந்தது… எல்லாம் எந்த எருமைமாடல வந்தது…, என்னை நிம்மதியா தூங்க விட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது..,பெரிய இவன்,அப்படியே ஆண் அழகன்…இவன் மேல சாய்ந்து விட்டா  இவனோட அழகு எல்லாமே குறைஞ்சிடுமாக்கும்….இவன் எல்லாம்” என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டவள் கடுப்பாக தன்னுடைய போனை பார்க்க ஆரம்பித்தால்..

 

 மறுபுறம் பாட்டியும் ராஜ்குமாரும் பேச ஆரம்பித்தனர்….

 

 இல்லப்பா அதே வீடு தான் ஆனா நீ சின்ன வயசுல வந்தது இல்லையா.. அதனாலதான் வழி தெரியுமோ,தெரியாதோ அப்படின்னு சொன்னேன்… என்று காதம்பரி பாட்டி சொல்ல….

 

 “ தெரியும்  சின்னமா…நான் சின்ன வயசுல வந்ததா இருந்தாலும்,என்னால அடிக்கடி வர முடியல… அவ்வளவுதான் மத்தபடி வரக்கூடாது அப்படிங்கறதுனால எல்லாம் கிடையாது, அதுவும் இல்லாம நம்ம ஊரு எப்படி மறக்க முடியும்?” என சொல்லிக் கொண்டே சரியாக வீட்டின் முன்பு நிப்பாட்டினார் ராஜசேகர்….

 

காதம்பரி பாட்டி சொன்னது போல் ஒரு தெருவில் வளைந்து,இன்னொரு தெருவில் வந்தால் காதம்பரி பாட்டியுன் வீடு… இதற்கு இன்னும் கண்டுபிடிப்பின் அஸ்திவாரமாய் அந்த வீட்டின் வெளியில் பந்தல் போடப்பட்டு இருக்க,அந்த பந்தலில் அலங்காரங்கள் வண்ண கலர் ஆடையினால் அலங்காரம் செய்து அந்த பந்தல் நிறைக்கப்பட்டு இருக்க..,அதன் வெளிப்புறத்தில் இரண்டு வாழை மரங்கள் நடப்பட்டு இருந்தது…. பார்த்தவுடனே தெரிந்துவிடலாம்….அந்த வீட்டில் தான் கல்யாணம் என்று….அந்த அளவிற்கு அந்த வீடு வெள்ளை  அடிக்கப்பட்டு அழகாக இருக்க…வெளியில் கோலமும் அந்த வாசல் நிறைந்து போய் இருந்தது….மறுபக்கம் ஸ்பீக்கர்ஸ் செட் இருக்க… அக்கம்பக்கத்தினர் வெளியில் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.. வளர்ச்சி அடைந்தும் அடையாத ஊர் என்று எடுத்துக்காட்டாக சில மாடி வீடுகளும், சில குடிசை வீடுகளும்,தகரம் போட்ட வீடுகளும் இருந்தது….

 

 

 கார் வீட்டின் முன்பு வந்து நின்றவுடன் காதம்பரி பாட்டியோ இறங்காமல் “அம்மாடி ராகினி பக்கத்து வீட்டில மரகதம்னு ஒரு பொண்ணு இருக்கும்… அந்த பொண்ண கூப்ட்டு ஆலாத்தி எடுக்க சொல்லுமா….நான் ஏற்கனவே சொல்லி வச்சுட்டேன், இருந்தாலும் நீ ஒருக்கா சொல்லிருமா” என்று காதம்பரி பாட்டி,காரைனுள் இருந்து கொண்டே முன்னாள் இருக்கும் ராகினியிடம் சொல்ல…

 

 “ஆனா பாட்டி நான் யாரு என்னன்னு தெரியாது…?” என்று ராகினி சற்று தயங்க…

 

 “ஒன்னும் இல்லத்தா, பொண்ணு மாப்பிள்ளை வந்துட்டாங்க ஆராத்தி எடுக்கணும்னு சொல்லு” அந்த புள்ள செய்யும் நான் ஏற்கனவே சொல்லிட்டேன் என்று காதம்பரி பாட்டி சொன்னவுடன் ராகினியோ சரி என்று கீழே இறங்கியவள் காதம்பரி பாட்டி சொன்னது போல் பக்கத்து வீட்டில் பெண்ணை கூப்பிட…..

 

 அந்தப் பெண் வெளியே வரவும் மரகதத்தை பார்த்தால் ராகினி…

 

 பெயருக்கேற்றார் போல் மரகதம் ஒன்றும் 50 வயதிற்கு மேல் உள்ள பெண் கிடையாது….மரகதம் பருவ வயது மங்கையாக இருந்தால்..அவளுக்கு எப்படியும் வயது ஒரு 25 இருக்கும்…. வெளியில் வந்த மரகத்திடம் பாட்டி சொன்னதை ராகினி சொன்னவுடன்,சரி என்று சிரித்துக் கொண்டே… “அவங்கள வர சொல்லுங்க நான் ரெடியா தான் எடுத்து வச்சிருக்கேன்” என்று அந்த மரகதம்  சொல்ல …

 

 ராகினி காதம்பரி பாட்டி பக்கத்தில் வந்து “அவர்கள் ரெடியா எடுத்து வச்சிருக்காங்களாம்..,பொண்ணு மாப்பிள்ளை இறங்க சொன்னாங்க” என்று சொன்னவுடன் மறுபடியும் மேளதாளங்கள் முழங்க பாடல் படிக்க ஆரம்பித்தது. 

 

“மணமகளே மருமகளே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா

குணமிருக்கும் குலமகளே வா வா

தமிழ்க்கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா…”

 

 என்று பாடல் போட்டு இருக்க…, இங்கு விதுரனோ அந்த காரில் இருந்து இறங்க…அதே போல் பின்னால் விகிதா இறங்கினால் கடுப்பாக….

 

 இருவரும் வீட்டின் முன்பு நின்றிருக்க…பக்கத்து வீட்டுப் பெண் மரகதமும் அவர்கள் இருவருக்கும் ஆலாத்தி எடுத்து நெற்றில்,திலகமிட்டு அதை வெளியில் கொட்ட போக… இங்கு ராகினியும் ரெண்டு பேரும் உள்ள வலது காலை எடுத்து வச்சு வாங்க என்று சொல்ல…

 

 அம்மாடி இருத்த என சொல்லிய பாட்டி..,அந்த இது எங்கம்மா என்று மரகதத்திடம் கேட்க…

 

 இதோ ரெடியா எடுத்து வச்சிருக்கேன் பாட்டி என்று சொல்லிய மரகதம்… அவர்களின் முன் ஒரு வாழை இலையை விரித்து அதில்  ஒரு சொம்பு நிறைய பால், ஒரு தட்டில் உப்பு, அரிசி மற்றும் பூ… அதை ரெடியாக மரகதம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க அதைக் கேள்வியாக பார்த்தால் ராகினி….

 

ராகினிக்குமே இது கொஞ்சம் புதிதுதான் ஏனென்றால் அவர்களின் கல்யாணம் ஒரு காதல் கல்யாணம் ஆக இருக்க… இந்த சம்பிரதாயம் எல்லாம் புதிதாக இருக்க… அதனால் அதை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தால் ராகினி…

 

 ரெண்டு பேரும் இங்க பக்கத்துல வாங்கப்பா என்று மரகதம் சொல்ல விகிதாவும் விதுரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே மரகதம் சொன்ன வாசலின் பக்கத்தில் சென்று நின்றனர்…

 

 நீங்க வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி இந்த வாழை இலையில இருக்கிற பொருள் எல்லாத்தையும் ரெண்டு பேரும் உங்களோட கையால இத மொத்தமா கலந்து.., அந்த இலையில் வச்சிருங்கப்பா மூணு தடவை என்று காதம்பரி பாட்டி சொல்ல…

 

 இதெல்லாம் ஏன் பாட்டி நான் செய்யணும்..? இதெல்லாம் செய்றதுக்குன்னு ஒரு ரீசன் வச்சிருப்பீங்களே நீங்க, அது என்ன…? என்று விகிதா கேட்க….

 

 “பெரியவங்க சொன்னா ஏன் எதுக்குன்னு கேட்காமல் செய்யணும்..,அதுதான் ஒரு பொண்ணு குரிய அடையாளம் …..அவங்க எது சொன்னாலும் அது நல்லதா தான் இருக்கும்…. ஆனா இந்த முக்கியமான விஷயம் கூட இவளுக்கெல்லாம் தெரியல” என்று மனதிற்குள் விஹிதாவை திட்டிக் கொண்டிருக்க….

 

அதுவாத்தா பேத்தி” உங்களோட கல்யாண வாழ்க்கை ஒரு இனிப்பாகவும்,சுபிட்சமாகவும் லட்சுமி கடாட்சமாகவும் இருக்கும் அப்படிங்கறது ஒரு நம்பிக்கை” அதனால தான் இதெல்லாம் செய்ய சொல்றாங்க என்று காதம்பரி பாட்டி சொன்னவுடன், கேட்டுக்கொண்டே விகிதாவும் விதுரனும் அதை செய்ய ஆரம்பித்தனர்…

 

மான் விழியால் வருவாள்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!