அரண் 26
இருவரும் படிகளில் இறங்கி கீழே செல்ல அங்கு அவர்களுக்காக காத்திருந்த வைதேகியும், தனபாலும் உண்டு முடித்துவிட்டு எதையோ அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவரும் வந்தவுடன் அமர வைத்து வைதேகி இருவருக்கும் உணவு பரிமாற அற்புதவள்ளிக்கு சும்மாவே சொல்லத் தேவையில்லை இன்று முழுவதும் உண்ணவே இல்லையே அவளுக்கு அடங்காத பசி எடுத்தது. உடனே உணவைக் கண்டதும் வாய்க்குள் அள்ளி எறிந்தாள்.
துருவன் அவள் உணவு உண்பதை பார்த்து தலையசைத்து சிரித்து விட்டு அன்னையிடம்,
“அம்மா நாளைக்கு மார்னிங் நான் அவுஸ்திரேலியா கிளம்புறேன் ஒரு இம்போர்ட்டட் வேர்க் இருக்கு நான் முன்னமே பிளான் பண்ணினது தான் அதனால தானே கல்யாணத்தை நான் அவசர அவசரமா செய்து கொள்ளனும் என்று சொன்னது அதோட போயிட்டு வேலை எல்லாம் முடிச்சுட்டு வர வன் மந்த் ஆகும்..” என்று துருவன் கூற,
வாய்க்கு அருகில் கொண்டு சென்ற உணவை அப்படியே நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் துருவனை நிமிர்ந்து பார்த்தாள் அற்புத வள்ளி.
அவளது பார்வையில் காதல், கவலை, பிரிவுத்துயர், ஏமாற்றம், கோபம் போன்ற ஆயிரம் உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன.
அதனை உணர்ந்தவன் எதுவும் கூற முடியாமல், அன்னையைப் பார்த்து,
“அம்மா நாளைக்கு 2 கான்ஸ்டபிள் வருவாங்க சும்மா ஒரு ஃபார்மாலிட்டிக்கு செக்யூரிட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன் ஒரு பிரச்சனையும் இல்ல அவங்க பாட்டுக்கு வந்துட்டு நிப்பாங்க ஒரு வன் மந்துக்கு கேட்டு இருக்கேன் நான் திரும்பி வார வரைக்கும் கவனமா இருங்க..” என்றதும்,
வைதேகி, “என்னப்பா துருவா கான்ஸ்டபிள் எல்லாம் புதுசா இருக்கு..? இப்படி எல்லாம் முதல் நடந்ததே இல்லையே அதோட நீ தனியாக எங்கேயும் போகத் தேவையில்லை ஆவுஸ்திரேலியாவுக்கு கட்டாயமா அற்புத வள்ளியையும் கூட்டி போப்பா பாவம்
அந்த பொண்ணு கல்யாணம் ஆகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள நீ வெளிநாடு போறேன்ற, இந்த நாலு சுவத்துக்குள்ளேயேதான் அவ இருக்கா
கல்யாணம் முடிஞ்ச கையோட ரெண்டு பேரும் ஒன்னா கோயிலுக்கு போயிட்டு சொந்த பந்தங்கள் வீட்டையும் போகணும் அதுதான் முறை நீ என்னன்னா வெளிநாடு போக போறேன்றா
சரி நீ போ நான் அதுக்கு ஒரு தடையும் விதிக்கல பிசினஸ் விஷயம்ன்னா கட்டாயம் போகத் தான் வேணும் ஆனா நீ அற்புத வள்ளியையும் கூட்டிப் போ வேலை முடிய அங்க சுத்திக்காட்டு
நீங்க ஹனிமூன் போன மாதிரியும் இருக்கும் வேலை முடிஞ்ச மாதிரியும் இருக்கும் 20 நாள் என்ன இன்னும் வன் மந்த் கூடவே ஸ்டே பண்ணிட்டு வரேன்னாலும் பிரச்சனை இல்ல இங்க உங்க அப்பா பிசினஸ பார்த்துக் கொள்ளுவார் ஒரு கவலையும் இல்லை…” என்று மூச்சை பிடித்துக் கொண்டு வேகமாக கூறி முடித்தார்.
“அம்மா நீங்க ஈஸியா சொல்றீங்க ஆனா அங்கேயும் வந்து அவள் நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கணும் காலையில போனா நான் நைட் தான் வருவேன் அங்க ஃபுல் பிஸியா தான் இருப்பேன் ப்ளீஸ்மா புரிஞ்சுக்கோங்க..”
“பரவால்ல நீ அவளையும் கூட்டி போ..” என்று விடாப்பிடியாக ஒற்றைக் காலில் நின்றார் வைதேகி.
வளமை போல வைதேகி துருவனும் ஒரே வடிவத்திற்கு மாறி மாறி சண்டை போட தனபால் அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
அற்புதவள்ளியோ டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல சுவாரசியமாக இருவரும் சண்டை பிடிப்பதை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தாள். அவள் கைதட்டி சிரிக்காத ஒரு குறை மட்டும் தான்.
“அம்மா அது சரி வராது இதுக்கு மேல என்ன கட்டாயப்படுத்தாதீங்க..” என்று கூற,
உடனே தனபால் எழுந்து “வைதேகி..” என்று கட்டளையிடும் குரலில் வைதேகியை அழைக்க, அதற்கு மேல் துருவனிடம் எதுவும் பேசாமல் தனபாலை பார்த்து முறைத்து விட்டு உணவுத் தட்டுகளை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றுவிட்டார்.
‘ச்சே என்ன இது டக்குனு முடிஞ்சிட்டு இன்னும் கொஞ்ச நேரம் சண்டை பிடிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் இந்த மாமாக்கு வேற வேலை இல்ல ரொம்ப நாளைக்கு பிறகு இப்போதான் ஒரு சண்டைய பார்த்து என்ஜாய் பண்ணலாம்னு இருந்தா அதையும் வந்து கெடுத்துட்டார் ஊருல இருந்திருந்தால் ஒரு நாளைக்கு ஆறு, ஏழு சண்டை பார்த்து இருக்கலாம்..’ என்று மனதினுள் எண்ணிக் கொண்டவள், வைதேகியின் பின்னே உதவி செய்ய சென்று விட்டாள்.
தனபாலும் துருவனும் அங்கு தனிமையில் இருந்தனர். தனபால் துருவனைப் பார்த்து,
“நீ ஏதாவது என்கிட்ட சொல்லனும்னு ஆசைப்படுறியா..?” என்று கேட்க,
“இல்லப்பா..” என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து எழுந்து செல்ல முற்பட,
“துருவன் நான் உன் கூட கொஞ்சம் தனியா பேசணும் வா கொஞ்சம் வெளியே காத்தாட போய் பேசுவோம்..”
“சரிப்பா..” என்று தந்தையுடன் தோட்டத்திற்கு சென்றான்.
தோட்டத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்த இருவரும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருக்க, துருவனே முதலில் வாய் திறந்தான்.
“நானே எல்லா விஷயமும் உங்க கிட்ட சொல்லனும்னு நீங்க ஆசைப்படுறீங்க அதனாலதான் இந்த பிடிவாதமான மௌனம் அப்படித்தானே..!” என்று துருவன் கேட்க,
“சபாஷ் என்னோட மகன் என்ன நல்லா புரிஞ்சு வச்சிருக்கானே..!”
“உங்களுக்கு எப்படி எல்லா விஷயமும் காதிற்கு வந்திருக்கும் என்று எனக்கு தெரியும் அப்பா ஆனாலும் அம்மாவுக்கு முன்னுக்கு எதுவும் கேட்கக் கூடாதுன்னு நான் ஒன்னும் பேசல..”
“ஆமா எனக்கு எல்லாமே தெரிய வரமுன்னு உனக்கு முன்னமே தெரியும் அப்படி இருந்தா நீயே என்கிட்ட நேரடியா வந்து சொல்லி இருக்கணும் நான் உன்கிட்ட அதை எதிர்பார்த்தேன் துருவன் நீ அதை செய்யல..”
“கமிஷனர் சார் உங்களுக்கு தான் ரொம்ப நெருங்கினவர் ஆச்சே அவரே எல்லாத்தையும் சொல்லட்டும் என்று விட்டுட்டேன்…”
“ஆமா என்னோட பெஸ்ட் பிரண்டு என்கிட்ட சொல்லாமலா..? சரிடா இந்த குழப்பத்துக்கு ஒரு முடிவு காணனும்..”
“ஆமாப்பா ஆனால் நான் கட்டாயமா ஆஸ்திரேலியா போயே ஆகணும் உங்களுக்கு தெரியும் இந்த மீட்டிங் எவ்வளவு முக்கியம்ன்னு அதோட வன் மந்த் நான் அங்க ஸ்டே பண்ணி தான் எல்லாம் கிளியர் பண்ணிட்டு வரணும்..” என்று துருவன் கவலையுடன் சிந்தித்தபடி கூற,
“நீ முடிச்சிட்டு வா அது என்னன்னு நான் கவனிக்கிறேன் இந்த கான்ஸ்டபிள் எல்லாம் தேவையில்லை இருந்தாலும் உன்னோட மனதிருப்திக்காக இருந்துட்டு போகட்டும்..”
“ஆமாப்பா எனக்கு அங்கே இருக்கும் போது இங்க இருக்கிறவங்களோட சிந்தனையாவே இருக்கும் ஆனா இந்த ரெண்டு கான்ஸ்டபிள் இருந்தாங்கன்னு சொன்னா கொஞ்சம் எனக்கு மனதுக்கு ஆறுதலா இருக்கு அதனாலதான்..”
“ஓகே ஓகே நீ எங்கள நினைச்சு கவலைப்பட தேவையில்லை ஆனால் பிசினஸ் விஷயத்துல நான் எந்த எதிரியையும் விட்டு வச்சதில்ல ஏதோ ஒரு மிச்சம் வெச்சி இருக்கணும்னு அடி மனசுல தோணுது உனக்கு யார் மேலேயும் சந்தேகம் இருக்கா..?”
“இல்லப்பா அப்படின்னு நான் யாரையுமே இதுவரைக்கும் சந்தித்ததில்லை எதிரி என்று சொல்லி யாரும் என்னோட நேரடியா மோதினதும் இல்லை…”
“பிசினஸ்னாலே அப்படித்தான்பா யாருமே நேரடியா மோத மாட்டாங்க மறைமுகமாகத் தான் தாக்குவாங்க நாம எத்தனை பேர பின்னுக்குத் தள்ளிட்டு மேல வாரமோ அத்தனை பேருமே எங்களுக்கு எதிரி தான்..”
“ஆனா எல்லோரும் எங்களோட பிரண்ட்ஷிப்பாத் தானே பழகுறாங்க..”
“அதுதான்ப்பா பிசினஸ் உலகம் நரி கூட்டங்கள் நிறைந்த உலகம் தந்திரமா தான் அவங்க நடந்து கொள்ளுவாங்க நீ இன்னும் அனுபவப்படனும் இன்னும் எவ்வளவு விஷயம் இருக்கு நீ போகப் போக எல்லாத்தையும் அனுபவத்தால புரிஞ்சிப்ப நானும் அது யாருன்னு தேடிப் பார்க்கிறேன் நீ கவனமாகப் போய் வேலையை முடிச்சுட்டு வா..”
“ஓகே பா..”
“சரி வா போகலாம் உங்க அம்மா எங்க என்னோட மகனை காணலன்னு தேடிட்டு இருப்பாங்க..” என்று தனபால் கூறி முடிக்கும் முன்பே வைதேகி அங்கு தேடி வந்து விட்டார்.
“என்ன அப்பாவும் மகனும் ரகசியம் பேசுறீங்க..”
“அதெல்லாம் ஒன்னும் இல்ல பிசினஸ் விஷயமா தான் பேசினாங்க வா போகலாம் இப்போவே லேட் ஆயிட்டு வா மருந்து சாப்பிடணும்..”
“அதெல்லாம் போட்டாச்சு போட்டாச்சு என்னோட மருமக எனக்கு நேரத்துக்கே எல்லாத்தையும் கொடுத்துட்டா..” என்று வைதேகி கூறி மகிழ்ந்தார்.
அப்படியே அனைவரும் உறங்கச் செல்ல துருவன் ஆஸ்திரேலியா செல்வதற்காக தனது உடைகளையும் வேறு பிசினஸ் சம்பந்தமான ஆவணங்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
பாவம் அவனுக்குத் தெரியவில்லை அவனது இனிமையான பயணம் அவனை பெரிய ஆபத்தில் கொண்டு சேர்க்கப் போகிறது என்று…
அடுத்த பதிவில் சந்திப்போம்…