அரண் 14
குளித்து முடித்து காயத்தை சுத்தப்படுத்தி, மருந்து இட்டு அனைத்தையும் செய்து முடித்து இடுப்பில் டவலைக் கட்டிக்கொண்டு நீர் பூத்த மேனியுடன் வெளியே வர,
அந்த அறையை சுற்றி நோட்டமிட்டவாறே அங்கே அற்புதவள்ளி நின்றிருக்க,.
அற்புத வள்ளியை கண்டதும் அதிர்ச்சி அடைந்தவன் உடனே தனது நெஞ்சை இரு கைகளால் மூடிக்கொண்டு மறுபக்கம் திரும்பி நின்றான்.
அற்புத வள்ளியும் இந்தக் கோலத்தில் துருவனை எதிர்பார்க்கவில்லை தான் துருவன் அந்த அறையில் இல்லாத போதே நினைத்திருந்தாள் அவர் குளியலறையில் நிற்கிறார் என்று ஆனால் இவ்வாறு வெற்று மேனியுடன் வருவார் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவரைக் கண்டவுடன் கண்கள் தானாகவே வெட்கத்தில் மூடிக்கொண்டன.
கைகள் மெதுவாக நடுக்கம் கண்டன அவனது உருவம் வள்ளியின் மனதில் திரையாக படிந்தது.
உடனே அருகில் இருந்த ஒரு டி-ஷர்டை எடுத்து மேலே அணிந்து கொண்டு திரும்பியவன், அற்புத வள்ளிக்கு அருகில் வந்து செருமினான்.
அவன் செருமியவுடன் ஒரு கண்ணைத் திறந்து மெல்ல அவனைப் பார்த்து மீண்டும் வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.
“ஏய் வடிவா பாரு.. நான் டிரஸ் போட்டுட்டேன் இப்ப கண்ண திறக்கலாம்..” என்று அவன் கூறிய பிறகு தான் மெதுவாக இரு கண்களையும் திறந்து மேலிருந்து கீழ் வரை அவனை அளவெடுத்துப் பார்க்க,
“என்ன அற்புதம் சொல்லிட்டு உள்ள வாரதில்ல உன்னை யார் இங்க வர சொன்னா நான் தான் சொல்லி இருக்கேன்ல்ல என்னோட ரூமுக்கு வரக்கூடாதுன்னு..” என்று துருவன் கேட்க,
“இல்லைங்க அத்தை தான்..” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே வைதேகி கையில் பாலுடன் அறைக்குள் வந்தார்.
“என்னடா என்ன என்னோட மருமகளை வைத்து மிரட்டிக்கொண்டு இருக்கிறியா..”
“அச்சோ உங்க தங்க மருமகள நாங்க ஒன்னும் சொல்லல இப்ப ஏன் என்னோட ரூம்ல வந்து இருக்காங்கன்னு விசாரிச்சேன் வேற ஒன்னும் இல்ல..” என்று மிடுக்காக பதில் கூறினான் துருவன்.
அவ இன்றிலிருந்து இந்த ரூம்ல தான் தங்குவா அவங்களோட அம்மா, அப்பா எல்லாரும் வந்திருக்காங்க என் ரூம்ல என்னோட தங்கினா அவங்க என்ன நினைப்பாங்க..”
“பையன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சா இப்படித்தான் நடக்கும்னு நினைப்பாங்க..” என்று வேகமாக வந்தது துருவனின் பதில்.
“அப்படியே இருக்கட்டும் நீ தான் ஒரு வருஷம் டைம் தந்திருக்கல்ல அப்ப அவ ஒரு ரூமிலையும் நீ ஒரு ரூமிலையும் இருந்தால் எப்படி இரண்டு பேரும் புரிஞ்சிப்பீங்க ஒரே ரூம்ல தான் இருக்கணும் ஒன்னா தான் இருக்கணும் அதான் புருஷன் பொஞ்சாதிக்கு அழகு.
சரி ஒரு வருஷம் மட்டும் நீ அவளோட பழகனும்ல்ல அப்ப இந்த ரூம் தான் அதுக்கு சரியான இடம் ரெண்டு பேரும் தள்ளி தள்ளி இருந்தால் எப்படி புரிஞ்சிப்பீங்க அம்மாகிட்ட நீ என்ன சொன்ன நீ ஒரு வருஷம் மட்டும் பழகிட்டு பிடிக்கலைன்னா டைவர்ஸ் என்று தானே சொன்னே அப்போ அதுக்கு ஏத்த மாதிரி நடந்து கொள்.
இரண்டு பேரும் மனச விட்டு நல்லா பழகுங்க உங்களோட இன்ப துன்பம், சுவாரஸ்யமான விஷயங்கள், விருப்பு, வெறுப்பு எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
முதலாவது நண்பர்களா பழகுங்க அப்புறம் எல்லாம் தானா நடக்கும் ஓகே… துருவன் எனக்கு வாக்கு தந்திருக்க மறந்துடாத..” என்று துருவனைப் பார்த்து கூறிவிட்டு அற்புதவள்ளி பக்கம் திரும்பினார்.
“வள்ளி..!”
“சொல்லுங்க அத்தை..”
“இன்றிலிருந்து நீ இங்கதான் இருக்கணும் இதுதான் உன்னோட ரூம்.. அப்படியே யாராச்சும் ஏதும் பேசினால் அத்தை என்று கூப்பிடு. நான் உடனே மின்னல் வேகத்துல பக்கத்துல இருப்பேன். ஏதும் பிரச்சனைன்னா மறக்காமல் கூப்பிடுமா..”
“சரிங்க அத்தை..” என்று பாலை அற்புதவள்ளியிடம் கொடுத்துவிட்டு கீழே சென்று விட்டார் வைதேகி.
மாடிப்படிகள் இறங்கிச் செல்லும் வைதேகிக்கோ அவ்வளவு சந்தோஷம். எப்படியாவது இந்த அறைக்குள் வள்ளியை சேர்த்து விட வேண்டும் என்றே நினைத்திருந்தவர் அதனை செய்து முடித்த சந்தோஷத்தில் ஏதோ பெரிய சாதனை படைத்தது போல அவருக்கு மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.
எப்படியோ இந்த அறையில் அவன் இடம் கொடுத்தது போல அவனது மனதிலும் இடம் கொடுக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே உறங்கச் சென்றார்.
இன்றைய நாள் தான் நிம்மதியாக உறங்கினார். ரிசப்ஷனில் நடந்த அனைத்து விடயங்களையும் கூறி தனது மகனுக்கு இருந்த அவப்பெயரை துடைத்தெறிந்தது ஒரு பக்க சந்தோசம் என்றால், மறுபக்கம் தனது மருமகளை மகனின் பார்வையில் வைத்தது அடுத்த சந்தோஷம்.
இதோ அவருக்கு நித்ரா தேவியின் ஆசி கிடைத்துவிட்டது. மனதில் எந்தக் கவலையும் இன்றி நிம்மதியாக உறங்கினார்.
துருவனுக்கோ முள்ளின் மீது நிற்பது போல இருந்தது. அற்புத வள்ளியின் அருகில் ஒரு பழைய இரும்புப் பெட்டி இருக்க,
“இது என்னது..?”
“என்னோட உடுப்பு..”
“எல்லாம் பிளான் ஓட தான் வந்து இருக்கா..?”
“நான் இல்லைங்க அத்தை..”
“அச்சோ அச்சோ இல்லம்மா உங்க அத்தை மட்டும் கூப்பிட்டு விடாதே நான் ஒன்னும் பேசல என்ன பூச்சாண்டி காட்டுறியா..?”
அவன் கூறுவதை கேட்டதும் என்ன செய்வது எதை கூறினாலும் தப்பாகவே புரிந்து கொள்கிறாரே எப்படி இவரிடம் பேசி புரிய வைப்பது என்று அறியாமல் அதே இடத்தில் நிற்க,
“என்ன அப்படியே நிக்கிற போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா..”
அப்போதும் அவள் அசையாமல் அதே இடத்தில் நிற்க,
“ஒஹ் உனக்கு இங்கிலீஷ் தெரியாது என உடையை மாற்றி வருமாறு கூறினேன்..” என்று அவன் சுத்தத் தமிழில் கூறி அவளை கிண்டல் அடித்தான்.
“இல்லைங்க எனக்கு கொஞ்சம் கொஞ்சம் இங்கிலீஷ் தெரியும்..”
“வாவ்.. சூப்பர்.. எப்படி உங்க அப்பா தான் சொன்னாரு உன்ன ஸ்கூல் பக்கம் அனுப்பேலன்னு..”
“ஆமா நான் ஸ்கூலுக்கு போகல..”
‘என்னடா குழப்புறா ஸ்கூலுக்கு போகலைன்னா ஆனா இங்கிலீஷ் எல்லாம் தெரியும்னு சொல்லுறா..’ என்று மனதிற்குள் அந்நியவன் அதனை வாய் விட்டு கேட்டே விட்டான்.
“அப்போ எப்படி..?”
“அதுவா என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் எனக்கு ஒரே சொல்லித் தருவான்..”
துருவன் சிறு அதிர்ச்சியுடன்,
“சொல்லித் தருவானா அப்படின்னா பாய் ஃப்ரெண்ட்டா..?”
“ஆமாங்க என்னோட ஃப்ரண்ட் பேரு ரவி. எனக்கு ஒரே இங்கிலீஷ்ல சின்ன சின்ன வார்த்தைகள் அவன் அழகா சொல்லித் தருவான். ரொம்ப நல்லவன் அவங்க வீட்டுல ஏதாவது விசேஷமா சமைத்தால் எனக்கு கட்டாயமா எடுத்து வந்து தருவான் அவங்க அம்மாவும் என்னோட நல்ல பாசம் நான் இங்கே கல்யாணம் கட்டிக்க வரப் போறது அவனுக்கு மட்டும் தான் சொன்னேன் அவன் ரொம்ப கவலைப் பட்டான் இனிமே அவன பாக்கவே வரமாட்டேன்னு அவன் கண்ணில இருந்து கண்ணீர் எல்லாம் வந்துச்சு. ஆமாங்க அவன் ரொம்ப பீல் பண்ணினான். என்ன கட்டிப்பிடிச்சு அழுதுட்டு நீ கவனமா போயிட்டு வான்னு சொல்லி என்னை அவன் தான் வழி அனுப்பி வெச்சான் அவனுக்கு மட்டும் தான் நான் இங்கே வாரதே தெரியும்..”
“என்னது கட்டிப்புடிச்சு அனுப்பி வெச்சானா யார் அது..?” என்று மகிழ்ச்சியுடன் கேட்ட துருவனுக்கு கண்களில் கோபம் கொந்தளிக்கத் தொடங்கியது. ஏன் எதுக்கு என்று அவனுக்குத் தெரியவில்லை ஆனால் அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக வேகமாக வார்த்தைகளை கடித்து துப்பிய படி,
“அதுதான் என்னோட ஃப்ரெண்ட் ரவி..
“ரவீனா எங்க இருக்கான் என்ன வேலை செய்கிறான் வர வர இந்த கிராமத்து பொண்ணுங்களே நம்ப கூடாது போல..” என்று அவள் கூறிய விடயங்களை தாங்க முடியாமல் வெளிப்படையாகவே கூறிவிட்டான் துருவன்.
‘ஏன் கோவப்படுறீங்க அவன் ஏங்க வேலைக்கு எல்லாம் போக, அவன் இப்போ தான் ஸ்கூல் போறான்..”
“என்னது ஸ்கூல் போறானா அப்படி என்றால் அவன் சின்னப் பையனா..?”
“ஆமாங்க அவன் இப்பதான் போர்த் ஸ்டாண்டர்ட் முடிச்சி பிப்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்..”
“என்னது பிப்த் ஸ்டாண்டரா அப்போ சின்னப் பையனையா கிளோஸ் பிரண்ட் என்று சொன்னே..”
“ஆமா எங்க ஊர்ல இருக்க சின்ன பிள்ளைகள் எல்லாமே எனக்கு குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் தான் அதுல ரவி மட்டும் ஸ்பெஷல்.
அவன் உங்களையும் ஒரு நாள் கூட்டி வரச் சொன்னான் அவங்க அம்மா நல்லா சமைப்பாங்க…”
‘அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா சாப்பாட்டுக்கு வந்துருவாளே..’ என்று மனதிற்குள் நினைத்தவன்,
“சின்ன பையனா..? நல்ல ஃப்ரண்டு தான் நல்ல ஃப்ரண்டு தான் நாங்க ஒரு நாளைக்கு போவோம் இனிமேல் அவன் உனக்கு சொல்லித்தர தேவையில்லை நானே ஒவ்வொரு நாளும் சொல்லி தாரேன்..”
“ஏங்க அவன் நல்லா சொல்லித் தருவான்… இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் டைம் போறதே தெரியாது சொல்லித் தரும் பாடங்கள் அப்படியே ஞாபகத்துல இருக்கும்..”
“நானும் நல்லா பாடம் சொல்லித் தருவேன் இனி ஒவ்வொரு நாளும் ஈவினிங்ல நான் வேலை விட்டு வந்ததும் உனக்கு ஒரு 30 மினிட்ஸ் கிளாஸ் எடுக்கிறேன் படிப்போம்..”
“அப்படியா ரொம்ப சந்தோஷம். நான் யோசிச்சுக்கிட்டே இருந்தேன் எனக்கு படிக்க ரொம்ப விருப்பம் ஆனா அப்பா போக வேணாம்னு சொன்ன பிறகு அப்பாவை மீறி பள்ளிக்கூடத்துக்கு போக எனக்கு விருப்பமில்லை.
அதனாலதான் போகல என்னோட ஒரே வயது பிள்ளைகள் எல்லாம் ஸ்கூல்ல நடக்குற விஷயங்கள் எல்லாம் சொல்லி சந்தோஷப்படுவாங்க.
எனக்கு ரொம்ப ஆசையா இருக்கும் என்னால போக முடியலயேன்னு அப்போ அம்மாகிட்ட வந்து சொல்லி அழுவேன் அம்மா சொல்லுவாங்க ஸ்கூலுக்கு போனா தானே படிக்கலாம்னு இல்ல கேட்டு படிக்கலாம் கேள்வி ஞானம் இருந்தாலே போதும் என்று எங்க அம்மா சொல்லி என் மனச தேத்துவாங்க.
ஸ்கூலுக்கு போற பக்கத்து வீட்டு பிள்ளைகள் எல்லாம் விளையாட வரும்போது கேட்டு தெரிஞ்சிப்பேன் அப்படி இங்கிலீஷ்ல வார்த்தைகள் ஒன்று இரண்டு தெரியும் ஆனால் எழுத தான் தெரியாதுங்க..”
“எந்த வயசுலயும் படிக்கலாம் படிப்புக்கு வயசு இல்ல உனக்கு படிக்கணும் என்று இவ்வளவு ஆர்வமும் ஆசை இருந்துச்சுன்னு சொன்னா நீ சீக்கிரமாகவே எல்லாத்தையும் கத்துப்ப.
நான் உனக்கு கட்டாயமா எல்லாம் சொல்லி தரேன் அடுத்தது இங்கிலீஷ் என்பது ஒரு மொழி வேறு ஒன்றும் இல்லை. உனக்கு விருப்பம் இருந்தா அதை நீ சீக்கிரமாகவே கத்துப்ப.
உனக்கு எழுதவும் நான் சொல்லித் தரேன் அதுவும் பெரிய விஷயம் இல்லை ஒவ்வொரு நாளும் ஈவினிங்ல நான் உனக்கு சொல்லித் தரேன் சரியா நான் ரொம்ப பிசி ஆனா இருந்தாலும் ஒரு ஒன் ஹவர் உனக்காக ஒதுக்குகிறேன் நாம படிக்கலாம் ஓகே..?”
“ரொம்ப சந்தோசம்..” என்று நன்றியுடன் புன்னகைத்தாள் அற்புதவள்ளி.
“அதோ தெரியுது அதுதான் என்னோட ஆபீஸ் ரூம் அதுக்குள்ள போய் டிரஸ் சேஞ்ச் பண்றேன்னா பண்ணு..”
சரிங்க என்று உடைமாற்றிவிட்டு வெளியே வந்தவள், புடவை முந்தானையை கையில் எடுத்து சுழற்றியபடி கேள்வியாக அவனைப் பார்த்து நின்றாள்.
“என்ன..?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்தி துருவன் கேட்க,
“இல்ல தூங்கணும் அதுதான்..” என்று மெதுவாக வள்ளியின் குரல் வெளிப்பட்டது.
“அதுக்கு என்ன அந்த சோஃபால போய் தூங்கு..” என்று கூறியதும் அவள் ஓடிச் சென்று அதில் படுத்து இறுகக் கண்களை மூடிக்கொண்டாள்.
அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கையைப் பார்த்து ஒரு புன் சிரிப்பை உதிர்த்து விட்டு அவள் தலையாட்டி கூறிய விடயங்களையும், தனது அம்மாவால் அவளது வாழ்வே பாதிக்கப்பட்டதையும், அவளது கல்வி மீது உள்ள ஆர்வத்தையும், நன்றியுணர்வுடன் இறுதியில் அவள் புன்னகைத்ததும் அவனது மனதில் சாரல் அடித்தது போல சிறு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
எப்படியாவது அவளுக்கு உதவ வேண்டும் என்று உள்ளம் துள்ளி குதித்தது. அவளைப் பார்த்தபடியே அவளது உருவத்தை கண்களுக்குள் வாங்கிக் கொண்டு அதனை ரசித்துக் கொண்டு அப்படியே உறங்கியும் விட்டான்.