முரணாய்த் தாக்கும் அரண் அவன் -16

4.7
(14)

அரண் 16

துருவன் அலைபேசியில் வந்த செய்தியை கேட்டு ஏன் அப்படியே அதே இடத்தில் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க வேண்டும் என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் வைதேகி.

அலைபேசியில் யாரோ ஏதேனும் சொல்ல மறு பேச்சு பேசாமல் அப்படியே நின்ற துருவனை மேலும் பார்க்க பார்க்க அவருக்கு ஏக்கம் தாங்கவில்லை.

எதற்காக தனது மகன் இவ்வாறு அதிர்ச்சியில் இருக்கின்றான் என்று புரியாமல் அவனது தோளில் தட்டி,

“துருவன் என்னப்பா என்ன ஆச்சு? யாரு ஃபோன்ல.. ஏன் நீ பேய் அறைந்த மாதிரி இருக்க..?” என்று வைதேகி கேட்டதும் காதிலிருந்து ஃபோனை எடுத்துவிட்டு அதிர்ச்சியில் இருந்து மீண்டவனாக கண்களை ஓரிரு முறை மூடித் திறந்து தனது படபடப்பையும், பயத்தையும் வெளிக்காட்டாமல் அன்னையின் முன்பு மனதை சமநிலைப்படுத்திக் கொண்டான்.

“துருவன் என்னன்னு சீக்கிரமா சொல்லு எனக்கு ஒரே பயமா இருக்கு..” என்று தவித்தவரிடம் எவ்வாறு விடயத்தை கூறுவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தவன், மெதுவாக நடந்த விஷயத்தை கூறினான்.

“யாரோ தெரியாதவங்க அன்னோன் பேஷன் கால் பண்ணி இருந்தாங்க..”

“அப்படியா என்ன சொன்னாங்க..?”

“அம்மா அது வந்து..”

“சீக்கிரமா சொல்லுடா..”

“அற்புதத்தை அவங்கதான் கடத்தி வச்சிருக்காங்களாம்..”

“அய்யய்யோ என் மருமகளுக்கு என்ன ஆச்சு..” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து விட்டார் வைதேகி.

“ஒன்னும் ஆகல ஒரு கோடி பணத்தோட அவங்க சொல்ற இடத்துக்கு வரணுமாம் நைட் 8:30 க்கு பிறகு கால் பண்ணுவாங்கலாம் பணத்தை ரெடி பண்ணி வைக்கவாம் எந்த இடம் என்று  சொல்ல அங்க 8:30க்கு பிறகு வந்து பணத்தை கொடுத்துட்டு அற்புதத்தை கூட்டிப் போகவாம்..”

“துருவா இப்ப என்னடா பண்றது..?உங்க அப்பா எங்க இருக்காரு அவருக்கு ஃபர்ஸ்ட் கால் பண்ணு போலீசுக்கு போவோமாபா..?”

“இல்லம்மா இத நாங்க கவனமாக ஹேண்டில் பண்ண வேண்டும்..”

சிறிது நேரம் அப்படியே ஒன்றும் பேசாமல் என்ன செய்வதென்று புரியாமல் சிந்தனை வயப்பட்டு வைதேகி, துருவனும் தவித்துக் கொண்டிருந்தனர்.

பின்பு தனபாலுக்கு துருவன் அழைத்து  நடந்த அனைத்தையும் கூற உடனே வீட்டிற்கு வந்திருந்தார் தனபால்.

“யாருன்னு  உன்னால கெஸ் பண்ண முடியுதா துருவன் அவனோட குரல் எங்கேயாவது கேட்ட மாதிரி இருக்கா..?” என்று தனபால் விசாரித்தார்.

“இல்லப்பா அவன் ஏதோ ரொம்ப வருடம் இதுல எக்ஸ்பீரியன்ஸான ரவுடி மாதிரி தான் அவன் பேசுற பேச்சில் விளங்குது. இங்க தான் காசுக்காக வேலை செய்ற ஒரு கூலிப்படையே தனியா ஒரு கூட்டமா இருக்கே யாராவது சொல்லித்தான் அற்புதத்தை கடத்தி இருக்கணும் இல்லன்னா அற்புதத்துக்கு இங்க இருக்க ஒருவரையும் தெரியாது பிசினஸ் எனிமிசா தான் இருக்கணும்..”

“ஓகே தென் வாட் டு டூ..?”

“அவன் கேக்குற ஒரு கோடியை குடுத்துட்டு அற்புதத்தை பாதுகாப்பா நம்ம கூட்டி வந்துவிடலாம் என்று நினைக்கிறேன்பா..”

“வெரி குட் நல்ல டிசிஷன் தான் எடுத்து இருக்கே இதுல நாம ஏதாவது புத்திசாலித்தனமா செய்றேன்னு வள்ளிக்கு பிரச்சினையை உண்டு பண்ணக் கூடாது காசு தானே போனா போகட்டும் காசு இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு உழைத்திடலாம் நம்ம வள்ளியோடு உயிர் தான் இப்ப முக்கியம் வேற  எதுவும் தேவையில்லை..”

“ஆமாப்பா அதைத்தான் நான் யோசிக்கிறேன்..”

“ஓகே எத்தனை மணிக்கு கால் பண்றேன்னு சொன்னான்..”

“எட்டரைக்கு கால் பண்றேன்னு சொன்னான் அப்பா..”

“சரி வெயிட் பண்ணி பார்ப்போம்..”

ஒவ்வொரு நாளும் நேரம் போவதே துருவனுக்கு தெரிவதில்லை. காலையில் ஆபீஸ் போனால் இரவு நடுச்சாமத்திலேயே வீடு வந்து சேர்வான்.

அப்படி வேலைகளில் மிகவும் பிசியாக இருப்பவன் இப்போது மூன்று மணி நேரத்துக்கு மேலாக ஒரே இடத்தில் நிற்கின்றான் என்றால் அதிசயம் தான்.

அதுவும் யாருக்காக நமது அற்புதவள்ளிக்காக இவ்வாறு அவன் எங்கும் செல்லாமல் அந்த அழைப்பிற்காக காத்திருந்தான்.

ஒவ்வொரு நிமிடங்களும் ஒவ்வொரு செக்கனும் அவனுக்கு தீயின் மேல் நிற்பது போல இருந்தது. நேரமும் நகர மாட்டேனென அடம் பிடித்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நொடியையும் நொட்டித் தள்ள அவனுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.

குறிப்பிட்ட நேரமும் நெருங்க அந்த ஆட்கடத்தல்காரன் கூறியது போல சரியாக எட்டு முப்பதுக்கு அழைப்பினை எடுத்தான்.

கைகளிலேயே அவன் எப்போது அழைப்பான் என அலைபேசியை வைத்திருந்த துருவன் திடீரென தனது கையில் உள்ள அலைபேசி திரையில் அவனது நம்பர் ஒளிர, மீண்டும் மனதில் சிறு பயம் தொற்றிக் கொண்டது.

அவனிடமிருந்து அழைப்பு வரும் என்று எதிர்பார்த்ததுதான் இருந்தும் மனதில் சிறு பதற்றமும் சலனமும் வந்து குடியேறியது.

ஒரு பெருமூச்சொன்றை விட்டுக்கொண்டு தனபாலையும் வைதேகியையும் அர்த்தமுள்ள பார்வை பார்த்துவிட்டு அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

வைதேகியும், தனபாலும் துருவனுக்கு அருகில் வந்து அமர்ந்து என்ன பேசுகிறான் என  தெரிந்து கொள்வதற்காக அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பழைய கதைகளில் வரும் அரக்கனின் குரலை போல அலைபேசிக்குள் ஒலித்தது அந்த ஆட்கடத்தல் காரனின் குரல்.

“ஹலோ துருவன் ரொம்ப ஸ்மார்ட்டா நடந்துக்கிட்டீங்க நான் சொன்ன மாதிரி போலீசுக்கு நீங்க தகவல் கொடுக்காதது ரொம்ப நல்லது நான் உங்களோட அப்ரோச்ச பார்த்து மெர்சலாயிட்டேன்.

போலீசுக்கு போயிருந்தா உன்னோட மனைவி ஆசை மனைவி இந்நேரம் கடவுள் கிட்ட போயிருப்பா..

ஆனா நீ ரொம்ப நல்ல பையன் போல நான் சொன்னதை அப்படியே செஞ்சுட்டே சரி நேரடியா விஷயத்துக்கு வருவோம் பணம் ரெடியா..?”

“ஆமா நீ சொன்னபடி ஒரு கோடி எடுத்து ரெடியா வச்சிருக்கேன் எங்க வரணும் சீக்கிரம் சொல்லு..”

“என்னது ஒரு கோடியா வரவர உனக்கு காது கேட்குதில்ல கொண்டு போய் நல்ல டாக்டரா பாரு.. நான் கேட்டது 50 கோடி. ஒரு கோடி எல்லாம் நீ ஐஸ்கிரீம் சாப்பிடுற செலவுன்னு எனக்கு தெரியும் எனக்கு வேண்டியது 50 கோடி…”

“என்னது 50 கோடியா அவ்வளவு பணத்தை என்னால இப்ப ரெடி பண்ண முடியாது நீ கேட்டது ஒரு கோடி தான் திடீரென்று என்ன இப்ப 50 கோடினு மாத்துற பேச்சு பேச்சா இருக்கணும்..” என்று உருமினான் துருவன்.

“நான் 50 கோடி னு தான் சொன்னேன் உனக்கு ஒரு கோடி நீ காதுல விழுந்து இருக்கு அதுக்கு நான் என்ன செய்ய உன்னால தர முடியுமா முடியாதா..?”

“இன்னும் அரை மணி நேரத்துல நான் உனக்கு திரும்பவும் கால் பண்ணுவேன் நீ முடிவெடுத்துட்டு சொல்லு பணமா இல்லாட்டி உன்னோட பாசமான மனைவியா எது முக்கியம் உனக்கு என்று சொல்லு..”

“சரி நான் என்னோட மனைவி கிட்ட பேசணும்..”

“என்ன பேச போற.. பணத்தை கொடுத்துட்டு ஆறுதலா நீ வீட்டை கூட்டிட்டு போய் பேசுறதென்ன கொஞ்சி விளையாடு..”

“நீ என் பொண்டாட்டிய தான் கடத்தி வச்சிருக்கேன்றதுக்கு என்ன சாட்சி..?”

“ஓஹ்  நீ அப்படி யோசிக்கிறியா..?”

“ஓகே இதோ உன்னோட லவ்வபில் வைஃபோட பேசு..”

“ஹலோ அற்புதம்..” என்று துருவனின் குரல் முதன்முதலாக அற்புதவள்ளிக்காக நடுங்கியது. அந்தப் பக்கமும் எந்தவித சத்தமும் இன்றி சிறிது நேரம் அமைதியாக இருந்தது.

பின்பு அற்புத வள்ளியின் குரல் பயத்துடன் ஒலித்தது.

“என்னங்க இவன் என்னையே கோவில்ல இருந்து கடத்திட்டு வந்துட்டான். உங்க பிரண்டு என்று தான் சொல்லி கூட்டி வந்தான்.

எனக்கு இவனை யாருன்னு தெரியாது நீங்க கூப்பிடறதா சொல்லி கூட்டிட்டு வந்து ஒரு பெரிய வாகனத்துக்குள்ள அடைச்சி இங்க கடத்திட்டு வந்துட்டாங்க.

பாவி நாசமா போறவனே, நல்லாவே இருக்க மாட்டாடா, சீக்கிரமாவே செத்துப் போய் விடுவா டா, உனக்கெல்லாம் மருந்து கண்டுபிடிக்காத வியாதி தான் வரும், உனக்கு நல்ல சாவே வராது, பாலா போவ, அழிவான், பாடையில போவான், நீ எல்லாம் சாப்பாடு இல்லாம ரொம்ப நாளா இருந்து தான் செத்துப் போவாடா எவ்வளவு நேரமா பசிக்குதுன்னு சாப்பாடு கேட்டு கொண்டு இருக்கேன்..” என்று வள்ளி கடத்தல்காரனை பொறிந்து தள்ளிக் கொண்டிருந்தாள்.

இங்கு துருவனை பேசவே விடவில்லை வள்ளி அவனுக்கு செய்யும் அர்ச்சனைகளைக் கேட்கவா துருவன் அலைபேசியை கொடுக்க சொன்னான். வள்ளி தனது கோபதாபங்களை அவனுக்கு சாபம் விட்டு போக்கிக் கொண்டிருந்தாள்.

துருவனுக்கோ எங்கு கொண்டு தலையை இடிப்பது என்றானது அவன் நிலை.

“ப்ளீஸ் அற்புதம் ஸ்டாப் இட்.. என்னையும் கொஞ்சம் பேச விடு உனக்கு சாப்பாடு தரவில்லை என்றது தான் இப்ப பிரச்சனையா..? நீ பாதுகாப்பா வீட்டை வந்து சேர வேணாமா..? கொஞ்ச நேரம் உன்னோட வாயையும் வயிற்றையும் கட்டுப்படுத்தி வைத்திரு பொறுமையா நான் சொல்றதை கேளு..” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே அற்புதவள்ளியிடம் இருந்து அலைபேசி பறிக்கப்பட்டது.

அவன் அலைபேசியை பிடுங்கி எடுத்ததும் மீண்டும் அவன் மீது அர்ச்சனையை பொழிய தொடங்கினாள் அற்புதவள்ளி.

“என்ன மிஸ்டர் துருவன் பேசினதெல்லாம் போதும் ஹாஃப் அன் ஹவருக்கு பிறகு மறுபடியும் கால் பண்ணுவேன் ரெடியா இருங்க பாய்..” என்று கூறிவிட்டு அலைபேசியை துண்டித்தான் அந்த முகம் தெரியாத நபர்.

தனபாலுக்கும் வைதேகிக்கும் நடந்த அனைத்தையும் கூறிவிட்டு தனது செகரட்டரி இடம் கூறி மீது பணத்தையும் 15 நிமிடத்தில் எடுத்த துருவன் அவனது அடுத்த அழைப்புக்காக காத்திருந்தான்.

அரை மணி நேரத்தை தாண்டியும் இன்னும் அவனது அழைப்பு வந்த பாடியே இல்லை. துருவனுக்கோ சிறிது சிறிதாக நெஞ்சில் படபடப்பு தொற்றிக் கொண்டது.

ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் என நேரம் கடந்து கொண்டே சென்றது. இன்னும் அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை.

துருவனுக்கு வரும் அழைப்புகள் எல்லாம் அவனது அழைப்புகள் என்று நினைத்து ஓடி வந்து அலைபடுத்தால் அது பிசினஸ் தொடர்பான வேறு அழைப்பாகவே இருந்தது.

உடனே அதே நம்பருக்கு சந்தேகத்தில் மீண்டும் அலைபெடுத்துப் பார்த்தான். அலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பெண்ணின் குரல் மட்டுமே அவனுக்கு பதிலாகக் கிடைத்தது.

பெரும் ஏமாற்றமாக இருந்தது. வைதேகிக்கோ பிரஷர், பிபி அதிகரிப்பது போல இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் ஹாலில் குறுக்கும் நடுக்குமாக துருவன் நடை பயின்று கொண்டிருக்க திடீரென அந்த திடுக்கிடும் சம்பவம் நடந்தேறியது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!