அரண் 29
கதவைத் திறந்ததும் அவனுக்கு அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அவனாலேயே அவனது கண்களை நம்ப முடியவில்லை. கனவில் தோன்றிய அதே உருவம் தான் நேரிலும் நிற்கின்றதா அப்படி என்றால் நான் கண்ட கனவு பலித்து விட்டதா ஆம் அவன் உறக்கத்தில் இருக்கும்போது தனது மனதுக்குப் பிடித்த அந்த உருவம் தன்னருகே வந்து நின்று சிரித்து ஆசையாக கன்னத்தில் முத்தமிட்டு காதல் பரிபாசை பேசி தன்னுடன் விளையாடுவது போல கனவு கண்டான்.
அதை நினைவாக்குவது போல தனது காதல் மனைவி அற்புதவள்ளி அவன் முன்னே வந்து நின்றாள்.
துருவன் அவளைக் கண்டதும் வேர்விட்ட மரம் போல அசையாமல் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நிற்க,
அவளோ அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் கண்கள் கலங்க “என்னங்க..” என்று அழைத்தாள்.
அவள் அழைத்த அந்த ஒற்றை அழைப்பு அவளுக்கே கேட்கவில்லை வாயில் இருந்து வார்த்தைகள் வராமல் வெறுமனே காற்று மட்டுமே வந்தது.
“அற்புதம்.. என்னோட அற்புதம் என்ன தேடி வந்துட்டியா..?” என்று அவன் அருகில் சென்று பாய்ந்த அவளை அனைத்துக் கொண்டான்.
அந்த நேரம் அவளுக்கும் அந்த அனைத்து தேவைப்பட்டதே..! தாயிடம் ஓடி வந்து கன்று குட்டி அடைக்கலம் தேடுவது போல துருவன் அற்புத வள்ளியிடம் தனது பிரிவின் தாக்கத்தை அந்த ஓர் அனைப்பின் மூலமே வழி காட்டினான்.
எவ்வளவு நேரம் அறை வாசலில் இருவரும் அணைத்துக் கொண்டு நின்றனர் என்று தெரியவில்லை. இருவர் மனதிலும் இருந்த சஞ்சலம் நீங்கி அமைதியும், சந்தோஷமும் குடி கொண்டது.
வானில் மனதால் சிறகடித்து பறப்பது போல உணர்ந்த வள்ளி முதல் தன்னை சுதாரித்துக் கொண்டு,
“என்னங்க நாம இப்ப ரூமுக்கு வெளியே நிற்கிறோம் யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க..?”
“பார்த்தா பார்த்துட்டு போகட்டும் நான் உன்ன விட மாட்டேன் நீ விட்டா திரும்பி மறைந்து போயிடுவ..”
‘என்ன மறைஞ்சு போயிடுவனா என்ன இவரு இப்படி சொல்றாரு..’ என்று அவரது சிறுபிள்ளைத்தனத்தை எண்ணி சிரித்த அற்புதவள்ளி,
“என்னங்க இது கனவில்ல நான் நிஜமாத்தான் வந்து இருக்கேன் எவ்வளவு நேரம் தான் வாசலிலேயே நிற்பது கொஞ்சம் வழி விட்டிங்கன்னா நான் உள்ளே வருவேன்..” என்று வெட்கத்துடன் மயக்கம் குரலில் மெதுவாக கிசுகிசுத்தாள்.
“இல்லை நீ பொய் சொல்ற நான் கண்ண திறந்தால் நீ போயிடுவே..”
“என்ன இது சின்ன புள்ள மாதிரி அடம் பிடித்துக் கொண்டு..” என்று அவள் கடினப்பட்டு அவனை தன்னில் இருந்து பிரித்தெடுக்க அவனும் இரும்பு பிடியாக அவளை தன்னுடன் உடலோடு உடல் இறுக்கி அணைத்து பிடித்த படியே இருந்தான்.
இவளுக்கு ஒரு பக்கம் வெட்கம் பிடுங்கித் தின்ன மறுபக்கம் கூச்சமாகவும் இருந்தது. அங்கு அறைகளை சுத்தப்படுத்தும் ஓர் இரண்டு ஊழியர்கள் இவர்கள் அனைத்துக் கொண்டு நிற்பதை பார்த்து சிரித்து விட்டு சென்றனர்.
ஒருவாறு துருவனை தள்ளிக் கொண்டு அறைக்குள் வந்து காலால் கதவை தள்ளி சாற்றினாள்.
“அப்பாடா இப்போதுதான் நிம்மதி..” என்று பெருமூச்சு விட,
துருவன் சிறு சந்தேகத்துடன் மெல்ல கண் திறந்து அவளது முகத்தை இரு கைகளாலும் ஏந்தி தன் முகத்திற்கு நேராக வைத்து அப்படியே கண்களால் அவளது அழகினை அளவெடுத்தான்.
அவளது கண்கள் பேசும் காதல் மொழி அவனுக்கு கவி பாடுவது போல் இருந்தது.
கண்களின் இமைகள் பட்டாம் பூச்சி போல படபடவென அடித்துக் கொண்டன.
அவர்களது உலகம் காதல் கடலில் பயணித்துக் கொண்டிருந்தது. அப்படியே துருவன் அவளது இதழ்கள் அருகில் வந்து, அதன் மென்மையை கைகளால் வருடி உணர முயற்சிக்க, அவளது பூவிதழ் போன்ற உதடுகள் கூச்சத்தில் நடுங்கத் தொடங்கின.
அதனின் நடுக்கத்தை அடக்க எண்ணம் கொண்டவன் தனது அதரங்களால் அதன் ஆட்டத்தை அடக்கி சுவைக்கத் தொடங்கினான்.
மேல் உதட்டைக் கடித்து சுவைக்க ஸ்ட்ராபெரி பழத்தின் சுவையை அது அள்ளி தந்தது.
அந்த சுவையில் பித்தம் கொண்டவன் இடைவிடாது அதனை சுவைத்தபடி அவளது இடையில் கை போட்டு தன்னுடன் இருக்கி அணைத்துக் கொண்டான்.
அவனது திடீர் முத்த தாக்குதலை எதிர்பார்க்காத பேதை அவள் துவண்டு போவது போல் அவன் மீது கொடியாகச் சரிந்தாள்.
அவளை தாங்கியபடி அப்படியே அருகில் இருந்த கட்டிலில் அவளை சரித்து படுக்க வைத்து அவள் மீது படர்ந்தவன் தனது பிரிவின் வெறுமையை முத்த மழையினால் அவளுக்கு உணர்த்தினான்.
அந்த பிரிவின் மொழி ஏக்கத்துடன் கடைசியாக தவிப்பாக மாறியது.
கீழுதடை விட்டு மேல் உதட்டை சுவைக்கும் எண்ணம் கொண்டு அதில் தாவி கவ்வி சுவைக்க அங்கோ அவனது உணர்ச்சிகள் எல்லை மீற மோகம் கிளர்ந்து எழுந்து அப்படியே அவளின் மேல் முழுதாக படர்ந்து அவளுள் மூழ்கிப் போனான்.
அவளது ஆடைகளை ஒவ்வொன்றாக தளர்த்தி அவள் மீது தனது கரங்களால் ஓவியம் தீட்ட அவளோ ஒவ்வொன்றுக்கும் வெட்கம் எனும் தடையால் கடிவாளம் இட்டாள்.
அவளது தடைகள் ஒவ்வொன்றையும் முத்தச் சாவி போட்டு திறக்க அற்புதவள்ளியோ திணறித் தான் போனாள்.
பெண்மையின் மேடு பள்ளங்களை அறிய துருவன் அவற்றை தனது கரங்களால் அலசி ஆராய பெண்ணவளோ வெட்கம் என்னும் போர்வையால் தன்னை மறைத்துக் கொண்டாள்.
அவனின் தாபம், அவள் மீது கொண்ட மோகம், தீராத காதல் அனைத்தும் அவன் தன்னுடைய செய்கையினால் அவள் மீது உணர்த்த முற்பட, அற்புத வள்ளிக்கு அந்த மோகத்தில் மூழ்கி எழ மூச்சடைத்தது.
அவனது முத்தங்களும், அவளது மோகனச் சத்தங்களும் அங்கு அந்த அறையையே நிறைத்தன.
அவனது ஒவ்வொரு தீண்டல்களுக்கும் அவள் கொடுக்கும் ஒவ்வொரு துலங்களையும் பார்க்க துருவனுக்கு புது வேகம் பிறந்து உணர்ச்சிகள் எல்லை கடந்து பயணிக்கத் தொடங்கின.
முதல்முறையாக இருவருக்குள்ளும் தாம்பத்தியம் என்னும் புதிய அத்தியாயம் இன்பமாக இனிய காதல் மலராக அங்கு மலர்ந்தது.
இருவரும் அதனை காதலால் ஒருவருக்கு ஒருவர் உணர்த்தினர். உணர்ந்தும் கொண்டனர்.
பூவின் தேனின் சுவையை அறிந்த வண்டுகள் அதனை விடுமோ மீண்டும் மீண்டும் சுவைக்க ஆசை கொண்டு பூவினை தீண்டின.
ஒரு கட்டத்துக்கு மேல் வள்ளியின் உடல் களைப்பை உணர்த்த அதனை உணர்ந்த துருவன், அவளை விட்டகல மனமின்றி, நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டு ஒருவரை ஒருவர் பார்த்தபடி அப்படியே இருவரும் உறங்கியும் போயினர்.
காலை 8 மணி அளவில் தொலைபேசி சினுங்க, முதலில் கண் விழித்த அற்புதவள்ளி அது தனது தொலைபேசி தான் என்று அறிந்ததும், ‘அச்சச்சோ அத்தை போய் சேர்ந்ததும் கால் பண்ண சொன்னாங்களே மறந்துட்டனே இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது..’ என்று மனதிற்குள் எண்ணியபடி அதனை எடுத்து அழுத்தி காதில் வைத்தாள்.
“ஹலோ வள்ளி என்னமா நீ இவ்வளவு நேரமா கால் பண்ணல போய் சேர்ந்துட்டியாமா துருவனை பார்த்திட்டியாமா ஒரு வார்த்தை சொல்றதில்லையா எனக்கு இங்க யோசிச்சு யோசிச்சு பிரஷர் ஏறிட்டு அத்தை பயந்துட்டே இருந்தேன்..” என்று வைதேகி படபடப்புடன் கூற,
வள்ளி வெட்கத்துடன் போர்வையை இழுத்து அனைத்து போர்த்தியபடி “ம்ம்ம்..” என்று ஒற்றை பதில் உதிர்த்தாள்.
“என்ன வள்ளி அத்தை பேசுறது உனக்கு கேட்க்குதா நீ பேசுறது எனக்கு இங்க கேக்குதில்ல கொஞ்சம் சத்தமா பேசுமா..” என்று கூற,
குரலை சேருமிக் கொண்டு,
“அத்தை நான் அவர பார்த்துட்டேன் அவரோட தான் இருக்கேன்..” என்று அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் துருவனை பார்த்து புன்னகைத்தபடி கூறினாள் வள்ளி.
“ஒரு கால் பண்ணி வழி வந்து சேர்ந்துட்டான்னு சொன்னானா ராஸ்கல் அவனுக்கு ரெண்டு போடு போட்டா தான் சரி துருவன்ட்ட போனை கொடு வள்ளி..” என்று வைதேகி இவ்வாறு கூற,
வைதேகி இடம் எவ்வாறு கூறுவது அவர் என்னுடன் எனக்கருகில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று என்பதை எவ்வாறு கூறுவது என்று புரியாமல் அவளுக்கு வெட்கம் ஒரு பக்கம், சந்தோஷம் ஒரு பக்கம் என்று பலவித உணர்ச்சிகள் வந்து மோத
அங்கு தனபால் அருகில் இருந்து வைதேகி பேசிக் கொண்டிருந்த கேட்ட பின்பு “துருவன் எங்கேயாவது போயிருப்பான் நீ வெச்சிட்டு அப்புறம் அவன்கிட்ட பேசு இப்போ தானே ரெண்டு பேரும் ரொம்ப நாளைக்கு அப்புறம் மீட் பண்ணி இருக்காங்க ரெண்டு பேரும் ஆசை தீர பேசட்டும் நீ டிஸ்டர்ப் பண்ண வேணாம் அவங்களா கால் பண்ணும் வரைக்கும் வெயிட் பண்ணு அதுதான் உன் மருமக போய் சேர்ந்துட்டா தானே இப்ப போன வை..” என்று தனபால் வைதேகியிடம் சிடுசிடுக்க,
“உங்க மாமாக்கு என்ன பேசுறதுக்கு ஏதாவது ஒரு சாட்டு தேவை சரி நான் வைக்கிறேன் துருவன் கிட்ட சொல்லு நீ போயிட்டியா இல்லையான்னு எனக்கு தெரியலமா பயமா இருந்துச்சு ரொம்ப தூரம் உன்னை தனியா அனுப்பினேன்ல்ல நீ போனதும் கால் பண்றேன்னு சொன்னே நீயும் பண்ணல இந்த நேரம் நீ போய் சேர்ந்து இருக்கணும்னு உங்க மாமா சொல்லிக்கிட்டு இருந்தாரு அது தான் ஒரே யோசனையா இருந்துச்சு என்னன்னு பார்ப்போம்னு தான் எடுத்துப்பார்த்தேன் சரிமா சரி நீ போயிட்ட தானே நான் பிறகு எடுக்கிறேன் நீ டைம் கிடைச்சா துருவன்னோட நான் பேசணும் துருவ கிட்ட சொல்லு சரியா அம்மா பாய்..”
“சரிங்க அத்தை பாய்..” என்று கூறிவிட்டு அழைப்பினை துண்டித்தாள்.