அரண் 31
குளியலறைக்குள் வள்ளியுடன் உள்ளே சென்ற துருவன் சும்மாவா இருப்பான் தனது காதல் லீலைகளில் திளைக்கத் தொடங்கியவன் அதிலிருந்து மீளவே மனமின்றி இருந்தான்.
பின்பு வள்ளி துருவன் செய்த சேட்டைகளினாலும், குறும்புகளினாலும் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.
வந்ததும் துருவன் நேரத்தை பார்க்க நேரம் ஒரு மணி எனக் காட்டியது.
“என்ன அற்புதம் ஒரு மணி ஆயிடுச்சு நாம இன்னும் சாப்பிடவே இல்ல உனக்கு பசிக்கலையா..?”
“இல்லங்க..”
“இரு ரூமுக்கு சாப்பாட ஆர்டர் பண்ணி விடுறேன் அவங்க டென் மினிட்ஸ்ல கொண்டு வந்துருவாங்க எனக்கும் இப்போதான் பசி கிளம்புது..” என்று கூறிவிட்டு தொலைபேசி மூலம் உணவை ஆர்டர் செய்ய சில நிமிடங்களிலேயே உணவு அறைக்கு வந்து சேர்ந்தது.
இருவரும் இணைந்து உணவினை உண்டு விட்டு இருக்க,
வள்ளி துருவன் இல்லாதபோது வீட்டில் நடந்த சுவாரசியமான விடயங்களை சொல்லிச் சிரித்தாள்.
“நீங்க இல்லாம என்னால கொஞ்சம் கூட நிம்மதியா சாப்பிட முடியல, தூங்க முடியல, எங்க பார்த்தாலும் எதை செய்தாலும் உங்க ஞாபகமாவே இருந்துச்சு ஏங்க நீங்க கால் பண்ணல? சமைக்கப் போன நேரம் உங்க ஞாபகத்தால உப்பு, புளி எல்லாம் மாறி மாறி போட்டுட்டேன்..”
“அப்போ அன்றைய சமையல் அம்பேல் தான்..”
“ஆமாங்க பாவம் மாமா ஒண்ணுமே சொல்லாம சாப்பிட்டுட்டு போயிட்டாரு அத்தை தான் சொன்னாங்க என்னம்மா இப்படி சமைச்சு வச்சிருக்கன்னு அதுக்கு அப்புறம் நான் சாப்பிட்டு பார்த்தேன் வாயில வைக்கவே முடியல எப்படித்தான் மாமா சாப்பிட்டாங்களோ தெரியல எனக்கு ரொம்ப கவலையா போச்சு நான் யார் கூடையும் பேசுறதும் இல்லை பேசவும் பிடிக்கல இதெல்லாம் பார்த்துட்டு தான் வசுந்தரா ஆன்ட்டி ஆவுஸ்திரேலியாவில் இருந்து வந்தாங்க
வந்து ஒரு வாரமா எங்ககூட தான் தங்கினாங்க நான் ஒரே கவலையா இருக்கிறதை பார்த்துட்டு அவங்க சீக்கிரமாவே ஆவுஸ்திரேலியா போகணும்னு கிளம்பிட்டாங்க அதோட அத்தையும் என்ன அனுப்பி வச்சிட்டாங்க..”
“நல்லவேளை அந்த சாப்பாட்டுல இருந்து நான் தப்பிச்சேன்..”
“நான் இவ்ளோ கவலையா சொல்லிக்கிட்டு இருக்கேன் நீங்க அந்த சாப்பாட்டில தான் குறியா இருக்கீங்க..”
“சரி சரி நானும் இங்க ரொம்ப ரொம்ப பீல் பண்ணினான் தான் நீ வாரதுக்கு முதல் நாள் தான் வேலைய முடிச்சேன் இன்னைக்கு ஃபுல்லா உன்னோட பேசணும்னு நேத்தே லீவு போட்டுட்டேன் அதுக்குள்ள என் அழகு ராட்சசி காலையிலேயே எனக்கு தரிசனம் தந்துட்டா அப்புறம் என்ன நடந்துச்சுன்னா..” என்று அவன் அவள் வந்த பின்பு நடந்த சாகச விளையாட்டுகளை கூற எடுக்க,
“அதெல்லாம் நீங்க சொல்லத் தேவையில்லை..” என்று செல்லமாக கோபித்துக் கொண்டாள் அற்புதவள்ளி.
“சரி சரி நீ இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடு அற்புதம் நான் பிசினஸ் விஷயமா கொஞ்ச நேரம் கால் பண்ணி பேசிட்டு வாரேன் இப்போ கொஞ்சம் தூங்கி எழும்பு நைட்டுக்கு நான் தூங்க விட மாட்டேன்..” என்று கூறிவிட்டு கண்ணடிக்க
உடனே அவளது கன்னங்கள் செந்நிறத்தை பூசிக் கொண்டன.
அற்புதவள்ளி துருவன் கூறியது போல மெத்தையில் படுத்திருந்து தொலைபேசியை ஆராய்ந்து கொண்டிருந்தவள் அப்படியே பயணக் களைப்பாலும் துருவன் செய்த சேட்டையாலும் தன்னை மறந்து உறங்கி விட்டாள்.
துருவன் தொலைபேசியில் முக்கியமான விடயங்களை பேசிவிட்டு அதில் சிறு திருத்தங்களையும் கூறிவிட்டு வந்து வள்ளியைப் பார்க்க மாசற்ற மதியழகில் மயங்கி அப்படியே அவள் அருகே படுத்திருந்து அவள் முகம் பார்த்து அவனும் உறங்கி விட்டான்.
நன்றாக இருவரும் உறங்கி எழ மாலை 5:00 மணி ஆகிவிட்டது.
அப்படியே கோபியை ஆர்டர் செய்து இருவரும் அருந்திவிட்டு, அற்புத வள்ளி தனது தாயாருக்கும், வைதேகிக்கும் தொலைபேசி மூலம் அழைத்து வந்து சேர்ந்ததையும் வரும்போது இங்கு பார்த்த புது விடயங்களையும் விமான பயணத்தை பற்றியும் மிகவும் சுவாரசியமாக சிறுபிள்ளை போல்மனதில் பதிவு செய்த அனைத்து விடயங்களையும் மறக்காமல் ஒவ்வொன்றாகக் கூறினாள்.
அதனை அமைதியுடன் இருந்து பார்த்து ரசித்த துருவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
அவர்கள் இருவருடன் துருவனும் பேசிய பின்பு துருவனுக்கு அவசர அழைப்பு வர தொலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனி பக்கம் சென்றான்.
கமிஷனரிடமிருந்து வந்த அழைப்பு அது ‘என்னவாக இருக்கும்..’ என்று எண்ணியபடி அதனை எடுத்து காதில் வைத்தவன்,
கமிஷனர் பதற்றத்துடன் “ஹலோ துருவன்..”
“ஹலோ கமிஷ்னர் சார்..”
“துருவன் நீங்க இப்போ எங்க இருக்கீங்க..?”
“ஆவுஸ்திரேலியாவில ஏன் சார்..? எனிதிங் சீரியஸ்..”
“உ…ங்….க உ…ங்க உங்க..” என்று எதையோ கூற வந்தவர் தொலைபேசியின் இணைப்பு தடைப்பட அங்கிருந்து கமிஷனர் பேசுவது ஒழுங்காக துருவனுக்கு கேட்கவில்லை.
“ஹலோ கமிஷன் சார் ஹலோ நீங்க சொல்றது எனக்கு கேட்கல கிளியரா விளங்குது இல்ல கமிஷனர் சார் ஹலோ ஹலோ…” என்று மீண்டும் மீண்டும் துருவன் பேச இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
மீண்டும் கமிஷ்னருக்கு அழைப்பினை எடுக்க அவருக்கு அது செல்லவில்லை.
“என்னவாக இருக்கும் ஏன் திடீரென்று கால் பண்ணி இருக்கார் ஏதாவது முக்கியமான விஷயமா அந்த ராஸ்கல கண்டுபிடிச்சிட்டாங்களோ..! சரி நாம ஒரு மெசேஜ் போட்டு விடுவோம் அவர் பார்த்துட்டு அதுக்கப்புறம் எனக்கு கால் பண்ணட்டும்..” என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவன்,
உடனே கமிஸ்னருக்கு மெசேஜ் ஒன்றை போட்டுவிட்டு மீண்டும் அற்புத வள்ளியின் அருகில் வந்திருக்க அற்புதவள்ளியோ இன்னும் பேசி முடிந்த பாடு இல்லை.
துருவன் பின்பு தனது பிசினஸ் வேலைகளை மடிக்கணனியில் ஆராய்ந்து விட்டு அதனை மேலோட்டமாக பார்த்து பரிசீலனை செய்துவிட்டு, மீண்டும் அற்புத வள்ளி அருகில் வந்திருக்க அற்புத வள்ளி இப்போதைக்கு அழைப்பினை துண்டிக்கும் எண்ணம் இல்லாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள்.
பொறுமை காற்றில் பறக்க, எப்படி அவளிடம் பேசுவது என்று தெரியாமல் யோசித்தவனுக்கு தலையில் மணி அடித்தது.
உடனே அவள் அருகில் சென்று அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தினை பரிசாக கொடுக்க,
மிகவும் ஆரவாரமாக தனது அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தவளுக்கு துருவனின் முத்தம் மின்னல் மின்னி மறைந்தது போல மனதில் பரவசத்தை உண்டாக்க, உடனே வள்ளியின் பேச்சை தடார் என நின்றது.
அங்கே வள்ளியின் அன்னை அவளது குரல் கேட்காமல்,
“ஹலோ.. ஹலோ.. கேக்குதாமா செல்லம் ஹலோ..” என்று விட்டு நீண்ட நேரம் பதில் வராமல் போக அழைப்பினை துண்டித்து விட்டார்.
அவள் அதிர்ச்சியில் இருக்க மீண்டும் ஒரு முத்தத்தை கன்னத்தில் வைக்க திடுமென திரும்பி,
“என்னங்க இது நான் அம்மாவோட பேசிக் கொண்டிருக்கும்போது இப்படியா செய்றது..?”
“நானும் எவ்வளவு நேரம் தான் உன்னோட பேச காத்துகிட்டு இருக்கேன் அம்மாவையும் மாமியாரையும் கவனித்தது போதும் கொஞ்சம் புருஷனையும் கவனிங்க மேடம் சரி சரி லேட் ஆகுது சீக்கிரமா கிளம்பு போகலாம்..”
துருவன் எங்கோ வலியே தன்னைக் கூட்டி போக போகின்றான் என்ற சந்தோஷத்தில் மிகவும் ஆரவாரமாக “எங்கங்க..” என்று துள்ளிக்குதித்து கேட்டாள் வள்ளி.
“அது சஸ்பென்ஸ் உனக்கு நான் ஒரு ஆள இன்டிடியூஸ் பண்ணி வைக்கணும் அவங்கள நீ ஏற்கனவே பார்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன் இருந்தாலும் இன்னைக்கு அவங்களுக்கு உன்னை இண்ட்ரடியூஸ் பண்ணி வைக்கிறது ரொம்ப முக்கியம்..” என்று அவன் புதிர் போட,
“அப்படி யாராயிருக்கும் உங்களோட ஃப்ரண்டா..?”
“சொல்ல முடியாது நேரில் பார்த்து தெரிஞ்சுக்கோ..”
“சரி நீங்க யாருன்னு சொல்லத் தேவையில்லை. எங்க போறம்னாவது சொல்லுங்க..”
“பக்கத்துல இருக்க ஹோட்டலுக்கு தான் போறோம் அங்கே ஒரு சின்ன நைட் பார்ட்டி அப்படியே டின்னரையும் முடிச்சிட்டு வந்துருவோம் எட்டு மணிக்கு சரியா அங்க நிக்கணும் சீக்கிரமா எழுந்து குளிச்சிட்டு வா..” என்று துருவன் அவசரப்படுத்த,
“மறுபடியும் குளிக்கனுமா..?” என்று சிறுபிள்ளை போல வள்ளி சினுங்கினாள்.
“கஷ்டமா இருந்தா சொல்லு அற்புதம் நான் வேணும்னா வந்து குளிப்பாட்டி விடுறேன் என்ன கொஞ்சம் லேட் ஆகும் பரவாயில்லையா..?” என்று கூறிவிட்டு துருவன் எட்டி வள்ளியைப் பிடிக்க,
“இல்ல இல்ல வேணாம் நானே குளிச்சுக்குறேன்..” என்று அவனது கைக்குள் சிக்காமல் நழுவி விட்டாள்.
அவள் சொல்வதைப் பார்த்து சிரித்து விட்டு அவனும் சீக்கிரமாக அந்தப் பார்ட்டிக்கு புறப்பட்டான்.
நீல வண்ண சேலையில் அற்புத வள்ளி மேகங்களுக்கு நடுவில் தெரியும் பிரகாசமான சந்திரனைப் போல அவளது வதனம் மிளிர்ந்தது.
எந்தவித ஒப்பனைகளும் இல்லாமலேயே அவள் எழில் கொஞ்சும் எளிமையான அழகு அவனை ஈர்த்தது.
அதனை இரசித்தபடி அவள் அருகில் சென்றவன்,
“ஏய் பொண்டாட்டி என் அழகு ராட்சசி உன் அழகு என்னை கொள்ளாமல் கொள்ளுதடி..” என்று கூற,
ஒருவனைப் பார்த்து புன்னகை பூத்த வள்ளி தனது மனதில் தோன்றிய சந்தேகத்தை கேட்க எண்ணம் கொண்டு,
“உண்மையிலேயே நான் அழகா இருக்கேனா..?”
“என்ன சந்தேகம் இது? இந்த உலகத்திலேயே அழகி யார் என்று கேட்டால் கண்ணை மூடிட்டு நான் உன்ன தான் கை காட்டுவேன்..”
“அப்படியா..?”
“அப்படித்தான் மை டியர் பொண்டாட்டி..” என்று துருவன் வள்ளியின் கன்னம் கிள்ளினான்.
“சரி சரி டைம் ஆச்சு உங்க கொஞ்சல் எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம் வாங்க போவோம்..” என்று கூற அவனும் நீல நிற கோட் சூட் போட்டு அவளுடன் இணைந்து அருகில் இருந்த ஹோட்டலுக்கு நடைபாதையில் இருவரும் பேசி சிரித்துக்கொண்டு நடந்து சென்றனர்.
அவர்கள் இருவருக்காகவும் அங்கே ஆபத்து காத்துக் கொண்டிருந்தது.