முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 40

4.7
(12)

அரண் 40

குண்டு ஹன்னிலிருந்து நொடிப் பொழுதில் பாய்ந்து சென்றது.

குண்டு பாய்ந்த சத்தத்தில் அனைவரும் இறுகக் கண்களை மூடிக்கொண்டனர்.

அந்த குண்டு பாய்ந்து தாக்கிய நொடியில் “ஆஹ்ஹ்ஹ்..” என்ற பெரிய சத்தத்துடன் ரத்த வெள்ளம் அங்கு ஆறாகப் பெருகியது.

துருவனின் உயிர் இதோ பிரிந்து விட்டது என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையே அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது.

குண்டு ஹன்னின் முனையிலிருந்து பாய்ந்ததும் உடலில் இருந்த உயிரை அப்படியே உருவிக்கொண்டு சென்றது தான் ஆனால் துருவன் மீது அது படவே இல்லை அப்படி என்றால் துருவன் சாகவில்லையா..? அப்போ இறந்தது யார்..?

அந்தோ பரிதாபம் இறந்தது ருத்ர பிரசாத்தின் கூட்டத்திலிருந்த அடியாட்களில் ஒருவன். துருவனுக்கு ஹனைக் குறி வைத்தால் அவன் மீது தானே அந்த குண்டு பாய்ந்து இருக்க வேண்டும் எப்படி அவனது அடியாள் மீது குண்டு பாய்ந்தது என்று புரியாமல் அனைவரும் திகைத்து நிற்க ருத்ர பிரசாத் ருத்ர தாண்டவம் ஆடுபவன் போல ஒருவர் மீது மிகவும் கோபமாக நின்றான்.

கண்களை மூடி அனைத்துக்கும் தயாராக இருந்த துருவன் உயிர் இதோ பிரிந்து விட்டது என்றே நினைத்து விட்டான்.

ஆனால் சத்தம் கேட்டு இவ்வளவு நேரம் உடம்பில் எது வித வலியோ எதுவுமே ஏற்பட வில்லையே என்று சிறிது நேரத்தில் விழி விரித்து பார்த்ததும் அங்கே நடந்த சம்பவத்தை ஊகித்துத் தெரிந்து கொண்ட துருவனின் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் அவனை அறியாமலே வெளிவந்தன.

“அ…ற்..பு..த..ம்…” ஆம் நமது அற்புத வள்ளியின் திருவிளையாடல் தான் இது தனது கணவனின் உயிர் பிரியப் போகின்றது என்று கடைசி தருவாயில் உணர்ந்த அற்புதவள்ளி ஏதாவது செய்ய வேண்டும் அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று ருத்ர பிரசாத் ஹன்னை அழுத்தும் வேளையில் உடனே புயல் வேகத்தில் வந்து ருத்ர பிரசாத்தின் கையை மறுபக்கம் தட்டிவிட்டாள் வள்ளி அவ்வாறு புத்திசாரியாத்துடன் செய்த வேலையால் துருவனின் உயிர் காப்பாற்றப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக வள்ளி அந்த கும்பலோடு மாட்டிக் கொண்டாள்.

துருவனுக்கோ எப்படி அவள் எவ்வாறு இங்கே வந்தாள் இப்படி தன்னுடன் சேர்ந்து அவளும் மாட்டிக் கொண்டாளே என்று மனதில் பல குழப்பங்கள் சூழ்ந்து கொண்டன.

தன்னுயிர் போனாலும் பரவாயில்லை வள்ளியின் உயிரும் சேர்ந்து இந்த கயவர்களிடம் மாட்டிக் கொண்டதே என்று வருந்தியது துருவனின் மனது.

தனது வருத்தத்தையும், பயத்தையும் வெளியில் காட்டி தனது பலவீனத்தை இவர்கள் முன் உணர்த்த விரும்பாமல் வள்ளியைப் பார்த்து அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்று இருந்தான் துருவன்.

வள்ளிக்கோ தனது கணவனின் உயிரை காப்பாற்றிய சந்தோஷத்தில் புன்னகையுடன் “என்னங்க…” என்றால்

உடனே ருத்ர பிரசாத் நொடிப்பொழுதில் அவளை தன் கைக்குள் கொண்டு வந்து அவளது தலையில் பின்னால் கண்ணை வைத்தான்.

ருத்திர பிரசாத்திற்கோ பெரும் ஆனந்தம் இதுவரை எப்படி துருவனிடமிருந்து அந்த பைலை வாங்கிக் கொள்வது என்று தெரியாமல் திணறியவன் இப்பொழுது அவனது மனைவியை வைத்து காரியத்தை சாதித்து விடலாம் என்று மனதிற்குள் திட்டம் தீட்டியவன், எப்படியும் இவன் உயிருக்கு பயந்தவன் அல்ல என்பது நன்றாகவே ருத்ர பிரசாத்துக்கு புரிந்தது.

ஆனால் மனைவியின் உயிருக்காக அவன் எதையும் செய்வான் என்று அவனுக்கு தெரியும் யாராவது மனைவியின் உயிரை எதற்கும் பணயம் வைப்பார்களா என்று எண்ணியிருந்தவன் துருவனைப் பார்த்து,

“என்ன துருவா உன்னோட வைப் இப்ப என்னோட கஸ்டடியில் எப்படி வசதி பைல கொடுக்கிறியா..? இல்லையா..?”

“எனக்கு பைல் ஒன்னும் தேவையில்லை பழிவெறி தான் முக்கியம்னு நீ என்ன கொல்றதா தானே முடிவு பண்ணி இருந்த இப்ப என்ன பைல கேக்குற..” என்று நக்கலாக துருவன் கேட்க,

“எனக்கு அதுவும் முக்கியம்தான். இப்போ தரப்போறியா இல்லைனா உன்னோட மனைவியோட உயிர் பரலோகம் போறத பார்க்க போறியா..?” என்று கேட்டதும் சிறிது தடுமாறியவன்,

“அது பைலா என்கிட்ட இல்ல டாக்குமெண்டா என்னோட லேப்டாப்ல பென்டிரைவில் சேவ் பண்ணி வச்சிருக்கேன் அது ரூம்ல இருக்கு எதுவுமே என்கிட்ட ஹாட் காப்பியா இல்ல எல்லாமே சாஃப்ட் காப்பியா தான் இருக்கு..”

“ஓகே குட் கேட்டதும் அடம் பிடிக்காமல் சொல்லிட்ட உன்னோட ரூம் சாவியை கொடு ஆட்கள் போய் எடுத்துட்டு வந்துருவாங்க அதுக்கப்புறம் உன் மனைவிய விட்டுடுறேன்

எனக்கு உன் மேல தான் பகை அதால உன் உயிரை மட்டும் தான் எடுப்பேன் இந்தச் சின்ன பொண்ணு வாழ்க்கையில விளையாட மாட்டேன்..” என்று ருத்ர பிரசாத் கூற,

வள்ளிக்கோ கோபம் குமிறிகள் கொண்டு வந்து விட்டது.

“என்னங்க அவன் சொல்றான் என்று அதெல்லாம் குடுத்துடாதீங்க அவன் அப்படி என்னதான் பண்றான்னு பார்ப்போம் எனக்கு உயிர் மேல ஆசையில்ல நீங்களே இல்லாத உலகத்துல நான் இருந்து என்ன செய்யப் போறேன்

அது உங்களோட உழைப்புக்கு கிடைத்த சம்பளம் அதை களவாண்டு பொழைக்கிறது எல்லாம் ஒரு பொழப்பா நாய் பொழப்பு அந்த பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்..” என்று அத்துமீறி வள்ளி பேச ருத்ர பிரசாத்திற்கோ கோபம் தலைக்கேறியது.

“ஏய் யாரப்பார்த்து என்ன வார்த்தை பேசின..?” என்று அவளது முடியை கொத்தாகப் பிடித்து பின்பக்கம் இழுக்க அவளோ வலி தாங்க முடியாமல் “ஆஹ்ஹ் விடுடா..” என்று கதறினாள்.

துருவனுக்கோ அவள் வேதனையில் அலறுவதை பார்த்து கோபம் நுனி மூக்கில் வந்து நின்றது.

“அவள விடுங்கடா அவள் சொல்றது சரிதானே உன்னோட உழைப்பு தான் உனக்கு சொந்தம் என்னோட உழைப்பு எனக்கு மட்டும்தான்

என்னோட உழைப்பை திருடி அதுல காசு சம்பாதிக்கிறது எல்லாம் கோழைத்தனம் நீ உண்மையான ஆம்பளையா இருந்தா உன்னோட உழைப்புல நீ உழைச்சி சாப்பிடு என் உழைப்பை திருடி தின்பதெல்லாம் அற்புதம் சொல்வது போல் களவு தான்..” என்று கூறியதும் உடனே ருத்ர பிரசாத் வள்ளியை கைவளைவிற்குள் வைத்துக் கொண்டு துருவனின் கழுத்தைச் பிடித்து நெறித்தான்.

ருத்திர பிரசாத்தின் கை வளைவுக்குள் இருந்த வள்ளி அவனது செய்கையைக் கண்டு திமிறினாள்.

அந்நேரம் பார்த்து ருத்திர பிரசாத்தின் அருகில் வந்து நின்ற ரேகா,

“அண்ணா எப்படியும் இவனை நீங்கள் கொல்லத்தானே போறீங்க..”

ரேகாவின் திடீர் கேள்வியை கேட்டு துருவனின் கழுத்தில் இருந்து கையெடுக்க துருவன் இடைவிடாமல் மூச்சு விட சிரமப்பட்டு கொண்டு இருமத் தொடங்கியவன்,

“ஆமா இப்போ இந்த சந்தேகம் முக்கியம்தான்..” என்று கடிந்து கொண்டான்.

“இல்லன்னா எனக்கு அவனோட ஒரு சின்ன டீலிங் இருக்கு உன்னோட பைல் வரும் வரையும் நான் ஒரு சின்ன விளையாட்டு விளையாடிட்டு விடவா..?”

“ரேகா என்ன பண்ணப் போற..?”

“இல்லனா இவன கல்யாணம் பண்ணிக்க நான் திட்டம் போட்ட நேரம் என்ன ரொம்ப கேவலமா பேசிட்டான் அப்பவே இவனுக்கு ஏதாவது ஒரு பதிலடி கொடுக்கணும்னு நினைச்சேன் இப்போ அவளோட மனைவியும் வந்து மாட்டிக்கிட்டா அதனால அவள வச்சு இவனுக்கு ஒரு பதிலடி கொடுப்போம் என்று பார்க்கிறேன்…” என்று ரேகா கூட அதுவும் நல்ல யோசனையாகவே ருத்ரபிரசாத்திற்குப் பட்டது.

ருத்திரபிரசாத்தின் முகத்தில் புன்னகை மிளிர தனது திட்டத்திற்கு சம்மதம் கிடைத்த சந்தோஷத்தில் மேலும் தனது திட்டத்தை விளக்கத் தொடங்கினாள் ரேகா.

“இங்கே இருக்கிற 12 பேரையும் வச்சு இந்த பட்டிக்காட்ட..” என்று அவள் இழுக்கும் போதே,

துருவனுக்கு அவள் கூறும் வார்த்தைகளை காதில் வாங்க முடியாமல் நரம்புகள் புடைக்க, “ஏய்…” என்று சீறினான்.

அவனது அலறல் சத்தம் கேட்டு அந்தக் கட்டடமே இடிந்து விழுவது போல எதிரொலித்தது.

அவனது கோபத்தின் சீற்றத்தை பார்த்த ருத்ர பிரசாத் அவனது மனைவியை வைத்து தான் அவனிடம் அனைத்தையும் சாதிக்கலாம் என்பதை புரிந்து கொண்டான்.

எதனை இவர்களிடம் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தானோ அதனை அவர்கள் கண்டுகொள்ள மிகுந்த கோபத்தில் ரேகாவை பார்த்து,

“உங்க ரெண்டு பேருக்கும் எங்க அப்பா மேல தானே கோபம் அதுக்காக என்னை என்ன வேணும் என்றாலும் செய்ங்க ஆனா அற்புதத்து மேல கை வச்சீங்க உங்க ரெண்டு பேரையும் உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்..” என்று துருவன் இருவரையும் பார்த்து எச்சரித்தான்.

“அப்படித்தான்டா பண்ணுவேன் உன்னால் என்னடா செய்ய முடியும் உன் பொண்டாட்டி என்ன தங்கமா..” என்று ரேகா எதிரி கொண்டு வந்து அவன் முன் நின்று வள்ளியின் சேலைத் தலைப்பை பிடித்தாள்.

அவளது சேலை தலைப்பை பிடித்ததும் ருத்திரபிரசாத்தின் கை வளைவுகள் இருந்த வள்ளி உடனே அவனது கை வளைவில் இருந்து தன்னை உருவிக் கொண்டவள் இமைக்கும் நொடியில் ரேகாவின் கன்னத்தை தனது கையினால் பதம் பார்த்து இருந்தாள்.

அவளது அடி மின்னல் மின்னியது போல ரேகாவின் கன்னத்தில் நன்றாக பதிந்தது இவ்வாறு திடீரென தன் கை வளைவுக்குள் இருந்தவள் எகிறிக் குதித்து அடிப்பாள் என்று எதிர்பாராத ருத்ர பிரசாத்துக்கு மிகவும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் அதிரடியாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!