முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 12

4.8
(9)

அரண் 12

 

தனபால் காரினை ஓட்ட முன்பக்கம் அவர் அருகில் வைதேகியும் பின்பக்க சீட்டில் சீதாவும் சக்திவேலும் இருந்தனர்.

கார் ஓடிக்கொண்டே தனபால் சக்திவேலிடம்,

“நாளைக்கே கிளம்புறேன்னு சொல்லுறீங்க இருந்து ரெண்டு நாள் ஊரையும் சுத்தி பார்த்துட்டு போகலாமே..!” என்றிட,

அதற்கு சக்திவேலோ,

“இல்ல அங்க இன்னும் ரெண்டு நாள்ல வயல்ல நெல்லு விதைக்கணும் நாளைக்கு போய் அந்த வேலைகளை பார்த்தால் தான் சரி.. அங்கே போய் வயல் விதைச்சிட்டு ஒரு வாரத்துல திரும்பி வந்துடுறேன்…”என்று சற்று கவலையுடன் கூறினார்.

“மறக்காம அண்ணியையும் கூட்டி வாங்க அண்ணா..” என்று வைதேகி கூற,

சீதா சிரித்துக்கொண்டே,

“நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்பேன்.. சொல்லுவீங்களா..?” என்று தயக்கத்துடன் வைதேகியிடம் கேட்டார்.

“அதுக்கு என்ன அண்ணி கேளுங்க.. சொல்றேன்..”

“எப்படி கல்யாணத்தன்னைக்கு மகனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சீங்க..?”

“அதுதான் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டேனே சொல்லக்கூடாது ரகசியம்..”என்று சக்திவேலை பார்த்து கண்ணடித்தார் வைதேகி.

சீதாவிற்கு சிறிது சங்கடமாய் போய்விட்டது. அவர் ஒன்றும் பேசாமல்  கார் ஜன்னல் வழியாக சாலையை வெறித்துப் பார்த்தபடி இருக்க,

“என்ன அண்ணி யோசனை எல்லாம் பலமா இருக்கு.. நான் சும்மா சொன்னேன் அண்ணி..

உங்ககிட்ட சொல்லாமையா என்னோட மகன பத்தி தான் எனக்கு நல்லா தெரியுமே அதனால ரூமுக்குள் கூட்டி போய்,

‘இந்த பொண்ண நீ கட்டாயமா கல்யாணம் பண்ணி தான் ஆகணும் இந்தப் பொண்ணு பாவம்..” என்று சொல்ல,

“அப்படி சொல்ல மாப்பிள்ளை ஒத்துக்கிட்டாரா..?” என்று சீதா ஆச்சரியமாகக் கேட்க,

உங்க மருமகன் என்ன சும்மா ஆளா..? உடனே,

“இல்லம்மா என்னால முடியாது. எனக்கு கல்யாணமே வேணாம் நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பல..

இனிமேல் கல்யாணத்தை பத்தி என்கிட்ட பேசாதீங்க.. ப்ளீஸ்மா.. யாரு என்னன்னு ஊர் பேர் தெரியாத ஒரு பொண்ண எப்படி நான் கட்டிக்கிறது நீங்க சொன்னா மட்டும் நான் கல்யாணம் கட்டிக்க முடியுமா..?” என்று காட்டு கத்து கத்தினான்.

“அப்பப்போ அந்த ரேகாவ கட்டிக்கோ..!” என்று வைதேகி மூஞ்சில் அடித்தால் போல் கூற,

“அவதான் விட்டுட்டு போயிட்டாளே!” என்று துருவன் முணுமுணுக்க,

“நீ கட்டினாலும் அவ ரெண்டு மூணு மாசத்துல விட்டுட்டு தான் போயிருப்பா..”என்று கூறிவிட்டு தனது மகனைப் பார்க்க,

துருவனோ முறைத்துக் கொண்டு,

“அம்மா மைண்ட் யுவர் வேர்ட்ஸ்..”

“ஒன்னு போட்டேன்னா.. பிசினஸ் பார்ட்னரை சொன்னதும் கோபம் வந்துட்டோ..”

“அப்படி எல்லாம் இல்ல ஏன் இந்த பொண்ண கல்யாணம் பண்ணனும்னு நீங்க ஒத்தக் கால்ல நிக்கிறீங்க..?”

“உன்னோட ஒரே ரூம்ல அந்த பொண்ணு இருந்தத இங்க எல்லாரும் பாத்துட்டாங்க அதனால அந்த பொண்ணோட மானம் போச்சு..”

“அம்மா இந்த பொண்ணு யாருன்னே தெரியாதுமா நான் ஒண்ணுமே செய்யல நம்புங்க..”

“சரி நீ ஒன்னும் செய்யல என்று நான் நம்புறேன் ஓகே இந்த பொண்ண கல்யாணம் கட்டு..”

“நீங்க கட்டாயப்படுத்தறத பார்த்தா இதுக்கும் உங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியுது..” என்று சந்தேகத்துடன் புருவம் சுருக்கி கேட்டான்.

“அப்படியே வைத்துக் கொள்ளேன்..” என்று நிமிர்ந்து திமிராக பதில் கூறினார்.

துருவன் அன்னையின் பதிலைக் கேட்டு அதிர்ச்சியுடன் இரண்டடி பின்னோக்கி நகர்ந்தபடி,

“என்ன?” என்றிட,

“ஆமாடா இந்த பொண்ண எனக்கு ரொம்ப நல்லா தெரியும் என்னோட அண்ணனின் ஒரே மகள் எனக்கு நீ ரேகாவை கடிக்கிறது பிடிக்கல அவளோட பார்வையும் சரி இல்ல அவளோட சொந்தங்களும் ஒருத்தரும் நல்லவர்களாகத் தெரியல.

என் கண்முன்னுக்கு உன்னோட வாழ்க்கை சீரழிந்து போறத என்னால பார்க்க முடியல அதனால தான் நான் அப்படி செஞ்சேன் இப்ப நீ உங்களை கல்யாணம் கட்டிகலன்னா இந்த அம்மாவை இனிமேல் நீ பார்க்கவே முடியாது..”

“என்ன பிளாக்மெயில் பண்றீங்களா..?”

“இல்ல துருவன் எனக்கு வேற வழி தெரியல.. இத்தனை வருஷமா அவர நான் பிரிஞ்சி இருந்தது போதும் இனியாவது..” என்று வைதேகி எதனையோ கூற வந்து பின் நிறுத்திவிட்டு கண்கலங்க,

தனபால் அருகில் சென்று வைதேகியிடம்,

“நான் அப்பவே சொன்னேன் இதெல்லாம் தேவையில்லாத வேலை..  இப்ப பாரு எங்க வந்து முடிஞ்சிருக்குன்னு..” என்று சிடுசிடுக்க,

“இல்லைங்க என்னால முடியல என் பையன் நான் சொன்னா கேட்பான்னு நம்பிகிட்டு இருந்தேன் ஆனா அதெல்லாம் பொய்யின்னு என்னோட நம்பிக்கை எல்லாத்தையும் தவிடு பொடி ஆக்கிட்டான்.

என் மனசு வலிக்குதுங்க..

நான் அப்படி என்ன கேட்டேன் எனக்காக நான் பார்க்கிற ஒரு பொண்ண கட்டிக்கோன்னு தானே கேட்டேன்.

ஊர் உலகத்துல அம்மா அப்பா பையனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறது இல்லையா அதை தானே நானும் செய்தேன்.

அந்த ரேகாவை விட இந்த பொண்ணு எந்த விதத்தில் குறைச்சல். அவள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் இவனை கல்யாணம் முடிக்கணும்னு நினைச்சிருக்கா கல்யாணத்துக்கு முதல் நாள் கூட துருவனோட ரூமில் எதனையோ செக் பண்ணிட்டு தான் இருந்தாள்.

நான் உள்ள வந்ததும் பூனையைக் கண்ட எலி போல மிரண்டு போய் அந்த இடத்தை விட்டு ஓடிட்டாள்.

ஆனா இதெல்லாம் அவன்ட சொன்னா அவன் நம்புவானா நான் எதோ கல்யாணத்தை நிறுத்துவதற்குன்னு பொய் சொல்றதா நினைப்பான்.

ரேகா இல்லன்னா கல்யாணமே வேணான்னு சொல்றான்.. அவளை என்ன லவ்வா பண்ணினான்..”

வைதேகி இவ்வாறு கூறி கண் கலங்க துருவனுக்கு மண்டையே வெடித்து விடும் போல இருந்தது.

காலையிலிருந்து அவனுக்கு தலைவலி, தலைவலி மேல் தலைவலியாக இருந்தது.

அந்த பொண்ணை பார்த்ததிலிருந்து நடந்த குழப்பங்கள் அனைத்தையும் நினைத்தவன் இந்த குழப்பத்திற்கு முடிவு கட்ட என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தான்.

வைதேகி மெதுவாக அவன் அருகில் சென்று அன்பாக அவனது தலையை தடவி,

“இங்க பாருப்பா நான் எப்போதும் உனக்கு கெட்டது செய்ய நினைக்க மாட்டேன். இந்த அம்மாவ நீ நம்புறல்ல.. உன்னோட அம்மாவுக்காக இதை மட்டும் நீ செய்..” என்று வைதேகி கெஞ்சிட,

அவனுக்கு அன்னையின் முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது. அவரது கண்ணீரை ஆதரவாகத் துடைத்துவிட்டு,

“அம்மா எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலமா ஏதோ கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு. ஒரே குழப்பமா இருக்கு என்னால நிதானமா முடிவெடுக்க முடியலமா….” என்று அவன் தாய் முகம் பார்த்து அன்பு ததும்பிடக் கூறினான்.

“நான் எப்போதும் உனக்கு துணையாக இருப்பேன் என்னோட இந்த ஒரு விருப்பத்தை மட்டும் நீ நிறைவேற்றுப்பா ப்ளீஸ் துருவன் இந்த ரெண்டு கையையும் நான் காலா நினைச்சு கேட்கிறேன் தயவு செய்து என்னோட அண்ணன் பொன்னை கல்யாணம் கட்டிக்கோ..” என்று துருவனிடம்  இரு கைகளையும் பிடித்துக் கொண்டு கெஞ்சினார் வைதேகி.

துருவனுக்கோ பெரும் சங்கடமாகிப் போனது. ‘எப்படியும் ரேகா உண்மையிலேயே ரொம்ப மோசமான கேரக்டர். கணவனாக வரப்போறவனை இன்னொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்தும் என்னிடம் அவள் கூறிய முறையும் கூறிய சொற்களும் மிகவும் தவறானது. என்ன இருந்தாலும் அவளை திருமணம் செய்து கொள்ள முடியாதுதான் இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதற்கு திருமணம் செய்யாமலே இருக்கலாம்

ஆனால் அம்மா கூறும் பெண்ணை எனக்கு ஏற்கனவே தெரியாது ஒரு தெரியாத பெண்ணிடம் எப்படி வாழ்க்கையை ஒப்படைப்பது என்று சிந்தித்தவன்,

அம்மாவிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் தடுமாறி நிற்க,

தனபால் துருவனின் அருகில் வந்து,

“அம்மா ஆசைப்படுறாங்கன்னு நீ எதையும் முடிவெடுக்காதே துருவன். உனக்கு என்ன தோணுதோ அதை நீ செய் இது உன்னோட வாழ்க்கை நீயே முடிவெடுத்துக் கொள்..” என்று  தனபால் கூற,

வைதேகிக்கோ சற்று கோபம் வந்தது. ‘எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவார் என்று பார்த்தால் அவர் என்னனா பையனுக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு போறாரு சரியான தத்தி..’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டார்.

துருவனோ அன்னையின் முகத்தைப் பார்த்து விட்டு எழுந்து நின்று தீர்க்கமான ஒரு முடிவெடுத்தவனாக,

“சரி அம்மா நீங்க சொல்றது நான் ஒத்துக்கொள்கிறேன் உங்க அண்ணனோட பொண்ண  நான் கல்யாணம் கட்டிக்கிறேன்…”

அகம் மகிழ்ந்த வைதேகி, முகம் முழுவதும் புன்னகையுடன் பெரும் உவகையுடன் துருவனை கட்டி அணைத்து விடுவித்து,

“அப்படியாபா ரொம்ப சந்தோசம் ரொம்ப சந்தோசம்..” என்று முத்த மழையில் நனைத்தார்.

உடனே அன்னையின் சந்தோஷத்தை கண்டு தானும் இன்புற்றவன்,

“கொஞ்சம் பொறுங்கம்மா.. நான் இன்னும் பேசி முடிக்கல ஆனா ஒரு கண்டிஷன் இருக்கு…” என்று அவன் உறுதியாகக் கூற,

தனபாலும் வைதேகியும் அவன் யாது கூற போகின்றான் என்று மாற்றி மாற்றி தங்களுக்குள் யோசித்து முடியாமல் வைதேகி வாய் திறந்தே கேட்டுவிட்டார்.

“அப்படி என்ன கண்டிஷன்..?”

“ஒரு வருஷத்துல இந்த பொண்ண எனக்கு பிடிக்கலன்னா நான் டைவர்ஸ் பண்ணிடுவேன் ஓகேயா..” என்றிட,

சிறிது நேரம் வைதேகி சிந்தித்து விட்டு ஒரு புன் சிரிப்புடன்,

“டபுள் ஓகே கண்ணா..” என்று கூறிய பின் தான் அவன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான்.

இதைக் கேட்டதும் சீதாவின் மனதில் சிறு புயல் மையம் கொண்டது போல இருந்தது.

சக்திவேலும் தனது மகளின் வாழ்க்கையை எண்ணி சிந்தனையில் ஆழ்ந்து போனார்.

சீதா தயக்கத்துடன்,

“அப்படின்னா மாப்பிள்ளை..” என்று இழுக்க,

“அண்ணி நீங்க ஒன்றும் கவலைப்படாதீங்க. என்னையும் என்னோட கணவரையும் மீறி துருவன் எந்த விஷயத்தையும் செய்ய மாட்டான்.

அப்படி செய்ற அளவுக்கு நான் என்னோட பிள்ளையை வளர்க்கல. அவனுக்கு பிடிக்கலைன்னா தான் அவன் டிவோர்ஸ் பண்ணுவேன் என்று சொன்னான்.

எப்படியும் அற்புத வள்ளிய அவனக்கு பிடிக்கிற மாதிரி அவனுக்கு ஏத்த மாதிரி நான் மாற்றிடுவேன். நீங்க கவலைப்படாதீங்க அற்புத வள்ளியை யாருக்குத்தான் பிடிக்காம போகும் அவள் ரொம்ப நல்ல பொண்ணு..” என்று வைதேகி தைரியமூட்ட,

“இல்ல வைதேகி..” என்று சீத்தா இழுக்க,

“நான் உங்க பொண்ண பத்திரமா பார்த்துக்கொள்வேன் உங்களுக்கு அடுத்த வருஷமே உங்க கையில ஒரு பேரனையோ அல்லது பேத்தியாயோ பெற்று தந்துருவா நீங்க பார்க்கத்தானே போறீங்க..” என்று கூற அனைவரும் வைதேகி கூறிய வார்த்தைகளால் மனதில் சாரல் வீச அந்தப் பயணமே ஒரு இனிய பயணமாக தொடர வீடும் வந்து சேர்ந்தது.

அனைவரும் களைப்பில் அவரவர் அறைக்கு சென்று உறங்கச் செல்ல,

வைதேகி மகனுக்காகவும் தன் மருமகளுக்காகவும் ஹாலில் காத்திருந்தார்

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!