அரண் 8
அற்புதவல்லிக்கு அண்டமே ஆட்டம் கண்டது போல இருந்தது. ‘எப்படி, எவ்வாறு அப்பா இங்கு வந்தார்..’ என்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்க,
“வள்ளி என்ன காரியம் பண்ணி வச்சிருக்கமா நீ எல்லாம் என்னோட பொண்ணுன்னு சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு..
அப்பா அம்மாக்கு தெரியாம இப்படி கல்யாணம் பண்ணிட்டு நிக்கிறியே அப்பா அம்மாவ பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா..? நீ இப்படி பண்ணுவேன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலமா..” என்று அவர் கோபமாகக் கூற,
“இ…ல்…லப்பா..” என்று வார்த்தை தந்தியடிக்க வாயில் கை வைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள் அற்புதவல்லி.
சத்தம் கேட்டு மேலிருந்து வேகமாக படிகளில் இறங்கி வந்த துருவன் அவரது பேச்சைக் கேட்டு படிகளிலேயே அப்படியே நின்றுவிட்டான்.
அற்புதவல்லி அழுவதை பார்த்து, ‘இவளுக்கு அழ சொல்லவா வேண்டும் அதுதான் நேற்று நடத்திவிட்டாலே பெரிய நாடகம் ஒன்று. என்ன நேற்று அழ வெச்சல்ல இன்னைக்கு நீ அழு. நல்லா அழு அப்படித்தான் அப்படித்தான் வேணும்..’ என்று மனதிற்குள் நினைத்து குத்தாட்டம் போட்டுக் கொண்டான் துருவன்.
தற்போதைய எதிரியான அற்புதவல்லிக்கு விழும் பேச்சுக்களை கேட்டு மனதிற்குள் ரசித்துக் கொண்டிருக்க,
அற்புதவள்ளியின் தந்தை அருகில் வந்து,
“என்னம்மா ஏதாவது பேசு ஏன் இப்படி வாயை மூடிக்கிட்டு இருக்க..?
எங்க ஊர்ல இருந்து உன்னோட கல்யாணத்துக்கு வந்திருந்த ஒருத்தர் தான் ஊருக்கு வந்து,
‘உன் மக மாதிரி ஒரு பொண்ணு கல்யாண வீட்டுல பார்த்தேன். உன் மக மாதிரி தப்பா இருக்கு..’ என்று கூற நான் நம்பவே இல்லை.
நீ என்ன சொல்லிட்டு வந்தம்மா உன்னோட தோழிக்கு பக்கத்து ஊர்ல கல்யாணம்ன்னு தானே சொல்லி வந்த அந்த கல்யாண பொன்ன நீ தான்னு என்கிட்ட சொல்லலயேம்மா..”
“இல்லப்பா நான்…” என்று இழுக்க அப்போதுதான் குளித்துவிட்டு ஏதோ சத்தம் கேட்க, அறையின் உள்ளிருந்து வைதேகி வெளியே வந்தார்.
வைதேகியைப் பார்த்ததும் சக்திவேல் அப்படியே ஸ்தம்பித்து போய் நின்றார்.
ஆம் துருவன் திருமணம் முடித்தது வைதேகி என் அண்ணனான சக்திவேலின் மகள் அற்புத வள்ளியை தான்.
“இங்கே இவளா..? இவ எப்படி..?” என்று அதிர்ந்து போய் சக்திவேலை அறியாமலே வார்த்தைகள் வெளிவந்தன.
வைதேகி எதிர்பார்த்ததுதான் இருந்தும் சிறு பதற்றம், பயம் நெஞ்சுக்குள் சூழ உயிர் ஊசலாடுவது போல இருந்தது.
ஊரிலிருந்து தெரிந்த ஒருவரை திருமணத்திற்கு வேண்டுமென்று தான் வைதேகி அழைத்திருந்தாள். அப்போதுதான் இந்த செய்தி சக்திவேலுக்கு உடனடியாக செல்லும் என்று அவருக்கு நன்றாக தெரியும்.
வைதேகி திட்டம் தீட்டியது போல் அது பழித்தும் விட்டது.
“அண்ணா..” என்று ஓடிவந்து வைதேகி சக்திவேலை கட்டி அணைத்தாள்.
சக்திவேல் உடனே தன்னில் இருந்து பிரித்து எடுத்து வைதேகியைப் பார்க்க கூட பிடிக்காமல் திரும்பி நின்றார்.
“அண்ணா இங்க பாருங்க இந்தப் பாவியோட முகத்தை நீங்க பார்க்க மாட்டீங்களா..? நான் செஞ்சதெல்லாம் தப்பு தான் அண்ணா.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.. ஏன் அண்ணா என் முகத்தை பார்க்கக் கூட உங்களுக்கு பிடிக்கலையா.. பேசாம உங்க கையாலே என்னையே கொன்று விடுங்கள் அண்ணா…” என்று கூறியதும் திரும்பி வைதேகி பார்த்த சக்திவேல்
“ஏன் இப்படி பண்ணின..?”
“உங்களோட பேசுறதுக்கு எனக்கு வேற வழி தெரியல.. என்னால முடியல அண்ணா இரவும், பகலும் நிம்மதியே இல்லை. எப்போ உங்கள விட்டு நான் இங்க வந்தேனோ.. அப்பவே என்னோட நிம்மதியும் தொலைஞ்சு போச்சு.. எனக்குன்னு இருக்கிற ஒரே சொந்தம் நீங்க மட்டும் தானே.. உங்களையும் விட்டுவிட்டு நான் இங்க தனிமையில் எவ்வளவு வாடி போனேன் தெரியுமா… பொய்யாக தான் அனைவர் முன்னும் நான் சிரித்து நடிக்கின்றேன்.
என்னோட கணவருக்கு நல்லா தெரியும் நான் எவ்வளவு கவலைப்படுகிறேன் என்று.. என்னோட மொத்த உயிரும் நீ தானே அண்ணா. உன்ன நான் எப்படி சந்தோசமா இருக்கிறது.. இவ்வளவு காலமும் அழுது கொண்டே வாழ்க்கையை ஓட்டியாச்சு இனிமேலாவது..” என்று வைதேகி எதனையோ கூற வந்தவர் கண்களை மூடி தன்ன அமைதிப்படுத்திக் கொண்டு பேச்சினை நிறுத்திவிட்டார்
“அதுதான் உன்னோட ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்ன்னு அப்பவே தலை முழுகீட்டனே பிறகு என்ன ஏன் தொல்லை பண்ணுற.. ஆடு பகை குட்டி உறவா..” என்று சக்திவேல் வைதேகி இடம் இருந்து தனது பார்வையை அற்புதவள்ளி பக்கம் திருப்பினார்.
“அண்ணா அப்படி சொல்லாதீங்க..”
“பின்ன என்ன நீ காலேஜுக்கு படிக்க போறேன்னு கல்யாணம் கட்டிக்கிட்டு வந்து என் முன்ன நின்னு என்னோட மரியாதை, கௌரவம் எல்லாத்தையும் அழிச்சிட்டு போயிட்ட அதுபோல என் பொண்ணும் செய்திருவாளோ என்று மனப் பயத்தில் நான் அவளை பள்ளிக்கூட பக்கமே அனுப்பல.. ஏன்னா நீ எனக்கு செய்த துரோகம் என்னோட மனச அந்த அளவுக்கு பாதிச்சிருச்சு இன்னொரு துரோகத்தை என்னால் தாங்க முடியாது. அதனால் தான் நான் என் குழந்தை பிறந்த அன்றே இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டேன்.
இதனைக் கேட்டுக் கொண்டிருந்த துருவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. ‘என்னது இவ படிக்கலையா படிக்காத பட்டிக்காட்டுப் பொண்ணையா எனக்கு கட்டி வச்சிருக்காங்க.. கொஞ்சமாவது நியாயம், தர்மம் வேணாமா அம்மா இப்படி பண்ணிட்டீங்களே..!” என்று மனதிற்குள் தாயினை அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் துருவன்.
“அண்ணா முதல் என்ன நடந்துச்சு என்று கேளுங்கள் அண்ணா..”
“நீ ஒன்றும் சொல்லத் தேவையில்லை நான் என்னோட பொண்ண பார்க்க தான் வந்தேன்… ஆனா வந்த பிறகு அவ உன்னோட குடும்பத்துல மருமகளா வந்துட்டான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என் பொண்ணு இங்க இருக்கிறது.. நெருப்பில் நிற்கிறதுக்கு சமம்.. நான் அவளை கூட்டிட்டு போறேன்..” என்று அற்புத வள்ளியின் கையை சக்திவேல் பிடிக்க,
“அண்ணா கொஞ்சம் பொறுங்க.. இப்படித்தான் அண்ணா அன்னைக்கும் நான் பேச வர என்ன நீங்க தடுத்திட்டிங்க நான் என்ன சொல்ல வந்தேன்னு கூட நீங்க காது கொடுத்து கேட்கல நான் வாய் திறக்க நீ என்னோட பேசினா நான் தூக்குல தொங்கிடுவேன் என்று பேசிட்டு நீங்க உள்ள போய் கதவை சாத்திட்டீங்க நான் எவ்வளவு நேரம் வழியே மழையில நனைஞ்சிட்டு நின்னோம் தெரியுமா.. ரொம்ப நேரமா நீங்க வெளியவே வரல.. என்னால அதுக்கு மேல முடியலன்னா என்னோட கால்கள் தொய்ந்து போய்விட்டது.. என்னோட கணவர் நான் கஷ்டப்படுறதை பார்த்து என்ன மும்பைக்கு அழைச்சிட்டு வந்துட்டாரு..
என்னோட கணவருடைய அம்மா சென்னையில தான் அந்த நேரம் இருந்தாங்க. அவங்க என்னோட சொந்த ஊரே சென்னை தான். பிசினஸ் செய்றதுக்காக இவர் மட்டும் மும்பைக்கு போனேர்..” என்று இவ்வளவு நாளும் மனதிற்குள் பூட்டி வைத்திருந்த ரகசியத்தை வைதேகி கூறத் தொடங்கினார்.
தனபால் அடிக்கடி தனது அன்னையை பார்க்க அவ்வப்போது மும்பையில் இருந்து சென்னைக்கு வருவார். பார்க்க வரும்போது தான் வைதேகி சிநேகம் பிடித்து பின் விரும்பி கடிதம் மூலம் தனது காதலை தொடர்ந்தனர்.. திடீரென்று தனபாலின் தாய்க்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று வைதேகிக்கு அவசர கடிதம் ஒன்று வந்தது.
அப்போது தனபாலில் தாயை வைத்தியசாலையில் பார்க்க வந்த வைதேகியை தனபால் “உங்க வருங்கால மருமகள்மா.. என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. வைதேகி அருகில் அழைத்து அவரது கையைப் பிடித்துக் கொண்டு,
“லட்சணமா இருக்க அம்மா என்னோட பையனை கவனமா பார்த்துக்கோ.. நான் உன்கிட்ட உனக்கு செய்வியாமா..” என்று கேட்க அந்த இறக்கும் தருவாயில் இருக்கும் தனபாலின் தாயிடம் எவ்வாறு மறுப்பது.
வேறு வழியில்லாமல் ஆம் என தலையாட்டினார். உடனே அந்த வறண்டு போன உதடுகள் அழகாக சிரித்தன.
அந்த மகிழ்ச்சியிலேயே, “எனக்குன்னு இருக்கிறது ஒரே ஒரு பிள்ளை அந்த பிள்ளையிட கல்யாணத்தை நான் பார்த்துட்டு என்னோட கடைசி காலத்தை முடிச்சுக்கணும்ன்னு ஆசைப்படுறேன்.. எனக்காக நீ இந்த உதவியும் மட்டும் செய்வியாமா..? இதுக்கு மேல என் உடம்புல உயிர் தாங்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியுது..” என்று கூறி தொடர்ந்து இருமினார்.
அவர் இரும அவரது வாயிலிருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. உடனே தனபால் “டாக்டர் டாக்டர்..”என கத்தத் தொடங்கினார்.
டாக்டர் ஓடி வந்து அவரது கையைப் பிடித்து பார்த்துவிட்டு,
“சாரி தனபால் சி எஸ் நோ மோர்.. சொந்தங்களுக்கு எல்லாம் சொல்லி அனுப்பிடுங்க..” என்று கூறி தனபால் வைதேகி ஆகிய இருவரின் தலையில் இடியை இறக்கினார்.
தனபாலை அருகே அழைத்து கையில் தன்னுடைய அம்மாவின் தாலியை திணித்து விட்டார். தனபாலுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வைதேகியைப் பார்த்து, அவள் அருகே தனபால் தாலியுடன் செல்ல, இல்லையென தலையாட்டியபடி பின்னகர்ந்து போனார்.
அதனைப் பார்த்துக் கொண்டிருந்த தனபாலின் தாய்க்கோ மூச்சு வாங்கத் தொடங்கியது. அவரது இறுதிக்கட்ட நிலை வந்துவிட்டது என உணர்ந்த தனபால் கண்களில் நீருடன் மேலும் பொறுமை காக்க முடியாமல், தனது அன்னையின் இறுதி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வைதேகியிடம் கூட எதுவும் சொல்லாமல் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் தாலியைக் கட்டினார். தனபாலின் தாய் அப்படியே சிரித்த முகத்துடன் இதுவரை வாழ்த்தி ஆசிர்வதித்த கையுடன் அடுத்த நிமிஷமே இறையடி சேர்ந்தார்.
இவ்வாறு அனைத்து விடயத்தையும் கூறி முடித்த வைதேகி கீழே இருந்து குலுங்கி குலுங்கி அழுதார்.
கதையைக் கேட்ட பின்பும் சக்திவேல் வைதேகி மன்னிப்பாரா ..?
அடுத்த பதிவில் பார்ப்போம்..