Home Ongoing storyமையல் கொண்டேன் மைவிழி அழகிலே – 3

மையல் கொண்டேன் மைவிழி அழகிலே – 3

by Aazhi Thendral
5
(2)

தன்னுடைய எம்.டி அறையை விட்டு வெளியேறிய ஆதிசேஷனோ சம்யுக்தாவையே பார்த்தபடி நடந்து வந்தான். அவன் முகத்தில் மலர்ச்சியும் புன்னகையும் நிறைந்திருந்தது.

அதை பார்த்ததுமே சம்யுக்தாவிற்கு ஓரளவு புரிந்து போனது. ஆனால் என்னவென்று ஆதியே சொல்லட்டுமென காத்துக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய இருக்கையில் வந்தமர்ந்த ஆதிசேஷனும் அலைபேசியை எடுத்த விஷயத்தை சுருக்கமாக குறுஞ்செய்தியாக சம்யுக்தாவிற்கு அனுப்பி வைக்க, அது”டிங்..” என்ற ஒலியுடன் சம்யுக்தாவின் அலைபேசிக்கு வந்து சேர்ந்தது.

அதை எடுத்துப் பார்த்ததுமே ஆதியின் முகத்தில் இருந்த புன்னகை சம்யுக்தாவின் முகத்திற்கு மாறி பல மடங்காக அதிகரித்து இருந்தது.

அப்படியே அருகில் அமர்ந்திருந்த வித்யாவிற்கும் அந்த செய்தியை காண்பிக்க, அவளுக்கும் ஆச்சரியமும் சந்தோஷமாக இருந்தது.

எப்படியும் இது நடக்கும் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் இருவருமே இதை எதிர்பார்த்திருக்கவில்லை. நேற்று தான் சம்யுக்தா இதைப் பற்றி தன்னிடம் புலம்பி கொண்டிருந்தாள்.

ஆனால் இன்று காலையிலேயே ஆதிசேஷனுக்கான ப்ரமோஷனை பற்றி எம்.டி பேசினார் என்பது வித்யாவிற்கும் மகிழ்ச்சியே.

“சீக்கிரமே டும் டும் டும்மா..? கல்யாணத்துக்கு தனியா, உன்னோட ஆள் ப்ரமோஷனுக்கு தனியானு எனக்கு இரண்டு ட்ரீட் கொடுத்துடனும். அதுல ஒன்னு இன்னைக்கு ஆபீஸ் முடிஞ்சதும் எனும்போதே மீண்டும் “டிங்..” என்ற ஒலியுடன் அடுத்த குறுஞ்செய்தி சம்யூவின் எண்ணுக்கு வந்து சேர்ந்தது.

“இன்னைக்கு ஈவ்னிங் நம்ம எப்போதும் போற ரெஸ்டாரன்ட்க்கு வந்துடு. உன்கிட்ட பேசணும்” என்று ஆதி கூறியிருக்க, அதை வித்யாவிடம் காட்டியதும்,

“புரிஞ்சுதுடி. எப்போதும் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரென்ஸ் அவனுக்கு தானே? நீ அவன் கூட இன்னைக்கு கிளம்பு. நம்ம ட்ரீட்டை நாளைக்கு வச்சுக்கலாம். ஆனா நாளைக்கும் ஏதாவது காரணம் சொல்லக்கூடாது கண்டிப்பா எனக்கு ட்ரீட் தரணும்.”

“கண்டிப்பா தரேன்டி. சாரி.. கோவிச்சுக்காத..”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ சந்தோஷமா போய்ட்டு வா.”

என்றதும் சரி என்று தலையசைத்தாள். அன்றைய நாள் முழுக்க ஆதிக்கும், சம்யுவிற்கும் முகம் மலர்ச்சியாக இருந்தது. சம்யூ வித்யாவிடம் பேசுவது போலவே மற்றவர்கள் பார்வையில் சந்தேகம் வராதப்படி முகமலர்ச்சியை மறைத்தாள்.

மாலை ஆறு மணிக்கு அலுவகத்தை விட்டு வெளியேறியவள் அவன் கூறியப்படி வித்யாவுடன் ரெஸ்டாரெண்ட் வந்து இறங்க அவளுக்காக ஆதி ஏற்கனவே அங்க காத்துக் கொண்டிருந்தான்.

வித்யாவோ அவனை பார்த்து, “ரொம்ப நாளா எதிர்பார்த்த விஷயம் நடந்துடுச்சு போலருக்கு.  கங்ரேட்ஸ்..” என்றாள்

“தேங்க் யூ வித்யா” என்றான் ஆதி.

அவனுக்கு சிறு தலையசைப்பை பதிலாக கொடுத்தவள் சம்யூவின் புறம் திரும்பி,

“சரிடி.. பார்த்து பத்திரமா வீடு வந்து சேரு. நான் கிளம்புறேன்…” என்றுவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

இருவரும் உள்ளே நுழைந்தவர்கள் ஒரு டேபிளில் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்ததும் தனக்கான உணவுகளை ஆர்டர் செய்தனர்.

“சம்யூ.. சார் இன்னும் பத்து நாளைல என்னுடைய ப்ரமோஷன் பத்தி சொல்றேன்னு சொல்லி இருக்காரு. அவர் சொன்ன உடனே நம்ம விஷயத்தை பத்தி நான் எங்க வீட்டுல பேசிடுறேன்.

அப்பா அம்மா பெர்மிஸ்ஸன் கிடைச்ச உடனே சொல்றேன் நீயும் உங்க வீட்டுல பேசிடு.” என்றான்.

“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதி. நம்ம பல நாள் கனவு நிஜமாக போகுது. ஆனா எங்க வீட்டை நினைச்சாதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.”

“எதுக்குடி பயப்படுற? நீ உங்க வீட்ல நம்மளை பத்தி சொல்லி மட்டும் வை. மத்ததை நான் பார்த்துகிறேன்.”

“ஹ்ம்ம்ம்.. சரி..”

“ஆனால் எம்.டி ஏன் அப்படி சொன்னாருன்னுதான் எனக்கு புரியலை சம்யூ.”

“என்ன சொன்னாரு?”

“என்ன பொசிஷன்னு இப்போ சொல்ல போறது இல்ல. இன்னும் பத்து நாளைல அதைப்பத்தி உங்ககிட்ட சொல்லிடுவேன். சம்மதமா இல்லையானு நீங்கதான் சொல்லணும்னு சொன்னாரு.”

“சம்மதமா இல்லையாவா? அப்படி என்ன சொல்ல போறாரு?”

“அதான் எனக்கும் தெரியல.”

“ஏதாவது குண்டை தூக்கி போட்டுட போறாரு டா. இப்போதான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தேன். அது பொறுக்களையா உனக்கு.”

“சரி சரி விடு. என்ன.. அதிகபட்சம் டெல்லிக்கு அனுப்புவாருன்னு நினைக்குறேன். அவ்வளவுதான? பாத்துக்கலாம்.”

“டெல்லிக்கா? என்ன சொல்ற?”

“அனுப்புனா பாத்துக்கலாம்டி. வேற என்ன இருக்க போகுது?”

“சரி.. இன்னும் பத்து நாள் தானே பாப்போம்” என்றான்.

சம்யூவிற்கு சாப்பிடும்போது வித்யாவின் நினைவு வர, அவளுக்கு மட்டும் தனியா என்ன சமைக்க போறா? அவளுக்கும் சேர்த்து வாங்கிட்டு போயிடுறேன் என்றவள் வித்யாவுக்கு அழைத்து,

“எதுவும் சமைக்காதடி. நான் வாங்கிட்டு வரேன்” என்றாள்.

“அப்பாடி.. நானே கேக்கணும்னு நெனச்சேன். தயவு செஞ்சு வாங்கிட்டு வந்துடு. நான் சமைக்கிற மூட்லயே இல்ல. ஆனா இதெல்லாம் ட்ரீட் லிஸ்ட்ல சேர்த்துக்க மாட்டேன்.”

“சரி டி. நாளைக்கு ஸ்பெஷல் ட்ரீட் தரேன் பயப்படாத” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டு அவளுக்கான உணவையும் ஆர்டர் செய்து பார்சலாக வாங்கி கொண்டாள்.

இருவரும் சிறிது நேரம் பேசியப்படியே உணவை உண்டு முடித்தவர்கள், பைக்கில் ஏறி சம்யுக்தாவின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்.
பேசியபடியே வீட்டை அடைந்த இருவரும் வண்டியை விட்டு கீழே இறங்க,

“சரிடா.. பார்த்து போய்ட்டு வா. போனதும் கால் பண்ணு” என்றவள் வீட்டை நோக்கி செல்ல, அவளை ஒரு மறைவான இடத்திற்கு ஆதி அழைத்து சென்றான்.

“டேய்.. என்னடா பண்ற?”

“ஷ்ஷ்ஷ்.. சத்தம் போடாதடி.” என்றவன், “ஹேய்.. அதான் கல்யாணமே பண்ணிக்க போறோம்ல? ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கவா?” என்றான்

“என்னது கிஸ்ஸா? அதெல்லாம் முடியாது.”

“இரண்டு வருஷமா லவ் பன்றோம். அநியாயத்துக்கு என்னை தள்ளி வைக்குற. ஒரே ஒரு கிஸ்தானே கேட்டேன்.”

“ப்ளீஸ் டி..”

“ப்ளீஸ்..”

“ப்ளீஇஇஇஸ்..”

என்றான் பாவமான முகத்துடன்.

இதுவரை இவ்வளவு தூரம் அவன் கெஞ்சியதே இல்லை. வேண்டாம் என்றால் விலகி கொள்வான். இன்று அவனது வாய் மொழி மட்டும் அல்லாது அவனது பார்வையும் சேர்ந்து கெஞ்சியது.

அதில் ஒரு நிமிடம் அவன்மேல் பரிதாபப்பட்டவள்,

“சரி. ஒன்னே.. ஒன்னு.. அதுவும் கன்னத்துல. ஓகே வா?”

“பெருமூச்சோடு சரி. ஏதோ, இதுக்காவது பர்மிஸ்ஸன் கொடுத்தியே. அதுவே போதும்.  என்றவன் அவளை நெருங்கி இருந்தான்.

அவன் தன்னை நெருங்க நெருங்க சம்யுக்தாவின் கால்கள் தானாக பின்னோக்கி நகர்ந்தது.

அது மேலும் மேலும் ஆதிக்கு சுவாரஸ்யத்தை கூட்ட, வேண்டுமென்றே ஒவ்வொரு அடியாக பொறுமையாக எடுத்து வைத்து அவளை நோக்கி முன்னேறினான்.

சம்யூவிற்கோ இதயம் படபடவென அடித்து கொண்டது.

பின்னோக்கியே சென்றவள் ஒரு கட்டத்திற்கு மேல் மரத்தின் மீது மோதி நிற்க, அவள் நகராதப்படி இரண்டு பக்கமும் கரம் கொண்டு தடுத்தவன் அவள் கன்னத்தை நோக்கி குனிந்தான்.

சம்யூவோ விழிகளை இறுக மூடி கொண்டாள். அதில் ஆதியின் அதரத்தில் அழகான புன்னகை விரிந்தது.

அவள் பஞ்சு போன்ற கன்னத்தில் அழுந்த முத்தமிட்டதும் சம்யூவோ கூச்சத்தில் தன்னுடைய இரண்டு கரத்தையும் இறுக மூடி கொண்டாள்.

ஆதியிடமிருந்து கிடைக்கும் முதல் முத்தம் இது. திருமணத்திற்கு பிறகுதான் கிடைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும் ஆதியின் ஆசைக்காக விட்டு கொடுத்தாள்.

ஆனால் அந்த கள்வனுக்கோ சம்யூவின் கன்னத்தில் முத்தமிட்டது போதவில்லை. அவள் அனுமதியின்றி அவள் எதிர்பாராத தருணம் பட்டென அவள் இதழை சிறை செய்திருந்தான்.

இதை சற்றும் எதிர் பாராத சம்யூவின் இமைகள் தானாக விரிந்து கொண்டது. அவனை பிடித்து தள்ளிவிட முயன்ற இரண்டு கரங்களையும் தன் ஒற்றை கரத்தில் சிறை செய்தவன், மற்றய கரத்தை அவள் கூந்தல் காட்டிற்குள் நுழைத்து தன்னோடு சேர்த்து மேலும் நெருக்கி கொண்டான்.

அவள் மீதான காதலை முழு மூச்சாக முத்தத்தின் வழியே அவளுக்கு புரிய வைத்து கொண்டிருந்தான் ஆதிசேஷன்.

அவனது அன்பில் எதிர்ப்புகள் குறைந்து போனது சம்யூவிற்கு. அவள் பதிலுக்கு அவனை முத்தமிடாவிட்டாலும் இமை மூடி அவனது முத்தத்தை ஏற்க துவங்கினாள்.

அது ஆதிக்கு மேலும் வசதியாகி போக சிறை செய்த கரங்களை விடுவித்தவன், அவள் இடை வளைத்து தன்னோடு மேலும் நெருக்கி கொண்டு, தன்னை மறந்து அவள் இதழை ஆக்கிரமித்து கொண்டிருந்தான்.

நீண்ட நேரத்திற்கு பிறகே அவளது இதழை விடுவிக்க, சம்யூவின் இதழ் வீங்கி சிவந்து காணப்பட்டது. அதில் தன் இதழோரம் கள்ளப் புன்னகை வைத்தவன் சம்யூ.. என்றான் மெல்லிய குரலில்.

அவன் குரலில் சுயம் அடைந்தவள் இமை திறந்து பார்க்க, அவனது சிரிப்பை பார்த்த பின்னர்தான் அவன் தன்னை ஏமாற்றியதே அவளுக்கு நினைவில் வந்தது.

“யூ.. ச்சீட்டர்… கன்னத்துலதான கொடுக்க சொன்னேன். ஏன்டா இப்படி பண்ணின?” என்று அவனை தன்னால் முடிந்த வரை வலிக்கும்படியாகவே அடித்தவள்,

“ஃப்ராடு, எரும, உன்னை போய் நம்பினேன் பாரு” என்று மேலும் மேலும் அவள் அடித்து கொண்டே இருக்க, அதை சிரித்து கொண்டே வாங்கினான் ஆதி.

“அடியே.. போதும் டி. உன் கை வலிக்க போகுது.” என்று அவள் கரத்தினை தடுத்து பிடித்தவன், “இன்னும் ஒரு முறை பண்ணிக்கவா?” என்றான் வென்டுமென்றே.

“அட பாவி.. இன்னும் திருந்தலையா நீ?” என்றவள் மீண்டும் அடிக்க முயற்சிக்க, அவன் கரத்தினை விட்டால் தானே?

“சம்யூ.. எனக்கு தூக்கமே வராதுடி.. எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்றதும்

“டேய்.. எதுவும் சொல்லாத. முதல்ல இங்கிருந்து கிளம்பு” என்றவளுக்கும் வெட்கம் பிடுங்கி தின்றது.

“அவளது வெட்கத்தை ரசனையாக பார்த்தவன் இன்னும் கொஞ்ச நாள்தான். அப்புறம் உரிமையோட உன்னை மொத்தமா எடுத்துக்க போறேன். அப்போ என்ன செய்வ?”

“டேய்.. என்னடா இப்படி ஓப்பனா பேச ஆரம்பிச்சுட்ட? கல்யாண பேச்சு ஆரம்பிச்சதும் நீ ரொம்ப கெட்டு போய்ட்டடா.”

“ஆமா.. நீ இப்படி பேசவே தயக்கப்பட்டா கல்யாணத்துக்கு அப்புறம் நான் என்ன பண்றதாம்? அதான் எல்லாம் ஓகே ஆகிடுச்சுல? இனிமேல் நான் இப்படித்தான் பேசுவேன். ரொமான்டிக் மோட் ஸ்டார்ட் ஆகிடுச்சு.”

“ஒன்னும் ஸ்டார்ட் ஆக வேண்டாம். கொன்னுடுவேன். தயவு செஞ்சு கிளம்பு” என்று கையெடுத்து கும்பிட,

“இன்னைக்கு நான் தூங்கின மாதிரிதான்” என்றவன் அவளது இதழையே விழுங்கும் பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!