மை டியர் மண்டோதரி..(2)

5
(10)

என்னங்க மேடம் இப்படி சிரிக்கிறிங்க என்ற ஷ்ராவனியிடம் பின்னே சிரிக்காமல் அவனுங்க போயி ஏகன் அஜித் மாதிரி இன்வெஸ்டிகேசன் ஆபிஸரான்னு நீங்கள் கேட்டதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியலை மேடம். கொஞ்சம் கலரா இருந்துட்டா அவனுங்க அஜீத்தா என்று சிரித்தாள் சுஜாதா.

அவனுங்க ஸ்கூல் படிக்கும் பொழுதே பெயில், டிஸ்கன்டினியூ இப்படி , அப்படினு லேட் ஆக்கி இருபத்திநான்கு வயசுல பர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்கானுங்க என்றிட ஓஓ ஓகே மேடம் என்றவள் சரியான மக்குப் பசங்க போலையே என்று நினைத்திருந்தாள்.

மச்சி அந்த புது ப்ரொபசர் நம்மளை விட சின்னப் பொண்ணா இருக்குமோ என்ற விஷ்ணுவிடம் இருக்குமோ என்ன சின்னப் பொண்ணு தான் எனக்கு தெரிஞ்சு இருபத்தி இரண்டு வயசு இருக்கும் என்ற தஷகிரிவன் காபியை உறிஞ்சிட எப்படி மச்சி என்றான் விஷ்ணு.

முகத்தை பார்த்தாலே தெரியாதா என்ன என்றவன் திரும்பிட ஷ்ராவனியும், சுஜாதாவும் கேண்டீனிற்குள் நுழைந்தனர்.

அதோ வருது நான் வேண்டும் என்றால் கேட்டுட்டு வரட்டுமா தல என்ற அசோக்கை முறைத்தவன் அவங்க உன்னை விட பெரிய பொண்ணு தான் அது, இதுன்னு பேசாமல் மரியாதையா பேசுடா மங்க்கி என்றான் தஷகிரிவன்.

ஸாரி தல என்றவனிடம் தலையசைத்தவன் நண்பர்களுடன் சென்று விட்டான்.

என்னடி காலேஜ் எல்லாம் எப்படிப் போச்சு என்ற காயத்ரியிடம் அதுகென்னம்மா நல்லா தான் போச்சு என்ற ஷ்ராவனி அவர் சுட்ட அப்பத்தை தொட ச்சீ நாயே போடி போயி குளிச்சுட்டு வந்து தொடு என்றிட தன் தாயை முறைத்து விட்டு தன்னறைக்கு சென்றார்.

வேலைக்கு போயிட்டு வந்து குளிக்கனும்னு சொல்லி இப்படி டார்ச்சர் பண்ணுறாங்க. நான் என்ன செங்கல் சுமந்தேனா, இல்லை ரயில் எஞ்சினுக்கு கரி அள்ளிப் போட்டேனா என்று புலம்பியபடி குளியலறைக்குள் நுழைந்தாள்.

கல்லூரி முடிந்த பிறகு தனது தந்தையின் அலுவலகத்திற்கு சென்றான் தஷகிரிவன். என்ன மகிழா மேக்கப் எல்லாம் பலமா இருக்கு அதுவும் ஈவ்னிங் டைம்ல என்ற வைஷ்ணவியிடம் இந்த டைம் தானே நம்ம ஹீரோ வருவாப்படி அப்போ நாம கொஞ்சம் அழகா தெரிய வேண்டாமா என்ற மகிழா கண்ணுக்கு மையை தீட்டினாள்.

நீயும் இந்த ஆபிஸ்ல வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே ட்ரை பண்ணிட்டு தான் இருக்க ஆனாலும் அந்த ஹீரோ உனக்கு சிக்க மாட்டேங்கிறாரே என்ற வைஷ்ணவி சிரித்திட குகன் அறையில் இருந்து இண்டர்காமில் அவளுக்கு அழைப்பு வந்தது.

என்னாச்சுடி என்ற மகிழாவிடம் தெரியவில்லை முசுடு கூப்பிடுது அந்த பைலை எடுத்துட்டு வரச் சொல்லி அதுல எத்தனை குறை கண்டு பிடிக்கப் போகுதோ தெரியலை என்றவள் குகனின் அறைக்கு சென்றாள்.

வழக்கம் போல தான் அவள் ரெடி பண்ணிய அந்த பைலில் இருக்கும் சின்ன சின்ன மிஸ்டேக் எல்லாத்தையும் சொல்லி திட்டிக் கொண்டே இருந்தான். அவளும் சரி, சரியென தலையாட்டினாளே தவிர எதுவும் பேசவில்லை. அவனுக்கே வாய் வலித்தது போல அவளை அனுப்பி விட்டு தன் வேலையைத் தொடர்ந்தான்.

ஏன்டி அந்த ஆளு திட்டும் பொழுது ஏன் அமைதியா இருக்க என்ற மகிழாவிடம் எதிர்த்து பேசினால் வேலையை விட்டு போக சொல்லுவான். அதற்குப் பிறகு என்ற வைஷ்ணவியிடம் வேற வேலை தேட வேண்டியது தான் என்றாள் மகிழா.

என் வீட்டில் அனுப்ப மாட்டாங்கடி என் அப்பா பற்றி உனக்கு தெரியாது. பொம்பளைப் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி உட்கார்ந்து சாப்பிடுறது நல்ல ஆண்மகனுக்கு அழகில்லைன்னு சொல்லுறவரு. இந்த இரண்டு வருசத்தில் ஒரு முறை கூட என்னோட சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட அவர் எடுத்துக்கிட்டதில்லை. அவரோட சம்பாத்தியத்தில் தான் தன்னோட குடும்பம் நடக்கனும்னு வைராக்கியம் பிடிச்சவரு.

இந்த வேலைக்கு போகவே நான் இரண்டு நாள் சாப்பிடாமல் தர்க்கம் பண்ணி போராடி சம்மதம் வாங்கினேன். அப்போ அவர் சொன்ன ஒரு வார்த்தை இந்த வேலை உனக்கு போயிருச்சுனா அப்பறம் நீ வேலைக்கு போகவே கூடாதுன்னு அதனால தான் நானும் இந்த வேலையை விடவே கூடாதுன்னு உறுதியா இருக்கிறேன்.

ஜி.எம்க்கு என் மேல என்ன கோபமோ எப்போ பாரு திட்டிகிட்டே இருக்கிறாரு என்று சிரித்த வைஷ்ணவி தனது வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.

உன் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா வைஷு என்ற மகிழாவிடம் என்னோட டிரஸ்ஸிங்லையே உனக்கு தெரிஞ்சுருக்க வேண்டாமா என்றவள் சிரித்தபடி வேலையை தொடர்ந்தாள்.

ஆம் மகிழா கூட அடிக்கடி வைஷ்ணவியிடம் சொன்னதுண்டு நீ ஏன்டி லெக்கின்ஸ், டாப்ஸ்  கூட போட மாட்டேங்கிற எப்போ பாரு புடவை , புடவைன்னு இதையே கட்டிட்டு அழற என்று. அப்பொழுதெல்லாம் புன்னகையுடன் எங்க வீட்டில் அதெல்லாம் போட அனுமதி இல்லை மகி என்று விட்டு சென்று விடுவாள் வைஷ்ணவி.

அலுவலகத்திற்குள் வந்தவனை வைத்த கண் எடுக்காமல் மகிழா பார்த்துக் கொண்டிருக்க மச்சி லைட்டா வழியுது துடைச்சுக்கோ என்று கைக்குட்டையை நீட்டினாள் வைஷ்ணவி. என்னடி வழியுது என்ற மகிழாவிடம் ஜொள்ளு என்றிட அப்பொழுதுதான் ஆ வென்று பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்ப்பது போல தஷியை பச்சையாக தான் சைட் அடித்துக் கொண்டு அமர்ந்திருப்பது உரைத்திட தலையில் அடித்துக் கொண்டாள் மகிழா.

ஏன்டி தினமும் தான் பார்க்கிற ஆனாலும் ஆஆன்னா பார்ப்ப அவரு உன்னைப் பற்றி என்ன நினைச்சாரோ என்றாள் வைஷ்ணவி. என்ன நினைத்தால் என்னடி என்ற மகிழா சிரித்து விட நீ அவரை லவ் பண்ணுறடி என்ன நினைத்தால் என்னவா என்றாள் வைஷ்ணவி.

லவ்வா நானா அடி போடி நான் லவ் பண்றேன்னு சொன்னால் முதலில் அவன் என்னை லவ் பண்ணிருவானா என்ன. அவன் ரேஞ்ச் என்ன நம்ம ரேஞ்ச் என்ன அதெல்லாம் யோசிக்க வேண்டாமா. அவன் என்னோட க்ரஸ் அவ்வளவு தான். ஒருவேளை விதி வசத்தால அவனே எனக்கு லவ்வரா கிடைத்தால் ஐயம் வெரி ஹாப்பி என்றவள் கிடைக்கவில்லை என்றாலும் நோ ப்ராப்லம் என்ற மகிழா சரி டைம் ஆச்சு கிளம்பலாம் என்றாள்.

இந்த வெர்க் முடிஞ்சா தான் நான் கிளம்ப முடியும் ஜி.எம் ஆர்டர் அதனால நீ கிளம்பு என்ற வைஷ்ணவி தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்.

எக்ஸ் கியூஸ் மீ என்ற தஷகிரிவனை நிமிர்ந்து பார்த்தாள் வைஷ்ணவி. எஸ் சார் என்றவளிடம் நீங்கள் இன்னும் கிளம்பவில்லையா என்றான். ஜி.எம் சார் இந்த வேலையை முடிச்சுட்டு போக சொன்னாங்க என்றவளிடம் ஆபிஸ் டைம் ஆறு மணியோட ஓவர். அதற்குப் பிறகும் நீங்கள் வேலை பார்த்தாலும் உங்க சம்பளம் கூடப் போறதில்லை. பேக்டரி வொர்க்கர்ஸ்க்கு மட்டும் தான் நாங்க ஓவர் டைம் ரெபர் பண்ணுகிறோம் உங்க வொர்க்கை ஆறு மணிக்குள்ள முடிக்கனும். சப்போஸ் முடிக்க முடியலைன்னா நாளைக்கு காலையில் கொஞ்சம் சீக்கிரமா வந்து முடிச்சு கொடுங்க என்றான் தஷகிரிவன்.

சார் ஜி.எம் சார் என்று தயங்கியவளிடம் அவர் கிட்ட நான் பேசிக்கிறேன் நீங்கள் கிளம்புங்க மேடம் உங்களோட பாதுகாப்பு தான் முதலில் முக்கியம் என்றிட தாங்க்ஸ் சார் என்றவள் கிளம்பிச் சென்றாள்.

அவள் சென்ற பிறகு அங்கு வந்த குகன் எங்கே அண்ணா அந்த வைஷ்ணவி என்றிட வீட்டுக்கு போகச் சொல்லிட்டேன் என்றான் தஷகிரிவன். ஏன் என்றவனை முறைத்தவன் டைம் பாரு ஆறரை அந்தப் பொண்ணு வொர்க்கிங் ஹவர் தான்டி வேலை பார்க்குது அது தேவை இல்லை. உனக்கு எதனாலோ அந்தப் பொண்ணை பிடிக்கவில்லை அதனால வேலை வாங்கிட்டே இருக்க என்றிட குகன் தலை கவிழ்ந்தான்.

குகன் அவங்களை பிடிக்கவில்லைங்கிறதுக்காக உன்னோட அதிகாரத்தை தவறா பயன்படுத்தக் கூடாது என்றிட சரிங்க அண்ணா என்ற குகன் சென்று விட்டான்.

என்ன வைஷு இவ்வளவு லேட் என்ற காயத்ரியிடம் இன்னும் அப்பா வரவில்லையேம்மா என்றிட இன்னும் பத்து நிமிசம் இருக்கு அக்கா. நல்லவேளை அதற்குள்ளே நீ வந்துட்ட என்று ஷ்ராவனி கூறிட வேக வேகமாக தன்னறைக்குள் நுழைந்தவள் குளித்து விட்டு தன் தந்தை வருவதற்குள் கிட்சனுக்கு சென்று தன் அம்மாவிற்கு உதவிக் கொண்டு இருந்தாள்.

டீவியில் சத்தம் அதிகமாக வைத்து குத்துப் பாட்டு ஒன்றை தாளத்தோடு பாடி நடனமாடிக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி. ஏய் அப்பா வர நேரம் ஆடிட்டு இருக்காதடி என்று காயத்ரி திட்டினாலும் அதை காதில் வாங்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி.

டீவியின் சத்தத்திலும் தன் தந்தையின் பைக்கின் சத்தம் தெளிவாக கேட்டிட அடுத்த நொடி சன் மியூசிக் , புதிய தலைமுறையாக மாறி விட்டது. உலக செய்திகளை உற்று நோக்குவது போல பவ்யமாக அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த இளைய மகளை பார்த்து புன்னகைத்து விட்டு குளியலறைக்கு சென்றார் கதிர்வேலன்.

அப்பாடா என்றவளின் அருகே வந்த வைஷ்ணவி ஏன்டி இப்படி என்றிட அக்கா அவரு வரும் வரை தானே நம்ம உலகம் ஜாலியா இருக்கும் என்றாள் ஷ்ராவனி.

என்னடா டல்லா இருக்க என்ற விஷ்ணுவிடம் டல்லாவா நானா என்ன மச்சான் கனா கண்டுட்டு வருகிறாயா என்றான் தஷகிரிவன். அப்போ நீ டல்லா இல்லையா மூஞ்சியை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைடா தெரிய மாட்டேங்குது என்று சிரித்த விஷ்ணுவின் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தான் தஷகிரிவன்.

என்னங்கடா ஒருத்தனை ஒருத்தன் அடிச்சுட்டு இருக்கிங்க என்ற கண்மணியிடம் அது ஒன்றும் இல்லை அத்தை சும்மா பேசிட்டு இருந்தோம் என்றவன் உங்க மகன் தானே அடிக்கிறான் நீங்க என்னடான்னா ஒருத்தனை ஒருத்தன் அடிக்கிறான்னு சொல்லுறிங்க என்றிட கண்மணி சிரித்து விட்டார்.

என்னடா குகன் என் மேல கோபமா என்ன என்ற தஷியிடம் இல்லைண்ணா ஏன் கேட்கிற என்று குகன் கூறிட இல்லை உன்னோட எம்ப்ளாயிகிட்ட உன்னை கேட்காமலே வீட்டிற்கு போக சொன்னேனே அதனால கோபம் என்றிட அண்ணா காமெடி பண்ணாமல் இரு என்ற குகன் அந்தப் பொண்ணு மேல கோபம் எல்லாம் எதுவும் இல்லை. நான் எவ்வளவு திட்டினாலும் சைலண்ட்டாவே இருக்கும் அது ஒரு அட்வான்டேஜ் அதான் திட்டினேன். என்னைக்காவது அந்த சிட்டி ரோபோவுக்கு கோவம் வரும்னு பார்க்கிறேன் ஆனால் வரவே மாட்டேங்குது என்று சிரித்தான் குகன். அடப் பாவி ராட்சசா அப்போ அந்தப் பிள்ளையை நீ டீஸ் பண்ணிட்டு இருக்கியா என்று விஷ்ணு சிரித்திட தஷகிரிவனும் சிரித்து விட்டான்.

…..தொடரும்….மை டியர் மண்டோதரி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!