மை டியர் மண்டோதரி…(3)

4.9
(7)

என்ன மச்சான் உன் தம்பிகாரன் வெறுமனே டீஸ் தான் பண்ணுகிறானா இல்லை ரகசியமா அந்தப் பிள்ளையை லவ் எதுவும் பண்ணுகிறானா என்றான் விஷ்ணு. ஏன்டா நாயே உனக்கு இந்த தேவை இல்லாத ஆணி என்ற தஷகிரிவனிடம் அட இதெல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜ் மச்சி என்றான் விஷ்ணு.

 

நல்ல நாலேட்ஜ் போடா வெண்ணெய் என்ற குகனிடம் மச்சான் பட்டரோட மச்சானும் பட்டர் தானே என்று விஷ்ணு கூறிட அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து அவனை மொத்தினர். டேய் விடுங்கடா என் அப்பாருக்கு நான் ஒரே பையன் என்னை விட்டால் உங்க வாயாடி தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்காது என்றிட அவர்கள் சிரித்து விட்டனர்.

 

அது என்னவோ உண்மை தான்டா மச்சான் என்ற குகனிடம் தம்பி வாயை மூடுடா ராட்சசி காதில் விழுந்தால் செத்தோம் என்றான் தஷகிரிவன். மூவரும் சந்தோசமாக சிரித்து , பேசி விளையாடி ஒரு வழியாக அவரவர் அறைக்கு சென்று படுத்து உறங்கினர்.

 

 

என்ன ஷ்ராவனி உன்னோட வேலை எப்படி போச்சு என்ற கதிர்வேலனிடம் நல்லா போச்சுப்பா என்றவள் கருமமே கண்ணாக மௌனமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

 

 

என்னம்மா உங்களோட ரோதனையா போச்சு நாளைக்கு நான் காலேஜ் போகனும் என்ற ஷ்ராவனியிடம் உன்னை யாருடி போக வேண்டாம்னு சொன்னது கோவிலுக்கு போயிட்டு அப்பறம் காலேஜ்க்கு போ என்றார் காயத்ரி.

 

அம்மா நான் எழும்புறதே ஏழு மணிக்குத் தான் என்றவளை முறைத்த காயத்ரி அப்பா சொல்லிட்டாரு நாளைக்கு உன்னோட ஜென்ம நட்சத்திரம் கட்டாயம் கோவிலுக்கு குடும்பத்தோட போகிறோம் அவ்வளவு தான் என்ற காயத்ரி இரண்டு பேரும் போயி தூங்குங்க என்று விட்டு சென்று விட்டார்.

 

என்னடி உன் பிரச்சனை கோவிலுக்கு போயிட்டு அப்படியே வேலைக்கு போக வேண்டியது தானே என்ற வைஷ்ணவியிடம் என்ன பாவாடை, தாவணி கட்டிகிட்டா காலேஜ் போக சொல்லுற சும்மாவே என்னை லெக்சரர்னு ஏத்துக்க மாட்டானுங்க இந்த லட்சணத்தில் பாவாடை , தாவணி கட்டிகிட்டு போனால் தான் விளங்கும் என்றாள் ஷ்ராவனி.

 

உன்னை யாருடி கோவிலுக்கு பாவாடை, தாவணி கட்டிட்டு வரச் சொன்னது புடவை கட்டு என்ற வைஷ்ணவியை முறைத்தவள் நாம குடும்பத்தோட கோவிலுக்கு போறோம். நீயும் புடவை தான் கட்டிருப்ப அப்போ நானும் புடவை கட்டினால் அவ்வளவு தான் நம்ம அப்பா சாமி ஆடிருவாரு என்ற ஷ்ராவனியிடம் ஆமாம் அவரு கிடக்கிறாரு. எந்தக் காலத்தில் இருக்காரு இப்போ தான் அக்காவும், தங்கச்சியும் ஒன்றாக போகும் பொழுது ஒரே மாதிரி புடவையில் போனால் அக்கா இருக்கும் பொழுதே தங்கச்சியை எவனும் பொண்ணு கேட்டுருவான்னு சுத்த பூமர்டி என்றாள் வைஷ்ணவி.

 

அக்கா அதை நாமளே சொல்லக் கூடாது நம்மளை கட்டிக்கப் போற மாப்பிள்ளைங்க தான் நம்ம நைனாவை பார்த்து பூமர் அங்கிள் பூமர்னு கலாய்க்கனும் என்று சிரித்தாள் ஷ்ராவனி.

 

மெதுவா பேசுடி அப்பா காதில் விழப் போகுது என்ற வைஷ்ணவி சிரித்திட அக்கா, தங்கை இருவரும் உறங்க ஆரம்பித்தனர்.

 

என்னடா இது ரோதணையா போச்சு என்று புலம்பிய விஷ்ணுவிடம் மச்சான் என் தங்கச்சியை கட்டிக்க ஆசைப் படுற தானே அப்போ மச்சானுக்கு துணையா நிற்க வேண்டாமா. மலை ஏறிப் போனாலும் மச்சான் துணை வேண்டும் தங்கம் என்றான் தஷகிரிவன்.

 

என் வாழ்க்கையில் நான் பண்ணின ஒரே தப்பு உன் தங்கச்சியை லவ் பண்ணினது தான்டா மொத்தக் குடும்பமும் படுத்தி எடுக்கிறிங்க என்ற விஷ்ணுவிடம் விஷாகாவுக்கு போன் பண்ணவா மச்சி என்றான் தஷகிரிவன்.

 

வேண்டாம் சாமி அவள் பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாள் அதற்குள்ள நாம கோவிலுக்கே போயிரலாம் என்ற விஷ்ணு அவனுடன் கோவிலுக்கு கிளம்பினான். அது என்றவன் சிரித்து விட்டு நண்பனுடன் கிளம்பினான்.

 

இது என்னடா வேண்டுதல் வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வைக்கிறது நாம என்ன பொண்ணுங்களா என்ற விஷ்ணுவிடம் ஏன் பொண்ணுங்க விளக்கேற்றி வேண்டிகிட்டா தான் கடவுள் கண்ணைத் திறந்து பார்ப்பாரா பசங்க வேண்டிகிட்டா கோவிலை விட்டு ஓடிருவாரா என்ன என்றிட கடல் தண்ணீர் உப்பு தான். உன் கிட்ட இந்த கேள்வியை கேட்டது என்னோட தப்பு  தான் என்றான் விஷ்ணு.

 

கலகலவென சிரித்த தஷகிரிவன் விளக்கினை ஏற்றி வைத்துக் கொண்டிருக்க அவனைக் கடந்து மங்கை ஒருத்தி சென்றிட எதார்த்தமாக அவளைக் கண்டான்.

 

பாவாடை தாவணியில் தன்னைக் கடந்து சென்ற பெண்ணைக் கண்டவன் தோழனிடம் டேய், மச்சான் இப்போ கூட பாவாடை , தாவணி போடுற பொண்ணுங்க நம்ம ஊரில் இருக்காங்களா என்ன என்றான். இப்போ தான் பாவாடை , தாவணியை ஆரி ஒர்க் , எம்ப்ராய்டிங்க்னு டிசைன் பண்ணி லெஹங்கானு பெயரை வச்சுருக்கானுங்களே அதை கட்டாத பொண்ணுங்க ரொம்ப குறைச்சல் தான் என்றான் விஷ்ணு.

 

டேய் என்னைக் கடந்து போன பொண்ணை பார்த்தியாடா என்று தஷி கேட்டிட இல்லைடா நான் என் விஷாகா தவிர வேற பொண்ணை பார்க்க மாட்டேன்னு உனக்கு தெரியாதா மச்சான்  என்றான் விஷ்ணு. அவனை கோபமாக முறைத்தவன் மவனே கோவில்னு பார்க்கிறேன் இல்லைன்னு வை வாயில வண்டி வண்டியா கெட்ட வார்த்தை வருது மூடிகிட்டு நட என்றிட இவன் வீட்டில் பொண்ணு கட்ட நினைச்சதுக்கு இன்னும் என்ன என்ன பேச்சு எல்லாம் வாங்கனுமோ என்று நினைத்த விஷ்ணு அவன் பின்னே சென்றான்.

 

 

இந்தப் பக்கம் தான்டா போச்சு அந்தப் பொண்ணு என்றவனிடம் அடேய் இப்போ என்னடா உன் பிரச்சனை என்றான் விஷ்ணு. இல்லைடா பொண்ணு பார்க்க நல்லா இருந்தால் நானும் லவ் பண்ணலாம்னு தான் என்றான் தஷகிரிவன். அவனைக் கண்டு தலையில் அடித்த விஷ்ணு வா பார்க்கலாம் என்று அவனுடன் சென்றான்.

 

 

என்ன கலர் தாவணிடா என்றவனிடம் பச்சை கலர் என்ற தஷகிரிவன் அதோ அந்தப் பொண்ணு தான்டா என்றிட எது அந்தப் பொண்ணா என்று அதிர்ந்தான் விஷ்ணு. என்னாச்சுடா என்ற தஷகிரிவனிடம் அந்தப் பொண்ணு முகத்தைப் பாருடா என்றதும் தான் நன்றாகப் பார்த்தான்.

 

 

இது அந்தப் புது லெக்சரர் தானடா என்றதும் ஆமாம்டா இந்தப் பொண்ணைத் தான் லவ் பண்ணப் போறியா மச்சான் என்றான் விஷ்ணு. ஏன் பண்ணினால் என்ன என்ற தஷகிரிவனோ இனி இந்தப் பொண்ணு தான் என்னோட லவ்வர் என்று சிரித்தான்.

 

எதார்த்தமாக திரும்பிய ஷ்ராவனியின் கண்ணில் பட்டனர் விஷ்ணு, தஷி இருவரும். என்னடி அங்கே பார்க்கிற என்ற வைஷ்ணவியிடம் என்னோட ஸ்டூடண்ட்ஸ் நிற்கிறாங்க என்றாள் ஷ்ராவனி. நேற்று போனதுக்குள்ள உன் முகத்தை ஞாபகம் வச்சுப்பானுங்களா என்ன என்று வைஷ்ணவி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க ஷ்ராவனி, வைஷ்ணவி என்று கதிர்வேலன் அழைத்திட இதோ வரோம் அப்பா என்று சகோதரிகள் இருவரும் சென்று விட்டனர்.

 

 

 

 

என்னடா நீ பைத்தியமா என்ற விஷ்ணுவிடம் இல்லையே ஏன் கேட்கிற என்றான் தஷகிரிவன். பின்னே என்னடா அந்தப் பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொல்லுற என்றிட ஏன் லவ் பண்ணினால் என்ன என்றான் தஷி. அது நம்ம லெக்சரர் என்றிட ஸோ வாட் என்றவன் இதோ பாரு விஷ்ணு அந்தப் பொண்ணை நேற்று புடவையில் பார்த்தப்போ கூட ஒன்றும் தெரியலை பட் இன்னைக்கு பாவாடை தாவணியில் பார்த்ததும் சத்தியமா சொல்லுறேன் விழுந்துட்டேன் என்றான் தஷகிரிவன்.

 

 

ஐய்யய்யோ எங்கே இருந்து விழுந்த மச்சான், தலையில் எதுவும் அடி பட்டிருச்சா என்ன என்ற விஷ்ணுவை முறைத்தவன் கழுதை , கழுதை என்றிட ஆமாம் இவரு பெரிய குதிரை போடா டேய் என்றான் விஷ்ணு. சிங்கம்டா என்றவனிடம் அது சூர்யா நடிச்ச படம் மச்சான் என்றான் விஷ்ணு. டேய் பரதேசி நாயே உன்னை இன்னைக்கு கொல்லாமல் விட  மாட்டேன் என்று விரட்டிட உன் தங்கச்சி வாழ்க்கையை கொஞ்சம் கன்சிடர் பண்ணு மச்சான் என்றான் விஷ்ணு.

 

என் தங்கச்சிக்கு நான் வேற மாப்பிள்ளை பார்த்துக்கிறேன் என்றவன் ஒரு வழியாக விஷ்ணுவைப் பிடித்திட டேய் டேய் ஸாரி மச்சான் என்று அவன் கெஞ்சிட அந்த நேரம் ஷ்ராவனி அவர்களை கடந்து கோவில் வாசலில் இருந்த பூக்கடைக்கு சென்றிட அவளை கண்டவன் நண்பனை விட்டு விட்டான்.

 

இது தான் சமயம் என்று விஷ்ணு எஸ்கேப் ஆகி விட்டான். எதார்த்தமாக தஷகிரிவனைப் பார்த்தவள் இந்த எருமை என்ன என்னையவே பார்க்கிறான் ஒருவேளை இவனுக்கு என்னை அடையாளம் தெரியலையா என்ன என்று நினைத்த ஷ்ராவனி சென்று விட்டாள். அவள் சென்ற பிறகு நண்பனைத் தேடிட அவன் பைக் ஸ்டாண்டில் நின்றிட அங்கு சென்றான் தஷகிரிவன்.

 

 

 

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!