மை டியர் மண்டோதரி….(4)

4.8
(6)

என்னம்மா பூ வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா என்று கதிர்வேலன் கேட்டிட ஸாரிங்கப்பா என்றாள் ஷ்ராவனி. மகளின் பெயரில் அர்ச்சனை முடிந்த பிறகு சரி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் கதிர்வேலன். சொல்லுங்கப்பா என்ற வைஷ்ணவியிடம் வைஷு உனக்கு அப்பா ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன். நல்லா விசாரிச்சு பார்த்துட்டேன் நல்ல பையன். கவர்மென்ட் ஆபிஸ்ல க்ளார்க் அவன் பெயர் வினித். ஞாயிற்றுக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வராங்க என்றதும் இப்போ என்னப்பா அவசரம் என்றாள் வைஷ்ணவி.

 

உனக்கு இருபத்திநான்கு வயசாகிருச்சு இன்னும் கல்யாணம் பண்ணாமல் இருக்கிறதே தப்பு. இந்த லட்சணத்தில் என்ன அவசரம்னு கேட்கிற உனக்கு அப்பறம் தங்கச்சி வேற இருக்கிறாள்  என்ற கதிர்வேலன் மாப்பிள்ளை போட்டோ இது தான் பார்த்து சொல்லு. நாளை மறுநாள் அவங்க வராங்க உனக்கு பொருத்தமான பையன் தான் என்று கூறிவிட்டு போட்டோவை அவள் கையில் கொடுத்து விட்டு வீட்டிற்கு போகலாம் என்றார்.

 

 

என்னக்கா டல்லாகிட்ட என்ற ஷ்ராவனியிடம் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ஷ்ராவி என்றாள் வைஷ்ணவி. ஏன் அக்கா என்றவளிடம் அவர் சொன்ன விதத்திலே தெரியுது கண்டிப்பா அந்த மாப்பிள்ளை அவரைப் போலவே ஒரு பூமரா தான் இருப்பான்னு என்ற வைஷ்ணவி போதும்டி பிறந்த நாளில் இருந்து நாம பட்ட எல்லாமே போதும். அட்லீஸ்ட் கல்யாணத்திற்கு அப்பறமாவது நாம சுதந்திரமா இருக்கனும்னு நினைத்தால் அதற்கும் விட மாட்டாரு போல என்று கண் கலங்கினாள்.

 

அக்கா நீ ஏன் அப்படி நினைக்கிற அந்த மாப்பிள்ளை வரட்டும் அவன் எப்படினு நாம முதலில் பார்க்கலாம். அப்பறம் ஒரு முடிவுக்கு வரலாம் என்ற ஷ்ராவனி தன் சகோதரியை சமாதானம் செய்து விட்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

 

என்ன மச்சான் இப்படி நகத்தை சாப்பிடுற அத்தை தான் காலையிலே டிபன் கொடுத்தாங்களே என்றான் விஷ்ணு. டேய் உன் வாயை மூடிட்டு போடா குரங்கு என்றிட எதாவது ஒரு அனிமல் பெயரை சொல்லுடா கழுதைங்கிற, குரங்குங்கிற என்று உச்சுக் கொட்டிய விஷ்ணுவைப் பார்த்து சிரித்தவன் மச்சான் நீ என்ன டிசைன்டா என்றான். உன் குடும்பத்துகிட்ட இம்சை படணும்னே அளவெடுத்து செய்த டிசைன் மச்சான் என்றான் விஷ்ணு.

 

சரி , சரி என் ஆளு வருது என்ற தஷியிடம் டேய் நிஜமாகத் தான் சொல்கிறாயா என்றான் விஷ்ணு. இல்லை பொய் சொன்னேன் யாருடா இவன் அதான் சொல்லிட்டேன்ல பாவாடை , தாவணியில் அந்த தேவதையை பார்த்த உடனே விழுந்துட்டேன்.

 

பாதகத்தி கண்ணா அது இன்னைக்கு தான்டா அவள் கண்ணை நல்லாவே பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டு இருக்க விஷ்ணு யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

 

ஐயோ, ஸாரி செல்லம் உன் அண்ணன்காரன் தான் காலையிலே கோவிலுக்கு இழுத்துட்டு போயிட்டான். இன்னைக்கு வெள்ளிக்கிழமையாம் நான் என்ன பட்டு பண்ணுவேன் என்று கெஞ்சிக் கொண்டு இருக்க அவனிடம் இருந்து போனை பறித்த தஷி பாப்பு அவன் இன்னைக்கு மதியம் வரை பிஸி உன்கிட்ட அப்பறம் பேசுவான் என்று கூறி விட்டு போனை கட் செய்து விட்டான்.

 

டேய் கடன்காரா ஏன்டா இப்போ போனை கட் பண்ணின என்ற விஷ்ணுவிடம் ஏன்டா நாயே நான் என் ஆளை வர்ணிச்சுட்டு இருக்கிறப்போ நீ நைஸா எஸ்கேப் ஆகி உன் ஆளுகிட்ட கடலை போடுறியா என்றிட ஏன்டா அவள்கிட்ட போனில் மட்டும் தானடா பேச முடியுது அதற்கும் தடை போட்டால் நான் பாவம்டா என்று வராத கண்ணீரை சுண்டி விட்டான் விஷ்ணு.

 

 

டேய் நாயே நடிச்சது போதும் வா க்ளாஸுக்கு என்றிட என்ன தல அதுக்குள்ள க்ளாஸ் ரூம் போறேன்னு சொல்லுறிகளா என்று வந்தான் அசோக். ஆமாம் இப்போ என்ன உனக்கு என்ற தஷகிரிவனிடம் பர்ஸ்ட் ஹவர் அந்த புது லெக்சரர் க்ளாஸ் தான் தல கட் அடிச்சுருவோம் என்றான் அசோக்.

 

அட அங்குட்டு போடா மலைக் குரங்கே என்று அவனைத் தள்ளி விட்டவன் அடித்துப் பிடித்து வகுப்பறைக்கு ஓடிச் சென்றான் தஷகிரிவன். எக்ஸ் கியூஸ் மீ மேடம் என்றிட எஸ் கம் இன் என்றவள் பாடம் நடத்த ஆரம்பித்தாள். அவன் இடத்தில் அமர்ந்தவன் கன்னத்தில் கை வைத்தபடி அவளையே பார்த்திருக்க அவள் அவனருகில் வந்தாள்.

 

எக்ஸ் கியூஸ் மீ என்றவளிடம் எஸ் மேடம் என்றவனிடம் ஸார் என்ன பண்ணுறிங்க என்றிட பார்த்தால் தெரியலையா மேடம் க்ளாஸ் கவனிக்கிறேன் என்றான் புன்னகையுடன். நோட்ஸ் எழுதலையே என்றவளிடம் கண் உங்களை கவனிக்கும், கை நீங்கள் சொல்றதை எழுதும் என்று தனது நோட்புக்கை காட்டிட அவனை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு அவள் பாடம் எடுக்க ஆரம்பித்தாள்.

 

இவன் என்ன இப்படி பார்க்கிறான் இதற்கு முன்னே பொண்ணுகளை பார்த்ததே இல்லையா என்ன என்று நினைத்தவள் வகுப்பு முடிந்தவுடன் சென்று விட அவன் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் அவள் தலை மறையும் வரை.

 

என்ன ஷ்ராவனி மேடம் ஒரே யோசனையா இருக்கிங்க என்ற சுஜாதாவிடம் இல்லைங்க அந்த செகன்ட் இயர் கிளாஸ் ரூம்ல தடிமாடு மாதிரி ஒருத்தன் இருக்கானே என்றிட யாரு மேடம் விஷ்ணு, தஷி இரண்டு பேருல ஒருத்தனா என்றாள் சுஜாதா. ஆமாங்க அந்த தஷ என்று சொன்னவள் அவன் பெயர் கூட ஞாபகத்தில் வர மாட்டேங்குது என்றாள். தஷகிரிவன் மேடம் என்ற சுஜாதா புன்னகைத்திட அவனே தான் அவன் என்ன பொண்ணுங்களை பார்த்ததே இல்லையா க்ளாஸ்ரூம்ல பாடம் எடுக்கிற என்னை வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறான் என்றாள் ஷ்ராவனி.

 

என்ன மேடம் சொல்லுறிங்க தஷி ரொம்ப நல்ல பையன் ஆச்சே க்ளாஸ்ரூம்ல பாடம் அவ்வளவு இன்வால்மென்டோட கவனிப்பான். அவனைப் போயி உங்களை தப்பா பார்க்கிறான்னு சொல்லுறிங்க வாய்ப்பே இல்லை. அந்த க்ளாஸ் ரூம்ல  மத்த பசங்க எப்படியோ தஷி ரொம்ப ,ரொம்ப நல்ல டைப் என்று அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்தாள் சுஜாதா. என்ன இவங்க சொல்றது தான் உண்மையா அவன் நம்மளை ஏதோ திங்கிறது மாதிரி பார்த்துட்டு இருந்தானே ஒருவேளை மாறு கண்ணா இருக்குமோ பெயரைப் பாரு தஷி, குஷினுட்டு என்று நினைத்தவள் அடுத்த வகுப்பிற்கு சென்று விட்டாள்.

 

 

என்னடி வைஷு டல்லாவே இருக்க என்ற மகிழாவிடம் என் அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காரு என்ற வைஷ்ணவி ஞாயிற்றுக்கிழமை என்னை பொண்ணு பார்க்க வராங்களாம் என்றாள். நல்ல விசயம் தானடி என்ற மகிழாவிடம் ஏன்டி நீ வேற என் அப்பா பார்க்கிற மாப்பிள்ளை எப்படி இருப்பான்னு எனக்கு நல்லாவே தெரியும் அவரை மாதிரி தான் கட்டாயம் இருப்பான்.

 

அதை நினைத்தாலே எரிச்சலா இருக்கு என்றவளிடம் நீ ஏன் அதற்குள்ள இப்படி முடிவு எடுக்கிற ஒருவேளை உன் அப்பா பார்க்கிற மாப்பிள்ளை உன்னோட கனவுகளுக்கு சிறகு கொடுக்கிறவனா இருக்கலாமே அப்படி ஏன் நீ யோசிக்க மாட்டேங்கிற என்றாள் மகிழா. இதையே தான் ஷ்ராவனியும் சொன்னாள் என்ற வைஷ்ணவியிடம் நானும் சொல்கிறேன் ஞாயிற்றுக்கிழமை அந்த மாப்பிள்ளை வரட்டும் மற்றதை அப்பறம் பேசலாம் என்ற மகிழா தோழியின் கரத்தினை ஆதரவாகப் பற்றினாள்.

 

 

என்ன குகன் இந்த கொட்டேசன் இத்தனை மிஸ்டேக்கா இருக்கு நீ இதை கவனிக்கவே இல்லையா என்ற கார்த்திகேயனிடம் ஸாரிப்பா வொர்க் டென்சன்ல இதை சரியா கவனிக்கவில்லை என்றான் குகநேத்ரன் . பொறுப்பில்லாமல் பதில் சொல்லாதே குகன் என்ற கார்த்திகேயன் மகனை கடிந்து கொண்டார்.

 

அந்தக் கோபத்தில் தன்னறைக்கு வந்தவன் இண்டர்காமில் வைஷ்ணவியை அழைத்திட அவளும் சென்றாள். அவள் முன் அந்த பைலை தூக்கி மேசையில் போட்டவன் என்ன இது இந்த கொட்டேசன்ல இத்தனை மிஸ்டேக் இது தான் நீங்கள் வேலை பார்க்கிற லட்சணமா இடியட் கவனம் வேலையில் இருந்தால் தானே எப்போ பாரு பக்கத்து சீட்டில் உள்ள உங்க தோழிகிட்ட கதை பேசுறதிலே நேரத்தை போக்க வேண்டியது.

 

சம்பளம் நான் தான் தரேன் உங்க ப்ரண்ட் இல்லை. பேசாமல் உங்க வேலையை ரிசைன் பண்ணிட்டு பொழுதோட உங்க தோழிகிட்ட உட்கார்ந்து ஊர்க் கதை பேசுங்க வாங்குற காசுக்கு ஒழுங்கா வேலை பார்க்கனும்கிற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது இடியட் என்றிட ஸ்டாப் இட் மிஸ்டர்.குகநேத்ரன்ன் என்று கத்தினாள் வைஷ்ணவி.

 

 

எக்ஸ் கியூஸ் மீ என்றவனிடம் என்ன எக்ஸ் கியூஸ் மீ இல்லை என்ன எக்ஸ் கியூஸ் மீ என்றவள் அப்பளம் பொரிவது போல பட படவென பொரிந்து தள்ள குகன் தான் பேச்சற்று நின்றான்.

 

 

 

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!