என்ன எக்ஸ் கியூஸ் மீ இல்லை நான் உங்க கிட்ட வேலை பார்க்கிறதால உங்க அடிமைன்னு நினைச்சுட்டு இருக்கிங்களா எப்போ பாரு என்ன வேலை செய்தாலும் குறை , குறை இல்லை நான் ஒரு புள்ளி தப்பா வச்சாலும் மிஸ்டேக், மிஸ்டேக்னு என்னம்மோ ஆகாத மருமகள் கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்ங்கிற கதை போல எப்போ பாரு இரிட்டேட் பண்ணிகிட்டே இருக்கிங்க. இந்த கொட்டேசன் எம்.டி ரூமுக்கு போறதுக்கு முன்னே கரைக்சன் பண்ணாமல் கொண்டு போனது உங்க தப்பு. நீங்க படுத்துற இம்சையால தான் என்னால சரியா வேலை செய்ய முடியலை. உங்களுக்கு என்னை பிடிக்கவில்லைன்னா வேலையை விட்டு அனுப்ப வேண்டியது தானே எதற்கு வேலையில் வச்சுகிட்டே படுத்தி எடுக்கிறிங்க அப்படி என்ன ராட்சச புத்தி என்று மனக்குமுறல் மொத்தத்தையும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.
அவளது கோபத்தைக் கண்டு அசந்து நின்று விட்டான் குகன். அவள் நிறுத்துவது போல் தெரியவில்லை அவளது சத்தம் அதிகமாவதை உணர்ந்தவன் ஐ லவ் யூ என்றதும் அவள் சட்டென்று அமைதியானாள். சார் என்றிட அப்பாடா எவ்வளவு கோபம் . ஸாரி வைஷ்ணவி உங்க வாயை அடைக்க தான் ஐ லவ் யூன்னு சொன்னேன் என்றவன் பைனலி சிட்டிக்கு கோபம் வந்துருச்சு என்று சிரித்தான்.
சும்மாவா சொல்லி இருக்காங்க சாது மிரண்டால் காடு கொள்ளாதுன்னு என்று சிரித்தவன் இந்த கோபத்தை தான் இத்தனை நாளா உங்க கிட்ட எதிர்பார்த்தேன். கோபத்தில் சொன்னிங்களே ஒரு வார்த்தை உங்க கிட்ட சம்பளம் வாங்குறதால நான் என்ன உங்க அடிமையான்னு இத்தனை நாளா அப்படி தான் நடந்துகிட்டிங்க. நான் உங்களை வேண்டும் என்று தான் இத்தனை நாளா திட்டிட்டு இருந்தேன்.
நீங்கள் என்னைக்காவது எதிர்த்து பேசுவிங்கள்னு நிறையவே எதிர்பார்த்தேன் இன்னைக்கு மொத்தமா வெடிச்சுட்டிங்க என்று சிரித்தவன் இதோ பாருங்க வைஷ்ணவி கோபத்தை அடக்கி, அடக்கி வச்சுருந்தோம் அப்படினா என்னைக்காவது வெடிக்கும் பொழுது எல்லையை கடந்துரும். உங்களை நான் திட்டுறது பிடிக்கவில்லைன்னா ஆரம்பத்திலே என்னை திட்ட உனக்கு என்னடா உரிமை இருக்கு நான் பார்க்கிற வேலையில் மிஸ்டேக்னா சொல்லு கரைக்சன் பண்ணுறேன் அதை விட்டுட்டு இந்த திட்டுற வேலை எல்லாம் வேண்டாம்னு கட் அன்ட் ரைட்டா சொல்லி இருக்கலாமே என்றான் குகன்.
அவள் மௌனமாகவே இருந்திட ஒரு சின்ன அட்வைஸ் ஒரு விசயம் உங்களுக்கு பிடிக்கலைனா அதை உடனே சொல்லிருங்க அட்ஜஸ்ட் பண்ணிட்டு போறேன்னு ஒரு முறை அமைதியாகினாலும் காலம் முழுக்க உங்களை அட்ஜஸ்ட் பண்ணி போக இந்த உலகம் பழக்கி விட்டிரும் என்ற குகன் இந்த கொட்டேசனை கொஞ்சம் சரி பண்ணி எடுத்துட்டு வாங்க முடியும் தானே என்றிட முடியும் சார் என்றவள் சென்று விட்டாள்.
அப்பா இந்தப் புள்ளைப் பூச்சி பேச ஆரம்பிச்சா சரியான பத்ரகாளியகிடும் போலையே என்று நினைத்தபடி சிரித்து விட்டு தனது வேலையை கவனித்தான் குகன்.
என்னாச்சுடி அந்த முசுடு எதுவும் திட்டிருச்சா என்ற மகிழாவிடம் இல்லை என்ற வைஷ்ணவி தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
என்ன மச்சான் இப்படி பச்சையா சைட் அடிச்சுட்டு இருக்க என்ற விஷ்ணுவிடம் ஏன் அதில் என்ன தப்பு. எனக்கு பிடிச்சுருக்கு பார்க்கிறேன் என்ற தஷகிரிவன் இனிமேல் அவங்களை எவனும் கமெண்ட் பண்ணக் கூடாது ஏன்னா ஷ்ராவனி என்னோட ஆளு என்றான் .
ரைட்டு இனி எவனாச்சும் அந்தப் பிள்ளை பக்கம் திரும்பினாலே கழுத்தை திருப்பிருவோம் என்ற விஷ்ணுவிடம் ரொம்ப நடிக்காதே மச்சான் என்ற தஷகிரிவன் சிரித்தான்.
என்ன யோசனை அக்கா என்ற ஷ்ராவனியிடம் இல்லைடி ஒன்றும் இல்லை என்றவள் குகன் சொன்ன விசயம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். உங்களுக்கு ஒரு விசயம் பிடிக்கலைன்னா ஆரம்பத்திலே சொல்லுறது தான் நல்லது. அட்ஜஸ்ட் பண்ணிட்டு போகலாம்னு முடிவு பண்ணினால் காலம் முழுக்க அட்ஜஸ்ட் மட்டும் தான் பண்ண முடியும். இந்த வார்த்தைகள் திரும்ப , திரும்ப அவளது காதுகளில் ஒலித்திட ஒரு முடிவுக்கு வந்தாள்.
என்ன மச்சான் என் அண்ணன் ஏதோ மந்திரிச்சு விட்டது போல சுத்திட்டு இருக்கிறான் என்ற குகனிடம் காலையில் கோவிலில் ஒரு பொண்ணை பார்த்தான். நேற்று புடவையில் பார்த்த போது வராத காதல் ஃபீலிங்க்ஸ் இன்னைக்கு பாவாடை தாவணியில் பார்த்தவுடனே வந்துருச்சு போல என்றான் விஷ்ணு.
என்ன சொல்லுற மச்சான் நேற்று புடவையில் பார்த்தானா என்ற குகனிடம் எங்க காலேஜ் ப்ரபசர்டா அந்தப் பொண்ணு. நேற்று காலேஜ்ல புடவையில் பார்த்தான். அப்போ எல்லாம் உன் நொண்ணனுக்கு காதோல் வரவில்லையாம் இன்னைக்கு அதே பொண்ணை பாவாடை தாவணியில் பார்த்ததும் காதல் சும்மா அருவியா பொங்கி வழிய ஆரம்பிச்சுருச்சாம் என்றான் விஷ்ணு.
டேய் நாயே என்ன பொங்கி வழியுது என்ற தஷியிடம் காதோல் மச்சான் காதோல் என்றிட விஷாகாவை கூப்பிடனும் போலையே. என்னடா என் தங்கச்சியை விட்டுட்டு வேற பொண்ணை கரைக்ட் பண்ணலாம்னு யோசிக்கிறியா என்றான் தஷகிரிவன். ஆமாம் அப்படியே கரைக்ட் பண்ணிட்டாலும் ஏன்டா நீ வேற இந்த ஜென்மத்தில் என் தலையெழுத்து உன் பாசமலர் கூட தான் போல என்றான் விஷ்ணு.
என்ன மச்சான் ஏதோ ரம்பையும், மேனகையும், ஊர்வசியும், திலோத்தமையும் உனக்காக ஏங்கிட்டு நிற்கிறாப்லையும், அவங்களை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு ஏதோ போனல் போகுதுன்னு என் தங்கச்சிக்கு வாழ்க்கை கொடுத்தது போல ஓவரா சீன் போட்டுட்டு இருக்க என்றான் குகன்.
அதானே நீ அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு உன்னோட வாழ்க்கையை தியாகம் பண்ண வேண்டாம் எங்க தங்கச்சிக்கு நாங்க வேற நல்ல மாப்பிள்ளையா பார்த்துக்கிறோம் என்று தஷகிரிவன் கூறிட டேய் என்னடா ஆளாளுக்கு என்னை வேண்டாம்னு சொல்லுறிங்க போயி உன் தங்கச்சிகிட்ட சொல்லுங்கடா என்னை வேண்டாம்னு சொல்ல சொல்லி என்று விஷ்ணு சீரியஸாக பேசுவதை அமைதியாக கவனித்தனர் சகோதரர்கள் இருவரும்.
ஆனால் அந்த பீஸோ கடைசி வாக்கியத்தில் தான் ஒரு காமெடி பீஸ் என்பதை நிரூபிப்பது போல் அப்படியாவது நான் தப்பிச்சுருவேன் என்றிட அட நாதாரிப் பயலே என்னவோ சீரியஸா பேசிறது போல பேசி கடைசியில் மொக்கையாக்கிட்டியே என்ற தஷகிரிவன் அவனை அடிக்க வர என்ன சத்தம் பலமா இருக்கு என்றபடி வந்தாள் அவள்.
ஹேய் பாப்பு எப்போ வந்த என்ற தஷகிரிவனிடம் சாயங்காலமே வந்துட்டேன் அண்ணா என்றவள் விஷ்ணுவை முறைத்தபடி நின்றிருந்தாள். ஆத்தி இவள் என்ன இந்தப் பார்வை பார்க்கிறாள். இவள் பார்வையை பார்க்கும் பொழுதே தெரியுதே இந்த மாரியாத்தா சாமியாடிரும் போலையே மெதுவா கழன்று விடு விஷ்ணு என்று அவன் எஸ்கேப் ஆக ட்ரை பண்ண என்ன மச்சான் வயிறு கலக்கிருச்சா என்றான் குகன்.
அட நாசமா போற எடுவட்ட பயலே என்று அவனை மனதிற்குள் வசை பாடியவன் ஆமாம் மச்சான் என்று சுண்டு விரலைக் காட்டிட அவளோ அவனை இன்னும் முறைத்தாள். ஒன்லி பைவ் மினிட்ஸ் என்ற விஷ்ணு எஸ்கேப் ஆகி விட விசாகா தன் அண்ணன்களுடன் பேச ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த விஷ்ணு அவளது கண்ணை தன் கைகளால் மூடிட ஏய் மாடு நீ தான்னு எனக்கு தெரியாதா கையை எடுடா என் கிட்ட பேசாதே என்றிட ஸ்ஸ் வாயை மூடிட்டு நடடி என்றவன் அவளை அழைத்துக் கொண்டு அந்த அறைக்கு செல்ல அறை முழுவதும் பலூன்களாலும், அவளுக்கு பிடித்த டெடி பியர் பொம்மைகளாலும் நிறைந்திருக்க ஹாப்பி அனிவர்சரி டார்லிங் என்றிட அவனது தோளில் சாய்ந்து கொண்டாள் விஷாகா.
எப்படிமா நான் இந்த நாளை மறப்பேன் என்றவனிடம் நீ மட்டும் மறந்து பாருடி அப்போ தெரியும் உனக்கு என்னைப் பற்றி என்றவள் புன்னகைத்திட என்ன மச்சான் ஒரு வழியா என் தங்கச்சியை சமாதானம் பண்ணிட்ட போல என்று வந்தனர் குகன், தஷி இருவரும்.
என்ன மருமகனே இந்த பொம்மைகளை வாங்கிட்டு தான் பதுங்கி, பதுங்கி வீட்டுக்குள்ள வந்தியா என்ற கண்மணியிடம் ஆமாம் அத்தை ஒரு குழந்தைப் பிள்ளையை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுருக்கிங்க அதுக்கு பிடிச்சதை தானே என்னால வாங்கி கொடுக்க முடியும் என்று சிரித்தவனிடம் ஆமாம் ஆமாம் நாங்க தான் உங்க பொண்டாட்டியை குழந்தையா ட்ரீட் பண்ணுகிறோம் நீ தானடா அவளை இப்படி மாத்தி வச்சதே என் மகளா இருந்தவரை பெரிய பொண்ணு மாதிரி தான் இருந்தாள். எப்போ உன்னை கல்யாணம் பண்ணினாளோ அப்போ இருந்து குழந்தையா மாறிவிட்டாள் என்றார் கண்மணி.
…..தொடரும்….