மை டியர் மண்டோதரி….(7)

4.7
(3)

என்னடி இன்னும் ரெடியாகாமல் இருக்கிங்க என்ற காயத்ரியிடம் அக்கா தானேம்மா ரெடியாகனும். நீங்க என்ன என்னையையும் சேர்த்து சொல்லுறிங்க ஒருவேளை மாப்பிள்ளை என்னையை பார்க்கத் தான் வருகிறாரோ என்றாள் ஷ்ராவனி.

அடி செருப்பால பொட்டைக் கழுதை உனக்கு என்னடி அவசரம். மூத்தவளுக்கு தான் முதலில் கல்யாணம் என்ற காயத்ரி வைஷு இந்த நகை எல்லாம் போட்டுக்கோ அம்மன் சிலை மாதிரி இருப்ப என்றிட இப்பவே என்னை கல்லா மாத்தனும்னு முடிவு பண்ணிட்டியாம்மா என்றாள் வைஷ்ணவி.

என்னடி இது இப்படி சொல்லுற என்ற காயத்ரியிடம் வேற எப்படிம்மா பேச சொல்லுறிங்க எனக்கு கல்யாணம்னு நீங்களா முடிவு எடுக்குறிங்க பெத்தவங்க நீங்கள் தான் ஆனால் அந்த மாப்பிள்ளை போட்டோ கொடுக்கும் பொழுதே இவன் தான் உன்னோட புருசன்னு வாய் விட்டு மட்டும் தான் சொல்லவில்லை. மற்றபடி அப்பா அவனுக்கு தான் என்னை கட்டிக் கொடுப்பாரு இந்த பொண்ணு பார்க்கிற சடங்கு ஒரு ஒப்புக்கு தானே என்றாள் வைஷ்ணவி.

வைஷு அப்படி இல்லம்மா என்ற காயத்ரியிடம் இது வீடாம்மா சர்வாதிகாரி கூடம். அப்பா என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்யுற அடிமைகள் நாம. எப்போ அம்மா இந்த நிலைமை மாறும் என்றாள் வைஷ்ணவி.

என்ன பேச்சு இது வைஷு உன் அப்பா நம்மளை அடிமை மாதிரியா நடத்துராரு என்ற காயத்ரியிடம் இல்லையாம்மா என்றாள் வைஷ்ணவி. வைஷு நீயும் சரி, ஷ்ராவியும் சரி நீங்க ஆசைப் பட்ட படிப்பு தான் படிச்சிங்க என்ற காயத்ரியிடம் ஆமாம்மா அவர் சொன்ன காலேஜ்ல அதுவும் வுமன்ஸ் காலேஜ்ல தானே படிச்சோம். விடுங்கம்மா நேரம் ஆச்சுன்னு கத்துவாரு என்ற வைஷ்ணவி தயாராக ஆரம்பித்தாள்.

ஷ்ராவனி என்ற கதிர்வேலனிடம் சொல்லுங்க அப்பா என்றாள் ஷ்ராவனி. நீ   உன்னோட சித்தி வீட்டிற்கு போயிட்டு வருகிறாயா இப்போ தான் போன் பண்ணினாங்க உன் சித்திக்கு தலைவலியாம் உன்னை வரச் சொன்னாங்க என்றிட சரிங்கப்பா என்ற ஷ்ராவனி கிளம்ப ஆரம்பித்தாள்.

சின்னவளை எங்கே அனுப்பி வச்சிங்க என்ற காயத்ரியிடம் உன் தங்கச்சி வளர்மதி வீட்டிற்கு என்ற கதிர்வேலன் பெரியவளை பார்க்க வரும் மாப்பிள்ளை சின்னவளை பிடிச்சுருக்குனு சொல்லி விடக் கூடாது பாரு என்றார்.

என்னங்க இப்படி சொல்றிங்க என்ற காயத்ரியிடம் மூத்தவளை விட சின்னவள் நல்லா இருக்கிறாளேன்னு அவங்களுக்கு தோன்றி விடக் கூடாது காயத்ரி. மாப்பிள்ளை நல்ல பையன் இந்த சம்மந்தம் எந்த விதத்திலும் கையை விட்டு போய் விடக் கூடாது அதனால தான் சொல்கிறேன் என்ற கதிர்வேலன் வைஷ்ணவி ரெடியான்னு பாரு என்றார்.

இந்த மனுசன் எல்லாம் 70 ,80 களிலே அப்பாவா இருக்க வேண்டியவரு. இன்னும்மா இதெல்லாம் நம்புறாரு அக்காவை பார்க்க வந்த மாப்பிள்ளை தங்கச்சியை பிடிச்சுருக்குனு சொல்லுவானாம் என்று சிரித்தார் வளர்மதி. என்ன சித்தி என் அப்பாவை நக்கல் பண்ணுறியா இரு , இரு சொல்லித் தரேன் என்ற ஷ்ராவனியிடம் சொல்லுடி எனக்கு என்ன உங்க அப்பாவை பார்த்தால் பயமா. உன் அம்மா தான் பயந்து சாகும் என்று சிரித்தவர் உன் அக்கா பாவம் நீயும் கூட இல்லாமல் தவித்துப் போயிருப்பாள் என்றார்.

பால்கணியில் நின்று பேசிக் கொண்டிருந்த ஷ்ராவனி கீழே பார்க்கிங்கில் இருந்து வரும் ஒருத்தியை பார்த்து சிரித்தாள். என்னடி சிரிக்கிற என்ற வளர்மதியிடம் இந்தப் பொண்ணு என் அப்பா முன்னாடி நின்றால் எப்படி இருக்கும்னு நினைக்கிறேன் சித்தி என்று கீழே கையை காட்டிட தனிஷா மாடல் உடையில் நடந்து சென்றாள்.

இதுவா உங்க அப்பாரு அவ்வளவு தான் ச்சீச்சீ கருமம்னு ஓடியே போயிருவாரு என்று சிரித்த வளர்மதி வா உள்ளே போயிரலாம் என்றார். ஏன் சித்தி என்ற ஷ்ராவனியிடம் அவள் ஒரு மாதிரி சரியான சீனு. என்னம்மோ இவள் ஒருத்தி தான் இந்த அப்பார்ட்மென்ட்லையே அழகி மாதிரியும் , மத்த பொண்ணுங்க எல்லாம் இவளை பார்த்து பொறாமை படுற மாதிரியும் ஓவரா பேசுவாள். இப்போ நீ அவளைப் பார்த்து சிரிச்சதுக்கே தேடி வந்து சண்டை பிடிப்பாள் அதனால தான் சொல்கிறேன் வாடி என்று ஷ்ராவனியை இழுத்துச் சென்றார் வளர்மதி.

 

என்ன குகன் இங்கே வந்து நின்னுட்டு இருக்கிற என்ற தஷியிடம் அண்ணா பைனலி அந்த சிட்டி ரோபோவுக்கு கோபம் வந்திருச்சு என்று வைஷ்ணவி அவனை திட்டிய நிகழ்வினைக் கூறி சிரித்தான் குகன். தம்பியின் சந்தோசத்தைக் கண்ட தஷகிரிவன் உனக்கு அந்தப் பொண்ணை பிடிச்சுருக்கா குகன் என்றிட என்ன அண்ணா என்றான் குகன்.

உனக்கு அந்தப் பொண்ணு வைஷ்ணவியை பிடிச்சுருக்கான்னு கேட்டேன் என்றான் தஷகிரிவன். ஆமாம் ரொம்பவே பிடிச்சுருக்கு ஆனால் அவளோட மனசுல என்ன இருக்குனு தெரியனுமே அது தெரியாமல் நாம எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் என்றான் குகன்.

நாளைக்கு ஆபிஸ் வருவாங்க தானே அப்போ கேட்டு பேசி முடிச்சுரலாம் என்ற தஷகிரிவனிடம் அண்ணா என்ன இது உடனே பேசி முடிக்கப் போறியா எனக்கு முன்னே அண்ணன் நீ ஒருத்தன் இருக்க என்றான் குகன்.

உன் அண்ணனுக்கும் அண்ணி செட் ஆகிருச்சுடா மச்சான் என்ற விஷ்ணுவிடம் எதே அண்ணி செட்டாகிருச்சா யாரு மச்சான் என்னோட அண்ணி உனக்கு ஒன்று விட்ட , இரண்டு விட்ட அக்கா, தங்கச்சி இருக்காங்க என்று இழுத்தான் குகன். உனக்கு ஒன்று விடனுமா மச்சான் என்ற விஷ்ணுவிடம் சரி , சரி கோவிச்சுக்காதே மச்சான் நீ சொல்லு என் அண்ணி யாரு என்றான் குகன்.

ஷ்ராவனி என்ற விஷ்ணுவிடம் என்ன ஷ்ட்ராபெர்ரியா என்றான் குகன் . அவனது தலையில் நங்கென்று கொட்டிய தஷி ஷ்ராவனி , ஸ்ட்ராபெர்ரி இல்லை என்றான்.  இது உனக்கு தேவையா மச்சான் உன் நக்கல்ஸ் எல்லாம் என்னோட வச்சுக்கோ உன் அண்ணன்காரன் அவனோட ஆளை எதுனாலும் சொன்னால் கொன்னே போட்டுருவான் என்றான் விஷ்ணு.

என் அண்ணியை நான் கிண்டல் பண்ணக் கூடாதா என்ன என்ற குகனிடம் அண்ணி தான் ஆனால் அண்ணி வரும் முன்னே நீ பேரன் , பேத்தி எடுத்துருவ என்று சிரித்தான் விஷ்ணு.

டேய் என்ற தஷகிரிவனிடம் பின்னே என்னவாம் சார் அந்த மேடத்தை பார்க்கிறதோட சரி போயி லவ்வை சொன்னால் தானே என்றான் விஷ்ணு.

அவங்க எம்.பில் முடிச்சுருக்காங்க நான் இப்போ தான் செகன்ட் இயர் படிக்கிறேன். என்ன குவாலிபிகேசன் இருக்கு என் லவ்வை சொல்லனும்னா அட்லீஸ்ட் ஒரு டிகிரியாவது முடிக்க வேண்டாமா என்றான் தஷகிரிவன்.

அண்ணா நீ இப்பவே நம்ம ஆபிஸோட எம்.டி என்ற குகனிடம் அதை எங்கே உங்கண்ணன் ஏற்றுக் கொண்டான் மாமாவும், நீயும் சொல்லுற இடத்தில் கையெழுத்து போடுவான் வேற என்ன பண்ணுவான் என்று சிரித்தான் விஷ்ணு.

சரி இப்போ என்ன நான் ஷ்ராவனிகிட்ட லவ்வை சொல்லனும் அவ்வளவு தானே சீக்கிரமே சொல்கிறேன் போதுமா ஆனால் அதற்குள்ள குகன் நீயும் வைஷ்ணவிகிட்ட உன்னோட விருப்பத்தை சொல்லு என்றான் தஷகிரிவன்.

வாங்க , வாங்க என்று நந்தகோபாலனின் குடும்பத்தினரை வரவேற்றார் கதிர்வேலன். காயத்ரி என்றதும் காயத்ரிதேவியும் , கணவனுடன் வந்து அவர்களை வரவேற்று உபசரித்தார்.

வினீத், யசோதா, நந்தகோபாலனுடன் வினீத்தின் மூத்த சகோதரி மதுவந்தியும் ,  அவளது கணவன் மதுசூதணனும் , இளைய சகோதரி நர்மதாவும் வந்திருந்தனர். மதுவந்தியின் பார்வை அந்த வீடு முழுக்க அலசியது.

அவர்களுக்கு காயத்ரி ஸ்நாக்ஸ் கொடுத்து விட்டு வைஷ்ணவியை அழைத்து வந்தார். வைஷ்ணவி கொடுத்த தேநீரை எடுத்துக் கொண்ட வினித் அவளை தலை முதல் கால் வரை பார்வையால் அளந்து விட்டு தேநீரைப் பருகினான். அவனது பார்வை ஏனோ வைஷ்ணவிக்கு ஒரு பாதுகாப்பின்மையை உருவாக்கியது.

மதுவந்தியின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது வைஷ்ணவியை பார்த்து. தன்னை விட அழகான ஒருத்தி தன் வீட்டிற்கு மருமகளாக வந்து விட்டால் தன்னை மதிக்க மாட்டாள் என்ற சின்னத் தனமான புத்தி அவளுக்கு. பிறர் அறியா வண்ணம் தன் முக பாவணையை மாற்றிக் கொண்டவள் என்ன படிச்சுருக்கம்மா என்றாள். எம்.பி.ஏ என்று வைஷ்ணவி கூறிட எம்.பி.ஏ என்று தன் மனதிற்குள் சிலாகித்தவள் வேலைக்கு போறியா என்றாள் நக்கலாக.

ஆமாம் என்று தலையாட்டியவளிடம் மேலும் ஏதோ கேட்க வாயெடுத்த மதுவந்தியை தடுத்த யசோதா ஏன்டி நீ என்ன இண்டர்வியூவா எடுக்கப் போகிறாய் சும்மா இருடி என்று விட்டு வைஷ்ணவி வாம்மா வந்து என் பக்கத்தில் உட்காரு என்றார்.

மதுவந்திக்கு தன் தாய் வைஷ்ணவியின் முன் தன்னை அசிங்கப்படுத்தி விட்டார் என்று கோபம் வந்தாலும் மௌனமாக இருந்தால் மனதில் வன்மத்தோடு.

…..தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!