யசோதா வைஷ்ணவியிடம் அன்பாக பேசினார். நந்தகோபாலன் , கதிர்வேலனிடம் உங்களுக்கு இன்னொரு பொண்ணு இருக்காங்க தானே என்றிட ஆமாம் சின்னவள் ஷ்ராவனி. அவளோட சித்திக்கு உடம்பு சரியில்லை அதான் அவங்க வீட்டிற்கு போயிருக்கிறாள் என்றார் கதிர்வேலன்.
வினித் உனக்கு வைஷ்ணவியை பிடிச்சுருக்காப்பா என்ற யசோதாவிடம் பிடிச்சுருக்கு என்றன் வினித். வைஷ்ணவி உனக்கு என்று யசோதா கேட்டிட என் பொண்ணு நான் கிழிச்ச கோட்டை தாண்டவே மாட்டாள் என்றார் கதிர்வேலன்.
வைஷும்மா உனக்கு மாப்பள்ளையை பிடிச்சுருக்கா என்று கதிர்வேலன் கேட்டிட பிடிக்கலைன்னு சொல்லிரு வைஷு என்று மனது கிடந்து துடிக்க அவளது உதடுகளோ அவள் மனதின் பேச்சை கேட்டிடாமல் உங்கள் விருப்பம் அப்பா என்றது.
அப்பறம் என்னங்க கையோட நிச்சயதார்த்த தேதியை குறிச்சுரலாமா என்றார் நந்தகோபாலன். சரியென்று கதிர்வேலனும் கூறிட நிச்சயதார்த்த தேதியை குறித்து விட்டு நந்தகோபாலன் தன் குடும்பத்துடன் கிளம்பினார்.
வைஷ்ணவியின் மனமோ அம்மாகிட்ட வீராப்பா பேசுற வாய் ஏனோ அப்பாவை பார்த்தாலே பசை போட்டு ஒட்டினது போல மூடிக்ககிருதே என்று நொந்து கொண்டது. ஏனோ வினீத்தை அவளுக்கு பிடிக்கவில்லை. தலை முதல் , கால் வரை அவளை அளந்த அவனது பார்வையில் ஏதோ தவறு இருக்கிறது என்று மட்டும் உணர்ந்தாள்.
பாரு காயத்ரி நான் பார்த்திருக்கிற மாப்பிள்ளையை ரொம்ப , ரொம்ப நல்ல மாதிரி. இப்போ உள்ள பசங்க பொண்ணு போட்டோவை பார்த்த மறு நிமிசமே பொண்ணோட போன் நம்பரை வாங்கி விடிய , விடிய போனிலே குடும்பம் நடத்துறானுங்க. ஆனால் பாரு நிச்சய தேதி குறிச்ச பிறகு கூட நம்ம வைஷுகிட்ட அநாவசியமா ஒரு பேச்சு கூட பேசாமல் போயிருக்கிறார். பெத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரிந்த பையன் என்று வினித் பற்றி பெருமை பேசிக் கொண்டிருந்தார் கதிர்வேலன்.
வைஷ்ணவிக்கு எரிச்சலாக இருந்தது தந்தையின் பேச்சு.
என்னடா பொண்ணை உனக்கு பிடிச்சுருக்கா என்ற மதுவந்தியிடம் ஏன் உனக்கு பிடிக்கவில்லையா அக்கா என்றான் வினித். அவளை விட அந்தப் பொண்ணு அழகா இருக்கு, படிச்சுட்டு வேலைக்கு வேற போகுது உன் அக்காவுக்கு பிடிக்குமா மாப்பிள்ளை என்ற மதுசூதணன் சிரித்திட உங்க வாயை மூடுங்க என்றாள் மதுவந்தி. எனக்கு என்னம்மோ அவங்க சின்னப் பொண்ணு இவளை விட அழகா இருப்பான்னு தோன்றுகிறது. அதனால தான் அவளை எங்கேயோ அனுப்பி வச்சுட்டாங்க என்ற மதுவந்தியை பார்த்த வினித் அவளோட தங்கச்சி உலக அழகியாவே இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. சும்மா எதுனாலும் சொல்லிட்டு இருக்காமல் போயி வேலையைப் பாரு என்றான்.
ஏன்டா உனக்கு இந்த வைஷ்ணவியை ரொம்ப பிடிச்சுருக்கா என்ன என்றாள் மதுவந்தி. அம்மாவுக்கு பிடிச்சுருக்கு தானே அப்பறம் என்ன விடுக்கா அம்மாவுக்கு பிடித்தாலே எனக்கும் பிடிக்கும் என்றவன் தன்னறைக்கு சென்று விட்டான்.
அவனது மொபைல் போன் ஒலித்திட அதை அட்டன் செய்வதற்கு முன் கதவினை நன்றாக சாத்தி தாழ்ப்பாள் போட்டவன் பிறகு போனை அட்டன் செய்தான். சொல்லு டார்லிங் என்றவனிடம் என்ன பேபி பொண்ணு பிடிச்சுருக்கா என்றாள் தனிஷா.
பொண்ணு பிடிச்சுருக்கு என்றவனிடம் அப்போ இனி என்னை மறந்துருவியா பேபி என்றாள் தனிஷா. உன்னைப் போயி மறப்பேனா டார்லிங் என்ற வினித் அவள் என் அப்பா, அம்மாவுக்கு மருமகள். அவங்களுக்கு பிடிச்ச மாதிரி ஒரு குடும்பக் குத்துவிளக்கு அந்த வைஷ்ணவி.
எனக்கு குடும்பக் குத்துவிளக்கு, அம்மன்சிலை இப்படி எல்லாம் அடக்கம், ஒடுக்கமா இருக்கிற பொண்ணுங்களை பிடிக்காதுன்னு தெரியாதா. அவள் கல்யாணம் பண்ணி வீட்டில் இருப்பாள். என்னோட மற்ற தேவைகளுக்கு தான் நீ இருக்கியே என்றான் வினித். அது அதானே என்னோட பேபியைப் பற்றி எனக்கு தெரியாதா என்ன என்றவள் அவனுடன் வேறு சில பேச்சுக்களை பேச ஆரம்பித்தாள்.
நீ என்ன பைத்தியமா அக்கா அந்த ஆளோட பார்வை தப்பா இருக்குனு தோன்றி இருக்கு தானே அப்பறம் ஏன் சம்மதம் சொன்ன என்ற ஷ்ராவனியிடம் அப்பா கேட்கும் பொழுது என்னால எதிர்த்து பேச முடியவில்லை ஷ்ராவி. நான்னு இல்லை அந்த இடத்தில் நீ இருந்திருந்தால் கூட சம்மதம் தான் சொல்லி இருப்ப நாம வளர்ந்த விதம் அப்படி ஷ்ராவி. அவர் இல்லாதப்போ வீர வசனம் எல்லாம் பேசுவோம். ஆனால் அவரைப் பார்த்த பிறகு எல்லாம் புஷ்வானம் ஆகிரும் என்ற வைஷ்ணவி விடு ஷ்ராவி என்றாள்.
அக்கா உன்னோட வாழ்க்கை அக்கா காலம் முழுக்க பிடிக்காத அடிமை மாதிரி ஒரு வாழ்க்கை நம்ம அம்மா வாழுறாங்களே அப்படித் தான் நீயும் வாழப் போறியா என்ன என்றாள் ஷ்ராவனி. நான் மட்டும் இல்லை ஷ்ராவி நாளைக்கு நீ கூட என்று கூற வர நிச்சயம் என்னோட வாழ்க்கைக்கான முடிவை அப்பாவை எடுக்க விட மாட்டேன் அக்கா. என்னோட கல்யாணம் எனக்கு பிடிச்ச ஒருத்தன் கூட தான் நடக்கும் அந்த முடிவில் நான் உறுதியா இருக்கிறேன்.
அக்கா நீ கூட கொஞ்சம் யோசி அப்பா கிட்ட நாம பேசலாம். மனசை விட்டுடாதே இன்னும் ஒன்றரை மாதம் இருக்கு நிச்சயதார்த்தத்திற்கு எதாவது பண்ணலாம் என்றாள் ஷ்ராவனி. தங்கையை கசந்த புன்னகையுடன் பார்த்த வைஷ்ணவி எது நடக்கனுமோ அது தான் நடக்கும் ஷ்ராவி என்று கூறியவள் புடவையை மாற்றினாள்.
என்ன வைஷு மாப்பிள்ளையை பிடிச்சுருக்கா என்ற மகிழாவிடம் பிடிச்சால் என்ன பிடிக்கவில்லைன்னா என்ன என் அப்பா சொல்லுறதை நான் கேட்டு தான் ஆகனும் என்ற வைஷ்ணவி வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
என்னப்பா வேலையிலே குறியா இருக்கிறாய் என்ன ஜி.எம். கிட்ட திட்டு வாங்க கூடாதுன்னா என்ற மகிழாவை புன்னகையுடன் பார்த்தவள் ஏன்பா நான் அந்த முசுடு கிட்ட பேச்சு வாங்குறதை பார்த்து நீ என்ஜோய் பண்ணனுமா என்றவள் நிமிர்ந்திட அவள் முன் கைகளை கட்டியபடி குகநேத்ரன் நின்றான்.
ஆத்தாடி இந்த முசுடு இங்கே தான் நிற்குதா இது தெரியாமல் வாயை விட்டுட்டேனே என்றவள் விழித்திட என்னோட கேபின்க்கு கொஞ்சம் வர முடியுமா மிஸ்.வைஷ்ணவி என்ற குகனிடம் தலையை மட்டும் ஆட்டி வைத்த வைஷ்ணவி அவன் சென்ற பிறகு சிறிது நேரம் சென்று அவன் அறைக்கு சென்றாள்.
முசுடுனா சொல்லுற மவளே வாடி உனக்கு இருக்கு என்று நினைத்தவன் முசுடு என்று சொல்லிப் பார்க்க அவனுக்கே சிரிப்பு தான் வந்தது.
எக்ஸ் கியூஸ் மீ ஸார் என்ற குரலில் முகத்தை மாற்றிக் கொண்டவன் கோபமாக இருப்பது போல எஸ் கம் இன் என்றான். அவள் தயங்கியபடி அறைக்குள்ளே வந்தாள்.
…..தொடரும்….