மை டியர் மண்டோதரி…(9)

5
(5)

என்ன இவன் இப்படி பார்க்கிறான் என்று நினைத்த ஷ்ராவனி அவனை முறைத்திட அப்பொழுதும் அவளை ரசித்தபடி அமர்ந்திருந்தான் தஷகிரிவன். அவனை வாய் திட்டினாலும் ஏனோ அவனது பார்வையை அவளது மனம் ரசிக்கத் தான் செய்தது.

அவள் பாடம் நடத்த ஆரம்பிக்க அவனது கைகள் எழுதுவதில் மும்மரமாக இருந்தாலும் கண்கள் அவனவளை ரசிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது.

என்ன ஷ்ராவனி மேடம் இப்போ எல்லாம் ஏதோ யோசனையா இருக்கிங்க என்ற சுஜாதாவிடம் இல்லை மேம் ஒன்றும் இல்லை என்றாள் ஷ்ராவனி. அப்போ வாங்க மீட்டிங் போகலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.

என்ன இவன் வரச் சொல்லிட்டு ஒன்றுமே பேசாமல் நிற்கிறான் என்னவா இருக்கும் என்று யோசித்தபடி நின்றிருந்தாள் வைஷ்ணவி. குகனோ அவளை ஒரு பார்வை பார்ப்பது , பிறகு கணினியில் தன் கவனத்தை செலுத்துவதுமாகவே இருந்தான். பத்து நிமிடம் அவளை காக்க வைத்துக் கொண்டிருக்கவும் கடுப்பானவள் ஸார் என்னை வரச் சொல்லிட்டு நீங்க ஏதோ வேலையா இருக்கிங்க என்றிட ஓஓ நீங்க வேற வெயிட் பண்ணுறிங்களா ஒரு நிமிஷம் மிஸ்.வைஷ்ணவி என்றவன் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தான்.

பரதேசிப் பயல் இவனோட டைம் பாஸ்க்கு என்னை நிக்க வச்சுருக்கான் போல என்று அவனைத் திட்டிக் கொண்டு நின்றிருந்தாள் வைஷ்ணவி.

ரொம்ப தாங்க்ஸ் வைஷ்ணவி என்று குகன் கூறிட வைஷ்ணவி அதிர்ந்து போனாள். என்னடா இது இவன் தான் நமக்கு நன்றி சொல்கிறானா என்று யோசித்தவளை இருமல் இருமி நினைவுக்கு கொண்டு வந்தான் குகநேத்ரன். என்னங்க இவன் தான் தாங்க்ஸ் சொல்கிறானான்னு அதிசயமா பார்க்கிறிங்களா என்ற குகனிடம் இல்லை சார் என்று தலையை அசைத்திட அவளைப் பார்த்து புன்னகைத்தவன் நீங்க ரெடி பண்ணி கொடுத்த கொட்டேசன் வொர்க்அவுட் ஆகிருச்சு. அதான் என்றவன் தாங்க்ஸ் அகைன் என்றிட புன்னகைத்தவள் அப்போ நான் கிளம்பலாமா சார் என்றிட ஓகே என்றான் குகநேத்ரன்.

அவள் தன் இடத்திற்கு வந்து அமர்ந்து வேலையை கவனித்தாள். என்னப்பா ஜி.எம் என்ன சொன்னாரு என்ற மகிழாவிடம் உன் கூட பேசாமல் வேலையை கவனிக்க சொன்னாரு என்றாள் வைஷ்ணவி. போடி என்று அவளிடம் முகத்தை வெட்டிக் கொண்டு வேலையை கவனித்தாள் வைஷ்ணவி.

மாடல் எக்ஸாம் பேப்பர்களை திருத்திக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி. அதில் தஷகிரிவனின் பேப்பர் மட்டும் ரோல்நம்பருடன் பெயரும் எழுதப்பட்டு இருக்கவும் அதை பிரித்து திருத்த ஆரம்பிக்க அதில் ஒரு கடிதம் இருந்தது.

அதை எடுத்துப் படித்தவளுக்கு பக்கென்றானது. அவன் எழுதிய காதல் கடிதம். அடப்பாவி இவனுக்கு எவ்வளவு திமிரு இருந்தால் எனக்கு லவ் லெட்டர் எழுதிருப்பான் பாரேன்  தலைவர் கவிதை எல்லாம் எழுதி இருக்காரு என்று அதை வாசிக்க ஆரம்பித்தாள்.

நித்தமும் உன்னிடம்
தொலைய நினைக்கிறேன்
அன்பே நீ என்ன திருவிழா
கூட்டமோ….

உனக்குள் தொலையும்
குழந்தையாக நானும்
பிறந்திருக்கிறேனோ…

உனக்குள் தொலைந்த
என்னை மீட்டு மீண்டும்
சிறையெடு காதல்
சிறையாக மாறி என்னை
உனக்குள் கைதியாய்
மாற்றி…

ஆயுள் முழுக்க உனக்குள்
நான் கைதியாய் இருப்பேனடி
என் கண்ணே…

ஜல்லிக்கட்டு காளை
போல இருந்த என்
மனமோ மங்கை
உன் முகம் பார்த்த
நொடி முதல் அடி மாடாய்
இல்லை உன் அடிமையாய்
மாறிப்போனேன் என்
கண்மணியே…

பத்து தலை கொண்ட
அந்த ராவணன் சீதையை
கவர்ந்து சென்றதைப்
போல உன்னை நான்
கவர்ந்து போக விழைகிறேன்
சீதையாக இல்லை என் கைத்தாலியை
காலம் முழுக்க தன் நெஞ்சில்
சுமந்திடும் மண்டோதரியாக….

என் மண்டோதரியாக வருவாயா ஷ்ராவனி உனக்காக காத்திருக்கும்
உன் ராவணன். ஐ லவ் யூ ஷ்ராவனி💖

இப்படிக்கு
தஷகிரிவன்..

என்று முடிந்திருந்தது அந்தக் கடிதம். அதைப் படித்தவள் புன்னகைத்து விட்டு அதை எடுத்து ஓரமாக வைத்தாள். மற்ற பேப்பர்களை திருத்த ஆரம்பித்தாள்.

என்னடா ஒரே டென்சனா இருக்க என்ற விஷ்ணுவிடம் லெட்டரை படிச்சாளா இல்லையான்னு தெரியலை மச்சான் அதான் ஒரே டென்சனா இருக்கு என்றான் தஷகிரிவன்.

இன்னைக்கு லாஸ்ட் ஹவர் தான் மச்சி உன் ஆளு வருவாங்க நீ இப்பவே டென்சனா இருக்க என்றான் விஷ்ணு. அவனை முறைத்தவன் அமைதியாக வகுப்பை கவனிக்க ஆரம்பித்தான். அன்றைய நாள் மட்டும் அவனுக்கு நகரவே மாட்டேன் என்று அடம் பிடிப்பது போல் இருந்தது தஷகிரிவனுக்கு.

ஒரு வழியாக நாயகியின் பாடவேளை வந்து விட அவளும் வகுப்பறைக்குள் நுழைந்தாள். அவனை முறைத்தபடி அமர்ந்தவள் பாடம் நடத்த ஆரம்பித்தாள். அவனோ அவ்வளவு நேரம் இருந்த படபடப்பு எதுவும் இல்லாமல் அவளை ரசித்தபடி பாடம் கவனிக்க ஆரம்பித்தான்.

வகுப்பு முடியவும் அனைவரையும் கிளம்பச் சொன்னாள். அவள் அந்த வகுப்பறையிலே அமர்ந்திருந்தாள். தஷகிரிவனும் அவள் தன்னிடம் பேச வேண்டும் என்பதற்காகவே அறையில் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நண்பன் விஷ்ணுவையும் அனுப்பி விட்டான்.

அவனை முறைத்தபடி இருந்தவள் அவனை சொடுக்கிட்டு அழைத்தாள். அவன் அப்பொழுதும் புன்னகை மாறாமல் அவள் முன்னே கை கட்டி நின்றான்.

என்ன இது என்றவளிடம் லவ் லெட்டர் மேடம் என்றான் அவன். அவனை முறைத்தவள் நான் உன்னோட லெக்சரர் என்றிட அதனால என்ன மேடம் நீங்கள் என்னை விட  சின்னப் பொண்ணு தானே. நான் ஸ்கூலில் பெயில் ஆகி, பெயில் ஆகி படிச்சதால இப்பவும் ஸ்டூடண்ட். நீங்கள் ஒரே அட்டம்ட்ல பாஸ் ஆனதால் இன்னைக்கு எனக்கு லெக்சரர் என்றவனை முறைத்தவள் மனசுல என்ன பிரேமம் படத்துல வர ஹீரோன்னு நினைப்பா நான் ஒன்றும் மலர் டீச்சர் இல்லை என்றாள்.

பிரேமம் படம் மட்டும் இல்லை மேடம் வல்லவன் படத்தில் கூட நயன்தாரா லெக்சரர் தான். சிம்பு ஸ்டூடண்ட் என்ன அவர் அதை மறைச்சுட்டு லவ்வை சொல்லுவார் நான் அப்படி இல்லை ஓபனாவே சொல்கிறேன் ஐ லவ் யூ ஷ்ராவனி மேடம் என்றான் நம் நாயகன் தஷகிரிவன்.

அவனை முறைத்தவள் இந்த லெட்டரை பிரின்சிபல் கிட்ட கொடுக்கிறேன் பாரு என்றிட ஐயோ மேடம் நான் இதை உங்களுக்காகத் தானே எழுதினேன் நீங்க என்னன்னா அவங்க கிட்ட கொடுக்கிறேன்னு சொல்றிங்களே அதை கொடுங்க நான் வேண்டும் என்றால் ஐ லவ் யூ ஷ்ராவனிங்கிற இடத்தில் ஐ லவ் யூ ஸ்டெல்லானு எழுதி கொடுக்கிறேன் என்றதும் அவள் சிரித்து விட்டாள்.

ரொம்ப அழகுங்க நீங்க சிரிக்கும் பொழுது என்றவனை மீண்டும் முறைத்திட அட என்னங்க நீங்க ஒரு சமயம் சிரிக்கிறிங்க அடுத்த நிமிசமே முறைக்கிறிங்க என்றவனிடம் ஹலோ போதும் உங்க விளையாட்டு இந்த பேப்பரை எடுத்துட்டு கிளம்புங்க என்றிட என்னப்பா இது வம்பா போச்சு. இதுவே ஒரு ஆம்பளை ப்ரொபசருக்கு ஒரு ஸ்டூடண்ட் பொண்ணு லவ் ப்ரொபோஸ் பண்ணினால் உலகம் ஏற்குது.

அதே ஒரு பொம்பளை ப்ரொபசருக்கு ஒரு பையன் ஸ்டூடண்ட் ப்ரொபோஸ் பண்ணினால் தப்புனு சொல்லுறிங்க போங்க மேடம் ஆனாலும் ஐ லவ் யூ. இந்த தஷி ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டான். இந்த ஜென்மத்தில் நீங்கள் தான் என்னோட மண்டோதரி என்று அவளை கண்ணடித்து விட்டு சென்று விட்டான் தஷகிரிவன்.

……தொடரும்….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!