யாதுமானவளே 1

5
(8)

வணக்கம் நட்புக்களே இதுவரை பிரதிபலியில் மட்டும் எழுதிட்டு இருந்த நான்.. இப்ப தான் அதை விட்டு வெளிய வந்து எழுதி பார்க்கலாமேன்னு நினைச்சு இந்த தளத்தில் எழுத வந்து இருக்கேன்.. உங்க ஆதரவுவும் சப்போர்ட் கொடுத்தா நல்லா இருக்கும்.. இது தான் பிரதிபலி நான் எழுதிய முதல் கதை.. அதனால் கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கும்.. அட்ஜெஸ்ட் கரோ.. உங்கள் கருத்தை ஆவலோடு எதிர்பார்க்கும் நான்..

பாகம் 1

சென்னை நெடுஞ்சாலை நள்ளிரவு 2 மணி மேகம் திரண்டு மிதமான மழை பெய்ய  கொண்டு இருந்தது. 20 வயதுடைய பெண் ஒருத்தி சாலையில் நடந்து வந்து கொண்டு இருந்தாள். கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறும் நெற்றி வகட்டில் இருந்த குங்குமமும் திருமணம் ஆனவள் என்பதை உணர்த்தியது. காதில் தோடு இல்லாமலும் கையில் வளையல் அணியாமலும் மழை துளி தன் மீது படுவது கூட உணராமல் மனது நிறை வலியுடனும் கண்ணீரோடும் சென்றாள். அப்போது அவ்வழியே அளவுக்கு அதிகமான வேகத்தோடு வந்த லாரி தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி அவளை இடித்து நிற்காமல் சென்றது.. லாரி இடித்த வேகத்தில் தூக்கி சாலை ஓரமாக வீசப்பட்டாள் அவள்.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மழை பயங்கரமாக பெய்ய ஆரம்பித்தது.. அப்போது சஞ்சு வேகமா போடா இன்னும் வேகமா போ என்று பைக்கில் அவனை அணைத்து முதுகில் சாய்ந்து இருந்த சந்தியா தனது கணவனிடம் சொன்னாள். ஏய் சத்தம் போடாமா வாடி வேகமா போறேன்.. சஞ்சு எத்தனையோ தடவை நாமா லவ்வர்ஸா இந்த மாதிரி நைட்டு டைம் டிரைவ் போயிருக்கோம்.. ஆனா இப்ப கல்யாணம் முடிஞ்சு போற பர்ஸ்ட் லாங் டிரைவ் இது தான் இல்ல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா என்று சொல்லி கொண்டே வந்தாள்.. தீடிரென சஞ்சய் வண்டியை நிறுத்தினான்.

ஏன்டா நான் பேசிட்டே வரேன் நீ எதுவும் பேசாம வண்டிய நிறுத்திட்டே என்ன ஆச்சு சஞ்சு. சந்தியா வண்டியில் இருந்து இறங்கு அங்க பாரு யாரோ ரோட்டில் விழுந்து கிடக்குறாங்க வா என்னனு போய் பார்க்கலாம் என்று சஞ்சய் கூறி வண்டியை நிறுத்தியதும் இருவரும் அங்கு சென்று பார்த்தனர்.. அய்யோ சஞ்சய் ஒரு பொண்ணு அடிப்பட்டு கிடக்குதுடா ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணு என்று கூறினாள் சந்தியா..

சஞ்சய் போன் செய்த சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் அங்கு வந்து சேர்ந்தது.. ஆம்புலன்ஸில் அடிப்பட்ட பெண்னை ஏற்றி விட்டு அவளுடன் வண்டியில் ஏறினாள் சந்தியா.. சஞ்சய் தனது பைக்கில் அவர்கள் பின்னால் சென்றான்.. சந்தியா அந்த பெண்ணின் கைப்பிடித்து ஹலோ நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா, பயப்படாதீங்க ஹாஸ்பிட்டல் பக்கத்தில் தான் சீக்கிரம் போயிடலாம்.. உங்களுக்கு ஒன்னும் ஆகாது நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் என்று அரை மயக்கத்தில் இருக்கும் அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தாள். ஆனால் அடிப்பட்டு இருந்தவளோ கடவுளிடம் உடம்பில் ஏற்பட்ட காயத்தை விட மனதில் ஏற்பட்ட காயத்தின் வலி தாங்காமல் தன்னுடைய உயிரை எடுத்து கொள்ளுமாறு வேண்டிக் கொண்டு இருந்தாள்..

அருகில் இருக்கும் மருத்துவமனை வந்ததும் அந்த பெண்ணை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.. மருத்துவமனை  ரிசப்ஷனில் இருந்த செவிலியர் சஞ்சய் சந்தியா இருவரிடம் வந்து, சொல்லுங்க பேஷண்ட் பெயர் என்ன? எப்படி அடிப்பட்டுச்சா?நீங்க அவங்களுக்கு என்ன ரிலேஷன்? என்று கேள்வியை அடுக்கி கொண்டே இருந்தார்..

சஞ்சய், மேடம் அது எல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது ரோட்டில் அந்த பொண்ணு அடிப்பட்டு கிடந்தது நாங்க ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்ந்தோம்.. சார் என்ன இப்படி சொல்றீங்க அந்த பொண்ணு யாருனே தெரியாதா, அந்த பொண்ணுக்கு தலையில் பயங்கரமா அடிப்பட்டு இருக்கு. ரத்தம் வேற நிறையவே வெளியேறி இருக்கு. அதனால் ஆப்ரேஷன் பண்ணனும் அவங்க ரிலேட்டிவ் யாராவது கையெழுத்து போடனும் என்று அந்த செவிலியர் கூறினார்.

அப்போது சந்தியா அங்கு இருந்த டாக்டரிடம்  ஏதாவது செஞ்சு அந்த பொண்ணை காப்பாத்துங்க டாக்டர் நீங்க ட்ரிட்மெண்ட் தொடங்க நாங்க என்ன பண்ணனும் எவ்வளவு பணம் கட்டனும் சொல்லுங்க நாங்க கட்றோம்என்று கூறினாள்..

டாக்டர் சந்தியாவிடம் நாங்க ட்ரிட்மெண்ட் ஸ்டார்ட் பண்றோம். இது ஆக்ஸிடென்ட் கேசஸ் நீங்க ப்ர்ஸ்ட் போலிஸ்க்கு தகவல் கொடுங்க அவங்க வந்து அந்த பொண்ணு யாருனு கண்டுபிடிப்பாங்க ஏன்னா அந்த பொண்ணு ரொம்ப சிரியசா இருக்கு அவங்க சொந்தக்காரங்க யாராவது வந்து சைன் பண்ணுனா தான் நாங்க ஆப்ரேஷன் பண்ண முடியும் என்று கூறினார்.. சஞ்சய், டாக்டர் ஆப்ரேஷன் பண்ணுனா அந்த பொண்ணை காப்பத்திடலாமா பிரச்சினை ஒன்னும் இல்லையே, அதை கன்பார்மா சொல்ல முடியாது மிஸ்டர் நீங்க முதலில் போலிஸ்க்கு சொல்லுங்க என்று விட்டு அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்தார்.

டாக்டர் உள்ளே சென்றதும் அருகில் இருந்த சேரில் கவலையாக அமர்ந்தாள் சந்தியா.. போலிஸ்க்கு தகவல் சொல்லி விட்டு அவளின் அருகில் அமர்ந்த சஞ்சய் அவளின் கைபிடித்து சந்தியா ஒன்னும் இல்ல அந்த பொண்ணு   பிழைத்து கொள்ளும் என்று கூறினான்.. அவனின் தோள் சாய்ந்த சந்தியா, அந்த பொண்ணு வயசு 21க்குள்ள தான் இருக்கும் ஆனா கழுத்தில் தாலி இருந்தது.. அவளுக்கும் அவ புருஷனுக்கும் ஏதாவது சண்டையா இருக்குமா, அதனால் தான் அவ இந்த நைட்டு நேரத்தில் தனியா வெளிய வந்தாளா, அவளை தேடாமா அவளுடைய புருஷன் எங்க போனான். இல்ல வேற ஏதாவது பிரச்சினையா இருக்குமா, அந்த பொண்ணு யார்? அவ பெயர் என்னவா இருக்கும்…

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சென்னையின் பிரபலமான கல்லூரி ஒன்று அதில் ஒரு விழா நடைப்பெற்று கொண்டு இருந்தது.. விழா மேடையில்  ஆசிரியர் ஒருவர் வந்து மைக்கின் முன்பு நின்று கடந்த ஆண்டின் சிறந்த மாணவி இந்த பரிசை வாங்க போகும் மாணவி என்று அவர் பெயர் சொல்லும் முன்பு கீழே கூட்டத்தில் அமர்ந்து இருந்த சில மாணவர்கள் கீர்த்து கீர்த்து கீர்த்து என்று கத்த துவங்கினர்..

சரியா சொன்னீர்கள் இந்த பரிசை வாங்க போகும் மாணவி கீர்த்தனா மேடைக்கு வரவும் என்று சொன்னார். அங்கு இருந்த மாணவர்கள் அனைவரும் கைதட்ட மேடைக்கு வந்தாள் கீர்த்தனா.. இந்த பரிசை வழங்குமாறு நமது சிறப்பு விருந்தினரான நமது கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போதைய தமிழகத்தின் முன்னணி தொழில் அதிபருமான ரகுநந்தன் அவர்களை அழைக்கிறேன் என்று மைக்கில் கல்லூரியின் முதல்வர் அழைத்தார்..

அந்த பரிசை வாங்கும் போது தான் தனது வாழ்வையே புரட்டி போட்டு தன்னுடைய தற்போதைய நிலைக்கு காரணமான தனது கணவன் ரகுநந்தனை முதன் முதலாக பார்த்தாள் கீர்த்தனா..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!