லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 25

4
(4)

லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 25

“அம்மாடி.. கடைய மூடணும்மா.. எந்த பூவை வாங்க போறீங்கன்னு தயவு செஞ்சு ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வாங்க..  உங்க ரெண்டு பேரோட மாத்தி மாத்தி பேசி பேசி எனக்கு வாய் வலியே வந்துருச்சு..” புலம்பி தள்ளினார் அந்த பூக்கடைக்காரர்..

இந்தரும் மலரழகியும் அவரைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை..

“நான் தான் சொல்றேன் இல்ல..? ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரோஸ் வாங்குனா தான் நல்லா இருக்கும்.. ரெட் ரோஸ் தான் எல்லாரும் வாங்கி டெக்கரேட் பண்ணுவாங்க.. நான் சொல்றதை கேளுடா..”

“உனக்கு ஒண்ணுமே தெரியலடி.. இப்பல்லாம் ரெட் ரோஸோட அதிகமா வேற கலர் ஃபிளவர்ஸ் யூஸ் பண்றாங்க..  லைட் பர்ப்பிள்  அப்புறம் பிங்க் கலர் ரோஸஸ் இதெல்லாம் யூஸ் பண்ணா கண்ணுக்கு மைல்டா இதமா இருக்கும்.. நீ என்னடான்னா நல்ல ப்ரைட்டா ரெட் கலர்ல.. எல்லோ கலர்ல.. எல்லாம் பூ வாங்கலாம்னு சொல்றே.. கொஞ்சமாவது அறிவு இருக்கா டி உனக்கு.. நீயும் உன் டேஸ்ட்டும்..”

“ஏய்.. என் பேரே மலரழகி.. எனக்கு பூ எப்படி வாங்கணும்னு நீ சொல்லி குடுக்கறியா?”

“அது தான்டி எனக்கும் ஆச்சரியமா இருக்கு.. உனக்கு போய் மலரழகின்னு இப்படி ஒரு மென்மையான பேரை எப்படி வச்சாஙகன்னு.. அதுக்கு ஆப்போசிட்டா பாராங்கல்லழகி இல்லனா மொரட்டு அழகினு உனக்கு பேர் வச்சு இருக்கணும்.. பூங்கறது எவ்வளவு சாஃப்டான விஷயம்.. போயும் போயும் உன்னை மாதிரி ஒரு ஆளுக்கு அந்த பேரை வச்சிருக்காங்க பாரு.. அந்த பேரை உனக்கு வச்சவங்களுக்கு அப்ப ஏதாவது மூளை குழம்பி இருக்கணும்னு நினைக்கிறேன்.. ஏதாவது ஒரு விஷயம் நீ சாஃப்டா அந்த மாதிரி டீல் பண்ணி இருக்கியா? எப்பவும் அதிரடியா தான் எதையும் பண்ற? உன் பேருக்கு ஏத்த மாதிரி ஏதாவது ஒரு மூலையிலாவது மென்மை நளினம் இப்படி ஏதாவது ஒண்ணு உங்கிட்ட இருக்கா..? எங்க அண்ணன் கிட்ட நீ அவரை லவ் பண்றேன்னு சொல்லும் போது கூட உன் முகத்தில ஒரு சின்ன வெட்கம் தயக்கம்னு எதோட ரேகை கூட கிடையாது.. ஏதோ கடையில போய் ஐஸ்க்ரீம் வாங்கும்போது எனக்கு இந்த பிளேவர் தான் புடிச்சிருக்குன்னு சொல்லி வாங்கிக்கிற மாதிரி தானே எங்க அண்ணனையும் புடிச்சி இருக்குன்னு சொன்னே.. நான் நினைக்கிறேன்.. கடவுள் முதல்ல உன்னை ஆம்பளையா படைக்கணும்னு தான் நினைச்சு இருப்பாரு.. நமக்கெல்லாம் டைப்போ எரர் வர மாதிரி அவருக்கும் உன்னை படைக்கும் போது ஏதோ டைப்போ எரர் வந்திருச்சுன்னு நினைக்கிறேன்..”

அவன் சொன்னதைக் கேட்டு அவனை தீவிரமாய் முறைத்த மலர் “டேய் ரொம்ப பேசுற டா நீ.. இதுக்கெல்லாம் நீ ரொம்ப வருத்தப்படுவ..”

இருவரும் இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருக்க அந்த கடையின் பூ வியாபாரியோ தலையை பிடித்துக் கொண்டு அப்படியே தன் இருப்பிடத்திலேயே அமர்ந்துவிட்டார்..

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாரோ தெரியவில்லை எவ்வளவு நேரம் ஆகியும் இவர்கள் சண்டை முடியாது  தொடர பொறுமை இழந்தவர் அவர்கள் இருவர் அருகே வந்து  “இப்ப என்ன..? பேசாம கடையை உங்க கிட்டயே கொடுத்துட்டு போயிடவா? நீங்களே ஒரு வழியா முடிவு செஞ்சு பூவை எடுத்துட்டு மூடிட்டு போயிடுறீங்களா?” என்று கேட்டவர் வேகவேகமாய் ஒரு கூடை இந்தர் சொன்ன பூக்களையும் ஒரு கூடை மலர் சொன்ன பூக்களையும் கொண்டு வந்து கடைக்கு வெளியே வைத்துவிட்டு கடையின் கதவை மூடி பூட்டிவிட்டு அவர்கள் பக்கம் திரும்பினார்..

“தம்பி.. எனக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சு.. இதுக்கு மேல லேட்டா போனா என் பொண்டாட்டி என்னை வீட்டுக்குள்ள சேர்க்க மாட்டா.. நீ நம்ப தீராவோட தம்பி தானே..? நீ இந்த ரெண்டு பூக்கூடையையும் எடுத்துட்டு போ..  ரெண்டு பூக்கூடைக்கும் நாளை காலைல நான் வீட்டுக்கு வந்து பணத்தை வாங்கிக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பி விட்டார் அவர்..

மலரழகியும் இந்தரும் ஒருவரை ஒருவர் முறைத்த படி அவர் வைத்திருந்த கூடையில் அவரவருக்கு பிடித்த மலர்கள் அடங்கிய கூடையை எடுத்துக் கொண்டு காரை நோக்கி நடந்தார்கள்..

காரின் பின் இருக்கையில் அந்த பூ கூடைகளை வைத்துவிட்டு முன் இருக்கையில் மலர்  ஏறி அமர அவளை முறைத்த படி வண்டி ஏறி வீட்டுக்கு ஓட்டி சென்றான் இந்தர்..

இரண்டு  பேரும் வீட்டுக்குள் வந்தவர்கள் இரண்டு கூடைகளையும் எடுத்துக்கொண்டு மாடியிலே இருந்த தீரனின் அறைக்கு சென்று அங்கே ஒரு மேஜையில் இரண்டு கூடைகளையும் எதிர் எதிர் புறமாய் வைத்தார்கள்..

அங்கே வந்ததும் கட்டிலில் பூவை எப்படி நிறைக்க வேண்டும் என்பதில் மறுபடியும் இருவருக்கும் பிரச்சனை தொடங்கியது..

(அடங்கொக்கமக்கா நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டு முடிக்கிறதுக்குள்ள விடிஞ்சிடும் போலயே.. அப்புறம் எங்கடா தீரனுக்கும் மதிக்கும் ஃபர்ஸ்ட் நைட்டு நடக்கறது..?)

இந்தர் கட்டிலில் அவர்கள் இருவரின் பெயரையும் பூக்களாலேயே எழுத வேண்டும் என்று சொல்ல மலர் அழகியோ கட்டிலில் பூக்களால் இருதயம்  வரைந்து அம்புக்குறி போட வேண்டும் என்று சொல்ல பத்து நிமிட வாக்குவாதத்திற்கு பிறகு ஒரு வழியாக இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள்..

இருவரின் பெயரையும் மேலும் கீழுமாய் பூக்களால் எழுதி அதற்கு நடுவில் இருதயத்தில் அம்புக்குறி போல பூக்களால் வரைந்து விடலாம் என்று முடிவுக்கு வந்து அப்படியே செய்து கொண்டு இருந்தார்கள்..

பூக்களை அடுக்கும்போது எதேச்சையாக இருவர் கையும் மற்றவர் மேல் பட ஒருவரை ஒருவர் முறைத்தபடியே ஒரு வழியாக கட்டிலை அழகாக அலங்கரித்து முடித்து இருந்தார்கள் இருவரும்..

இந்தர் தேர்வு செய்த வெளிர் நிற பூக்களும் மலரழகி தேர்வு செய்த அடர் நிற பூக்களும் மாறி மாறி வரிசையாய் மாலையாய் பின்னலாய் என விதவிதமாய் அடுக்கப்பட்டு அலங்கரித்து இருக்க அந்த பூக்களின் அலங்காரம் அந்த கட்டிலையும் அந்த அறையையுமே ஏதோ இயற்கை எழில் கொஞ்சும் கனவு லோகம் போல் காட்சி அளிக்க வைத்தது..

இருவருக்கும் அறையைப் பார்த்து திருப்தி ஏற்பட ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டவர்கள் கண்கள் ஒரு நொடி அடுத்தவரை மெச்சினாலும் அடுத்த நொடியே அவர்களின் இறுமாப்பு அதை தொடர்ந்து செய்ய விடாமல் புருவம் உயர்த்தி எகத்தாளமாய் பார்க்க வைத்தது..

இருவரும் முகத்தை வெட்டியபடி அறையை விட்டு வெளியேறி சென்று இருந்தார்கள்..

தீரன் அறைக்கு ஏற்கனவே சென்று இருக்க மதியிடம் பால் சொம்பை கொடுத்து அழைத்துக் கொண்டு போய் அறை வாசலில் விட்டு வந்திருந்தார் தீரனின் அத்தை..

அறை கதவை மெல்ல திறந்து உள்ளே சென்ற மதி அங்கே தீரன் கட்டிலில் கைகட்டி தலையணையில் சாய்ந்து அமர்ந்திருக்க அவனை கவனிக்காது அந்த கட்டிலிலும் அறையிலும் செய்திருந்த அலங்காரத்தையே பிரமிப்போடு பார்த்திருந்தாள்.. அந்த அறையே அவளுக்கு தேவலோகமாய் காட்சி அளித்தது..

“வா.. மதி.. உள்ள வா..” என்று தீரன் அவளை அழைக்கவும் தான் அவள் அவன் புறம் திரும்பினாள்..

“என்ன அப்படி பார்க்கிற.. ஓ… இந்த அலங்காரம்லாம் பார்த்தப்போ எனக்கும் ஆச்சரியமா தான் இருந்தது.. வீட்ல அத்தை வயசானவங்க.. அவங்களை தவிர வீட்ல இந்தரும் மலரும் தான் இருக்காங்க.. இந்த அலங்காரம் எல்லாம் யார் பண்ணாங்கன்னு தெரியல.. அவங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் தான் பண்ணி இருக்கணும்.. நானும் உள்ள வரும்போது இந்த அலங்காரத்தை பார்த்துட்டு அப்படியே மெர்சல்..” என்றவன் நாக்கை கடித்துக் கொண்டு “சாரி.. தவறி போய் பழைய பாஷை வந்திடுச்சு.. இந்த அலங்காரத்தை பார்ந்து அப்படியே ஆச்சரியப்பட்டு போயிட்டேன்.. அதை தான் அப்படி சொன்னேன்” தன்னை தானே திருத்திக் கொண்டான் தீரன்..

“ஐயோ.. இங்க பாருங்க தீரா.. நீங்க பேசும்போது தப்பி தவறி அந்த மாதிரி பேசிட்டீங்கன்னா பரவாயில்லை.. அதுக்காக ஃபீல் பண்ண வேண்டாம்.. நீங்க பேசறதை மாத்தவும் வேணாம்.. இட்ஸ் ஓகே.. நீங்க எப்பவும் கன்டினியூசா அந்த மாதிரி பேசும் போது தான் எனக்கு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு.. ஒன்னு ரெண்டு வார்த்தை நடுவுல அந்த மாதிரி வந்துச்சுன்னா பரவால்ல.. எனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்ல”

அவள் சொன்னதை கேட்டவன் மனதார புன்னகைத்து “ரொம்ப தேங்க்ஸ் மதி.. ஆனா ரொம்ப நாளா என் தம்பி கூட சொல்லிக்கிட்டு இருக்கான் இந்த பாஷையை மாத்திக்க சொல்லி.. அவன் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கூட எல்லாம் பேசும் போது கொஞ்சம் கஷ்டமா இருக்குன்னு சொல்லி இருக்கான்.. அவன் தப்பா நினைக்கலனாலும் அவன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கொஞ்சம் கிண்டல் பண்றாங்க போல இருக்கு.. அதனால இவனுக்கு கோவம் வந்துருது.. என் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கான்.. என்னை யாரு தப்பா பேசினாலும் பொறுத்துக்க மாட்டான்.. ஸ்டன்ட் மாஸ்டர் தம்பி வேற இல்லையா? உடனே அடிதடின்னூ இறங்கிடறான்.. அதனால நானே என் பாஷையை மாத்திக்கணும்னு தான் நினைச்சேன்.. இப்போ நீங்களும் சொல்லவும் இதுதான் வாய்ப்புன்னு மாத்திக்கிட்டேன்..”

“சரி.. எவ்வளவு நேரம் தான் அங்கேயே நின்னுக்கிட்டு இருப்பீங்க? உள்ள வாங்க..”

அவளும் மெல்ல மெல்ல உள்ளே நகர்ந்து சென்று மேஜையில் பாலை வைத்துவிட்டு அதன் பக்கத்தில் ஏன் நின்று கொண்டாள்..

“ப்ளீஸ் உட்காருங்க மதி.. நான் என்ன ஸ்கூல் மாஸ்டரா? வெறும் ஸ்டன்ட் மாஸ்டர் தான்.. எனக்கு எல்லாம் இவ்வளவு மரியாதை குடுக்க தேவலை.. உட்காருங்க மதி..” என்க மதியும் அவனுக்கு எதிர்ப்புறமாய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

கட்டிலின் ஒரு பக்கத்தில் அவனும் இன்னொரு பக்கத்தில் அவளும் அமர்ந்திருக்க அவன் மேலே பேச்சை ஆரம்பித்தான்..

“இங்க பாருங்க மதி.. நமக்குள்ள இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப்ல நான் எப்பவுமே எல்லை தாண்ட மாட்டேன்.. இந்த ரூம்ல நம்ம ரெண்டு பேரும் எதுவரைக்கும் ஒண்ணா இருக்கமோ அது வரைக்கும் ஃப்ரெண்ட்ஸா மட்டும் தான் இருப்போம்.. அதனால கவலைப்படாம நிம்மதியா தூங்குங்க.. நான் இந்த தலகாணி போர்வையை எடுத்துக்கினு என்றவன் தொண்டையை செருமி “ம்க்கும்.. சாரி.. எடுத்துக்கிட்டு கீழே படுத்துக்கிறேன்..” என்று சொன்னவன் தலையணையையும் போர்வையையும் எடுத்துக்கொண்டு தரையில் விரித்து படுத்த அடுத்த நொடி நிம்மதியாக உறங்கி இருந்தான்.. அவனின் நிம்மதியான உறக்கத்தை அவன் சீரான மூச்சு பறை சாற்றிக் கொண்டிருந்தது..

அவளும் குளியலறை சென்று உடைமாற்றி வரலாம் என்று எழுந்தவள் அப்போதுதான் தன் உடைகள் அடங்கிய பையை அந்த அறைக்கு கொண்டு வரவே இல்லை என்று நினைவு கொண்டாள்..

மெதுவாக நகர்ந்து போய் சத்தம் எழுப்பாமல் கதவில் மெல்ல தாழ்ப்பாளை நீக்கி வெளியே போனவள் அங்கே ஏதோ சந்தை கடை போல் சலசலவென  கீழே வரவேற்பறையில் சத்தம் கேட்க கீழே எட்டிப் பார்த்தாள்.. அங்கே இந்தரும் மலரழகியும் ஏதோ தீவிரமாய் வாய் சண்டை போட்டுக் கொண்டிருக்க பதட்டமாக கீழே இறங்கி ஓடினாள் மதி..

மனசுக்குள்

ஒரு புயல் மையம்

கொண்டதே

அதன்

பெயர்தான் என்ன..?

புயலுக்கு காதல் என்று

பேர் சொல்கின்றாய்

அடுத்த

நிலைதான் என்ன..?

இந்தப் புயல்

இன்று கரை கடந்தால்

இன்னும் என்னென்ன

ஆகும்..?

என்னென்ன ஆகும்..?

பூகம்பம் நேரும்.. பூவில்

பூகம்பம் நேரும்..

மூச்சு விடவும் மறந்துவிட்டேன்

எனக்கென்று பெயரில்லை

அன்பே
என் உடலில்லை

இங்கே
என் உயிரில்லை

உயிரே
என்ன புதுமை அட

தூக்கம் என் இடக் கண்ணில்

கனா என் வலக் கண்ணில்

நிஜமா..?

மூங்கிலுக்குள்

நுழைகின்ற காற்று

முக்தி பெற்று திரும்புதல்

போல உன் மடியில்

சொல்லாய் விழுந்தவன்

கவியாய் முளைத்தேன்

உன் பொன் மடி வாழ்க

மேற்கில்

போன பறவை ஒன்று

மே மாதத்தில் எனக்கொரு

கன்னிப் பெண் வருமென்று

காதில் பண் பாடிவிட்டுச்

சென்றது

என்ன வியப்பு

அந்தப் பாடல்

பண் தேயும்

முன்னே

கண்ணே என்

கண்கள் உன்னைக்

கண்டது

பருவத்திலே ஒரு

முறை பூத்தேன்

பார்த்ததிலே

மறுமுறை பூத்தேன்

உன் மார்பின்
மையத்தில் எனக்கொரு

குடிசை போட்டு நான்

வாழ்ந்திட வேண்டும்..

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!