லவ்.. லவ்.. எத்தனை வயது..!! – 27
மதியினுடைய அசைவுகளின் அரவம் கேட்டு லேசாக கண் விழித்து பார்த்த தீரன் அவள் அமர்ந்திருந்த விதத்தை கண்டு “எழுந்துட்டீங்களா மதி..?” என்றவனை அவள் முறைக்கவும் அப்போதுதான் என்ன கேட்டோம் என்பதை உணர்ந்து சட்டென ஒருமைக்கு மாறினான்..
“சாரி சாரி.. என்ன நீ..? இவ்வளவு சீக்கிரம் எழும்பிட்டே..?”
“நான் எப்பவும் நாலு மணிக்கு எழுந்திருவேன்.. இன்னிக்கும் அதே மாதிரி நாலு மணிக்கு எல்லாம் முழிப்பு தட்டிருச்சு.. எல்லாருக்கும் காலைல சமைச்சு கொடுத்துட்டு அப்புறம் காலேஜ் கிளம்பனும் இல்ல? அதான் சீக்கிரம் எழும்பிடுவேன்..”
அவள் சொன்னது அவனுக்கும் புரிந்தது.. தன்னையும் தன் தம்பியையும் போல அவர்கள் சென்ற இடத்தில் எதையாவது சாப்பிட்டு ஏனோதானோ என்று வாழ்பவர்கள் கிடையாது என்பது அவனுக்கு தெரியும் தானே?..
“சரி.. போய் குளிச்சிட்டு கிளம்புறது தானே? எதுக்கு இப்படி உக்காந்து இருக்கே? அப்புறம் உனக்கு நேரம் ஆகிட போகுது..”
அவன் அக்கறையோடு கேட்க “அது.. ஷெல்ஃபை திறந்து டிரஸ் எடுக்கணும்.. நீங்க அதுக்கு கீழ படுத்திட்டு இருந்தீங்க.. அதான் உங்களை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு..”
அவள் சொன்ன பிறகு தான் அவன் உறக்கத்திலிருந்து எழுவதற்காக அவள் காத்திருக்கிறாள் என்பதே அவனுக்கு புரிந்தது..
“ஓஹ்.. சாரி மதி..” என்று சொல்லி வேகமாக எழுந்து தன் படுக்கையை சுருட்டி மூலையில் வைத்தவன் “நீ டிரஸ் எடுத்துட்டு குளிக்க போ.. நான் கீழ இருக்கிற காமன் பாத்ரூம்ல குளிச்சுக்குறேன்” என்றான்..
தலையாட்டி “தேங்க்யூ..” என்றவள் தன்னுடைய உடையை எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்..
குளித்துவிட்டு வெளியே வந்தவள் நேர்த்தியாய் எப்போதும் போல புடவை உடுத்திக் கொண்டு காலையில் வேலை செய்வதற்கு ஏதுவாக தலையை தூக்கி முடித்துக் கொண்டு கீழே வர அங்கே சமையல் அறையில் யாரோ ஏதோ செய்து கொண்டிருக்கும் சத்தம் கேட்கவும் அதன் உள்ளே சென்று எட்டி பார்த்தாள்..
அங்கே தீரன் ஏற்கனவே இருவருக்கும் காபி போடும் வேலையில் இறங்கி இருந்தான்..
“ஐயோ.. நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க? நீங்க தள்ளுங்க.. நான் காஃபி கலக்குறேன்..”
தன் புடவை முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு உள்ளே வந்தவளை பார்த்தவன் “கவலைப்படாத.. இந்த வேலை எல்லாம் எனக்கும் பழக்கம் தான்.. என் தம்பிக்கு இத்தனை நாளா நான் தான் லீவு நாள்ல சமைச்சு கொடுத்துட்டு இருக்கேன்.. ஒரு அளவுக்கு சமைக்க தெரியும்.. இனிமே நீ தனியா இதை எல்லாம் பண்ண வேண்டாம்.. நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.. ரெண்டு பேரும் சேர்ந்து சமையல் வேலையை பார்க்கலாம்..”
அவன் சொன்னதை கேட்டவளுக்கு எவ்வளவு அற்புதமான மனிதன் அவன் என்று தோன்றியது.. எத்தனை பேர் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவ வேண்டும் என்று நினைப்பார்கள்.. ஏன் இவ்வளவு பாசமா இருக்கும் அவள் தந்தை கூட சமையல் வேலையில் உதவி ல்லாம் செய்யமாட்டாரே..
அவனுக்குள் இப்படி ஒரு அழகான புரிதல் நிறைந்த ஆண்மகனை கண்டவள் அவனை திருமணம் செய்து கொண்டதற்காக அந்நேரம் உள்ளுக்குள் ஆனந்தப்பட்டாள்..
ஆனால் அடுத்த கணமே அவள் எண்ணம் வேறுவிதமாய் பயணித்து அவளுக்கு வேதனையை கொடுத்திருந்தது..
இது ஒன்றும் நிஜமான திருமணம் இல்லையே.. தம்பி தங்கைக்காக செய்து கொண்ட ஒரு நாடகத் திருமணம் தானே.. அவர்கள் வாழ்க்கை சரியான பாதையில் சென்றவுடன் இந்த திருமணத்திலிருந்து இருவருமே விடுபட்டு விடுவோமே..
அந்த நினைவு அவளுக்குள் பெரு வலியை தந்தது.. ஆனால் அடுத்த நொடியே திருமண பத்தம் இல்லை ஆயினும்.. அவனுக்கு மனைவியாக அவளால் வாழ்நாள் முழுதும் இருக்க முடியவில்லை எனினும்.. அவனுடைய தோழியாய் இருக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததையே தன் வாழ்வின் சிறந்த பொக்கிஷ நிகழ்வாய் தன் மனதில் வைத்து கொண்டாட தொடங்கினாள் அவள்..
அப்படியே யோசனையில் இருந்தவள் முன் காபி கோப்பையை கொண்டு வந்து நீட்டி “காஃபி எடுத்துக்கோ மதி.. வா.. ரெண்டு பேரும் அங்க டேபிள்ல உட்கார்ந்து கொஞ்சம் நிதானமா மஜாவா காபி குட்ச்சிட்டு அதுக்கு அப்புறம் வேலை பண்ணலாம்..”
அவன் என்னதான் மதிக்காக மிகவும் சிரமப்பட்டு சென்னை பாஷையின் சாயல் தன் பேச்சில் வராமல் பார்த்துக் கொண்டாலும் எப்போதாவது அவன் பேச்சில் அதை எட்டிப் பார்ப்பது உணர்ந்தவள் ஒரு சின்ன புன்னகையோடு தன் கையில் இருந்த காபியை குடித்துக்கொண்டிருந்தாள்..
அவன் தனக்காக எவ்வளவு மெனக்கெடுக்கிறான் என்று அவளுக்கு புரிந்து தான் இருந்தது.. அவனுக்கு இப்படி ஒரு சிரமத்தை கொடுப்பதற்கு காரணமாய் தன் தங்கை இருந்து விட்டாளே என்று ஒரு சிறு வருத்தமும் முதலில் இருந்தது அவளுள்..
இப்போதும் சில நேரங்களில் அவனை இயல்பாக சென்னை தமிழிலேயே பேச சொல்லி விடலாமா என்று அவள் யோசித்தது உண்டு.. ஆனால் ஒவ்வொரு நாளும் அவனோடு நேரம் செலவிட செலவிட அவள் எண்ணத்தில் பெரிய மாற்றமே வந்திருந்தது.. இப்போதெல்லாம் தங்கை மீது பெரிய அளவில் கோவம் கூட இல்லை அவளுக்கு..
அவள் இப்படி ஒரு ஏடாகூட வேலையை செய்ய போக தானே தீரன் போன்ற ஒரு அழகான அற்புதமான மனிதனோடு பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது.. அந்த எண்ணமே விட்டால் மலரழகி செய்த அறியா தவறுக்காக அவளிடம் நன்றி சொல்லிவிடும் அளவுக்கு அவள் மனதை தலைகீழாய் மாற்றி இருந்தது..
தான் எந்த மாதிரி கணவனை அடைய வேண்டும் என கனவும் கற்பனையும் கண்டு வைத்திருந்தாளோ.. படிப்பு வேலை இதை தவிர மற்ற விஷயங்களில் கிட்டத்தட்ட தீரன் அவளுக்கான கணவனின் இலக்கணத்தை முழுமையாக பெற்றிருந்தான்..
கொஞ்சம் கொஞ்சமாக அவனை.. தன்னையும் அறியாமல் தன் கணவன் என்ற நிலையில் வைத்து ரசிக்க தொடங்கியிருந்தாள் அவள்.. இப்போது அவன் சென்னை பாஷையில் பேசினாலும் அவன் மீது அவளுக்கு பூத்திருந்த நேசம் ஒன்றும் அழிந்து விட போவதில்லை..
அவள் அவன் மனதின் அழகை பார்க்கத் தொடங்கியிருந்தாள்.. அவன் பேசும் விதமோ அவன் முகமோ அவன் உடையோ அவனுக்கான அவளுடைய அன்பின் அளவை இனிமேல் தீர்மானிக்க போவதில்லை..
ஆனாலும் இப்போது “எனக்காக கொஞ்சம் கஷ்டப்பட்டு நல்ல தமிழ்ல பேசட்டுமே.. இப்படி பேசினா எல்லாருக்கும் பிடிக்குது தானே.. அதனால எனக்காக மாத்திக்கிட்டாரோ எதுக்காக மாத்திக்கிட்டாரோ அவர் இப்படியே பேசி பழகட்டும்.. இந்தருக்கும் இவர் சென்னை பாஷைல பேசறது கஷ்டமா தான் இருக்குன்னு அவரே சொன்னாரே.. அதனால இவரு இப்படி பேசுறது அவர் வாழ்க்கைக்கும் நல்லது தான்..” என்று அவனிடம் ஒரு மனைவிக்கான உரிமையோடு அவன் மாறுதலை அவசியமானதாக பார்த்திருந்தாள்..
ஒரு கணவனாக தனக்காக அவன் இதை செய்துதான் ஆக வேண்டும் என்ற மனநிலையில் அவள்.. அவனும் இதே மனநிலையில் தான் இருந்தான்.. அவள் தன்னுடைய மனைவி.. அவள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்ற எண்ணமே அவனையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தது..
ஆனால் இருவருமே மேலோட்டமாக நடித்து கொண்டு இருந்ததாய் தான் நினைத்துக் கொண்டு இருந்தார்கள்..
திருமணம் என்ற பந்தம் அவர்களை ஒரே நேர் கோட்டில் இணைத்து விட்டிருந்த இந்த ஒரே நாளில் அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த இந்த மாற்றங்கள் அவர்கள் இருவருக்குமே வியப்பை தான் தந்தது..
இந்த உறவு என்றும் தொடர வேண்டும் என்ற வேட்கை இருவருங்குள்ளும் இருந்தாலும் அதை மற்றவரிடம் வெளிப்படையாக சொல்ல விடாமல் ஏதோ ஒன்று தடுத்தது.. தன் மனத்தின் உணர்வுகளை சொல்ல போய் அது மற்றவரை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கி விடுமோ என்று இருவருமே தங்கள் மனதில் இருந்த காதலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள தயங்கினார்கள் என்பதே உண்மை..
ஆனால் அது அத்தனையுமே இக்கணம் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அக்கறை என்ற உருவில் வெளிப்பட்டது..
காஃபியை மெல்ல பருகியவள் “ம்ம்.. காஃபி சூப்பரா இருக்கு..”
அவள் சொன்னதும் அழகாய் புன்னகைத்தவன் “தேங்க்ஸ் மதி.. உன் வாய்லருந்து இதை கேக்கறதுக்கு ரொம்ப மஜாவா தான் இருக்குது..” என்றான்..
“சரி.. தினமும் நான் எங்க வீட்டு வாசல்ல விடிய காலைலயே கோலம் போடுவேன்.. இங்கே எப்படி.. யாராவது வந்து போடுவாங்களா?”
“இல்லை மதி.. காலையில இங்கே யாரும் வர மாட்டாங்க.. மதியமா ஒரு அக்கா வந்து வீட்டு வேலை எல்லாம் செஞ்சுட்டு போவாங்க.. அப்ப வெளில சில நாள் சின்னதா கோலம் போட்டுட்டு போவாங்க.. நாங்க ரெண்டு பேருமே வெளியில போயிடுவோங்கறதனால அவங்க கிட்ட ஒரு வீட்டு சாவியை கொடுத்து வச்சிருக்கோம்.. அவங்க உள்ள வந்து வேலையை முடிச்சிட்டு வீட்டை பூட்டிட்டு போயிருவாங்க..”
“அப்படின்னா தினமும் சாப்பாடு நீங்க தான்..”
“இல்ல இல்ல.. தினமும் சாப்பாடு எங்க ரெண்டு பேருக்கும் வெளில தான்.. எங்கம்மா எங்களை விட்டு போனதிலருந்து வெளியில தான்.. லீவு நாள்ல மட்டும் நான் இந்தரோட வீட்ல இருந்து அவனுக்கு சமைச்சு கொடுத்து முழு நாளும் அவனோட தான் செலவழிப்பேன்.. அஞ்சு நாள் அவனை கவனிக்காததுக்கு சேர்த்து வெச்சு அன்னிக்கு கவனிப்பேன்.. இல்லனா நான் ஏதோ ஒரு அண்ணனா செய்ய வேண்டிய கடமையை செய்யாத மாதிரி ஒரு ஃபீல்..”
“நீங்க ரொம்ப வித்தியாசமானவரா இருக்கீங்க.. ஒரு வயசுக்கு மேல தம்பி தங்கை எல்லாம் எக்கேடோ கெட்டு போகட்டும்ன்னு நினைக்கிறவங்க மத்தியில உங்க வாழ்க்கையையே உங்க தம்பிக்காக தான்னு வாழ்ந்துகிட்டு இருக்கீங்களே.. ரொம்ப கிரேட் தான் நீங்க..”
அவள் சொன்னதை கேட்டவன் சிரித்து “இதை சொல்றவங்க யாரு? தன் தங்கைக்காகவும் அப்பாக்காகவும் 24 மணி நேரமும் நேரம் காலம் பார்க்காம உழைக்கற நீ என்னை க்ரேட்னு சொல்றியா..? நீ செய்யறதை பார்க்கும்போது நான் செய்யறது எல்லாம் ஒண்ணுமே இல்ல..”
“சரி சரி..போதும் போதும்.. ரொம்ப ஓட்டாதீங்க என்னை.. நீங்க என்னை கலாய்க்கிறீங்கன்னு தெரியுது..”
அவள் பேசியதும் அவளை கூர்ந்து பார்த்து என்ன ப்ரொஃபசர் மேடம்.. கலாய்க்கிறீங்க அப்படி இப்படின்னு உன் வாயில சென்னை பாஷை எல்லாம் வருது..?”
அவன் கிண்டலாய் கேட்க “இப்போ இந்த வார்த்தை எல்லாம் சாதா பாஷையிலே கலந்துட்டது.. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாருமே உங்க ஃபேவரிட் சென்னை பாஷையில பேசினா கூட ஆச்சரியப்படுத்தறதுக்கில்ல..”
“ம்ம்.. அதுவும் சரிதான்..”
“சரி நான் அப்போ வெளியில் போய் கோலம் போடுறேன்.. கோலமாவு எங்க இருக்கு..?”
“அந்த அக்கா அங்க தான் வெரான்டால வெச்சி இருப்பாங்க.. வா.. நான் எடுத்து தரேன்..”
அவன் சொன்னதும் வேகமாக கீழே இருந்த குளியல் அறைக்கு சென்று ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி அதை தூக்கிக் கொண்டு அவள் வர அவன் வந்து அந்த தண்ணீர் வாளியை தன் கையில் வாங்கிக் கொண்டான்..
“நீ போ நான் தூக்கிட்டு வரேன்”
அவளோடு வாளியை தூக்கிக் கொண்டு வந்தவன் வெளியே எட்டி பார்க்க இன்னும் இருள் விலகாமல் முழுதுமாய் விடியாமல் இருக்க “மதி இன்னும் வெளிச்சம் வரல.. கொஞ்ச நேரம் கழிச்சு விடிஞ்சப்பறம் கோலம் போட்டுக்கலாம்..”
“இல்லை தீரா.. எங்க வீட்டில் விடியற்காலைல கோலம் போட்டு பழக்கம் தான் எனக்கு.. இப்பவே போட்டுடறேனே.. அப்புறம் ரொம்ப நேரம் ஆயிடும்..”
அவள் சொன்னதை கேட்டவன் “சரி போடு..” என்று அவளிடம் தண்ணீர் வாளி விளக்குமாறு இரண்டையும் கொடுத்து கோலமாவையாமம் எடுத்து கொடுத்துவிட்டு அங்கேயே படியில் அமர்ந்து கொண்டான்..
“நீங்க உள்ள போங்க தீரா.. நான் கோலம் போட்டுட்டு வரேன்..”
“இல்ல.. இவ்ளோ இருட்டுல தனியா கோலம் போடறது அவ்ளோ சேஃப்டி இல்லை மதி.. நான் இங்கேயே உட்காந்துக்குறேன்.. நீ கோலம் போட்டுட்டு வா.. ரெண்டு பேரும் உள்ள போலாம்..” அவன் அக்கறையில் கொஞ்சம் திக்கு முக்காடி போனாள் அவள்..
ஒரு இரண்டு நொடி அவனையே பார்த்து நின்றவளை பார்த்து “என்ன மதி? கோலம் போட்டுட்டு வா” என்று அவன் சொல்லவும் அவளும் வேலையில் இறங்கினாள்..
அழகாய் தெருவடைத்து அவள் போட்ட கோலத்தை பார்த்து “சூப்பர் மதி.. கோலம் ரொம்ப அழகா இருக்கு.. அது சரி.. நீ எது செஞ்சாலும் உன்னை மாதிரியே அதுவும் அழகா தான் இருக்கும் போல..” அவன் சாதாரணமாக சொல்லிவிட அவளுக்கோ அதைக் கேட்டு உள்ளுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெட்டியது..
எத்தனையோ பேர் அவளை அழகாக இருக்கிறாள் என்று சொல்லி அவள் அழகை மெச்சி இருக்கிறார்கள்.. ஆனால் அப்போது எல்லாம் தோன்றாத ஏதோ ஒரு சிலிர்ப்பும் குறுகுறுப்பும் ஆனந்தமும் இப்போது தீரன் சொன்ன ஒரு வார்த்தையில் அவளுக்குள் மின்னல் பூவாய் பூக்க அதன் மலர்ச்சி அவள் முகத்தில் தெரிந்ததை தீரனும் கவனிக்க தவறவில்லை..
🎵🎶🎼விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில்
தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே
பூ போன்ற கன்னித் தேன்
அவள் பேர் சொல்லித் தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளித் துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டுத் தடுமாறும் ஓ யே
கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்..
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என்னும் ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா மறை
த்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது
ஓ யே🎼🎶🎵
தொடரும்..