லவ்.. லவ்.. எத்தனை வயது? – 49
“தீரா நீங்க நினைக்கிற மாதிரி இந்தர் மோசமானவன் கிடையாது.. அவன் என்னோட ஸ்டூடண்டா இருந்திருக்கான்.. அவன் பொண்ணுங்க கிட்ட எவ்வளவு மரியாதையோட பழகுவான் பேசுவான்னு நான் பார்த்திருக்கேன்.. சில பொண்ணுங்க அவன் மேல அவ்வளவு கிரேஸோட இருந்தாங்க.. ஆனா அவன் அவங்க கிட்ட கூட அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டு முறை தவறி எப்பவும் நடந்துக்கிட்டதில்ல.. அவங்களையும் ஒரு எல்லைக்கு மேல அவன்கிட்ட நெருங்க விட்டதில்லை.. நிச்சயமா அவன் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான்.. நீங்க அவனை தனியா கூட்டிட்டு போய் என்ன விஷயம்னு கேளுங்க ப்ளீஸ்..”
“நீ அவன் காலேஜ்ல இருந்தப்ப அவனை பார்த்திருப்ப.. ஆனா மத்த நேரங்கள்ல அவன் தான் பொண்ணுங்களோட ஊர் சுத்திட்டு இருந்தானே.. உன் கிளாஸ் தவிர மத்த கிளாஸ் எல்லாம் ஒழுங்கா வர கூட இல்லையே.. அப்படி வெளியில போகும்போது அவன் என்ன பண்ணான்னு உனக்கு எப்படி தெரியும்..? எப்போ உங்க பிரின்சிபல் மூலமா இவன் கிளாஸை கட் அடிச்சிட்டு ஊர் சுத்துனான்னு எனக்கு தெரிஞ்சதோ அப்பவே எனக்கு இவன் மேல இருந்த மொத்த நம்பிக்கையும் போயிருச்சு.. எனக்கு தெரியாம இவ்வளவு தப்பான விஷயங்களை பண்ணினவன் இதையும் பண்ணி இருக்க மாட்டான்னு என்ன நிச்சயம்? நான் உனக்கு முன்னாடியே சொன்னேன் மதி.. இப்பவும் சொல்றேன் அவனுக்கு சப்போர்ட் பண்ணாத.. அது அவனை இன்னும் மோசமான நிலைமைக்கு தான் கொண்டு போகும்..”
தீரனுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவித்துப் போனாள் மதி.. அவனோ மதி சொன்னதை காது கொடுத்து கேட்கும் நிலையில் கூட இல்லை..
“உனக்கு தெரியாது மதி.. ரெண்டு மூணு நாளா இவன் நடவடிக்கையே சரியில்லை.. நான் இவனை கூப்பிட்டு வார்ன் பண்ணேன்.. அப்படியும் இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு வந்து நிக்கிறான்..” என்றவன் இந்தர் பக்கம் திரும்பி “உனக்கு நான் படிச்சு படிச்சு சொன்னேன் இல்ல..? தள்ளி இரு.. எந்த தப்பும் பண்ணாத.. அது எனக்கு ரொம்ப அவமானத்தை தேடி கொடுக்கும்னு சொன்னேனா இல்லையா? அப்படியும் ஏன்டா இப்படி.. உன்னையெல்லாம்.. சீய்.. என் கண்ணு முன்னாடி நிக்காதடா”
இந்தரோ அப்படியே இறுகி போய் கண்களில் கண்ணீர் வழிய சிலையாய் நின்று இருந்தான்.. அவன் தன்னை நியாயப்படுத்திக்கொள்ள எந்த பதிலும் சொல்லவில்லை.. இருந்த இடத்திலேயே உரைந்து போயிருந்தவன்.. அப்படியே ஏதோ ஒரு உயிரற்ற பிணம் நடப்பது போல் மெல்ல நடந்து படியேறி தன் அறைக்குள் சென்றவன் கதவை அடைத்து தாழிட்டு கொண்டான்..
மதிக்கோ இந்தரின் நிலையை பார்த்தபோது ஏதோ தவறாய் உள்ளுக்குள் நெருடி கொண்டே இருந்தது.. அவனைப் பார்த்து எப்படியும் பேசிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்..
தமிழ்வாணனிடம் வந்த தீரன் “மாமா.. இப்ப நீங்க போய் தூங்குங்க மாமா.. ரொம்ப டைம் ஆயிடுச்சு.. உங்களுக்கு வேற உடம்பு சரியில்லை.. நீங்க மாத்திரையை போட்டு படுத்துடுங்க.. நாளைக்கு காலையில என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம்.. நிச்சயமா மலருக்கு யாராலயும் எந்த பாதிப்பும் வர விட மாட்டேன்.. அவ பாதுகாப்பா இருக்கிறது என்னோட பொறுப்பு.. நீங்க எதை பத்தியும் கவலைப்படாம அமைதியா படுத்து தூங்குங்க மாமா.. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்ல?”
“ஐயோ மாப்ள.. உங்களை போய் நம்பாம இருப்பேனா..? நீங்க எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்.. நீங்க நிச்சயமா எல்லாத்தையும் நல்லவிதமா பாத்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனா ஒரு விஷயம் மாப்பிள்ளை.. இந்தர் தம்பியை பத்தி எதுவும் முடிவு எடுக்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் அவரோட பேசிட்டு நல்லா யோசிச்சு முடிவெடுங்க.. ஏன்னா அவசரத்தில முடிவெடுக்கிற விஷயம் இல்லை இது..”
“சரிங்க மாமா.. நான் நிச்சயமா அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டேன்.. நான் அவனோட பேசறேன்..”
இப்படி சொல்லி அவரை உள்ளே அனுப்பியவன் மலரோடு அவர் உள்ளே சென்றவுடன் மதி பக்கம் திரும்பி “இந்தர் நாளைக்கு காலைல இந்த வீட்ல இருக்க கூடாது.. அவன் வீட்டை விட்டு வெளியே போகட்டும்..” என்றான் இறுகிய குரலில்..
அவன் முடிவாய் சொன்னதில் அதிர்ந்து போனாள் மதி..
“என்ன சொல்றீங்க தீரா..? அவன் வீட்டை விட்டு எங்க போவான் தீரா.. இப்போவும் சொல்றேன் தீரா.. அவன் மேல எந்த தப்பும் இருக்காது..”
அவள் குரலில் இந்தரின் மேல் அவள் வைத்திருந்த அதீதமான நம்பிக்கை வெளிப்பட்டது..
“ஐயோ மதி.. உனக்கு தெரியாது.. நேத்து அவன் நைட்டு 12 மணிக்கு மேல மலரோட ரூம் கதவை திறந்து உள்ள போக ட்ரை பண்ணான்.. நான் சமயத்துல பாத்து அவனை தடுத்துட்டேன்.. இல்லைன்னா அப்பவே ஏதாவது தப்பா நடந்திருக்கும்..”
அவன் சொன்னதைக் கேட்ட பிறகும் இடவலமாய் தலையாட்டிய மதி “நீங்க எவ்வளவுதான் சொன்னாலும் இந்தர் இப்படி ஒரு வேலையை பண்ணி இருப்பான்னு நான் எந்த ஜென்மத்திலயும் நம்ப மாட்டேன்.. நிச்சயமா அவன் இப்படி ஒரு வேலையை பண்ணி இருக்க வாய்ப்பே இல்லை.. நான் அண்ணின்கிற பேர்ல அவனுக்கு அம்மா ஸ்தானத்தில இந்த வீட்டில வந்திருக்கிறேன்.. என்னால என் புள்ள மாதிரி இருக்கிற ஒருத்தனை வீட்டை விட்டு வெளியே அனுப்புறதை அதுவும் இப்படி ஒரு மோசமான பழி சுமத்தி வெளியே அனுப்புறதை ஒத்துக்கவே முடியாது.. நான் போய் அவன் கிட்ட பேசி பார்க்கிறேன்.. அவன் அங்க போனதுக்கு அவன் பக்கம் நியாயமான ஏதாவது ஒரு காரணம் இருக்கும்.. எங்க அப்பா மலரு இவங்க எல்லாம் இருந்ததுனால அவனுக்கு சொல்ல முடியாம இருந்திருக்கலாம்.. நான் ஒரு முறை அவனோட பேசி பார்க்கிறேனே.. ப்ளீஸ் தீரா.. அவசரப்படாதீங்க..”
தீரனோ எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை..
“அப்படியே அவன் ஏதாவது நியாயமான காரணம் வெச்சிருந்தாலும் இதுக்கு மேல உங்க அப்பா இந்த வீட்ல இந்தர் மலர் ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறதுக்கு சம்மதிப்பாரா? தான் கிளம்பி போறேன்னு தான் சொல்வார்.. அவரு இனிமே வாழ்க்கை முழுக்க என்னை ஒரு மகனா நினைச்சு இந்த வீட்லயே இருக்கலாம்னு சொல்லி கூட்டி வந்த நானே அவரை வீட்டை விட்டு அனுப்ப முடியாது.. இந்தர் இந்த வீட்டை விட்டு போறது தான் நியாயம்.. அவன் போகட்டும்.. அவன் தப்பே பண்ணலன்னாலும் இப்ப இருக்குற சூழ்நிலையில அவன் இந்த வீட்டை விட்டு போறது தான் சரியா இருக்கும்..”
“இல்ல.. இந்தர் இந்த வீட்டை விட்டு போறதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.. அவன் இந்த வீட்டு புள்ள.. அவன் எதுக்கு இங்க இருந்து வெளியே போகணும்..? அவன் நிச்சயமா எந்த தப்பும் பண்ணலைன்னு எனக்கு தெரியும்.. அவன் இங்க இருந்து எங்கேயும் போக மாட்டான்.. அவனை இந்த வீட்டிலிருந்து அனுப்புனா உங்க அம்மாவோட ஆத்மா என்னை மன்னிக்கவே மன்னிக்காது..”
மதியழகி தீர்க்கமாய் சொல்லிவிட “அப்போ உங்க அப்பா கேட்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்றது?” தீரன் கேட்கவும் “அப்படி எங்க அப்பாக்கு மலரோட இங்க இருக்கிறது பிரச்சனைன்னா அப்பாவும் மலரும் எங்க பழைய வீட்ல போய் இருக்கட்டும்.. இனிமே அவங்க இங்க இருக்க வேண்டாம்..”
“அவங்க ஏன் தனியா இருக்கணும் மதி.. கொஞ்சமாவது யோசிச்சு பேசுறியா? உங்க அப்பாக்கு வயசு ஆகுது.. இன்னைக்கு அவருக்கு நெஞ்சுவலி வந்துருச்சு.. அதுக்கு டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க.. இப்படி உடம்பு சரியில்லாதவர் வயசு பொண்ணை கூட வச்சுக்கிட்டு எப்படி தனியா இருக்க முடியும்? இந்தர் சின்ன பையன்.. அவன் வெளியில் போய் சமாளிச்சுப்பான்.. அவன் வெளியே போகட்டும்..”
“முடியாது.. நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.. இந்தர் வீட்டை விட்டு வெளியே போக மாட்டான்..”
“ஓ.. அப்ப உங்க அப்பாவும் மலரும் வீட்டை விட்டு வெளியே போகணும்ன்னு சொல்றியா..?”
“தீரா.. இந்த பிரச்சனைக்கு அது தான் கரெக்டான முடிவாக இருக்கும்.. நீங்க இந்தரை வெளில அனுப்புறேன்னு சொன்னா அப்பாவே அதுக்கு ஒத்துக்க மாட்டார்.. அது மட்டும் இல்லாம.. நான் இப்படி சொல்றதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு.. மலர் இன்னும் உங்க நெனப்புல தான் இருக்கா.. இன்னைக்கு அந்த சேகரோட அவ ஃபோன்ல பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்.. அவன் கிட்ட எங்க அக்கா கிட்ட இருந்து எங்க மாமாவை பிரிச்சு நான் எப்படியாவது அவரை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டு இருந்தா.. அதனால அவ இங்க இருந்து அந்த வீட்டுக்கு போறது தான் சரியா இருக்கும்.. அவ இனிமே இங்க இருக்கிறதை என்னால அனுமதிக்க முடியாது..”
“அவ அப்படி சொன்னா நான் அப்படி நடக்க விட்டுடுவேனா? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா மதி?”
“அய்யோ தீரா.. உங்க மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.. ஆனா அவ அப்படி நடந்துக்கும் போது உங்க மனசு என் மனசு ரெண்டுமே எவ்வளவு கஷ்டப்படும்னு எனக்கு தெரியும்.. அந்த கஷ்டம் வேண்டாம்னு தான் நான் சொல்றேன்.. அவங்க வீட்டை விட்டு போறேன்னு சொன்னா நீங்க அனுப்பி வச்சிடுங்க.. அவங்க இங்கதான் இருக்கணும்னு நீங்க ஃபோர்ஸ் பண்ணாதீங்க.. நான் அவரோட பொண்ணு.. அவரு போகட்டும்னு நானே சொல்றேன்.. அவர் இங்கதான் இருக்கணும்னு நீங்க எதுக்கு இப்படி அடம் பிடிக்கிறீங்க? எங்க அப்பாவும் தங்கச்சியும் எங்க இருக்கணும்னு நான் தான் டிசைட் பண்ணனும் தீரா..”
“சரிதான்.. நான் என்ன அவரோட நிஜ மருமகனா? அவரை ஃபோர்ஸ் பண்ணி இங்க இருக்க வைக்கறதுக்கு.. சும்மா மருமகனா நடிக்கிறவன் தானே..? உன்னை பத்தியும் உங்க அப்பா பத்தியும் உன் தங்கச்சி பத்தியும் நான் எப்படி முடிவு எடுக்க முடியும்.. அவருக்கு நான் மருமகனா இருந்துக்கிட்டு என்னால அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடியாது.. அதனால எப்படியும் நம்ம நடிச்சுகிட்டு தானே இருக்கோம்.. மலர் என்னை கல்யாணம் பண்ணணும்னு சொன்னதுனால அவ பிடிவாதத்தை மாத்தறதுக்கு தானே நம்ம இப்படி ஒரு பொய் கல்யாணம் பண்ணிக்கிட்டு நடிக்கிறோம்.. இப்பதான் அது நடக்கலையே.. நீ தான் சொல்றியே.. மலர் இன்னும் அதே நினைப்புல தான் இருக்கான்னு.. அப்புறம் எதுக்கு நம்ம வேஸ்டா அப்படி நடிக்கணும்..? எப்படியும் இந்தரும் மலரும் செட்டில் ஆனப்புறம் டிவோர்ஸ் பண்ணி பிரியறதா தானே இருந்தோம்..? அதை இப்பவே பண்ணிடலாம்.. நீ போய் உங்க அப்பாவோட இரு.. நானும் இந்தரும் இந்த வீட்லயே இருக்கோம்..”
தீரன் சொன்ன விஷயத்தில் அவளோ அதிர்ந்து விக்கித்து போய் நின்றிருந்தாள்.. தன் காதலை சொல்லலாம் என்று முடிவு செய்திருந்த நேரத்தில் அவன் விவாகரத்து பற்றி பேசிய வார்த்தைகள் அவளை இடியாய் தாக்கின..
விரக்தி நிறைந்த ஒரு புன்னகையை சிந்தியவள் “இதைத்தான் உங்ககிட்ட நான் எதிர்பார்த்திருக்கணும் தீரா.. சரிதான்.. ஆனா உங்ககிட்ட நான் ஒரு விஷயம் சொல்லணும்..”
எச்சில் விழுங்கியவள் விழிகளில் ஆழமான வலியோடு “இந்த விஷயத்தை எப்படி எப்படியோ சொல்லணும்னு நினைச்சேன்.. ஆனா இப்படி சொல்ற மாதிரி சூழ்நிலை வரும்னு நான் நினைக்கவே இல்ல தீரா.. நான் உங்களை மனசார விரும்புறேன்.. ஐ லவ் யூ.. என்னால நீங்க இல்லாம வாழ முடியாதுன்ற நிலைமையில தான் நான் வந்து நின்னுகிட்டு இருக்கேன்..”
அவள் முகம் முழுவதும் வலிகளின் கீற்றோடு அவள் காதலை சொல்லி இருக்க தீரனோ பேச்சற்று.. செயலற்று போய் நின்றிருந்தான்.. அவன் என்ன உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை.. அவள் காதலை அவள் சொல்லி விட்டதில் உள்ளுக்குள் இன்பமாய் அதிர்ந்திருந்தவனுக்கு அதே நேரம் அவள் முகத்தில் தோன்றிய துயரத்தின் ரேகைகள் அதிக வலியையும் உண்டாக்கியது.. அவள் காதலை இப்படி சொல்லும் நிலை உருவாகிவிட்டதே என்று உள்ளுக்குள் உடைந்து தான் போனான் அவனும்..
“உங்ககிட்ட என் காதலை சொல்லணும்னு நான் முடிவு பண்ண இந்த நேரத்துல நீங்க விவாகரத்து பத்தி பேசுறீங்க.. சூப்பர்.. என் மனசுல தோன்றின காதல் உங்களுக்கும் தோன்றியிருக்கணும்னு அவசியம் இல்லையே.. நீங்க கடைசி வரைக்கும் ஆஞ்சநேயர் பக்தராகவே இருக்கணும்னு முடிவு பண்ணி இருக்கலாம்.. ஆனா இந்த விவாகரத்து முடிவு இப்ப எனக்கும் சரின்னுதான் படுது தீரா.. ஏன் தெரியுமா? இவ்வளவு வருஷமா பார்த்து பார்த்து நீங்க வளர்த்த உங்க தம்பி மேலயே சட்டுனு இவ்ளோ பெரிய பழியை போட்ட நீங்க நாளைக்கு ஒருவேளை நான் ஏதாவது ஒரு ஆம்பளை கிட்ட பேசிகிட்டு இருந்தா கூட நான் அவனோட தப்பு பண்ணிட்டேனோன்னு சந்தேகப்பட்டாலும் படுவீங்க.. உங்ககிட்ட நம்பிக்கையை வாங்கறதுக்கு ரொம்ப போராடணும் போல இருக்கே.. வேண்டாம்.. என் மனசுல நீங்க எப்பவும் இருப்பீங்க.. ஆனா உங்களோட ஒண்ணா வாழ்ந்து உங்க வாழ்க்கையையும் என் வாழ்க்கையையும் தெனம் தெனம் ஒரு ரணகளமா மாத்திக்க நான் விரும்பல.. நீங்க சொல்ற மாதிரி டிவோர்ஸ் பண்ணிக்கலாம்..”
அவள் விழிகளில் கண்ணீர் ஆறாய் பெருகிக்கொண்டிருக்க உடைந்து போன மனதோடு தன் முடிவை அவள் சொல்லிக் இருக்க அவள் சொன்ன வார்த்தைகளில் மொத்தமாய் நொறுங்கிப் போயிருந்தான் தீரன்..
அப்போது பக்கத்தில் யாரோ கீழே விழும் சத்தம் கேட்கவும் இருவரும் சத்தம் வந்த திசையில் திரும்பி பார்க்க அங்கே அவருடைய அறை வாசலில் தமிழ்வாணன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்திருந்தார்..
தொடரும்..