லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 55

5
(7)

வ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 55

தீரன் வெளிவந்ததும் இந்தரின் அறைக்குள் சென்றாள் மதி.. உள்ளே நுழையும் போதே பெரும் கோபத்துடன் தான் நுழைந்தாள்..

“ஏன் இந்தர்? எதுக்கு இப்படி பண்ண..? நான் தான் உன்கிட்ட பேசுறேன்னு உங்க அண்ணன் கிட்ட சொன்னேன்ல..? நான் வந்து உன்கிட்ட முழு விவரத்தை கேட்கறதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்..? அதுவும் இப்படி ஒரு விபரீதமான முடிவை எடுத்திருக்க? அந்த மனுஷனோட உயிரே உன் கிட்ட தான் இருக்கு.. இத்தனை வருஷமா உனக்காக வேற நெனப்பே இல்லாம வாழ்ந்திருக்காரு.. அந்த மாதிரி அவர் நேத்து ரியாக்ட் பண்ணதுக்கு உன் மேல இருந்த பொஸஸிவ்நெஸ்.. என் தம்பி எந்த விஷயத்திலயும் தப்பானவனா இருந்திட கூடாதுன்கிற நினைப்பு இதெல்லாம் தான் காரணம்.. இது உனக்கு புரியலையா? உனக்கு ஏதாவது ஆகி இருந்தா அவர் நிலைமை என்னன்னு யோசிச்சியா? செத்தே போய் இருப்பாரு அவரு.. உனக்கு அதான் வேணுமா?”

“தப்பு தான் அண்ணி.. ஆனா அந்த நேரத்துல ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்.. ஏதோ பைத்தியக்காரத்தனமா பண்ணிட்டேன்.. இனிமே எந்த காலத்திலும் இந்த மாதிரி ஒரு முடிவை எடுக்கவே மாட்டேன்.. நல்லா படிச்சு நல்ல நிலைமைக்கு வந்து காட்டுவேன்.. நீங்களும் அண்ணாவும் இனிமே என்னை பார்த்து பெருமைப்படுவீங்க..”

அவன் தலையை ஆதூரமாய் வருடியவள் “ரொம்ப சந்தோஷம் இந்தர்.. சீக்கிரம் வீட்டுக்கு வா.. உன்னை பழைய படி தேத்த வேண்டியது என் பொறுப்பு..”

“இல்ல அண்ணி.. நான் வீட்டுக்கு வரல.. நான் வீட்டை விட்டு வெளியே தான் இருக்க போறேன்..”

“ஏன் இந்தர்.. நீயும் மலரும் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீங்க? அவளும் இதே தான் சொல்றா.. உங்க ரெண்டு பேருக்கும் எதுக்கு இவ்வளவு கோபம்.. பெரியவங்க ஏதோ பேசிட்டோம்.. நாலு வார்த்தை சொல்லிட்டோங்கறதுக்காக இப்படி ஆளாளுக்கு கோவிச்சிட்டு வீட்டை விட்டு வெளியே போனா எப்படி..?”

“இல்ல அண்ணி.. எங்க ரெண்டு பேருக்குமே உங்க மேல கோபம் இல்ல.. இந்த முடிவு எங்களுக்கு ஒரு விதமான மோட்டிவேஷன்னு வச்சுக்கோங்க.. எங்களால முடியும்ங்கறதால தான் அதை செய்யணும்னு சொல்றோம்.. இதே நானும் மலரும் ஒரு பத்து வருஷம் முன்னாடி நிச்சயமா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க மாட்டோம்.. அப்ப எங்களுக்கு அவ்வளவு தைரியமும் இருந்திருக்காது..  இப்ப நாங்க ரெண்டு பேருமே மேஜர்.. இப்போ எங்களால எங்க சொந்தக்கால்ல நின்னு உழைச்சு முன்னேற முடியும்.. ஒரு விதத்தில இந்த மாதிரி தனியா நின்னு போராடற குணத்தையும் உங்ககிட்ட இருந்து தான் நாங்க கத்துக்கிட்டோம்.. எங்க அண்ணா எப்படி தனியா உழைச்சு வாழ்க்கையில  முன்னேறினார்னு பார்த்து பார்த்து நான் கத்துகிட்டு இருக்கேன்.. அதே மாதிரி தான் மலரும்.. உங்க கிட்ட இருந்த டிட்டர்மினேஷன்.. அந்த ஹார்ட் வொர்க்.. இது எல்லாத்தையும் கத்துக்கிட்டு இருக்கா.. இப்போ நாங்க இண்டிபெண்டென்டா எங்களை நாங்களே பாத்துக்கிற அளவுக்கு பெரியவங்களாயிட்டோம்.. இப்போ நாங்க எங்க லைஃபை பாத்துக்கிட்டா உங்க லைஃப்பை நீங்க கொஞ்சம் என்ஜாய் பண்ணலாம் இல்ல..? இன்னும் எத்தனை நாளைக்கு நீங்களும் அண்ணாவும் எங்களுக்காகவே உழைச்சுக்கிட்டு இருப்பீங்க..? சொல்லுங்க.. உங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? உங்களுக்குன்னு ஒரு சந்தோஷம் வேண்டாமா? நீங்க ரெண்டு பேரும் வேற எந்த கவலையும் இல்லாம ஜாலியா இருங்க அண்ணி..  எங்களை பத்தி கவலைப்படாதீங்க.. நாங்க ரெண்டு பேரும் ஹாப்பியா அதே சமயம் சூப்பரா படிச்சு முன்னேறி வருவோம்..”

அவன் பேசியதை கேட்க ஏனோ மதிக்கு மகிழ்ச்சியாக தான் இருந்தது.. அவன் சொல்வதும் உண்மை தானே? அவர்கள் தங்கள் காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.. அதற்கு வழி விட்டு நிற்பது தான் சரி என்று தோன்றியது அவளுக்கு..

“சரி ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத.. ரெஸ்ட் எடுத்துக்கோ.. இன்னும் ரெண்டு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.. அட்லீஸ்ட் உன் கையில் இருக்கிற இந்த காயம் ஆறுற வரைக்கும் எங்களோட இரு இந்தர்..”

“இல்ல அண்ணி.. நீங்க சொல்றபடி என் கையில் இருக்கிற காயத்துக்காக வீட்டுக்கு வந்து ஒருவேளை என் மனசு மாறிடலாம்… ஏன்னா எனக்கு தெரியும் நீங்களும் அண்ணாவும் என்னை எப்படி பார்த்துப்பீங்கன்னு.. அப்பறம் எனக்கு அங்கிருந்து வரவே மனசு வராது”

“இதுக்கு மேல நான் என்ன சொல்றது..? அப்பறம் உன் இஷ்டம்..”

சொல்லிவிட்டு மதி அந்த அறையை விட்டு வெளியே வர மலரழகி அந்த அறைக்குள் நுழைந்தாள்..

அறைக்குள் நுழைந்தவள் வேகமாக இந்தரின் அருகே சென்று ஓங்கி ஒரு அறை விட்டாள்..

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு “அடியேய் ராட்சசி.. ஏண்டி அறைஞ்ச என்னை? நானே கையை கட் பண்ணிட்டு உடம்பு முடியாம படுத்து இருக்கேன்.. என்னை வந்து இப்படி அடிக்கிற.. பைத்தியமா டி நீ..?”

“இப்ப சொன்ன பாரு.. கைய கட் பண்ணிட்டு படுத்து இருக்கேன்னு.. அதுக்கு தான்டா இது.. கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு? அன்னைக்கு நான் கடல்ல விழப்போனப்போ அப்படி அட்வைஸ் பண்ண..? இது தான் சாத்தான் வேதம் ஓதறதுன்னு சொல்லுவாங்க..”

“ஏய் சந்தடி சாக்குல யாரடி சாத்தான்குற?”

“உன்னை தான்டா.. அதுல என்ன டவுட்டு டா உனக்கு..? அன்னைக்கு நான் சாகப் போகல.. உங்க அண்ணன் வந்து காப்பாத்துவாருன்ற நிச்சயமா தெரிஞ்சதால தான் கடலுக்குள்ள தைரியமா போனேன்.. ஆனா நீ என்னடா பண்ணி இருக்க? இன்னிக்கி ஒரேடியா போகணும்னு இப்படி ஒரு கோழைத்தனமான முடிவை எடுத்து இருக்கே..? உனக்கு என்னடா குறைச்சல்..? கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு.. இத்தனை வருஷமா உங்க அண்ணன் உழைச்சு ஓடா தேய்ஞ்சு உனக்கு நல்ல படிப்பு நல்ல சாப்பாடு நல்ல வீடு இதெல்லாம் கொடுத்து இருக்கிறார் தானே..? ஒருவேளை உங்க அண்ணன் சொன்னது உனக்கு ரொம்ப வலிக்குதுன்னா வெளியில வந்து உழைச்சு சாப்பிட வேண்டியதுதானே? அதை விட்டுட்டு உயிரை விட போறானாம்.. அப்படியே வர்ற ஆத்திரத்துக்கு நானே உன் கழுத்தை நெறிச்சு கொன்னுடனும் போல இருக்குடா..”

அவள் சொன்னதை கேட்டவன் பக்கென சிரித்து விட்டான்..

“என்னடா.. நான் திட்டிகிட்டு இருக்கேன்.. நீ சிரிக்கிற.. வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாதா டா உனக்கு..?”

“போதும்டி.. எவ்வளவுதான் கடிச்சு கொதறுவே? நிறுத்திக்கோ..”

அலட்சியமாக உதட்டை சுழித்த படி “ம்ம்.. சரி.. சரி.. பொழைச்சு போ..” என்றவள் “அப்பறம் உன்னை பார்த்து சொல்லிட்டு போலாம்னு தான் வந்தேன்.. இனிமே நான் வெளில தங்கி படிக்கப் போறேன்.. ஒரு பார்ட் டைம் ஜாப் பார்த்துட்டு படிக்கலாம்ன்ற ஐடியால இருக்கேன்.. உடம்பை பாத்துக்கோ.. அக்காவையும் மாமாவையும் பத்திரமா பாத்துக்கோ.. நான் கிளம்புறேன்..” என்று திரும்பியவள் கையை பிடித்து நிறுத்தினான் இந்தர்..

“ஓய்.. நானும் அந்த முடிவில தான்டி இருக்கேன்.. நீயும் வெளியில போய் தங்கி படிக்க போறேன்னு தான் அண்ணா சொன்னாரு.. எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருக்கான்.. அவனுக்கு உங்க காலேஜ் பக்கத்தில ஒரு ஃபர்னிஷ்ட் ஹவுஸ் இருக்கு.. அந்த வீட்டில ரெண்டு போர்ஷன் காலியா இருக்கு.. அவன் எனக்குன்னா குறைவான வாடகைக்கு வீடு குடுப்பான்.. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லன்னா  ஒரு போர்ஷன்ல நீ தங்கிக்க.. இன்னொரு போர்ஷன்ல நான் தங்கிக்கிறேன்.. நம்ம பார்ட் டைம் வேலை பார்த்துட்டு படிக்கவும் செய்யலாம்.. ஆனா அந்த போர்ஷன்ல ஒரு ரூமும் ஒரு கிச்சனும் மட்டும் தான் இருக்கும்.. அதுக்கு மேல வேற எதுவும் எதிர்பார்க்காதே.. வேலைக்கு ஆள் எல்லாம் கிடையாது..  ஹாஸ்டல்ல நீ ஒரு ரூமுக்கு என்ன பே பண்ணுவியோ அதை கொடுத்தா போதும்.. அட்வான்ஸ்லாம் கொடுக்க வேண்டாம்.. இங்க உனக்கே உனக்குன்னு ஒரு ரூம் கிச்சன் எல்லாமே கிடைச்சுடும்.. உனக்கு ஓகேவா..?”

அவன் கேட்டதும் அவள் கொஞ்சம் யோசித்தாள்..

அதை பார்த்தவன் “இல்ல.. உனக்கு என் மேல நம்பிக்கை இல்லனா நீ லேடீஸ் ஹாஸ்டல்லயே போய் தங்கிக்கோ.. நேத்திக்கு அண்ணா என்னை நம்பாம திட்டினப்ப கூட நீ நான் எதுவும் பண்ணலன்னு எனக்கு சப்போர்ட் பண்ண.. அதனால நான் இன்னொரு போர்ஷன்ல இருக்கிறது உனக்கு ஒன்னும் டிஸ்டர்பன்ஸா இருக்காதுன்னு நினைச்சு தான் நான் இதை கேட்டேன்.. நான் வீட்டை விட்டு வெளியில தங்கற முடிவை இப்பதான் எங்க அண்ணா கிட்ட பேசும்போது எடுத்தேன்.. அப்படி தங்கணும்னு நினைக்கும் போதே என் ஃப்ரெண்டோட இந்த வீடு இருக்கிறது எனக்கு ஞாபகம் வந்தது.. அண்ணா நீயும் வெளியில தங்க போறேன்னு சொன்னப்ப உன்னையும் கேட்கலாம்ன்னு தோணுச்சு.. அதான் கேட்டேன்.. உனக்கு இஷ்டம் இல்லனா விட்டுடு.. நான் மட்டும் அங்க தங்கிக்குறேன்..”

“இல்ல இல்ல.. எனக்கு இந்த ஆஃபர் ஓகே தான்.. இன்னொன்னு என் வேலையை நானே செஞ்சுக்கணும்னு ஆசைப்படறேன்.. தனியா இருந்தாதான் அந்த எண்ணமே வரும்.. குக் பண்றது துணி துவைக்கிறது பாத்திரம் கழுவறது வீட்டை க்ளீன் பண்றதுன்னு இது எல்லாமே இத்தனை நாள் எங்க அக்கா என்னை செய்ய விடாம செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்கா.. இப்போ கொஞ்சம் பொறுப்பா இதெல்லாம் செஞ்சு பழகிக்கணும்னு நினைக்கிறேன்.. அதுக்கு நீ சொல்ற மாதிரி தனியா இருந்தா தான் சரி வரும்.. ஒரு ஆள் கூட இருந்தா எப்பவும் அவங்களையே எல்லாத்துக்கும் எதிர்பார்த்துட்டு வாழற மாதிரி இருக்கும்.. எனக்கு இந்த டீல் ஓகே தான்.. ஆனா நீ ஹாஸ்பிடலை விட்டு வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆயிடுமே.. அது வரைக்கும் நான் எங்கே இருக்கிறது..?”

“அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. நான் உனக்கு அந்த வீட்டோட அட்ரஸ் தர்றேன்.. நம்ம ரெண்டு பேர் போர்ஷனும் மாடியில இருக்கு.. கீழே ஒரு மாமாவும் மாமியும் இருக்காங்க.. நீ இப்ப போனா அவங்க உனக்கு உன் போர்ஷனோட சாவி கொடுப்பாங்க.. அவங்க பேரன் பேத்தி பொண்ணு புள்ளையெல்லாம் பார்க்க அடிக்கடி ஊருக்கு போய்டுவாங்க போல.. வீட்டை பார்த்துக்க ஆள் வேணும்னு தான் என் ஃப்ரெண்டு வாடகைக்கு யாராவது ஆள் இருந்தா சொல்லுன்னு சொல்லி இருந்தான்.. நீ போய் அந்த மாமி கிட்ட சாவி வாங்கிட்டு அங்கே இருந்துக்க.. எப்படியும் அந்த மாமா மாமி உனக்கு துணைக்கு இருப்பாங்க.. ரொம்ப அவசரமா ஏதாவது வேணும்னா அவங்க கிட்ட நீ கேட்டுக்கலாம்.. ஒருமுறை நான் என் ஃப்ரெண்டோட அந்த வீட்டுக்கு போய் இருக்கேன்.. அவங்க ரொம்ப நல்ல மாதிரி பழகுவாங்க.. அதனால நீ பயப்பட வேண்டாம்.. என் ஃப்ரெண்டு கிட்ட சொல்லி அவங்களோட பேச சொல்றேன்.. உனக்கு ஓகேவா..?”

“ம்ம்.. அப்படின்னா ஒரு பிராப்ளமும் இல்ல.. நான் அங்கே போய் தங்கிக்கிறேன்.. நீ அட்ரஸ் குடு..” என்றதும் அவனும் அவள் கைபேசிக்கு அந்த வீட்டு முகவரியை குறுஞ்செய்தியாய் அனுப்பினான்..

“ஓகே.. அப்ப நான் கிளம்புறேன்.. நீயும் ரெண்டு நாள் கழிச்சு வந்து சேரு.. பாய்.. டேக் கேர்..” சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்..

அவள் வெளியே சென்றதும் தீரன் அந்த அறைக்குள் மறுபடி வந்தான்..

“அண்ணா நீங்க சொன்னபடியே மலர் கிட்ட பேசிட்டேன்.. அவ அந்த வீட்டுக்கு தான்ணா போயிட்டு இருக்கா”

இந்தர் சொன்னதும் ஒரு நிம்மதி பெருமூச்சை விட்டான் தீரன்…

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!