லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 56

4.8
(9)

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 56

 

“அண்ணா நீங்க சொன்னபடியே மலர் கிட்ட பேசிட்டேன்.. அவ அந்த வீட்டுக்கு தான்ணா போயிட்டு இருக்கா.. நீங்க ஏற்பாடு பண்ண வீட்டுல மலர் பாதுகாப்பா பத்திரமா இருப்பா.. நீங்க சொன்னபடி அவளுக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இல்லாம  சேஃபா பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு.. என்னை புரிஞ்சுகிட்டதுக்கு தேங்க்ஸ் அண்ணா..”

 

“இந்தர் நான் மறுபடியும் சொல்றேன்.. தப்பா நினைக்காத.. நான் உன்கிட்ட கேட்டப்போ நீ மலரை விரும்புறேன்னு ஒத்துக்கிட்டே.. ஆனா அந்த விருப்பம் அவ படிப்பை முடிச்சு செட்டில் ஆகுற வரைக்கும் உனக்குள்ள தான் இருக்கணும்.. அவளும் நீயும் படிப்பை முடிச்சு நல்லபடியா வந்த அப்புறம் அவ கிட்ட உன் மனசுல இருக்கறதை சொல்லு.. அவளும் ஒத்துக்கிட்டா நானும் மதியுமே உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைப்போம்.. ஆனா அதுவரைக்கும் இந்த விஷயம் அவளுக்கோ இல்ல வேற யாருக்கும் தெரிய வேண்டாம். நான் சொல்றது உனக்கு புரியுது இல்ல..?”

 

“புரியதுண்ணா.. நிச்சயமா என்னாலயோ இல்ல வேற யாராலயோ அவளுக்கு எந்த தொந்தரவும் இருக்காது.. நான் அவளுக்கு ஏதாவது ரொம்ப அவசியமா ஹெல்ப் வேணும்னா மட்டும் செய்வேன்ணா.. மத்தபடி அவளை தொந்தரவு பண்ணாம தள்ளி நின்னு ஒரு செக்யூரிட்டியா இருந்து அவளை பாத்துப்பேன்..”

 

“தேங்க்ஸ் டா இந்தர்.. சரி நீ கொஞ்ச நேரம் தூங்கு.. ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத..” சொல்லிவிட்டு தீரன் அந்த அறையை விட்டு வெளியே வந்து விட்டான்..

 

மலர் மருத்துவமனையில் இருந்து தீரனின் வீட்டிற்குச் சென்று விடிந்தவுடன் தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு தான் தங்க வேண்டிய இடத்துக்கு செல்ல போவதாக எல்லோரிடமும் சொல்லிவிட்டு சென்று இருந்தாள்..

 

காலை விடிந்திருந்தது..

 

மதியும் தீரனும் இரவிலிருந்து அங்கேயே தனி தனி இருக்கைகளில் அமர்ந்திருந்தார்கள்.. இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை.. அங்கே மௌனமே ஆட்சி செய்து கொண்டிருந்தது..

 

தீரன் அவளிடம் ஏதோ பேச வேண்டும் என்று முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.. ஒரு வழியாய் மனதில் திடத்தை ஏற்றி கொண்டு மதி அருகில் சென்றவன் “மதி.. நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்..” என்றான்..

 

அதற்கு மேல் அவனை பேசவிடாமல் “போதும் தீரா.. நிறைய பேசிட்டோம்.. இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்..”

 

அவள் இறுக்கமான முகத்தோடு சொல்ல அவனோ தன் மனதில் இருக்கும் அத்தனை காதலையும் அவளிடம் கொட்டி தீர்க்கும் முடிவில் இருந்தான்..

 

“இல்ல மதி.. என் மனசில இருக்கிறதை உன் கிட்ட நான் சொல்லியே ஆகணும்.. இதுக்கு மேல என்னால சொல்லாம இருக்க முடியல.. ப்ளீஸ் மதி.. நான் சொல்றதை கேளு.. நான் உன்னை..”

 

அவன் முன்னால் தன் கையை நீட்டி அவன் பேசுவதை நிறுத்தியவள் “என்ன.. என்னை விரும்புறேன்னு சொல்லப் போறீங்களா? நீங்க அப்படி சொன்னா நான் நம்பணுமா? நேத்து நான் என் விருப்பத்தை சொல்லிட்டேங்கறதுக்காக உங்களையே என்னை விரும்புறதுக்கு நீங்க ஃபோர்ஸ் பண்ணிக்க வேண்டாம்.. ப்ளீஸ் தீரா.. காதல் இரண்டு பக்கமும் இருந்தா தான் அழகா இருக்கும்.. ஒரு பக்கம் மட்டும் இருந்தா அது கொடுமை.. என்னை சந்தோஷப்படுத்த நீங்க இப்படி பொய் சொல்லாதீங்க.. உங்களை கட்டாயப்படுத்தி காதலிக்க வைக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்ல.. இதை இதோட விட்டுடுங்க..”

 

“ஐயோ.. இல்ல மதி.. நீ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க.. நான் எந்த கட்டாயத்திலயும்..”

 

“இல்ல தீரா.. எந்த கட்டாயமும் இல்லனா இவ்வளவு நாள் நீங்க உங்க விருப்பத்தை சொல்லி இருப்பீங்க.. இப்ப நான் என் விருப்பத்தை சொன்ன அப்புறம் நீங்க சொல்றீங்கன்னா அது நிச்சயமா இவளுக்கு தாலி கட்டிட்டோம்.. இவளும் என்னை விரும்புறதா சொல்லிட்டா.. இதுக்கு மேல நம்மளுக்கு வேற வழி இல்ல.. இவளை விரும்பி தான் ஆகணும்ன்கிற கட்டாயத்தில நீங்க கொடுக்கற காதலா தான் இருக்கும்.. அது எனக்கு வேண்டாம் தீரா..”

 

“ஐயோ இல்ல மதி..”

 

“வேணாம் தீரா.. எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சு போச்சு.. இனிமே நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா நடிக்கணும்ன்ற கட்டாயம் கூட கிடையாது.. சீக்கிரமே டிவோர்சுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க.. நம்ம ரெண்டு பேரும் சட்ட படி பிரிஞ்சுடலாம்.. நான் அப்பாவை கூட்டிட்டு எங்க பழைய வீட்டுக்கே போயிடுறேன்…”

 

அவள் தீர்க்கமாய் முடிவெடுத்து உறுதியாக சொல்லி இருந்தாள்…

 

அவனுக்கோ அவளுக்கு எப்படி தன் காதலை புரிய வைப்பது என்று பிடிப்படவே இல்லை.. 

 

“ஐயோ.. அந்த பேச்சை எடுக்கும் போதே கட்டையை போடுறாளே.. நான் எப்படி அவளுக்கு என் காதலை சொல்லி புரிய வைப்பேன்? ஒரே வீட்டில இருந்தாலாவது அப்பப்ப பாத்துக்கிட்டு இருக்க போக ஏதாவது பண்ணி அவளுக்கு என் காதலை புரிய வைக்கலாம்னு பாத்தா அவங்க அப்பா கூட போய் தனியா இருக்க போறேன்னு சொல்றா.. தீரா.. என்னடா இது உன் காதலுக்கு வந்த சோதனை..” உள்ளுக்குள்ளேயே புலம்பி கொண்டிருந்தான் தீரன்..

 

சரியாக அப்போது பார்கவியோடு அங்கு வந்து சேர்ந்தான் பாண்டி.. தீரன் அன்று காலை தான் விஷயத்தை பாண்டியிடம் சொல்லி இருக்க செய்தி கேட்டவுடன் பதைப்புடன் ஓடி வந்திருந்தான் அவன்..

 

“தீரா என்ன ஆச்சு? இந்தர் எதுக்கு இப்படி ஒரு விபரீத முடிவு எடுத்தான்..? என்ன நடந்துச்சு தீரா?” வந்தவுடன் அவன் படபடக்க “ஒன்னும் இல்லடா எல்லாம் சரியாயிடுச்சு..” என்றவன் அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் பாண்டியிடம் சொன்னான்..

 

“ஏன் தீரா இப்படி எல்லாம் நடக்குது? சரி இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சு இல்ல..? மதி சிஸ்டரும் உன்னை விரும்பறதா சொல்லிட்டாங்க.. இன்னும் என்ன வேணும் உனக்கு..? நீயும் அவங்களை விரும்பறதா சொல்லி ரெண்டு பேரும் வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதானே..?”

 

“நானும் அப்படி தான் பாண்டி நினைச்சேன்.. ஆனா அது அவ்வளவு சுலபமா இல்ல.. ஆஞ்சநேயர் நான் அவர் பக்தனா இருந்துட்டு இப்படி ஒரு பொண்ணை லவ் பண்ற அளவுக்கு மாறி போனதுனால என்னை ரொம்ப சோதிக்கிறார் போல பாண்டி..”

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. ஆஞ்சநேயர் ஒன்னும் காதலுக்கு எதிரி இல்ல.. ராமரையும் சீதையும் சேர்த்து வச்சவரு அவரு.. அதே மாதிரி உங்க ரெண்டு பேரையும் ஒன்னு சேர்த்து வைப்பார்.. அதுக்காக நீ தளர்ந்து போயிராதே தீரா.. நீ மறுபடியும் மறுபடியும் சிஸ்டரை கூப்பிட்டுக்கிட்டே இரு.. அவங்க நிச்சயமா உன்னோட வந்து வாழ்வாங்க.. ஆமா.. இந்தருக்கும் உங்க மாமாவுக்கும் உடம்பு சரியில்லை.. மலர் எங்கே?”

 

“அதை ஏன் கேக்குற? அவ இனிமே வீட்டுக்கு வர மாட்டேன்.. தனியா தான் போய் இருப்பேன்னு சொல்லி நேத்து நைட்டே கிளம்பிட்டா.. அப்புறம் நான் தான் இந்தர் கிட்ட சொல்லி வேற மாதிரி பேச சொன்னேன்.. அவளும் அவன் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டா..  நம்மளுக்கு ஷூட்டிங்க்கு இடம் பார்த்து கொடுப்பாரே நாகா அவருக்கு நைட்டே ஃபோன் பண்ணி ஏதாவது வீடு காலியா இருக்குமான்னு கேட்டேன்.. ஒரு வீடு இருக்கு.. அடிக்கடி சூட்டிங் எடுப்பாங்க.. ஆனா ரொம்ப சின்ன வீடுன்னு சொன்னாரு.. எப்படியோ இந்தர் மூலமா மலரை அந்த வீட்ல தங்கறதுக்கு ஏற்பாடு செஞ்சிட்டேன்.. உனக்கு கூட தெரியும் பாண்டி அந்த வீட்டை.. நம்ம ஜகஜ்ஜாலக்கில்லாடின்னு ஒரு படம் எடுத்தமே..  அந்த வீடு தான்..’

 

“அந்த வீடா? கீழ ஒரு பெரிய வீடு.. மாடில சைடு சைடு போர்ஷன்.. நடுவுல ஒரு கதவு பூட்டியே வச்சிருப்பாங்க.. ஆனா அங்க மத்த போர்ஷன்ல எல்லாம் யார் இருக்காங்கன்னு பார்த்துக்கிட்டியா தீரா..?”

 

“எல்லாம் விசாரிச்சிட்டேன் பாண்டி.. நாம அங்க ஷூட்டிங்க்கு போனப்போ ஒரு மாமி மாமா இருந்தாங்க இல்ல? இன்னும் அவங்க தான் அங்க கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்காங்களாம்.. ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல இந்த ரெண்டு வீடும் காலியா இருக்குன்னு சொன்னாங்க.. அதான் ஒரு போர்ஷன்ல மலரும் அவளுக்கு பாதுகாப்பா இன்னொரு போர்ஷன்ல இந்தரையும் தங்க சொல்லி இருக்கேன்..”

 

“என்ன சொல்ற தீரா..? இந்த நெலமைல இந்தரும் வெளியில தங்க போறானா..?”

 

“ஆமா பாண்டி.. மலர் தனியா இருக்க கூடாதுன்னு அவளுக்கு பாதுகாப்பா இந்தரை இன்னொரு போர்ஷன்ல தங்க சொல்லி இருக்கேன்.. ரொம்ப தப்பு பண்ணிட்டேன் பாண்டி.. அநியாயமா இந்தர் மேல சந்தேகப்பட்டு அவன் உயிரையே எடுத்துக்கிற அளவுக்கு அவனுக்கு கொடுமை பண்ணிட்டேன்.. அவன் திரும்பத் திரும்ப என் மேல நம்பிக்கை இல்லையான்னு கேக்குறப்போ எனக்கு உயிரே அறுந்து போகுது.. அதான் இப்ப அவன் மேல முழு நம்பிக்கை வச்சு மலர் நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் அவளை தள்ளி இருந்து பார்க்க சொல்லி இருக்கேன்.. அப்படியே அவன் படிப்பையும் முடிச்சு நல்லபடியா செட்டில் ஆனா போதும்..”

 

“இந்தர் உன் தம்பி தீரா.. தப்பு பண்ண மாட்டான்.. நீ தைரியமா இருக்கலாம்.. மலரை பார்த்துக்க சொல்லி இருக்கே இல்ல..? மலர் எப்படி போறாளோ அதே மாதிரி திரும்பி வருவா.. ஆனா ஒரு பெரிய டாக்டரா வருவா..”

 

“எனக்கும் தெரியும் பாண்டி.. நான் இந்தரை நம்பறேன்.. சரி பாண்டி.. வா போய் டீ குடிச்சிட்டு வரலாம்..” என்று அவனை அழைத்து திரும்ப அதே நேரம் பார்கவி மதியிடம் எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள்.. அவர்கள் அருகில் வந்த தீரன் “நீங்க இங்கேயே பேசிட்டு இருங்க.. நாங்க போய் டீ குடிச்சிட்டு உங்களுக்கும் வாங்கிட்டு வர்றோம்..”

 

“எனக்கு டீ வேண்டாம்.. எனக்கு காபி தான் வேணும்.. ஒரே தலை வலிக்குது..” என்க “சரி.. காஃபி வாங்கிட்டு வர்றேன்.. சாப்பிடுறதுக்கு வேற ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”

 

தீரன் கேட்க “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. நீங்க எதுவும் எனக்காக வாங்கிட்டு வர வேண்டாம்.. நானே கேண்டினுக்கு போய் வாங்கி குடிச்சுக்குறேன்.. இல்லனா நீங்க வாங்கிட்டு வர காபிக்கு நான் பணம் கொடுக்கிறேன்.. வாங்கிக்கங்க” என்று அவள் பட்டென சொல்ல தீரன் அவளை தீவிரமாய் முறைத்தான்..

 

அவள் கையைப் பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு அந்த பாதையின் ஒரு மூலைக்கு சென்றவன் அவள் கண்களுக்குள் ஊடுருவி “இங்க பாரு.. நான் உன்னை விரும்புறேன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு.. பாண்டி இந்தர் மலர் இவங்க எல்லாருக்கும் தெரியிற விஷயம் உனக்கு தெரியாம இருக்கிறது எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அப்படி இல்லனாலும் உன் கழுத்தில இப்பவும் நான் கட்டின தாலி இருக்கு.. நம்ம ரெண்டு பேரும் இன்னும் புருஷன் பொண்டாட்டி தான்..  உனக்கு ஒரு காபி வாங்கி கொடுக்க கூட முடியாத அளவுக்கு உன் புருஷன் ஒன்னும் பஞ்சத்தில அடிபட்டு இருக்கல.. இந்த பணம் கொடுக்கிற வேலை எல்லாம் இதுதான் கடைசியா இருக்கணும்.. சொல்லிட்டேன்..” அவளை முறைத்தப்படி சொல்லிவிட்டு “வா பாண்டி..” என்று அவனை இழுத்துக்கொண்டு அந்த மருத்துவமனையின் கேண்டீனுக்கு சென்று இருந்தான் தீரன்..

 

மதியின் முகத்தில் அவளையும் மீறி ஏதோ ஒரு சந்தோஷ ரேகை மின்னல் போல் வெட்டி சென்றது..

 

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த இந்தரும் தமிழ்வாணனும் மூன்றாவது நாள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்..

 

தமிழ்வாணன் தன்னுடைய பழைய வீட்டுக்கு மதியோடு சென்று விட இந்தர் மலரழகி ஏற்கனவே சென்று தங்கியிருந்த வீட்டில் இன்னொரு பகுதியில் தான் சென்று தங்கிக் கொண்டான்..

 

அந்த வீட்டின் கீழ் பகுதியில் இருந்த மாமாவும் மாமியும் தீரனும் மதியும் இல்லாத குறையை அவர்கள் இருவருக்கும் போக்கிக் கொண்டு இருந்தார்கள்.. 

 

அழைக்காமலேயே மலர் வீட்டிற்கு வந்து “ஏன்டி மா.. என்ன செஞ்சுண்டு இருக்காய்..?” என்று கேட்க சமையல் என்றால் என்னவென்றே தெரியாத அவள் யூடியூப் காணொளியை பார்த்து ஏதோ சமைக்க முயன்று கொண்டிருக்க “உனக்கு எதுக்குடீம்மா இந்த பாடு.. மாமி தான் இருக்கேனோன்னோ.. நீ பேசாம கீழ வந்து எங்காத்துலயே சாப்பிடேன்.. அங்க என்ன உனக்குன்னு தனியாவா எடுத்து வச்சு தளிகைப் பண்ண போறேன்.. எங்களுக்கு பண்ணும்போது உனக்கும் சேர்த்து பண்ணி வெக்க போறேன்.. எதுக்குடீம்மா இப்படி கஷ்டப்படுற? ஊர்ல இருக்கிற என் பேத்தி கூட உன் வயசு தான்.. என் தளிகைன்னா அவளுக்கு உசுரு..”

 

“இல்ல மாமி.. நானும் இதெல்லாம் செய்ய கத்துக்கணும் இல்ல..? இப்படியே சமையல் செய்யாமலேயே இருக்க முடியாது..”

 

“இன்னும் நாலு நாள்ல நானும் மாமாவும் என் பொண்ணாத்துக்கு போயிடுவோம்.. அந்த நேரத்துல நீ சமைக்க கத்துக்கோ.. நான் இருக்கும் போது என் ஆத்துல வந்து நீ சாப்பிடு.. சொல்றது புரியறதோ.. எதுக்குடி குழந்தை இவ்வளவு சிரமப்படறே?”

 

மாமி வாஞ்சையோடு அவள் தலையை வருடியபடி அழைக்க அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவர்கள் இருக்கும் போது அவர்கள் வீட்டில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொண்டாள் மலரழகி.. இந்தருக்கும் இதே போன்ற ஒரு அன்பு கட்டளையை மாமியும் மாமாவும் விதித்து விட அவனும் கீழே அவர்களோடு உண்பதை வழக்கமாக்கிக் கொண்டான்..

 

நால்வருக்குமே ஏதோ தாங்கள் ஒரு குடும்பமாக சேர்ந்து சாப்பிடுவது போல் தான் இருக்கும் ஒவ்வொரு நாளும்..

 

இங்கே தீரனோ இரண்டாவது நாளே  வீட்டில் தனியாக இருக்க முடியாமல் பாண்டியை அழைத்து புலம்பி தள்ளிக் கொண்டு இருந்தான்..

 

“பாண்டி என்னால முடியல பாண்டி.. இப்படி வீட்ல கொட்டு கொட்டுன்னு தனியா உட்கார்ந்து இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் பேசாம அந்த பழைய படத்துல ஸ்டண்ட் முடிக்க வேண்டியது இருக்குல்ல..? அதை போய் முடிச்சுட்டு வந்துடலாம்ன்னு பாக்குறேன்..”

 

“தீரா நீ என்ன விளையாடுறியா? மதி சிஸ்டர் உனக்கு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டு போயிருக்காங்க.. 15 நாளைக்கு அப்புறம் தான் நீ சூட்டிங்க்கு போகணும்னு.. நீ என்னடான்னா ரெண்டு நாளிலேயே ஷூட்டிங்க்கு போறேங்கற.. அதுவும் ஸ்டண்ட் பண்ண.. அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்..” என்று பேசிக் கொண்டிருந்தவன் சட்டென ஏதோ தோன்ற “இது இத்தனை நேரம் ஏன் எனக்கு தோணாம போச்சு? அடிபட்ட கையோட நீ ஷூட்டிங் போறேன்னு தெரிஞ்சா அதுவும் ஸ்டண்ட் பண்றேன்னு தெரிஞ்சா மதி சிஸ்டர் டென்ஷன் ஆவாங்கல்ல..?”

 

அவன் சொன்னதைக் கேட்டு தீரன் முகத்திலும் வெளிச்சம் பரவியது.. “அதானே.. இது ஏன் எனக்கு தோணாம போச்சு.. நாளைக்கு நான் அந்த ஷூட்டிங் போறேன்..”

 

“ஆமாம் தீரா.. நாளைக்கு நீ அங்க போ.. நான் மதி சிஸ்டருக்கு நீ போறதை தெரியப்படுத்தறேன்.. நடக்க வேண்டியது எல்லாம் தன்னால நடக்கும்.. இன்னும் 15 நாள் இருக்கு.. நம்ம புதுப்பட ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு.. உன் கை சரியாகற வரைக்கும் எப்படியாவது நீ மதி சிஸ்டரோட இருக்கறதுக்கு வழி பண்ணிடலாம்.. ஆனா அதுக்குள்ள உன் காதலை அவங்களுக்கு புரிய வைக்க வேண்டியது உன் பொறுப்பு..”

 

பாண்டி சொன்னதை கேட்டவன் “நிச்சயமா பாண்டி.. 15 நாள் இருக்குல்ல..? நிச்சயமா மதிக்கு என் காதலை புரிய வச்சிடுவேன்..”

 

“சரி.. நீ நாளைக்கு கிளம்பி அந்த ஷூட்டிங்க்கு போயிடு.. நான் மதி சிஸ்டருக்கு ஃபோன் பண்ணி சொல்றேன்..” சொல்லிவிட்டு சிரித்தவனை இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டு இருந்தாள் பார்கவி..

 

தீரன் அங்கு இணைப்பைத் துண்டித்து இருந்தான்.. “இவ எதுக்கு இப்படி முறைக்கிறா?” என்று பார்கவியை கேள்வியோடு பார்த்தவனிடம் “தீரா அண்ணா ஷூட்டிங் போகப் போறாங்க.. ஸ்டண்ட் பண்ண போறாங்க.. சார் அதை மதிக்கிட்ட சொல்ல போறீங்க.. அதுவும் ஃபோன் பண்ணி.. உடனே மதி படபடன்னு ஓடி வந்துருவா.. இதான் உங்க பிளானா?”

 

பார்கவி கேட்க “ஐயோ என்னோட சேர்ந்து சேர்ந்து நீயும் ரொம்ப ஸ்மார்ட் ஆயிட்டு இருக்க பாரு பவி.. சொல்லாமயே எல்லாத்தையும் புரிஞ்சுகிட்ட..” பார்கவியின் கன்னத்தைக் கிள்ளி பாண்டி சொல்ல அவன் கையை தட்டி விட்டவள் “நான் எப்பவுமே ஸ்மார்ட்டா தான் இருக்கேன்.. ஆனா நீயும் தீரா அண்ணனும் தான் மொக்கையா பிளான் பண்ணிட்டு இருக்கீங்க..”

 

அவன் சொன்னதும் முனுக்கென ரோஷம் வந்தது அவனுக்கு.. “எவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ பெரிய பிளானை போட்டு வச்சிருக்கோம்.. என்ன ரொம்ப சாதாரணமா மொக்கைன்னு சொல்லிட்ட..?”

 

“பின்ன.. தீரா அண்ணா ஷூட்டிங் போய் ஸ்டண்ட் பண்றாருன்னு நீ ஃபோன் பண்ணி சொன்னா மதி அதை நம்பனும் இல்ல..? நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் பண்ணி தான் இதை பண்றீங்கன்னு மதிக்கு புரியாதுன்னு நினைக்கிறியா..? இல்ல அப்படியே புரியாம மதி வந்தாலும் மிஞ்சி மிஞ்சி போனா என்ன நடக்கும்? அந்த ஷூட்டிங்ல ஸ்டண்ட் பண்ண விடாம தீரா அண்ணாவை திரும்பி வீட்டுக்கு அனுப்பிட்டு உன்கிட்ட நீ எடுக்கிற படத்துல அவரை ஹீரோவா நடிக்க வைங்கன்னு சொல்லிட்டு போயிருவா.. அவதான் தீரா அண்ணாவை லவ் பண்றேன்னு ஏற்கனவே சொல்லிட்டாளே.. அதனால உரிமையோட வந்து இதை சொல்லிட்டு போயிருவா.. இந்த பிளான்னால இதை தவிர வேற எதுவும் நடக்காது.. நீ நினைக்கிற மாதிரி 15 நாள் வீட்டுல கூட்டி கிட்டு போய் எல்லாம் வச்சுக்க மாட்டா”

 

“ஆமால… அப்ப மதி சிஸ்டர் வர மாட்டாங்களா?”

 

“சான்சே இல்ல.. அதுக்கு பதிலா நான் சொல்றதை பண்ணுங்க.. அலறி அடிச்சுட்டு மதியே ஓடி

வருவா..”

 

“என்ன..?” என்று பாண்டி கேள்வியாய் பார்க்க தன்னுடைய முழு திட்டத்தையும் சொன்னாள் பார்கவி..

 

தொடரும்..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!