லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 58

4.9
(8)

 

லவ்..❤️ லவ்..❤️ எத்தனை வயது? – 58

 

ஐந்து நாட்களுக்குப் பிறகு மதி தன் கல்லூரி வேலைக்கு செல்ல தொடங்கி இருந்தாள்.. இந்தர் மதியழகியின் வகுப்பிற்கு மட்டுமின்றி எல்லா வகுப்புகளிலும் தவறாமல் இருந்து கவனித்து எல்லா பேராசிரியர்களிடமும் நல்ல பெயர் வாங்கி இருந்தான்..

 

பாதி வகுப்புகளை தவறவிட்டே தேருவதற்குரிய மதிப்பெண்களை எடுத்தவனாயிற்றே… இப்போது கேட்கவா வேண்டும்..? எல்லா வகுப்பிலும் அனைத்து கேள்விகளுக்கும் அவனிடம் பதில் இருந்தது.. விரிவுரையாளர்கள் அனைவரும் அவன் மாற்றத்தை கண்டு ஆச்சரியமடைந்து போயிருந்தனர்..

 

பார்கவியும் மதியும் அதைப்பற்றி அவர்களுக்கான அறையில் பேசிக்கொண்டு இருந்த நேரம் பார்கவியின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது..

 

“பாண்டி என்ன இந்த நேரத்துக்கு கால் பண்ணி இருக்கான்..? சொல்லு.. பாண்டி என்ன விஷயம்?”

 

பார்கவி கேட்க.. இல்லை இல்லை.. அப்போதுதான் புதிதாக ஏதோ ஒரு விஷயத்தை கேட்பது போல அவள் நடிக்க அந்த பக்கத்தில் இருந்து பாண்டி “ஏன் உனக்கு விஷயம் என்னன்னு தெரியாதா? ரியாக்ஷனை அங்க காட்டுடி பொண்டாட்டி..” என்றான் புன்னகைத்தபடி.. 

 

அவன் அப்படி சொன்னதும் இதழுக்குள் தன் சிரிப்பை மதிக்கு தெரியாமல் மறைப்பதற்குள் படாத பாடுபட்டு போனாள் பார்கவி.. 

 

அதன் பிறகு அதிர்ந்து போன முகத்தோடு “என்னது தீரா அண்ணாவா..? என்ன ஆச்சு? தலையிலயா? அவங்களை தான் ஸ்டண்ட் பண்ண கூடாதுன்னு சொல்லி இருந்தாங்க இல்ல..? இப்ப எதுக்கு போனார் அவர்..? என்ன பாண்டி.. இப்படி சொல்ற..? உனக்கு தான் அவருக்கு கையில அடிபட்டிருக்குன்னு தெரியும் இல்ல..? நீயாவது தடுத்திருக்கணும் இல்ல..? இப்ப எப்படி இருக்காரு..?

ஓ.. அப்படியா.. எந்த ஹாஸ்பிட்டல்? நீ வந்து என்னை கூட்டிட்டு போ பாண்டி.. நான் தீரா அண்ணனை உடனே பாக்கணும்..”

 

அவள் பேசிக் கொண்டே போக இங்கே மதியழகிக்கோ அவள் பேசிய ஒவ்வொரு  வார்த்தைக்கும் முக பாவம் கொஞ்சம் கொஞ்சமாய் மாற பெரிய கலவரமே மூண்டு இருந்தது அவள் முகத்தில்..

 

“ஏ பவி.. என்னடி விஷயம்..? தீராக்கு ஏதாவது பிராப்ளமா?”

 

“சரி பாண்டி.. நான் ஃபோனை வைக்கிறேன்.. நான் அப்புறம் பேசுறேன் உன்னோட.. நீ வந்துடு உடனே..”

 

மதி பக்கம் திரும்பியவள் “மதி தீரா அண்ணா ரெண்டு நாளா அந்த பழைய படத்துல ஸ்டண்ட் பண்ண போயிருக்கிறார்.. அப்போ எதோ ஸ்டன்ட் ஆளுங்க கட்டையில அடிக்கிற மாதிரி ஒரு சீனாம்.. இவரு அவங்க அடிக்கிறதுக்குள்ள கையெடுத்து தடுக்கணும்.. ஆனா எடுக்குற நேரத்துல கை வலிச்சு அதனால அவரால தடுக்க முடியல.. கட்டை தலையில பட்டு கொஞ்சம் இல்ல.. நிறைய ரத்தம் போயிடுச்சாம்.. இப்போ ஹாஸ்பிடல்ல ஐசியூல இருக்காராம்..”

 

அவள் சொன்னதுதான் தாமதம்.. மதியின் முகம் இருண்டே போனது..

 

“எத்தனை தடவை படிச்சு படிச்சு சொல்லி இருப்பேன்.. 15 நாளைக்கு முன்னாடி போகாதீங்கன்னு.. இந்த மனுஷன் யாரு சொல்றதையாவது கேட்கிறாரா? பாரு.. இப்ப என்ன ஆச்சுன்னு.. பவி.. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத.. கொஞ்சம் நீ இருந்து என் கிளாஸ் எல்லாம் பார்த்துக்கிறியா? நீ சாயங்காலம் வந்து தீராவை பாரு பவி.. நான் இப்போ உடனே போய் அவரை பார்க்கணும்..”

 

படபடவென மது பேச “எனக்கு தெரியும் மதி.. நீ தீரா அண்ணா மேல உயிரையே வச்சிருக்கே.. அப்புறம் ஏண்டி உனக்கு இந்த வெட்டி பிடிவாதம்? சரி.. நீயே போயிட்டு வா.. லீவு சொல்லிட்டு நீ ஹாஸ்பிடலுக்கு போ.. நான் சாயந்திரம் வந்து தீரா அண்ணனை பார்க்கிறேன்..”

 

அவள் படபடவென என்ன செய்வது என்று தெரியாமல் தன் பையை எடுத்தவள் திரும்பவும் அதை கீழே வைத்துவிட்டு மறுபடியும் வேகமாய் முதல்வர் அலுவலகம் நோக்கி நடந்து பிறகு திரும்ப வந்து ஒரு பேப்பரையும் ஒரு பேனாவையும் எடுத்து விடுமுறை கடிதத்தை எழுத தொடங்க அவள் கைகளோ நடுங்கிக் கொண்டிருந்தது படபடப்பில்..

 

அவள் நிலையை பார்த்த பார்கவி மனதுக்குள் “உனக்கு எதுக்குடி இந்த பிடிவாதம்? இது தேவையா? மனசுல இவ்வளவு காதலை வச்சுக்கிட்டு.. இவளை…” கோபமாய் மதியை பார்த்தவள் “மதி எதுக்கு இவ்வளவு பதறுற? நீ ரொம்ப டென்ஷனா இருக்க.. இரு.. அந்த லீவு லெட்டரை நான் எழுதுறேன்.. நீ ஒரு சைன் பண்ணிட்டு போ.. இந்த பேப்பர்ல..” என்றாள்..

 

மதியும் அந்த காகிதத்தில் ஒரு கையெழுத்தை போட வேகவேகமாய் அதன் மேல் விடுமுறை கடிதத்தை எழுதிய பார்கவி அதை கொண்டு போய் முதல்வர் அறையில் தானே மதியின் சார்பாக கொடுத்துவிட்டு திரும்பி வந்து அவளை அழைத்துக் கொண்டு அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாள்..

 

மதியும் ஆட்டோவில் ஏறியவுடன் “அண்ணா ப்ளீஸ்.. கொஞ்சம் சீக்கிரம் போங்க அண்ணா..” என்க “ஏம்மா.. இதுக்கு மேல ஃபாஸ்டா போனா ஆக்சிடென்ட் தான் ஆகும்.. ஏம்மா இவ்வளவு படபடன்னு இருக்க.. யாருக்கு என்ன ஆச்சு?”

 

“அது.. என் புருஷன் அடிபட்டு ஹாஸ்பிடல் இருக்காருண்ணா..”

 

“ஓ.. உன் புருஷனை அவ்வளவு லவ் பண்ற போல.. இதோ இன்னும் அஞ்சு நிமிஷத்துல போய்டலாம் கவலைப்படாத கண்ணு..”

 

சொன்னபடி ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே அந்த மருத்துவமனையை அடைந்திருந்தார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.. அவருக்கு பணத்தை கொடுத்து விட்டு வரவேற்பறைக்கு வந்து தீரன் இருந்த அறையைப் பற்றி விசாரித்தவள் வேகமாய் படி ஏறி அவன் இருந்த அறைக்கு போக நடுவில் தடுக்கி கீழே விழுந்தாள்.. 

 

மேலிருந்து அவள் வருகிறாளா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள் பாண்டியும் தீரனும்..

 

அவள் வந்தது தெரிந்தவுடன் பாண்டி அவனை சென்று அவசர சிகிச்சை பிரிவிலிருந்த அறையில் படுக்க சொல்ல அதே நேரம் மதி கீழே படியில் தடுக்கி விழவும் “மதி..” என்று பதறி போய் வேகமாய் படி இறங்கி போக எத்தனித்தான் தீரன்..

 

அதற்குள் அவனை பிடித்து இழுத்த பாண்டி “அய்யோ தீரா.. என்ன பண்ணிட்டு இருக்க..? முதல்ல உள்ள போய் படு… மதிக்கு ஒன்னும் இல்ல.. நீ பதறி எல்லாத்தையும் சொதப்பி விட்டுறாத தீரா..”

 

அப்போதுதான் தான் என்ன செய்ய வேண்டும் என்று தெளிந்தான் தீரன்.

 

வேகமாக உள்ளே சென்று தலையில் கட்டோடு படுத்துக் கொண்டிருந்தான் அவன்.. 

 

எப்படியோ படி ஏறி வந்து அவன் இருந்த அறையை அடைந்த மதி வாசலில் பாண்டியை பார்த்து “அண்ணா அவரு..” என்க “உள்ளதான்மா இருக்கான்.. தலையில பலமா அடிபட்டு இருக்கு..”

 

அதைக் கேட்டவள் கோவமாக “ஏன்ணா அவரை தான் ஸ்டண்ட் பண்ண போக வேண்டாம்னு அவ்வளவு தூரம் சொல்லி இருந்தேன் இல்ல..? 15 நாளைக்கு குறைஞ்சு வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லி இருந்தேனா இல்லையா? நீங்களாவது அவரை தடுக்க கூடாதா..?” என்றாள்..

 

பாண்டி “என்னமா பண்ண சொல்ற? இப்ப அந்த வீட்ல இந்தரும் இல்ல.. தனியா எவ்வளவு நேரம் ஒரு மனுஷன் உட்கார்ந்து இருப்பான்.. நீயும் உங்க அப்பாவை கூட்டிட்டு உங்க பழைய வீட்டுக்கு போயிட்டே.. அவன் என்னதான் பண்ணுவான் சொல்லு.. அங்க வீட்ல தனியா இருக்கறதை விட இங்க வந்து நாலு மனுஷங்களோட இருந்தா மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு நெனச்சி இருக்கான்.. நான் ஏதாவது சொன்னா இதை சொல்லியே என் வாயை அடைச்சுடறான்.. எனக்கும் அவனை பார்க்க பாவமா இருக்குமா.. அவன் சொல்றதும் நியாயம் தானே?”

 

இப்போதுதான் தன் தவறு உரைத்தது அவளுக்கு.. அவன் கை சரியாகும் வரை அவனை பார்த்துக்கொள்வேன் என்று நான்கு நாட்கள் விடுமுறை எடுக்க தயாராக இருந்தவள் அவனை கோவத்தில் தனியாக விட்டுவிட்டு தன் தந்தையோடு தன் வீட்டிற்கு போனதில் எந்த நியாயமும் இல்லை என்று புரிந்தது அவளுக்கு..

 

“நான் போய் பார்க்கலாமா அண்ணா..”

 

“போம்மா… போய் பார்..” என்றான் பாண்டி..

 

உள்ளே போனவள் அவன் கையிலும் தலையிலும் கட்டோடு படுத்துக் கொண்டிருப்பதை பார்த்து கண்கள் குளமாக அவன் அருகில் ஓடி சென்று தலையை வாஞ்சையாய் வருடி “ஏன் தீரா..? ஏன் இப்படி என்னை கஷ்டப்படுத்துறீங்க..? உங்களை இப்படி பார்க்க கூடாதுன்னு தானே அவ்வளவு தூரம் நீங்க ஷூட்டிங்க்கு போகக்கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தேன்.. கடைசில கையில இருந்த அடியோட இப்ப தலையிலும் அடிபட்டுக்கிட்டு இருக்கீங்க.. என் மேல தான் தப்பு.. நான் உங்களை விட்டுட்டு போயிருக்க கூடாது..” கண்களில் கண்ணீர் வழிய துடித்துப் போயிருந்தாள் அவள் அவன் நிலையை பார்த்து..

 

மெல்ல கண் திறந்த தீரன் அவள் நிலையை பார்த்து சற்றே அதிர்ந்து தான் போனான்.. 

 

உயிர் போகும் வலியோடு அழுது கொண்டிருந்தவளை அவனால் காண முடியவில்லை.. அவன் கைகளோ அவள் அழுகையை நிறுத்த அவள் கண்களை துடைத்து ஆறுதல் சொல்ல பரபரத்தது..

 

மெல்ல “மதி மதி.. எனக்கு ஒன்னும் இல்ல மதி.. நான் நல்லா தான் இருக்கேன்..” என்க அப்போது உள்ளே வந்த பாண்டி “அய்யய்யோ தீரா சொதப்பிருவான் போல இருக்கே..” என்று எண்ணியபடி வேக வேகமாக அவர்கள் அருகில் வந்து “இப்படிதான்மா சொல்லிட்டு இருக்கான்.. எனக்கு ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல.. தலையில லேசா அடிபட்டு இருக்குன்னு.. ஆனா எவ்ளோ ரத்தம் போச்சு தெரியுமா? பலமா அடி விழுந்துச்சு.. பார்த்த எங்களுக்கே பொறி கலங்கி போயிடுச்சு..”

 

தீரனோ அவன் பேசியதை கேட்டு “டேய் ஓவரா பில்டப் கொடுக்காத டா.. அவளுக்கு ஏதாவது ஆயிரப்போகுது..” என்று மானசீகமாக கண் ஜாடையில் எச்சரிக்கை மணி அடித்தான் அவனுக்கு..

 

அவளோ அங்கேயே உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள்.. 

 

அவன் தோளில் தலை வைத்து “அய்யோ தீரா.. நான் உங்களை விட்டு போய் இருக்கவே கூடாது.. உங்களோடயே இருந்து உங்களை பார்த்துட்டு இருந்திருக்கணும்.. உங்களை தனியா விட போய் தானே இப்படி எல்லாம் ஆச்சு.. எல்லாம் என் தப்பு தான்..” என்று மொத்தமாய் நொறுங்கி அழுதவளை அதற்கு மேல் கண் கொண்டு காண முடியவில்லை தீரனால்..

 

“மதி அழாத மதி.. ப்ளீஸ்.. எனக்கு ஒன்னும் இல்ல மதி.. இங்க பாரு.. இங்க பாரு..” என்று அவன் தோள்மேல் படுத்திருந்தவளை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தவன் தன் தலையில் இருந்த கட்டை அவிழ்த்து அவனுக்கு அடிபடவில்லை என்று காண்பித்தான்..

அவ்வளவுதான்..

 

கண்ணீரில் கலங்கி இருந்த அவளின் கண்கள் சிவப்பேறி கோப நிறத்தை பூசிக் கொண்டன.. 

 

“அப்போ அடிபட்ட மாதிரி நடிச்சீங்களா? நடிச்சீங்களா?” என்று கேட்டபடி அவனை மார்பிலும் தோளிலும் அடி வெளுத்தவள் “உயிரே போயிருச்சு டா எனக்கு.. என்ன நெனச்சிட்டு இருக்க நீ..? என்னை போட்டு பாடா படுத்துற.. எவ்ளோ பதறி ஓடி வந்தேன் தெரியுமா? பார்கவியை கேளு.. உன்னை பார்க்கிற வரைக்கும் என் உயிரே என்கிட்ட இல்ல.. எவ்வளவு கொழுப்பு இருந்தா அடிபட்ட மாதிரி இப்படி நடிச்சிருப்ப..” என்று மறுபடியும் தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையை எடுத்து அதை வைத்து அவனை சரமாரியாக அவள் அடிக்க அவனோ அங்கிருந்து எழுந்து ஓடினான்..

 

 “அய்யோ மதி.. சொல்றதை கேளு.. ஒரு நிமிஷம்.. இரு இரு இரு..” என்று தடுத்துக் கொண்டிருக்க அவளோ அடங்காமல் மேலும் மேலும் அவனை அடித்துக் கொண்டே இருந்தாள்..

 

அந்த அறையின் மூலைக்கு மூலை ஓடியவன் பாண்டியை பார்த்து “டேய் பாண்டி காப்பாத்துடா..” என்க பாண்டியை திரும்பி பார்த்த மதி “ரெண்டு பேரும் சேர்ந்து பிளான் போடுறீங்களா?” என்று அவனையும் முறைக்க அவன் “அய்யய்யோ.. நான் எஸ்கேப்..” என்று சொல்லி அந்த அறை கதவை மூடிவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தே இருந்தான்..

 

மதியோ தீரனை துரத்தி துரத்தி அடித்துக் கொண்டே இருந்தவள் ஒரு நிலையில் மேலும் கீழுமாய் மூச்சு வாங்க இடுப்பில் கையை ஊன்றி அவனையே முறைத்துப் பார்த்திருந்தாள்..

 

அவனோ மெதுவாக சுட்டுவிரலை மேல் நோக்கி நீட்டியபடி அவள் முன்னால் கையை நீட்டியவன் “இங்க பாரு அடிக்காத.. நான் சொல்றதை ஒழுங்கா கேளு.. நீ உன் பாட்டுக்கு என்னை விட்டுட்டு போயிட்டே.. நான் உன்னை விரும்புறேன்னு சொன்னாலும் நம்பல.. எனக்கு அந்த வீட்ல தனியா இருக்க முடியல.. உன்னை எப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுன்னு தெரியல.. அதான்  இப்படி ஒரு நாடகம் போட வேண்டியதா ஆயிடுச்சு.. இதுல என் தப்பு மட்டும் இல்ல.. உன் தப்பும் இருக்கு.. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு..” அவன் சொல்ல சொல்ல அவளுக்கு இன்னும் அவள் மேல் அவன் தவறு என்று சொல்லவும் கோபம் உச்சிக்கு ஏறியது..

 

“சார் என்னை லவ் பண்ணுறீங்களா? லவ் பண்றீங்களா? லவ் பண்றீங்களா?” என்று சொல்லி மறுபடியும் அவன் அருகில் வந்து அவனை அடித்தவள் “அப்ப எதுக்குடா விவாகரத்து கொடுக்கிறேன்னு சொன்னே.. எப்படிடா உன்னால அந்த வார்த்தையை சொல்ல முடிஞ்சுது?” என்று அவன் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்கினாள்..

 

 மறுபடியும் சரமாரியாக அவள் அவனை அடி வெளுத்து வாங்க “என்ன மதி.. மரியாதை ரொம்ப குறையுது..?”  அவன் மெதுவாய் இழுத்தபடி கேட்க “சார் செஞ்ச வேலைக்கு மரியாதை வேற கொடுக்கணுமா மரியாதை.. இதோ கொடுக்கிறேன் வாங்கிக்கடா..” என்று அடிகளை மழையாய் பொழிந்தாள் அவன் மேல்..

 

“அய்யோ மதி..  நீ ப்ரொஃபசர் தான்.. அதுக்காக போட்டு இந்த அடி அடிக்காதடி.. இதுக்கு இந்த ஸ்டண்ட் அடிக்கிற பசங்களே தேவல போல.. பேசாம நான் அவங்க கிட்டயே போய் அடி வாங்கிக்கிறேன்..” 

 

அவளோ மறுபடியும் தீவிரமாக முறைத்தாள் அவன்..

 

“ஏம்மா இவ்வளவு ஆசையா பாக்குற..?”

 

“வேற எதுக்கு பார்க்கிறாங்க.. நல்லா இன்னும் எப்படி எல்லாம் மொத்தமா உன்னை வெளுக்கலாம்னு தான் யோசிக்கிறேன்..” என்று சொல்லி மறுபடியும் அவனை அடிக்க போக அவளின் இரண்டு கைகளையும் தன் கைகளால் சிறை பிடித்தவன் அவளை அப்படியே திருப்பி சுவற்றில் சாய்த்து “போதும் மதி.. நான் சொல்றதை கேளு.. நம்புடி.. நான் உன்னை நிஜமாகவே விரும்புறேன்.. உனக்கு தெரியும் இல்ல..? என் தம்பி மேல நான் உயிரையே வச்சிருக்கேன்.. அவன் மேல சத்தியமா சொல்றேன்.. உன்னை முதல் முதல்ல பார்த்த நிமிஷத்திலேயே என் உயிரில போய் உறைஞ்சுட்டடி நீ.. எனக்கானவ நீன்னு என் மனசு என்கிட்ட அடிச்சு சொல்லுச்சு.. ஆஞ்சநேயர் பக்தனா இருந்தவனை அப்படியே அந்தர் பல்ட்டி அடிக்க வச்சு உன் பக்தனா மாத்துனது நீ தான் மதி..”

 

அவளும் அவன் கைப்பிடியில் தன் கை கையை கொடுத்துவிட்டு உதட்டை பிதுக்கிய படி “இல்லை.. நான் நம்ப மாட்டேன்.. அப்போ இத்தனை நாள் ஏன் என்னை விரும்புறேன்னு சொல்லவே இல்ல.. இப்ப கூட நான் கேட்ட அப்புறம் தானே சொன்னே.. பொய் சொல்லாத.. போடா தீரா..”

 

“வரவர என்னடி மரியாதை ரொம்ப குறையுது.. சரி பரவால்ல.. நீ அப்படியே கூப்பிட்டுக்கோ.. அதுவும் கிக்கா தான் இருக்கு.. ஏன் உனக்கு தெரியாதா மதி..? இத்தனை நாள் நான் ஏன் உன்கிட்ட சொல்லலைன்னு.. நீ படிச்ச பொண்ணு ப்ரொஃபசர்.. நான் படிப்பு வாசனையே இல்லாதவன்.. முரடன்.. சண்டை போடுறவேன்.. எனக்கு  இங்கிலீஷ்ல நாலு வார்த்தை சேர்ந்தாப்ல பேச கூட வராது.. இதுல நான் எப்படி உன்கிட்ட தைரியமா நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்ல முடியும்? உன் தகுதி உன்னோட உயரம் இதெல்லாம் அப்படி உன் கிட்ட சொல்றதிலிருந்து என்னை முழுசா தடுத்துடுச்சு.. என்னை காதலிக்கிறதுக்கு உனக்கு என்னடா தகுதி இருக்குனு நீ கேட்டுட்டா.. அந்த பயம் தான் என் காதலை உன்கிட்ட சொல்றதுல இருந்து தடுத்துருச்சு..”

 

“ஆனா இப்ப சொல்றேன்.. ஐ லவ் யூ மதி… நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை.. என்னை விட்டுட்டு போயிடாத மதி.. எனக்கு நீ வேணும்.. வாழ்க்கை முழுசும் வேணும்.. இருப்ப இல்ல?”

 

ஏக்கம் நிறைந்த கண்களோடு அவன் கேட்டது தான் தாமதம் தன் காலை எக்கி அவன் இதழோடு தன் இதழை சேர்த்து இருந்தாள் பாவை அவள்..

 

தொடரும்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!