வதைக்காதே என் கள்வனே

4.1
(10)

கள்வன்-02

சூரிய தேவன் இன்று தன் கடமை முடிந்தது என்று ஓய்வெடுக்க சென்ற நேரம் இங்கோ தான் எங்கு இருக்கின்றோம் என்று கூட தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தாள் வெண்மதி. அவள் பக்கத்தில் இவள் எப்போது எழுவாள் என்று அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது லியா.

பஸ் சடன் ப்ரேக் போட்டு நின்றதில் ஒரு தடியனின் கை சந்தில் மாட்டிய லியாவோ அனைவரும் தங்களை சமப்படுத்திக் கொண்டு இருக்கும் போது தான் உயர் பிழைத்து விட்டோம் என்று எண்ணிக் பெருமூச்சு விடுகையில் கையில் துப்பாக்கியுடன் பஸ்ஸிற்குள் நுழைந்த ஆட்களை பார்த்ததும் ஏதோ தவறு நிகழப் போகிறது என்று உள்ளுணர்வு உந்த அப்படியே பம்மிக்கொண்டு வெண்மதியின் சுடிதாருக்குள் ஒழிந்து கொண்டது. அதனால் வெண்மதியை அந்த ஆடவன் இழுத்து செல்லும் போது லியாவை பார்க்க வில்லை. இப்போது அவன் கண்களில் பட்டால் லியாவின் ஆயசு காலம் இன்றோடு முடியுமா அல்லது நீடிக்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம். வெண்மதி தன் கண்களை மெதுவாக திறந்து பார்த்தாள். தான் எங்கே இருக்கின்றோம் என்று தெரியவில்லை. ஏதோ ஒரு பெரிய அறை போல இருந்தது. அந்த அறையை சுற்றி பார்வையை சுழல விட்டவளுக்கு அந்த அறை முழுவதும் வெள்ளை நிறமாக காட்சியளித்தது. பக்கத்தில் லியா இருப்பதை கண்டவள் கொஞ்சம் நிம்மதியானாள்.

“ஹே மதி என்னடி இவ்ளோ நேரம் கழிச்சு எழுந்திரிக்கிற..? நம்ம எங்க இருக்கிறோம் தெரியுமா..? நம்மளை கடத்திட்டு வந்துட்டாங்க அதாவது உனக்கு தெரியுமா..? இப்படி கும்பகர்ணி மாதிரி தூங்குற..? முதல்ல எந்திரிச்சு தொல..” என்று லியா கத்த, ஒரு கையால் தன் தலையை தாங்கியவாறு எழுந்து அமர்ந்தாள் வெண்மதி. லியா சொன்னதைக் கேட்டு தன் இரு முட்டை கண்களையும் அதிர்ச்சியாக விரித்தவள், என்ன சொல்ற லியா நம்மள கடத்தி இருக்காங்களா..? நம்ம ஒன்னும் அந்த அளவுக்கு பெரிய ஆள் இல்லையே.. நம்மளை ஏன் கடத்தனும்..?” என்று நேரம் காலம் தெரியாமல் இவள் பேசிக் கொண்டிருக்க, லியாவுக்கு எங்கே சென்று முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

அப்போது அவர்கள் இருந்த அறைக்கதவு சட்டென திறந்து கொண்டது. இருவரின் பார்வையும் ஒருசேர கதவை நோக்கி திரும்பியது. அங்கே மானை வேட்டையாடும் சிங்கம் போல கண்களில் வெறியோடு ஆஜானுபாகுவான ஆண்மகன் நின்று கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் லியா பம்மிக் கொண்டு வெண்மதியின் முதுகிற்க்கு பின்னால் ஒளிந்துகொள்ள வெண்மதிக்கும் உடல் உதறத் தொடங்கியது.

அந்த ஆடவனோ தன்னுடைய நீள கால்களை பெரிய எட்டுகளாக எடுத்து வைத்து வெண்மதியின் அருகில் வந்தவன், அவள் முதுக்கிற்கு பின் கையிட்டு லியாவின் கழுத்தை பிடித்து தூக்கினான்.

“யார் நீ..? நீ எப்படி உள்ள வந்த..? அதுவும் நீ பேசுற.. என்று தன் கம்பீர குரலால் லியாவை கிட்டத்தட்ட மிரட்டிக் கொண்டிருந்தான். பாவம் லியாவோ மூச்சு விட சிரமப்பட சட்டென அதை கீழே விட்டவன்,

“வாட் எவர் கெட் அவுட்.. இங்கிருந்து வெளியே போ..” என்றான்.

அதுவோ வெண்மதியை ஏக்கமாக திரும்பிப் பார்த்தது. வெண்மதியோ லியாவைப் பார்த்து தயவு செய்து என்னை இந்த அரக்கனிடம் தனியாக விட்டு விட்டு செல்லாதே என்பது போல பார்த்து வைத்தாள். இதைக் கண்டு கடுப்பேறிய அந்த ஆடவனும் தன் ஒற்றைக் காலை தூக்கி லியாவை ஒரு உதை உதைக்க அதுவோ “கீச்சு.. கீச்சு..” என்று புட்பால் உருண்டு ஓடுவது போல அந்த அறையின் கதவு வழியாக வெளியே குடுகுடுவென்று உருண்டோடியது.

இதை பார்த்துக்கொண்டு இருந்த வெண்மதி கண்ணீருடன் எழுந்து லியாவை நோக்கி ஓடத் தொடங்க சட்டென அவளுடைய பின்னங்கழுத்தை எட்டிப் பிடித்தான் அந்த ஆடவன். அவளோ வலியில் அலறத் தொடங்கினாள்.

“என்ன விடுங்க என்னை எதுக்கு இப்படி கடத்திட்டு வந்து சித்திரவதை பண்றீங்க..? நீங்க யாரு உங்களுக்கு என்னதான் வேணும்..? ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை விடுங்க.. வலிக்குது..”

“ஷட்டப் வாய மூடு.. ரொம்ப நடிக்காத. என்ன அதுக்குள்ள எல்லாம் மறந்து போச்சா..?”

“ஐயோ நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல..”

“என்னடி ஒன்னுமே தெரியாதவ மாதிரி நடிக்கிற..”

“ஆஆஆஆஆ..” என்று அவள் கதற கதற, இவனோ விடாமல் அவளுடைய தலை முடியை இன்னும் இன்னும் இறுக்கினான். அவளுக்கோ வலியில் கண்களில் கண்ணீர் வழிய, “ப்ளீஸ் சத்தியமா நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியல என்ன விட்ருங்க..”

“நீ மறக்கலாம் ஆனா நான் மறக்க மாட்டேன்டி.. அன்னைக்கு நடந்தது இன்னும் என் மனசுல இப்ப நடந்தது மாதிரி இருக்கு..”

“ஐயோஓஓ தயவு செஞ்சு புரிஞ்சுக்கோங்க நீங்க யாரு எத பத்தி பேசுறீங்கன்னு எனக்கு எதுவுமே புரியல..?” என்று மன்றாடினாள்.

“சரி சொல்றேன்.. ஆறு மாசத்துக்கு முன்னாடி.. டிசம்பர் 5 2022 இந்த நாள் உனக்கு ஞாபகம் இருக்கா..?” என்று அவன் கூறியதும் சற்று நேரம் யோசித்துப் பார்த்தவள், எதுவும் புரியாமல் மலங்க மலங்க விழித்த படி திரும்பவும் அவனையே பார்த்தாள். அந்தப் பார்வையில் அவனுக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் வர அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டான். அவளோ அந்த திடகாத்திரமான ஆணின் அடியின் வேகம் தாங்காமல் எதிரில் உள்ள டேபிள் மேல் அவள் தலை இடிக்க

“அம்மாஆஆ..” என்று கத்தியபடி விழுந்தாள். இரண்டே எட்டில் அவளை நெருங்கியவன், அவளுடைய தலைமுடியை கொத்தாக பிடித்து தூக்கி,

“என்னடி நியாபகம் இருக்கா..?” என்று கேட்க, அவள் திரும்பத் திரும்ப அழுது கொண்டுதான் இருந்தாலே தவிர பதில் ஏதும் உரைக்கவில்லை. அதே சமயம் இங்கே வெளியே அந்த ஆடவன் உதைத்த வேகத்தில் உருண்டு வந்து வெளியே விழுந்த லியாவோ பல பல பல்டி அடித்து நிதானமாக எழுந்து நின்றது. பாவம் அதன் தலையோ கிறுகிறுக்க தொடங்கியது. தன்னிலை பெற சில நொடிகள் எடுத்தது. அதன் பின் வெண்மதியை நினைத்து அந்த அறையின் வாயிலில் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தது. எதர்ச்சியாக அவ்வழியே வந்த பி.ஏ நந்தாவோ வீட்டில் ஒரு பறவை இருப்பதை பார்த்து, ‘இது எப்படி உள்ள வந்தது..?’ என்று யோசித்து கொண்டே வந்தவன் லியோவை பார்த்து, “ஹேய் சூச்சு சூச்சு போ..” என்று விரட்ட அதைக் கேட்ட லியாவுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது. நந்தாவின் பக்கம் திரும்பி “யாரை பார்த்து சூச்சு சூச்சு போக சொல்ற..? எனக்கு வரல உனக்கு வந்தா நீ போ..” என்று அவனிடம் சண்டைக்கு சென்றது. நந்தாவோ லியா பேசுவதை பார்த்து ஆச்சரியமாக வாயை பிளந்து நின்றான்.

“டேய் வாயை பிளந்து நிக்காத ஏரோபிளேன பார்க் பண்ணிட போறாங்க எவ்ளோ பெரிய வாயி.. அத க்ளோஸ் பண்ணுடா மொதல்ல..” என்று விடாமல் அவனை வாரியது லியா. லியா சொன்னதும் சுயநினைவடைந்த நந்தா, “ஹேய் நீ பேசுவியா..? ஆச்சரியமா இருக்கே..” என்று கேட்டு வைக்க,

“ஏன் நான் பேச கூடாதா..? எனக்கும் வாய் இருக்கு இல்ல.. அப்ப பேச தான் செய்வேன்..” என்று சொல்ல, “அது சரி யார் நீ..? இங்க என்ன பண்ற..? முதல் இங்க இருந்து வெளியே போ..” என்று நந்த சத்தம் போட,

“அதை சொல்றதுக்கு நீ யாருடா..? முதல்ல நீ வெளியே போடா டால்டா..” என்று லியா நந்தாவுடன் மல்லுகட்ட அவனும் விடாமல் பேசினான்.

“நான் யார் தெரியுமா உனக்கு..?” என்று நந்தா கேட்க,

“ஏன் நீ யாருன்னு உனக்கு தெரியாத..? இத்தனை நாள் கோமால இருந்தியா..?” என்றது லியா.

‘அடச்சே இன்னைக்கு யார் முகத்துல முழிச்சேன். இந்த தம்மா துண்டு கிளி கிட்ட போய் இப்படி பல்ப் வாங்குவதா இருக்கே..’ என்று லியாவை மேலும் கீழுமாக பாத்தபடி நந்தா யோசித்துக் கொண்டிருக்க, லியாவோ வெண்மதியை பற்றி யோசிக்கத் தொடங்கியது. 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.1 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!