காத்திருப்பு : 03
வெற்றிவேல் கடித உறையை பிரித்துப் பார்க்குமாறு சொன்னதும் அதைப் பிரித்துப் பார்த்த வதனா அதிர்ச்சியானாள்.
அப்பிடி என்ன இருந்தது அதில்?
வந்தனாவுக்கான இடம்மாற்றம் அதுவும் எங்கே எழில் கொஞ்சும் மலையகமான ஹற்றனிலே.
“என்ன சேர் இது எதுக்காக இந்த மாற்றல்?”
“இங்க பாரம்மா அங்கே நம்ம கம்பனியில இருக்கிற கலையரசி, அவங்களோட பிள்ளை இங்க மாற்றலாகி வரப்போறாங்க….. அவங்களோட இடத்திற்கு நீ போகணும். நீ அங்க போனா நல்லா இருக்கும் என்று நினைச்சன் மா அங்க உனக்கு சம்பளமும் அதிகமாக குடுக்க சொல்லியிருக்கிறன். நீ என்னமா சொல்ற ?”
“சேர் நான் கொஞ்சம் யோசிச்சித்து சொல்லட்டா?”
“சரிமா வேலை முடிஞ்சி போகும் போது சொல்லிட்டுப் போமா”
“சரி சேர் நான் என்னோட இடத்துக்கு போறன்.”
“சரி வதனா நல்ல முடிவா சொல்லு.”
“ம் வாறன் சேர்.” என்றபடி தனது இருக்கையில் வந்தமர்ந்தாள் வதனா.
தலையில் கைவைத்து யோசிக்கலானாள்.
அவரு என்னோட இல்லாட்டியும் அவருக்குப் பக்கத்தில இருக்கிற ஊர்ல இருக்கிறது அவரோடையே இருக்கிற மாதிரி இருக்கு இப்ப இங்க இருந்து ஹற்றன் போக ஆறு மணித்தியாலம். நாம ஏன் அங்க இங்க என்று அலையணும் அவரிட்டே போனா என்ன ? என வதனா மனம் கேட்டது. மறு மனமோ சில பழைய நிகழ்வுகளை கண் முன்னே காட்டியது.
“நீ ஒன்றும் தெரியாத பட்டிக்காடு உன்ன கல்யாணம் பண்ணிட்டு என்னோட friend எவ்வளவு கஸ்ரப்படுறான் நீ போனாத்தான் அவன் நிம்மதியா இருப்பான். ” என்றாள் சூர்யாவின் பல்கலைக்கழகத் தோழி கீர்த்திகாவின் குரல் காதில் ஒலித்தது.
மனம் இரண்டாகப் பிரிந்து அவளை மேலும் குழப்பியது.
“அவரு நல்லா இருக்கணும் என்று தானே நான் வந்தனான் இப்ப திரும்ப போய் அவரோட நிம்மதியை கெடுக்கணுமா தேவையில்லை. ”
“அப்ப ஊர விட்டுட்டு போறியா?”
“பின்ன என்ன செய்ற போகத்தான் வேணும்”
“அவரே உன்ன தேடி வருவாரு என்று சொன்னியே”
“சொன்னனான்தான் ஆனா அவரு இந்த நாலு வருசம் வரலையே . கண்ல படாதது கருத்தில நிலைக்காது என்று சொல்லுவாங்க அப்பிடி அவரும் என்ன மறந்துட்டாரு போல”
“அவரு வருவாரு வருவாரு என்று ஒவ்வொரு நாளும் பாத்துத்து இருக்கிற நீயா இப்பிடி சொல்ற?”
“ஆமா ……நான் தான் சொல்றன். இவளவு நாளும் பக்கத்தில இருந்தன் தேடி வரல இனிமேல் தான் வரப்போறாராக்கும். அங்கபோனா சம்பளமும் கூட கிடைக்கும் ஆதிய நல்லா பாத்துக்கொள்ளலாம். அதனால நான் அங்க போறன்.இனி எதையும் சொல்லாத” என்று தனது மனதை அடக்கினாள் வதனா.
வாங்க சூர்யாவைப் பார்க்கலாம்……
சூர்யா தனது P.A வாசுதேவனோடு பேசிக் கொண்டிருக்கின்றான்.
“சொல்லுங்க வாசு (வாசுதேவன்) ஹற்றன்ல நம்மளோட புது கம்பனி ஆரம்பிக்கிறதில ஏதாவது பிரச்சினையா?”
” இல்ல சேர்..”
“வாசு நாம அங்க வாங்கின கம்பனி பேரென்ன?”
“N.S.K கம்பனி சேர்”
( எல்லாரும் V.K கம்பனியதானே நினைச்சிருப்பீங்க )
“ok வாசு நீங்க வெள்ளிக்கிழமையே அங்க போய் வேலைய பாருங்க நான் திங்கள் கம்பனிக்கு வந்திடுவன்.”
“ok சேர் நான் வெள்ளிக்கிழமை நைட்டுக்கு ட்ரை ல போறன் சேர் அப்போதான் சனிக்கிழமை காலையிலே வேலையை ஆரம்பிக்கலாம்”
“சரி வாசு இன்னைக்கு ஏதும் meeting இருக்கா?”
“இல்ல சேர் இன்னைக்கு evening free தான் சேர்.”
“ok வாசு அப்ப நீங்க போய் வேலைய பாருங்க ”
“ok சேர்” என்றவாறு தனது வேலையைச் செய்ய சென்றான் வாசு.
மதுரா இல்லத்தில்……………..
“மதி…… மதி……… வேகமா வா.”
“ஏன் இப்பிடி கத்துறீங்க” என்றபடி வந்தார் மதி.
“இங்க பாரு தேவி லைன்ல இருக்கிறாள் உன்கிட்ட என்னவோ சொல்லணுமாம்.” சொல்லியபடி மனைவியிடம் போனைக் கொடுத்தார் குமார்.
“கடவுளே காலைலேய பேசணும் என்று நினச்சன் வேலையால மறந்திட்டேன். நீங்க ஞாபகப்படுத்தியிருக்கலாமேங்க” என்றபடி போனை வாங்கினார் மதி.
“தேவி எப்பிடிடா இருக்கிறா? தீராக்குட்டி (நட்சத்திரா) எங்க? மாப்பிள்ளை எங்க?
“அம்மா உனக்கு அவங்களை பற்றி கேக்கணும் என்ற பாசம் இருந்தா நீ போன் பண்ணி கேட்க்கணும். அதவிட்டுட்டு நான் எடுத்த போனுல நீ விசாரிக்க கூடாது.”
” ஏன்டி இப்ப கத்துறா வேலை செஞ்சிட்டு இருந்தனான் அதனால உனக்கு போன் எடுக்க மறந்திட்டன். விடுடி”
“சரி சரி நான் சந்தோசமா இருக்கிறதால உன்ன விடுறன். எல்லாரும் இங்க நல்லா இருக்கிறாங்க.நான் மட்டும் நல்லா இல்லை அம்மா”
“ஏன்டி உனக்கென்ன மாப்பிள்ள உன்ன நல்லா பாத்துக்கொள்வாருனு என்று எங்களுக்குத் தெரியும். பிறகு உனக்கு என்னடி.”
“அவரு உங்கள விட நல்லாதான் பாத்துக்கிறாரு. அவரோட புள்ளதான் கஸ்ரப்படுத்துதுமா.”
“நட்சத்திரா அமைதியான புள்ளதானே.”
“அவள் அமைதிதான் ஆனா அவளுக்கு வரப்போற தம்பிதான் என்ன கஸ்ரப்படுத்துறான்மா”
“ஏய் அவளுக்கு எங்கடி தம்பி இருக்கு …….. தேவிமா உண்மையாடா?”
“ஆமா அம்மா இரவுதான் hospital போயிட்டு வந்தனாங்க” என்றாள் வெட்கத்துடன்.
“சந்தோசம்டா செல்லம். நீ கவனமா இரு.அங்க கஸ்ரம் என்றா வீட்ட வந்திரு சரியாடா”
“சரிமா அப்பாட்டயும் அண்ணாட்டயும் நீயே சொல்லுமா. நான் பிறகு உனக்கு போன் எடுக்கிறன்.”
“சரிடா கவனமா இரு.”
“என்னங்க நம்மட தேவிமா மாசமா இருக்கிறாளாம். கேட்ட உடனே எவ்வளவு சந்தோசமா இருக்கு”
“சந்தோசம்தான் மதிமா சூர்யா வாழ்க்கை தான் இப்பிடி போயிட்டு தேவிமா மட்டுமென்றாலும் நல்லா இருக்கட்டும்டா. ”
“ஏங்க இப்பிடி சொல்றீங்க சூர்யாவும் நல்லா இப்பான்.”
“வதனா அவனோட இருந்தாத்தான் அவன் நல்லாயிருப்பான். அவன் அவள தேடுறானே இல்ல. அவள் எங்க இருக்கிறாளோ.”
“வதனா சீக்கிரமா வந்திருவாள். கவலப்படாதீங்க.”
“உன்னோட வாக்கு பலிக்கட்டும் மதி” நான் சதாசிவத்த( பக்கத்து வீட்டுக்காரர்) பாத்திட்டு வாறன்.”
“சரிங்க.”என்றவாறு சமையலறைக்குள் தஞ்சமடைந்தார் மதி.
தேவி வீடு……………..
“ரதி ( கமலேஷ் தேவியை ரதி என்று அழைப்பான்) தீரா நேர்சரில இருந்து வாறத்துக்கு நேரம்இருக்கா இல்ல வாற நேரமா?”
“இல்லங்க வர நேரம் இருக்கி ஏன்?”
“சும்மாதான் கேட்டனான்.எனக்கு கோப்பி போட்டு எடுத்துத்து றூமுக்கு கொண்டுவாடா.”
“சரிங்க.”
“கோப்பியுடன் அறைக்குள் நுழைந்தவள் கணவனைக் காணாது தேடினாள். கமலேஷ் பால்கனியில் நின்றிருந்தான். அங்கு வந்தவள் கோப்பியை மேசையில் வைத்தாள்.
கணவனருகில் சென்று பின்னிருந்து கட்டிக்கொண்டாள். அவன் தன் கைகளை பின்னால் கொண்டு அவளை தனக்கு முன் நிறுத்தி அணைத்துக்கொண்டான்.
அவளை அணைத்தவாறே பேசத்தொடங்கினான்.
“ரதி… ரொம்ம நன்றிடா. எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு என்று உனக்கு தெரியுமா?”
“தெரியும்க உங்களைப் போல நட்சத்திரா தனி ஒரு புள்ளயா இருக்க கூடா என்று நினச்சீங்க இப்ப சந்தோசம்தானே டாக்டர் சார்.” என்றாள் கணவனின் மார்பில் வசதியாக சாய்ந்தவாறு.
“ரொம்ப..” என சொல்லி அவனவளின் உச்சியில் முத்தமிட்டான். அவளை விட்டு விலகியவன் தரையில் மண்டியிட்டு தன் உயிர் இருக்கும் அவளின் மணிவயிற்றில் முத்தமிட்டான். பின் மீண்டும் அணைத்தான் அவளை.
தனது தோழில் ஈரத்தை உணர்ந்தவள். “அத்தான் (உணர்ச்சிவசப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும்.) என்ன நடந்திச்சு இப்போ?என்றவாறு அவனது முகத்தை கைகளில் தாங்கினாள்.
“அம்முமா( உணர்ச்சிவசப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும்) அம்முமா…எனக்கு குற்றஉணர்ச்சியா இருக்குடா. என்றவாறு அழுதான்.
“அத்தான் ஏன் இப்பிடி சொல்றீங்க? நீங்க என்ன செஞ்சனீங்க.?”
“இல்லடா எண்ட உயிர் நண்பன் தனிமரமா நிக்கீறான். நான் இப்பிடி சந்தோசமா இருக்கிறது கஸ்ரமா இருக்குடா.”
“அப்பிடி இல்ல அத்தான். எல்லாம் சீக்கிரம் சரியாயிடும். எனக்கு வதனா அண்ணி மட்டுமில்ல உயிர்த்தோழிங்க. அவள் குழந்தைப் பிள்ளை போலங்க தனிய எங்க கஸ்ரப்படுராளோ. அண்ணாவும் தேடுறாரே இல்ல. அவள் ஏன் என்கிட்ட கூட சொல்லாம போனாளோ தெரியா. எல்லாம் சீக்கிரமா சரியாகிடனும். ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கிறதைப் பார்த்தா எனக்கும் கஸ்ரமா இருக்கு அத்தான். ” என்றவாறே கண் கலங்கினாள் தேவி.
“ஏய்… நீ இந்த மாதிரி நேரத்தில உணர்ச்சிவசப்படக் கூடாடா பிளீஸ்டா அம்முமா.”
“நீங்க கஸ்ரப்படுறத பாக்கக்க எனக்கும் கஸ்ரமா இருக்கு அத்தான்.”
“நான் கவலப்படல சரியா சீக்கிரமா வதனா நம்மள்ட்ட வந்திருவாள். நாம சந்தோசமா அவள வரவேற்ப்பம் சரியாடா? என்றான்.
(அவர்களுக்குத் தெரியாது அவள் வரும்போது யாரும் அவளை வரவேற்க மாட்டார்கள் என்று)
“சரி அத்தான்.” என்றவள் கணவனின் நெற்றியில் இதழ் பதித்தாள்.
“அம்முமா” என்றவன் அவளது வேலையை தனதாக்கினான். முன்னேறச் சென்றவனை தடுத்தாள் தேவி.
“அத்தான் தீரா வாற நேரம்.”என்றவளது பேச்சை காதில் வாங்காது அவளை அறைக்குள் தூக்கிச் சென்றான்.
அங்கு நாம் செல்லக் கூடாது வாங்க V.K கம்பனிக்கு போய் வதனாவைப் பார்ப்போம்
வேலை நேரம் முடிவடையும் நேரம் முதலாளியின் கதவைத் தட்டினாள்.
” உள்ள வா வதனா. உட்க்காரு சொல்லுமா என்ன முடிவு எடுத்திருக்கிற?
“சேர் நான் அங்க போறன்.”
“நல்லம் மா அங்க நீ மேனேஜராக பதவியுயர்ந்து போறமா என்ன சந்தோசமாமா?”
“சேர் நான் மேனேஜரா? அதுக்குரிய தகுதி என்கிட்ட இருக்கா சேர்?”
” இருந்ததனாலதான் உன்னை பதவியுயர்வு செஞ்சிருக்கிறன். பயப்படாதம்மா அங்க உனக்கு தனி வீடு தருவாங்க.”
“சரி சேர் எப்ப போகணும்? ”
“திங்கட்கிழமை நீ கம்பனில வேலைக்கு சேரணும்மா”
“சரி சேர் அப்ப நான் வெள்ளிக்கிழமை நைட்டுக்கு ட்ரை ல போறன்.அப்போதான் ரெண்டு நாளும் வீட்ட ஒழுங்குபடுத்தலாம்.”
“சரிமா இன்னைக்கு புதன்கிழமை இனி நீ வேலைக்கு வரவேண்டாம். அங்க போறத்துக்கு தேவையானது எல்லாம் எடுத்து வைம்மா. இந்தா உன்னோடு இந்த மாத சம்பளம்” என்று சம்பளத்தைக் கொடுத்தார்.
” நன்றி சேர்.”
“என்ன உதவி என்றாலும் எனக்கு போன் பண்ணுமா”
“சரி சேர். நான் போயிட்டு வாறன்.”
“கவனமா இரும்மா வதனா. ”
“சரி சேர்.” என்றவள். தனக்கு நிழலாக இதுவரை இருந்த கம்பனியை பார்த்தவாறு விடைபெற்றாள்.
நாட்கள் அதன்போக்கில் செல்ல வெள்ளிக்கிழமை காலை மகனுடன் சென்று நேர்சரியில் சொல்லிவிட்டு மகனை வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
“ஆதிக்கண்ணா நாம இன்னைக்கு நைட்டுக்கு ட்ரை ல போகணும் டா. உனக்கு okயா கண்ணா?”
” உண்மையாவா அம்மா ? எங்க போறம் நாம?”
“அது அம்மாக்கு வேலையை வேற இடத்துக்கு மாத்திட்டாங்கடா அதுதான் வேற ஊருக்கு போறோம்டா”
“என்னம்மா என்னோட பிரண்ட்ஸ் இங்கதானேமா இருக்கிறாங்க”
“அங்க உனக்கு புது பிரண்ஸ் கிடைப்பாங்கடா”
“சரிமா நாம எந்த ஊருக்கு போறம்?”
“ஹற்றனுக்குடா கண்ணா அங்க குளிரா இருக்கும்டா”
” சரிமா உனக்கு எப்பிடிமா தெரியும். நீ போயிருக்கிறியாமா?”
” ஆமாடா கண்ணா உங்க அப்பா கூட்டிட்டுப் போனவருடா”
(இங்க climate நல்லா இருக்கு வது நாம மாசத்துக்கு ரெண்டு தரம் வரலாம்டா ) என்ற குரல் கேட்டது. தலையை அசைத்து நினைவை விரட்டினாள்.
“அம்மா நான் உனக்கு help பண்ணவாமா?”
“இல்லடா தங்கம் அம்மா செய்றன். நீங்க பார்த்துகிட்டு இருங்கடா.”
“சரிமா.”
மாலை 7.00க்கு ட்ரெயின் . 6.30க்கே கொழும்பு புகையிரத நிலையத்திற்கு வந்து விட்டாள். வழக்கம்போல கூட்டமாக காணப்பட்டது நிலையம். மகனை ஒரு கையில் தூக்கியவாறு மறு கையில் பெட்டியுடன் வந்திருந்தாள்.
மகன் கூட்டத்தை பார்த்தபடி இருந்தான்.
அவளோ முதன் முதலில் தான் இங்கே வந்ததை நினைவுபடுத்தியது. மனம் அதை நினைக்க மறுத்தது. நினைவுகளுக்குள் மூழ்க சென்றவளை மகனது அழைப்பு நிறுத்தியது.
“அம்மா அம்மா ட்ரெயின் எப்பமா வரும்?”
“இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திரும்டா?”
வாங்க S.R கம்பனிக்கு போவோம்…..
“வாசு என்ன time train?”
” 7.00க்கு சேர். ”
“ok வாசு இப்ப போனாத்தான் அளவா இருக்கும். வாங்க வாசு நான் உங்களை விட்டுட்டுப் போறன்.”
“பரவாயில்லை சேர் நான் taxiக்கு சொல்லிட்டன் வந்திட்டு . நான் போயிட்டு வாறன் சேர்”
“ok வாசு takecare போயிட்டு போன் பண்ணு”
“ok சேர் bye”
வாசுவும் புகையிரத நிலையம் வரவும் புகையிரதம் வரவும் சரியாக இருந்தது.
வதனாவும் ட்ரெயினில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்தாள். அவளின் எதிர்ப்புறம் வந்தமர்ந்தான் வாசு.
ஊரைவிட்டுச் செல்லும் போது அவள் உயிரானவனை விட்டுச் செல்கிறோமே அவனிருக்கும் ஊரிலிருந்ததாலோ அவள் இவ்வளவு நாளும் பாதுகாப்பை உணர்ந்தால்.ஆனால் இன்றோ ஊரை விட்டு உயிரானவனை விட்டு செல்வது அவள் உயிரே போவதைப் போல இருந்தது. ஒருவித பாதுகாப்பின்மையை உணர்ந்தாள். விழிகள் நீரால் நிரம்பின. இறுதியாக ஒரு முறை அவனைப் பார்க்க மாட்டோமா என எண்ணி மனதினுள் இறைவனை வேண்டினாள்.
அவளின் வேண்டுதல் இறைவனை அடைந்தது. புறப்பட்ட ட்ரெயின் சில நிமிடங்களில் நிறுத்தப்பட்டது. காரணம் அங்கு சூர்யா வந்துகொண்டிருந்தான்.
காத்திருப்புத் தொடரும்…………….
சூர்யா ஏன் அங்கு வந்தான்?
நாயகன் நாயகி சந்திப்பு நிகழுமா??
Interesting Akka ❤️
Thank you da😊
சூப்பர் டா திவி மா❤️❤️❤️❤️