காத்திருப்பு : 05
கதவைத் திறந்த சூர்யா பேச்சற்று நிற்க காரணம் அங்கு நின்றிருந்த கீர்த்திகா.
“hi good morning சூர்யா”
“hi good morning கீர்த்தி”
” என்ன சூர்யா வீட்ட வந்தவங்கள உள்ள கூப்பிட மாட்டியா ?”
” ஆ….அப்பிடி இல்ல நாலு வருஷத்துக்குப் பிறகு பார்க்கிறன் தானே அதுதான் அதிர்ச்சி உள்ள வா”
“சூர்யா எங்க யாரையும் காணவில்லை…. எங்க வதனா?”
“அதைப் பிறகு பேசலாம்… நீ போய் ரெஸ்ட் எடு நான் ஜோக்கிங் போயிட்டு வாறன் ”
“ok சூர்யா”என்றபடி விருந்தினர் அறைக்குச் சென்று கதவை அடைத்தவள். கலகலவென சிரித்தாள்.
(சூர்யா எனக்கு எல்லாம் தெரியும் உன்னோட பொண்டாட்டி உன்ன விட்டுட்டு போனது எல்லாமே.கொஞ்சநாள் வெளிநாட்டில இருந்ததால யாரோடையும் பேச முடியாம போயிட்டு இங்க வந்து மூணு நாள்ல உன்ன உன்னோட பொண்டாட்டி விட்டுட்டு போனது தெரிஞ்சுதான்டா நான் வந்திருக்கிறன்.)என நினைத்தவள் முகம் கொடூரமானது. குளித்து விட்டு வந்து உறங்க ஆரம்பித்தாள்.
ஜோக்கிங் முடிந்து சூர்யா வரவும் மதி வரவும் சரியாய் இருந்தது.
“அம்மா இன்னைக்கு நம்மளோட வீட்ட ஒருத்தங்க வந்திருக்கிறாங்க அது யாரென்று சொல்லுங்க?”
“யாருடா அது ?”
“என்னோட படிச்ச கீர்த்திகா மா ”
“ஓ அந்த பிள்ளையா? என்கூட எல்லாம் நல்லா பேசுவாளேடா”
“அவள்தான் அம்மா நேரத்தோட வந்திட்டாள் நான்தான் நம்மளோட கெஸ்ட் றூம்ல தங்க சொல்லிட்டுப் போனேன்.”
“சரிடா நீ குளிச்சிட்டு வாடா சாப்பிட நான் கீர்த்திக்கு பிடிச்சது செய்றன்”
“ok மா”
சாமிமலை……..
“அண்ணா இன்னும் நிறைய நேரம் போகணுமா?”
“இல்லடா பத்து நிமிசம் தான் ஆனா இங்க road வளைவு அதிகம் அதனால நேரம் போகும்.”
“நீங்க இல்லனா கஸ்ரமா இருந்திருக்கும் அண்ணா”
“”அதுதான் நான் இருக்கிறனேமா ”
“ஆதி எழும்ப நேரமாகுமா மா?”
“இல்லண்ணா வழமைக்கு நேரத்துக்கு எழும்பிருவான் இன்னைக்குத்தான் நேரம் எடுக்குது.”
வண்டி சாமிமலையில் அவர்களது குடியிருப்பில் வந்து நின்றது.
“சந்திரா கவனமா இறங்கு ஆதிய என்னட்ட தா ” என்று வண்டியிலிருந்து முதலில் இறங்கிய வாசு ஆதியை தான் வாங்கிக்கொண்டான்.
இறங்கிய சந்திரா ஆட்டோக்கு காசு குடுப்பதற்கு “எவ்வளவு தரோணும்?” என்றாள் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு குரலிலும் கடுமையைக் காட்டி. ஒரு நிமிடம் அதிர்ந்தான் வாசு சந்திராவின் குரலில் ஏன் இத்தனை கடுமை என்று.
“நான் குடுக்கிறன் சந்திரா ”
“வேணாம் அண்ணா நான் குடுக்கிறன். எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கிறீங்க பரவால்ல அண்ணா”
(இப்போது குரலில் கடுமை இ்ல்லை.)
“என்னமா பிரிச்சிப்பாக்கிறியா? நீ சும்மா இரு நான் குடுக்கிறன்.”
“வேணாம் அண்ணா கடன் அன்பை முறிக்கும்”
“அப்ப நீ குடுத்தா மட்டும் எனக்கு கடன் இல்லயா?”
“sir madam ரெண்டு பேரும் அரைவாசி அரைவாசி காசப் போட்டு என்னோட காசத் தாங்க” என்றார் ஆட்டோக்காரர்.
“சரி “என்றவாறு இருவரும் சேர்ந்து காசைக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.
“சந்திரா முதல் உன்னோட வீட்ட போய் எல்லாத்தையும் சரிசெய்வம்.நீ தனிய செய்ய கஸ்ரமா இருக்கும். வா”
ஏனோ அவளுக்கு மறுக்கத் தோன்றவில்லை.
அவள் சூர்யாவை விட்டு வந்ததிலிருந்து கோபத்தின் முழு உருவானாள். ஆண்களோடு வீணாக பேச மாட்டாள்.
குழந்தையுடன் அவள் தனியே இருப்பதைப் பார்த்த பலர் அவளை நெருங்க முனைந்தனர். அவர்களை தன் பார்வையினாலும் கோபத்தினாலும் நெருங்க விடவில்லையவள்.
ஆனால் வாசுவிடம் அப்பிடி இருக்க அவளுக்குத் தோணவில்லை . வாசுவைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு வேறொருவரின் ஞாபகம் வந்தது.
(யாரின் ஞாபகம்?)
வீட்டினுள் நுழந்தவள் கடகடவென (வேகமாக) தனது வேலைகளை செய்து முடித்தாள். வாசுவை ஆதியை வைத்திருக்கும் வேலையையே கொடுத்தாள்.
“அண்ணா மதியம் வீட்ட வாங்க சாப்பிட ”
“உனக்கு ஏன்மா கஸ்ரம் நானே பார்த்துக்கிறன்”
“பரவால்ல அண்ணா வாங்க”
“தங்கச்சி நான் உங்கிட்ட ஒன்று கேக்கணும் கேட்கலாமா?”
“ஆதியோட அப்பாவைத் தவிர வேற என்ன வேணும்னாலும் கேக்கலாம் அண்ணா”
“”சரிம்மா நீ ஏன் ஆட்டோகாரரிட்ட கடுமையா பேசினா?”
“அண்ணா நான் கடுமையா நடந்ததுக்கிறதாலதான் இப்ப நல்லா இருக்கிறன் தனிய இருக்கிற பொண்ணுங்களுக்கு கோபம் தாண்ணா ஒரு பாதுகாப்பு வளயம் அதான் நான் கடுமையா பேச ஆரம்பிச்சன். நான் என் பிள்ளை என்று ஒரு வட்டம் போட்டு வாழ்ந்திட்டு வாறன்.”
“அப்புறம் ஏன்மா என்னோட நல்லா பேசுற?”
“நான் என் வட்டத்தவிட்டு பேசின மொதல் நபர் நீங்க அண்ணா . அது நீங்க என்னோட பையன காப்பாத்தினதால கூட இருக்கலாம் .அதோட உங்கள தப்பா நினைக்க தோணல அண்ணா.”
“ரொம்ப சந்தோசம்டா. என்ன இந்த ஊருக்கு வந்ததும் பாஷ மாறுது?”
“அதுவாணா எங்க நாம இருக்கிறமோ அதுக்கேற்ற மாதிரி நாமளும் மாறணும். இங்க நம்ம பேசுற மாதிரி பேசினா அவங்க நம்மள வித்தியாசமா பாப்பாங்கஅண்ணா. அதோட அவங்களுக்கும் நம்மளோட பேச சங்கடமா இருக்கும். அண்ணா நீங்களும் இங்க பேசுற மாதிரியே பேசுறீங்க?”
“நான் கம்பனி வேலையா அடிக்கடி வாரதால இப்பிடி பேச வரும்டா.but உனக்கு எப்பிடி?”
“நான் இங்க ரொம்பநாள் இருந்திருக்கன் அண்ணா அதனால இப்பிடி பேச வரும்.”
(அது எந்த நாட்கள்)
“சரிமா நான் வீட்ட போயிட்டு வாரன் எதாவது என்றால் போன் பண்ணு”
“சரிணா நீங்க சாப்பிட வந்திருங்க”
“வாறன்மா bye” என்றவாறு சென்றான் வாசு.
வாசு சென்றதும் கதவை தாழிட்டுவிட்டு வந்த சந்திரா மகனை அணைத்தவாறு படுத்தாள்.
மதுரா இல்லம்……..
“என்னங்க நம்ம சூர்யா பிரண்ட் கீர்த்தி வந்திருக்கா நம்ம வீட்ட”
“” எப்ப மதி ?”
“இன்றைக்கு காலைல வந்தவங்க”
“ஓ சரிமா ”
“என்னங்க வாங்க சாப்பிட”
“நீ போமா நான் வாறன்”
“சரி ”
சாப்பாட்டு மேசையில் குமார் சூர்யா அமர்ந்திருக்க மதி பரிமாறிக்கொண்டிருந்தார்.அப்போது வந்த கீர்த்தி( கீர்த்திகா) சூர்யாக்கு பக்கத்தில் இருந்த கதிரையில் இருந்தாள். மதி குமார் இருவரும் அதிர்ச்சியாயினர்.
காரணம் வதனாதான் எப்பவும் சூர்யாக்கு அருகில் இருப்பாள். இது சூர்யாவின் கட்டளை. அதனால்ல அவள் போனதுக்கு பிறகும் ஒருவரையும் அவனுக்கருகில் இருக்க அவன் விட்டதில்லை.அப்பிடி இருக்க கீர்த்தி இருக்கிறாள் ஆனால் அவன் ஏன் எதுவும் பேசவில்லை என்று இருவரும் நினைத்துக்கொண்டிருக்கும் போதே,
“கீர்த்தி” என சத்தமிட்டான் சூர்யா
(கீர்த்தியே ஓர் நிமிடம் ஆடிப்போய்விட்டாள் அவன் படிக்கும் காலத்திலே கோபக்காரன் என்று தெரியும். ஆனால் இப்போதுள்ள சூர்யா ரொம்பக் கோபக்காரனாக இருக்கிறானே என நினைத்தாள்.அவளுக்குத் தெரியும் இந்த இடம் வதனாவுக்குரியது தெரிந்துதான் அமர்ந்தாள்.)
எதுவும் அறியாதவளாய் ” என்ன சூர்யா?”
“நீ இந்த கதிரையில் இருக்காது வேற கதிரையில இரு ”
“அதுதான் ஏன்?”
“அது என்னோட பொண்டாட்டி இருக்கிற இடம்”
“so what இப்பதான் அவள் இல்லையே சூர்யா இவ்வளவு நேரமாமா தூங்குவாள் வதனா?”
“அவள் இங்க இல்ல”
“ஓ அவங்க ஊருக்கு போயிருக்காளா?”
“கீர்த்தி நான் உன்னோட பிறகு பேசுறன்” என்றார் மதி.
“இருந்தாலும் இல்லாட்டியும் அவளுக்கான இடம் மாறாது நீ மாறி இரு”
“சரி சூர்யா but இப்ப நான் இருந்திட்டன் next time வேற இடத்தில இருக்கன்” என்றபடி சாப்பிட்டாள்.
தன்னவள் இருக்கும் இடத்தில்வேறொருவள் இருப்பதை ஏற்க முடியாத சூர்யா தன் தட்டை தட்டி விட்டு சாப்பிடாமல் எழுந்து சென்றான்.
காத்திருப்புக்கள் தொடரும்…………..
கீர்த்தியின் வரவு நல்லதா?
❤️❤️❤️❤️
Thank you da😍
Nice 👍
Thank you akkachi 😍
Thank you akkachi 😍
சூப்பர் டா ❤️❤️❤️❤️