வருவாயா என்னவனே : 08

4.9
(15)

காத்திருப்பு : 08

“என்னடா உங்க அம்மா இப்பிடி நாம சொல்லவர்றத கூட கேக்காம போறா?”

“வாசு மாமா அம்மா வந்ததும் கேக்கிதன் சதியா?”

“சரிடா கண்ணா”என்றவாறு வாசு ஆதியுடன் shopping செய்தான்.

“என்னங்க எனக்கு புடவை வாங்கித் தாங்க” என்றவாறு வந்தனர் தேவி குடும்பத்தினர்.

“சரிடா வா ”

“அப்பா எனக்கும் ஏஞ்சல் frock வேணும்பா”

“சரிடா தீராக்குட்டிக்கு அதையே வாங்கிடுவம்”

(ஓ….இவங்களப் பாத்துதான் சந்திரா மறைஞ்சாளா???)

அப்போது வாசுவும் இவர்கள் இருக்கும் பக்கம் ஆதியுடன் வந்தான். வாசுவைக் கண்ட கமலேஷ்

“Hello வாசு. என்ன இந்தப் ஊர்ப் பக்கம்?”

“Hello sir. N.S.K கம்பனிய நம்ம சூர்யா sirதான் வாங்கிருக்காரு அதுதான் வேலை விஷயமா வந்தன். அப்டியே shopping ”

“ok ok இது யாரு குட்டி பையன்?”

“இது ஆதி என்னோட தங்கச்சி பையன். நீங்க எப்பிடி இருக்கீங்க?”

“ரொம்ப நேரத்ததோட கேட்டுடீங்க அண்ணா ”

“நானாச்சும் கேட்டனேமா நீ….?”

“வாசு அண்ணா போதும், அண்ணா எப்பிடி இருக்காங்க?”

“sir நல்லாருக்காருமா திங்கள் இங்க வாறாருமா”

(இவங்க இங்க பேசுக்கொண்டிருக்க பக்கத்தில ரெண்டு பெரியவங்க ஏதோ பேசுறாங்க வாங்க கேப்போம்)

“என்னோத பேது நட்சத்திரா உன்னோட பேது என்ன?”

“என்னோத பேது ஆதி.”

“எனக்கு நாலுவயது உனக்கு?”

“எனக்கும் தான்.”

“நீ எந்த ஸ்கூல் போற?”

“நான் அங்க வேத ஸ்கூலுக்கு போனன். இப்ப அம்மா ஸ்கூல் சொல்லல”

“நீ ஏன் ஸ்கூலுக்கு வாதியா?”

“நான் அம்மாத கேக்குதன்”

“அண்ணா பையன் ரொம்ப நல்லா பேசுறான்ணா”

“ஆமா அவன் நல்லா பேசுவான் ஆதி இவங்க நான் வேல பாக்கிற கம்பனி எம்டிட தங்கச்சி”

“அப்பிதியா மாமா நான் இவங்கள எப்பிதி கூப்பிதணும்?”

“நீ…..”

“இருங்கண்ணா நான் சொல்றன். ஆதி நீ என்ன அத்தை எண்டு கூப்பிடுடா”

“சரி நீங்க என்னோத அம்மாவ போல அழகா இதிக்கீங்க நான் உங்கள அத்தம்மா என்து கூப்பிதவா?”

“அப்பிடியே கூப்பிடுடா என் தங்கம்”என்று ஆதியை தூக்கி முத்தமிட்டாள் தேவி.

அப்போது கமலேஷ்க்கு போன் வந்தது.

“ரதிமா hospital ல ஏதோ முக்கியமான கேஸாம் நான் போகணும் வாடா உங்கள வீட்ல விட்டுடு போறன்.”

“சரிங்க அண்ணா போயிட்டு வாறம் ஆதிய கண்டிப்பா வீட்ட கூட்டிட்டுவரணும். ஆதி மாமா கூட அத்தம்மா வீட்ட வரணும் சரியா?”

“கண்டிப்பா கூட்டிட்டு வரன்மா”

“வாதன் அத்தம்மா bye நதி bye மாமா”

“யாரு ஆதி நதி?”

“இவதான் வாசு மாமா பேது தொம்ப பெதுசா இதிக்கிது அதுதான் நதி ”

“ஆதி நீ இப்பிதியே கூப்பிது நல்லா இதுக்கு”

“சதி நதி”

“சரிடா கண்ணா bye ”

“வாடா ஆதி உங்க அம்மாவ தேடுவம்”

“சதி மாமா”

இவங்க தேடட்டும் நாம மதுரா இல்லம் போகலாம்.

தனது அறைக்கு வந்த சூர்யா அலுமாரியில் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த கடிதத்தை எடுத்து பார்த்தான். இந்த நான்கு வருடங்களில் பல லட்சம் தடவை அதை வாசித்திருப்பான்.

(நான் உங்களை விட்டுப் போகிறேன் என்னால் நீங்க அவமானப்பட வேண்டாம்.)

இதுதான் அதில் இருந்த வார்த்தைகள்.

“உன்னால எனக்கு என்னடி அவமானம் ஏண்டி கண்ணம்மா இப்பிடி பண்ண நான் இல்லாம நீ இருந்திருவியாடி?”

“என்னவிட்டு நீ ரொம்ப தூரம் போயிட்டியாடி நான் உனக்கு வேணாமாடி ?”

“ஆனா எனக்கு நீ வேணும்டி. எப்பவும் நீ வேணும்டி வந்திருடி” என்று அவளது போட்டோவைப் பார்த்தபடியே தூங்கினான்.

சாமிமலை……….

“எங்க சந்திரா போன?”

“அதுவா அண்ணா சும்மாதான் வெளில போனன்”

அவள் எதையோ மறைப்பதை உணர்ந்தவன் “சரிமா போலாமா?”

“சரிணா போலாம் ”

இரவுணவு வாங்கி விட்டு வீடு வந்து சேர்ந்தனர்.

“கவனமா இரும்மா நான் வாறன்”

“சரி அண்ணா போயிட்டு வாங்க”

“ஆதி குட்நைட்”

“குத்நைத் மாமா”

ஆதியை குளிப்பாட்டி உணவு ஊட்டிவிட்டு தூங்க வைத்தாள். ஆதி அலைச்சல் காரணமாக நட்சத்திரா பற்றி சந்திராவிடம் கூற மறந்துவிட்டான். மகனை கட்டிலில் தூங்க வைத்தவள் கட்டிலில் சாய்ந்தவாறே இன்று மாலை நடந்ததை யோசிக்க ஆரம்பித்தாள்.

“தேவியும் கமலேஷ் அண்ணாவும் எப்பிடி இங்க இருக்காங்க?”

“அவங்களோட இருந்த குழந்த யாரோடது? அவங்க குழந்தையா இருக்குமோ? அப்பிடித்தான் இருக்கும்.” என்று யோசித்தவளை நித்ராதேவி அணைத்துக்கொண்டாள்.

வாசு சூர்யாக்கு போன் பண்ணினான். நித்திரையிலிருந்த சூர்யாவை எழுப்பியது வாசுவின் அழைப்பு.

“சொல்லுங்க வாசு”

“sir நீங்க சொன்ன மாதிரி fileல குடுத்திட்டன். ”

“அவங்க ஏதும் சொன்னாங்களா?”

“ஆமா சேர் கம்பனிக்கு என்ன பேர் வைக்க போறீங்க என்று கேட்டாங்க அதுதான் உங்களுக்கு போன் பண்ணினன் sir.”

ஒரு நிமிடம் யோசிச்ச சூர்யா ” S.V.” என்று name board வைக்க சொல்லுங்க வாசு”

“சரி சேர் நான் சொல்றன் நீங்க திங்கள் வந்திருவீங்க தானே?”

“ஆமா வாசு நான் வந்திருவன். நீங்க தங்கிருக்கிற இடம் எப்பிடி இருக்கு உங்களுக்கு okவா?”

“ரொம்ப நல்லாருக்கு sir. அதோட எனக்கு ஒரு தங்கச்சியும் மருமகனும் இங்க கிடைச்சிருக்காங்க ”

“ஓ நல்லது வாசு ”

“சரி sir நான் போன வைக்கிறன் குட்நைட் sir”

“குட்நைட் வாசு”

(சூர்யா நினைத்தான் சாமிமலையில இருக்கிற யாரோ ஒருத்தரத்தான் தங்கச்சி என்று வாசு சொல்றான் என்றே நினைத்தான்.)

வாசுவுக்கு சூர்யா திருமணமானவன் மனைவி பிரிந்து சென்றுவிட்டாள். என்று தெரியும். சில நேரங்களில் sirஅ விட்டுப் போக எப்படித்தான் மனசு வந்ததோ என்று நினைத்தான். அது சந்திராதான் என்று தெரிய வந்தால்ல வாசுவின் நிலை?

தேவி இல்லம்……….

“ஏங்க சூர்யா அண்ணாவுக்கும் கெழந்த இருந்திருந்தா ஆதியப் போலதானே இருந்திருப்பான்?”

“ஆமாடா அப்டித்தான் இருந்திருக்கும்”

“எனக்கு ஆதியப் பாக்கும் போது நட்சத்திராவ பாக்குறப்போ வாற feel வருதுங்க”

“கொழந்ததானேடா அதுதான் உனக்கு அப்பிடி தோணிருக்கும் நேரமாமாயிட்டு தூங்குடாஎன்று அவனின் வளர்ந்த குழந்தையை தூங்க வைத்தான்.

ஞாயிறு இரவு மதுரா இல்லம்………

“அம்மா நான் சாமிமலை போறன் நாளைக்கு”

“ஏன் சூர்யா தேவிய பாக்கவா?”

“இல்லம்மா அங்க ஒரு கம்பனி வாங்கிருக்கன்அதுக்குத்தான் போறன் அப்டியே தீரா குட்டியையும் போய்ப் பாத்துப்பன்.”

“எங்க தங்குவாடா?”

“நான் வாசு கூடவே தங்கிப்பன் அம்மா” (இது வாசுவுக்கே தெரியாதே)

“ஏன்டா அங்க தேவி வீட்ட தங்கக் கூடாதா?”

“வேணாம்மா இத பத்தி பேச வேணாம் நான் காலையில நேரத்தோட போறன்.”

“சரிப்பா கவனமா போயித்து வா”

“அம்மா அப்பாடயும் கீர்த்திட்டயும் சொல்லிடுங்க”

தனதறைக்குச் சென்று பெட்டியில் தனக்குத் தேவையானவற்றை எடுத்து வைத்துவிட்டு தூங்கினான்.

சூரியன் உதிக்கும் போதே சூர்யா சாமிமலை நோக்கி பயணித்தான். சிலமணி நேரங்களில் சாமிமலை வந்தவன் ரதியின் வீட்டுக்க கதவைத் தட்டினான்.

இங்கு நேரத்திற்கு எழுந்த சந்திரா தனது வேலைகளைப் பார்க்கலானாள். பின் ஆதியை எழுப்பி குளிப்பாட்டிவிட்டு உணவூட்டினாள்.

“ஆதி கண்ணா இன்னைக்கு நான் புது ஸ்கூல்ல உன்ன சேத்துவிடுவன் நீ சமத்தா இருக்கணும் சரியா? (நேற்றே வாசுவுடன் பிறின்சிப்பலோட வீட்டுக்குச் சென்று பேசிவிட்டு வந்திருந்தாள்.)

“அம்மா நதியோட ஸ்கூல்லயாமா?”

“யாருடா நதி?”

“வாசு மாமாகூட பேசினாங்க மா”

“வாசு அண்ணாக்கு தெரிஞ்சவங்களா இருப்பாங்க என்று நினைத்தாள்.”

அங்க போய் பாப்பம்டா கண்ணா”

“சதி மா”

தேவி இவ்வளவு நேரத்தோட யாரு வந்திருப்பா என்று நினைத்தவாறு வந்து கதவைத் திறந்தவள் கண்களில் கண்ணீர்.

கண்ணீருக்கான காரணம் என்ன?

ஆதி நதியைக் காண்பானா?

சாமிமலை சூர்யாக்கு என்ன வைத்திருக்கிறது?

காத்திருப்புத் தொடரும்…………….

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

6 thoughts on “வருவாயா என்னவனே : 08”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!